சத்ரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது- 2

sivaji

மகாகவி பாரதியாரின் அற்புத கவிதை! – Part 2

 

Research Article No. 2056

Written by S NAGARAJAN

Swami_48@yahoo.com

Date : 9  August  2015

Time uploaded in London :–  14-37

 

 

.நாகராஜன்

கஜினி அடித்த கொள்ளை

   பாரத தேசத்தின் மீது கண் வைத்து, குறி வைத்து அன்னியரால் செய்யப்பட்ட கொலைகளும் கொள்ளைகளும் கணக்கில் அடங்கா!

உலக சரித்திரத்தை எழுத வந்த வில் ட்யூரண்ட் என்ற அறிஞர் மனித குல சரித்திரத்திலேயே இந்தியாவின் மீதான முகமதியர்களின் படையெடுப்பு தான் மகா மோசமானது என வர்ணிக்கிறார்

அழித்த ஆலயங்கள் பல்லாயிரம்.செய்த கொலைகளோ பல லட்சம். கொள்ளையடித்ததோ யாராலும் மதிப்பிட முடியாத அளவு மாபெரும் செல்வம்!

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

‘THE MUSLIM EPOCH’ ‘என்ற நூலை எழுதியுள்ள J.D.REES I.C.S தனது நூலில் இரண்டாவது அத்தியாயமாக ‘THE HOUSE OF GHAZNI (1001-1030) என்ற அத்தியாயத்தில் கொள்ளை அடித்த விவரங்களைஒரு சிறிதுகுறிப்பிடுகிறார். (1894ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த நூல்)

 

உத்தரபிரதேசத்தில் உள்ள கன்னௌஜ் பழைய காலத்தில் பிரசித்தி பெற்ற கன்யாகுப்ஜ நகரமாகத் திகழ்ந்தது. பேரரசர் ஹர்ஷரின் தலைநகரம் இது. ஹிந்துஸ்தானத்தின் இதயப் பகுதியில் கான்பூருக்கு சற்று வடக்கே கங்கை நதியின் அருகில் அமைந்திருந்த மாபெரும் கலை நகரம் இது. இதை கஜினி முகம்மது அழித்தொழித்து தரைமட்டமாக்கினான்.

 

 

மகத்தான கன்யாகுப்ஜம்

இந்த நகரின் பெருமையை ஜே.டி.ரீஸ் விவரிப்பதைப் பார்க்கலாம்:-

The greatness of this may be inferred from the fact that it is said to have contained 30,000 shops for the sale of betel-nut, as who would say there are 30,000 tobacconists’ shops in London!

 

வெற்றிலை, பாக்கு, புகையிலைக் கடைகள் மட்டும் 30000 என்று வியக்கிறார் ரீஸ்!

 

இன்னும் ஒரே ஒரு பாரா அவரது நூலின் இரண்டாம் அத்தியாயத்திலிருந்து:-

The wealth and sanctity of Muttra (Mathura), a city on the Jumna, north   of Agra, next marked it out for attack. Its idols were broken, and the temple was spared only because of its exceeding solidity. The Sultan wrote to his governor of Ghazni, “Here are a thousand edifices as firm as the faith of the faithful, mostly of marble, besides innumerable temples. Such other could not be constructed under two centuries. The Raja of Mahaban, seeing his people massacred and driven into the river, made away with his family and with himself, while the Rajputs of the garrison of another city he attacked, burned themselves and their wives and children. The plunder of this expedition is estimated at £ 416,000, besides 5300 captives, and 350 elephants, excluding the ruby eyes of idols and their necklaces of pearls and sapphires.

எத்தனை கொடுமை! படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

 

 shivaji picture

உக்ரமான அறைகூவல்

இந்தக் கொடுமையை எல்லாம் அறிந்திருந்தார் மகாகவி.ஆகவே தான் சிவாஜியின் உக்ரமான ஆவேச அறைகூவலை அப்படியே வீராவேசமாகத் தந்து விட்டார், கவிதையில்!

“தாய் பிறன் கைப்படச் சகிப்பவனாகி  நாயென வாழ்வோன் நமரிலிங்குளனோ?’

என்றும்

‘பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!’

என்றும்

செற்றினி மிலேச்சரைத் தீர்த்திட வம்மின்!

ஈட்டியால் சிரங்களை வீட்டிட எழுமின்!

நீட்டிய வேல்களி னேரலர்த் தெறுமின்

வாளுடை முனையிலும்  வயந்திகழ் சூலினும்

ஆளுடைக் கால்கள் அடியினும் தேர்களின்

உருளையின் இடையினும் மாற்றலர் தலைகள்

உருளையில் கண்டு நெஞ்சுவப்புற வம்மின்!

என்றும் பாடுகிறார்.

மகமதியர்களே கோபப்படாதீர்கள்

“சரித்திர சம்பந்தமான செய்யுள்கள் புனைவதில் இக்காலத்துத் தமிழர்கள் சாதாரணமாகப் பிரவேசிப்பதில்லை” என்று குறிப்புரையில் கூறும் மகாகவி பின்னும் தொடர்கிறார் இப்படி:-

“மேற்கூறிய விதமான செய்யுளிலே நமது மகமதிய சகோதரர்களுக்கு விரோதமாகச் சில வசனங்கள் உபயோக்கிக்க நேர்ந்திருப்பது பற்றி விசனமடைகிறோம். இக்காலத்து மகமதியர்கள் பாரத பூமியின் சொந்தப் புத்திரர்களென்பதையும், ஹிந்துக்களும் மகமதியர்களும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் போல நடந்து கொள்ள வேண்டுமென்பதையும் பலமுறை வற்புறுத்தியிருக்கிறோமென்றபோதிலும், சிவாஜி மகாராஜா காலத்தில் ஹிந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் விரோதமிருந்தபடியால், அவர்களைப் பற்றி மஹாராஜா சிவாஜி சில கோபமான வார்த்தைகள் சொல்லி இருப்பது வியப்பாக மாட்டாது. செய்யுளிலே மகமதியர்களைப் பற்றி வந்திருக்கும் பிரஸ்தாபங்களில் வீர ரஸத்தை மட்டும் கவனிக்க வேண்டுமேயல்லாமல் மகமதிய நண்பர்கள் நமது விஷயத்தில் உதாசீனம் இருப்பதாக நினைக்கக் கூடாதென்று கேட்டுக் கொள்கிறோம்.”

பாரத பூமியின் சொந்தப் புத்திரர்கள் மதமாற்றத்தால் வேறு மதம் தழுவ நேர்ந்ததைப் பலகாலும் பாரதியார் வற்புறுத்தி இருக்கிறார்.

ஆகவே ஒரு தாய் பிள்ளைகளாக அவர்கள் ஒருங்கிணைந்து வெள்ளையனை விரட்ட வேண்டும் என்பதே அவர் அவா!

இதற்காகத் தோன்றியது தான் சிவாஜி உற்சவம்!

-தொடரும்