
Post No. 9844
Date uploaded in London –12 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜங்கிள் புக் JUNGLE BOOK என்ற கதையையும் அதை எழுதிய ஆங்கில எழுத்தாளர் ரட்யார்ட் கிப்ளிங்கையும் RUDYARD KIPLING அறியாதோர் வெகு சிலரே. அவர் பம்பாயில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், ஆங்கில தம்பதிகளுக்குப் பிறந்தார். ஐந்து வயதுக்குப் பின்னர் இங்கிலாந்தில் கல்வி கற்றார். இந்தியாவில் பல பதவிப் பொறுப்புகளில் இருந்தார்.
பிறந்த தேதி – டிசம்பர் 30, 1865
இறந்ததேதி – ஜனவரி 18, 1936
வாழ்ந்த ஆண்டுகள் – 70


1907ம் ஆண்டில் அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. அதிலிருந்தே அவர் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர், இந்திய சுதந்திர எதிர்ப்பாளர் என்பது விளங்கும் . அதுமட்டுமல்ல கதா பாத்திரங்கள் பேசும் வசனங்களிலும் இந்தக் கருத்துக்களும் இனவேற்றுமையும் காணப்படும். ஆயினும் கதை சொல்லுவதில் வல்லவர் என்பதில் ஐயமில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் தம்பதிகளுக்குப் பிறந்தார் என்பதால் இதில் வியப்புமில்லை. இந்தியா பற்றி எழுதிய கதை, கவிதைகளில் தான் நேசித்த விஷயங்களையும் சொல்கிறார். 17 வயது வரை இங்கிலாந்தில் இருந்துவிட்டு இந்தியாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
24 வயதில் அமெரிக்கா, இங்கிலாந்து சுற்றுப் பயணத்தைக் துவக்கி தனது கதைகளையும், கவிதைகளையும் வெளியிடத் துவங்கியவுடன் புகழ் பரவியது. 29ஆவது வயதில் அமெரிக்காவில் இருந்தபோதுதான் ஜங்கிள் புக் JUNGLE BOOK என்னும் காட்டு மிருகங்கள் பற்றிய கதை எழுதினார். இது அவரது மகளுக்குச் சொல்லிய கதையின் அடிப்படையில் அமைந்தது. காட்டு விலங்குகளிடையேயே வாழ்ந்த ஒரு சிறுவன் பற்றிய கதை இது . 1899ல் அவரது மகள் இறந்தவுடன் குடும்பம் இங்கிலாந்துக்கே திரும்பிவந்தது.
இந்தியாவில் நடக்கும் துணிகர, சாகசச் செயல்களை அடிப்படையாகக் கொண்டு கிம் KIM என்ற நாவல் எழுதினார். இது நேருஜிக்கு மிகவும் பிடித்த நாவல். ‘இப்போது’ மிருகங்கள் ஏன் இப்படி இருக்கின்றன என்பதை 37 வயதில் நகைச் சுவையுடன் எழுதினார்.
வன விலங்குகள் பற்றி இவர் எழுதியதையே சிறியோரும் பெரியோரும் விரும்பிப் படித்தனர். ஆங்கிலேயர்கள் தொலைதூரப் பிரதேசங்களில் செய்த சாகசங்களை எழுதியதால் ஆங்கிலேயரும் விரும்பிப் படித்தனர். முதல் உலகப் போரில் கிப்ளிங்கின் 18 வயது மகன் இறந்தான். இதற்குப் பின்னர் அவர் எழுதியவற்றில் இந்த சோகம், துயரத்தின் தாக்கத்தை காணலாம்.
-சுபம்–
Publications
1888 – SOLDIERS THREE
1888 – BAA, BAA, BLACK SHEEP
1890 – WEE WILLIE WINKIE
1892- BARRACK ROOM BALLADS
1894- THE JUNGLE BOOK
1899- STALKY AND CO
1901- KIM
1902 – JUST SO STORIES
1906- PUCK OF POOK’S HILL




–SUBHAM—
tags- நோபல் பரிசு, ரட்யார்ட் கிப்ளிங், ஜங்கிள் புக் , ஆங்கில, சிறுவர் கதை ஆசிரியர், Rudyard Kipling