உலக அறிவு பற்றி 31 பொன் மொழிகள்
Compiled by london swaminathan
Date: 31 July 2016
Post No. 3023
Time uploaded in London :– 16-38
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ஆகஸ்ட் மாத (துன்முகி ஆடி- ஆவணி) காலண்டர், 2016
திருவிழா நாட்கள்:– ஆகஸ்ட் 2-ஆடிப் பெருக்கு/ஆடி அமாவாசை;
5 -ஆடிப்பூரம்; 7- நாக பஞ்சமி; 12-வரலட்சுமி விரதம்; 15-சுதந்திர தினம்
18-ஆவணி அவிட்டம்/யஜூர் உபாகர்மா/ரக்ஷா பந்தன்;
25-ஜன்மாஷ்டமி/கோகுலாஷ்டமி
அமாவாசை – 2
பௌர்ணமி – 18
ஏகாதசி – 14, 28
ஆகஸ்ட் முகூர்த்த நாட்கள் – 21, 22, 29
ஆகஸ்ட் 1 திங்கட்கிழமை
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார் – குறள் 140 (உலக மக்கள் செய்வதைப் பின்பற்றாதவன் முட்டாள்)
ஆகஸ்ட் 2 செவ்வாய்க்கிழமை
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப்படும்– குறள் 850 (கடவுள் இல்லை என்று சொல்பவன் பேய்)
ஆகஸ்ட் 3 புதன்கிழமை
ஊரோடு ஒத்து வாழ்
ஆகஸ்ட் 4 வியாழக்கிழமை
காணாதான் காட்டுவான் தான் காணான் –குறள் 849 (முட்டாளுக்கு உபதேசம் செய்பவன் முட்டாள் ஆகி விடுவான்)
ஆகஸ்ட் 5 வெள்ளிக் கிழமை
ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை.
ஆகஸ்ட் 6 சனிக்கிழமை
ஆடை இல்லாதவன் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்
ஆகஸ்ட் 7 ஞாயிற்றுக்கிழமை
தனியாகச் சிரிக்காதே (ந கல்வேகாகின்யா ஹஸிதவ்யம்)
ஆகஸ்ட் 8 திங்கட்கிழமை
பூனை இல்லாத போது, எலிகள் விளையாடும் ( ந பிடாலோ பவேத்யத்ர தத்ர க்ரீடந்தி மூஷகா:)
ஆகஸ்ட் 9 செவ்வாய்க்கிழமை
தெரியாத இடத்தில் தனிமையில் சுற்றாதே (நைகாகீ சஞ்சரேத்வீபினம்)
ஆகஸ்ட் 10 புதன்கிழமை
அவரவர்கள் தங்களுக்குப் பிடித்தவற்றைப் புகழ்வர் (சேஷ்டிதம் சகலை: சர்வம் ச்வானுரூபம் ப்ரசஸ்யதே)
ஆகஸ்ட் 11 வியாழக்கிழமை
ஆடு போல தின்னு, யானை போல குளி ( அஜவச்சவர்ணம் குர்யாத்கஜவத் ஸ்நானமாசரேத்)
ஆகஸ்ட் 12 வெள்ளிக் கிழமை
குருடர்களின் ராஜ்யத்தில், ஒற்றைக்கண் உடையோன் ராஜா ( அந்தகானாம் காணோ ராஜா)
ஆகஸ்ட் 13 சனிக்கிழமை
மரியாதை தெரியவனுக்கு மரியாதை காட்டினால் சோபிக்காது ( அமர்யாதேஷு மர்யாதா க்ரியமாணா ந சோபதே)
ஆகஸ்ட் 14 ஞாயிற்றுக்கிழமை
மேற்பார்வையிடாத விவசாயம் நஷ்டமடையும் (அவஸ்யம் விபலா யாதி க்ருஷி: ஸ்வேனானவேக்ஷிதா)
ஆகஸ்ட் 15 திங்கட்கிழமை
மருந்துக்குதவாத வேரும் இல்லை, மந்திரத்தில் பயன்படாத எழுத்தும் இல்லை (உருப்படாதவன் என்று எவனும் இல்லை)
அமந்த்ரம் அக்ஷரம் நாஸ்தி நாஸ்தி மூலம் ஔஷதம்
ஆகஸ்ட் 16 செவ்வாய்க்கிழமை
தெய்வீக செயல்களையும், முன்னோர் செய்ததையும் கேள்வியால் துளைக்காதே (திவ்யானுபாவம் பூர்வேஷாமவிசார்யம் ஹி சேஷ்டினாம்)
ஆகஸ்ட் 17 புதன்கிழமை
நிலவு வானில் வலம் வந்தால், நட்சத்திரங்கள் அவைகளை தானாகப் பின்பற்றும் (ஆகதே சந்த்ரே சமாகதானி சர்வ நக்ஷத்ராணி)
ஆகஸ்ட் 18 வியாழக்கிழமை
கட்டளையிட்டாலும் தனது கழுதை மீது ஏறமாட்டான் வண்ணான் ( ஆக்ஞாபிதஸ்து ரஜகோ நைவாரோஹதி கர்தபம்)
ஆகஸ்ட் 19 வெள்ளிக் கிழமை
காற்றடிக்காலத்தில் இடி இடித்தாலும் மின்னல் வெட்டினாலும் மழை பெய்யாது ( உச்சை: சரத்ஸு கர்ஜந்தோ நைவ வர்ஷந்தி வாரிதா:)
ஆகஸ்ட் 20 சனிக்கிழமை
முள்ளை முள்ளால் எடு; வைரத்தை வைரத்தால் அறு
ஆகஸ்ட் 21 ஞாயிற்றுக்கிழமை
ஒரு முள்ளால் மற்றொரு முள்ளை எடு ( கண்டகேநைவ கண்டகம்)
ஆகஸ்ட் 22 திங்கட்கிழமை
அழைக்காத இடங்களுக்குப் போகாதே (க்வாபி ந கச்சேத் அனாஹூத:)
ஆகஸ்ட் 23 செவ்வாய்க்கிழமை
ராஜ பாட்டையில் நடை போடு (கந்தவ்யம் ராஜ பதே)
ஆகஸ்ட் 24 புதன்கிழமை
நீரில் குதிக்காமல் நீந்தக் கற்க முடியாது (ஜலாவகாஹனம் த்யக்த்வா ந கோபி தரணக்ஷம:)
ஆகஸ்ட் 25 வியாழக்கிழமை
ஜாதியின் பேரில் யாரையாவது மதிக்க முடியுமா? மிதிக்க முடியுமா? (ஜாதிமாத்ரேன கிம் கசித்தன்யதே பூஜ்யதே க்வசித்)
ஆகஸ்ட் 26 வெள்ளிக் கிழமை
இரண்டு கட்சிகளும் அவன் சமரசம் செய்வதை ஏற்கவில்லை; அவனோ தீர்ப்பு சொல்லத் துடிக்கிறான் (அஸ்வீக்ருதோபி பக்ஷாப்யாம் ந்யாயம் கர்தும் சமுத்யத:)
ஆகஸ்ட் 27 சனிக்கிழமை
அடடா! மரத்தின் உச்சியில் பலாப்பழம்; நாவில் நீர் சுரக்கிறது(ஓஷ்டே தைலம் தரௌ சாஸ்தே சுபக்வம் பனசம் பலம்)
ஆகஸ்ட் 28 ஞாயிற்றுக்கிழமை
கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்
ஆகஸ்ட் 29 திங்கட்கிழமை
(கழுத்தைச் சுற்றி தங்கச் சங்கிலி; கோவில் மாடத்தில் போய்த் தேடுகிறார்கள் (கண்டே ஹிரண்மயீ மாலா ம்ருக்யதே மந்திரே தரே)
ஆகஸ்ட் 30 செவ்வாய்க்கிழமை
படத்திலுள்ள சிங்கம், நிஜ சிங்கம் செய்யும் வேலையைச் செய்யுமா? (கிம் சித்ரோ லிகித: சிம்ஹ: சத்ய சிம்ஹ க்ரியாம் ஸ்ப்ருசேத்)
ஆகஸ்ட் 31 புதன்கிழமை
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது.
–Subham–
You must be logged in to post a comment.