மாம்ஸபக்ஷிணி, குடிகாரர்கள் மீது வள்ளுவன், சாணக்கியன் கடும்தாக்கு (Post No.4793)

 

Written by London Swaminathan 

 

Date: 28 FEBRUARY 2018

 

Time uploaded in London – 8-59 am

 

Post No. 4793

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

மாம்ஸபக்ஷிணி, குடிகாரர்கள் மீது வள்ளுவன், சாணக்கியன் கடும்தாக்கு (Post No.4793)

 

மாமிசம் உண்ணுவோரும், குடிகாரர்களும் இந்த பூமிக்குப் பாரம் என்று சாணக்கியன் கடுமையாகத் தாக்குகிறான்; வள்ளுவன் அதற்குப் பின் யாத்த திருக்குறளில் கள்ளுண்ணல் , புலால் மறுத்தல் என்ற அதிகாரங்களில் மாம்ஸ பக்ஷிணிகள் மீதும் குடிகாரர்கள் மீதும் சுத்தி அடி, நெத்தி அடி கொடுக்கிறான். இரு பெரும் அறிஞர்களும் செப்புவது ஒன்றே; இமயம் முதல் குமரி வரை பாரதீய சிந்தனை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒன்றாக இருப்பதை அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் அண்மைக் காலத்தில் மொழிந்ததில் இருந்தும் நாம் அறிகிறோம்.

சாணக்கியன் எழுதியது சாணக்கிய நீதி ;திருவள்ளுவன் எழுதியது திருக்குறள்.

 

 

ஒரு ஜாடி விஷம்!

 

பரோக்ஷே கார்ய ஹந்தாரம் ப்ரத்யக்ஷே ப்ரிய வாதினம்

வர்ஜயேத் தாத்ருசம் மித்ரம் விஷம் கும்பம் பயோமுகம்

2-5

 

நாம் இல்லாத போது நமக்கு குழிபறிப்பதும், நாம் இருக்கும் போது நம்மை இந்திரனே, சந்திரனே என்று புகழ்வதும்  உண்மையான நட்பு அல்ல; அவன் உண்மையான நண்பன் அல்ல; அவன் பால் போல் இருக்கும் விஷ ஜாடி; அதாவது அடிப்பகுதி முழுதும் விஷம் – மேல் பகுதி மட்டும் பால்.

வள்ளுவன் புகல்வான்:–

மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து

நட்பினுள் சாப்புல்லற் பாற்று (829) –வள்ளுவன் சொல்லுவான்- வெளியே நண்பன் போல நடித்து, மனதுக்குள் நம்மை மட்டம் தட்டுவோனைப் பார்த்து சிரித்துக்கொண்டே, மெல்ல ஓடிப் போய்விடுங்கள்.

 

xxxxxx

 

உண்மையான மகன்

தே புத்ரா யே பிதுர் பக்தாஹா ஸ பிதா யஸ்து போஷகஹ

தன் மித்ரம் யஸ்ய விஸ்வாஸஹ ஸா பார்யா யத்ர நிவ்ருத்திஹி

2-4

 

தந்தையிடம் மரியாதையும், விசுவாசமும் உடையவன் உண்மையான மகன்;

மகனை கல்வி, கேள்விகளில் முன்னுக்குக் கொண்டு வருபவன்  உண்மையான தந்தை;

 

நம்பக்கூடிய ஒருவனே உண்மையான நண்பன்;

இன்பமும் மகிழ்ச்சியும் அளிப்பவளே உண்மையான இல்லாள்.

 

வள்ளுவன் விளம்புவதும் அஃதே!

 

மங்கலம் என்பது மனைமாட்சி– குறள் 60 — இல்வாழ்க்கையில் இன்பமும் அழகும் சேர்ப்பது மனைவி.

 

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல் (67) — மகனை முதலிடத்தில் நிற்க உதவுபவன் தந்தை.

 

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்னோற்றான் கொல்லெனுஞ் சொல் (70) –இவனைப் பெற, இவன் எந்தை என்ன தவம் செய்தனன் என்று வியக்க வைப்பது மகனின் கடமை.

 

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

நினைக்கரிய யாவுள காப்பு (781) –நட்பினைப் போல அரிய பொருளோ, பாதுகாப்பு தருவதோ வேறு ஏதேனும் உண்டோ!

xxxx

 

Brahmin Tiruvalluvar with Punul/ Sacred thread of Brahmins; from Chennai

தட்டிக் கேட்கும் அமைச்சன் வேண்டும்

 

நதி தீரேஷு யே வ்ருக்ஷாஹா பர க்ருஹேஷு காமினீ

மந்த்ரி ஹீனாஸ்ச ராஜானஹ சீக்ரம்நஸ்யந்த்ய ஸம்சயம்

2-15

ஆற்றோர மரங்கள் அடி சாய்வது நிச்சயம்;

பிறர் இடத்தில் வாழும்/ வேலை செய்யும் பெண்கள் தாழ்வதும் நிச்சயம்;

மந்திரிகள் இல்லாத மன்னன் அழிவதும் நிச்சயம்;

இவை விரைவில் நடப்பதும் நிச்சயம் (உறுதி)

 

வள்ளுவன் இயம்புவான்:–

 

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பாரிலானுங் கெடும் (448)

தட்டிக்  கேட்டு புத்தி சொல்லும்  மந்திரி  இல்லாத மன்னனுக்கு எதிரியே தேவை இல்லை; அவன் தன்னாலே அழிந்தொழிவான்

xxxxx

கொக்கு போல இரு

புத்திசாலி மனிதன் கொக்கு போலக் காத்திருக்க வேண்டும்; தக்க இடம், தக்க நேரம், தனது சக்தி ஆகியவற்றை எடை போட்டு, காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.

 

இந்த்ரியாணி ச ஸம்யம்ய பகவத் பண்டிதோ நரஹ

தேச கால பலம் ஞாத்வா ஸர்வ கார்யாணி ஸாதயேத்

6-16

வள்ளுவன் பகர்வான்:–

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து (490) — அமைதியாக இருங்கள்; நல்ல சமயம் வாய்த்ததும் கொக்கு, மீனைக் கவ்விப் பிடிப்பது போலப் பாயுங்கள்.

 

xxxxx

 

மனிதர் உருவத்தில் மிருகங்கள்!

 

மாம்ஸ பக்ஷைஹி ஸுரா பானைர் மூர்க்கஸ்ச அக்ஷர வர்ஜிதைஹி

பசுபிஹி புருஷாகாரைர் பாராக்ராந்தா ச மேதினீ

8-21

 

இந்த உலகிற்கு பாரம் யார்? புலால் உண்ணுவோர், குடிகாரர்கள், எழுத்து அறிவில்லாத மூடர்கள் ஆகியோர் மனித உருவில் நடமாடும் பிராணிகள் ஆவர். இவர்கள் இந்த உலகிற்குப் பாரமானவர்கள் (நடைப் பிணங்களே)

வள்ளுவன் செப்புவான்:–

 

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுன்பான்

எங்ஙனம் ஆளும் அருள் (251)- தன்னுடைய சதையைப் பெருக்க மற்றவற்றின் சதையைத் தின்பவனுக்கு கருணை இருக்குமா?

 

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன் (258) – மயக்கமும், குற்றமும் இல்லாத அறிஞர்கள், உயிர் போன உடலைத் தின்ன மாட்டார்கள்

 

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண்ணுபவர் (926)- தூங்குபவனும் செத்துப்போனவனும் சிந்திக்க முடியாது; அதுபோல கள் குடிப்போரும் அறிவு/ சிந்தனை இல்லாதவரே. அவர்கள் விஷம் குடித்து விழுந்தவர் போல நினைவு தப்பிப் போனவர்களே!

 

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா  தவர் (393)-  படித்தவனுக்குக் கண் உண்டு; படியாதவனுக்குக் கண் இல்லை; அவன் முகத்தில் இரண்டு  காயங்களே இருக்கின்றன.

xxx

 

ரஹசியம் காவான் அழிவான்

ஒருவருடைய ரஹசியங்களை மற்றவர்களுக்கு வெளியிடுவோர் பாம்புப் புற்றில் வசிக்கும் பாம்பு போல அழிவார்கள்

 

பரஸ்பரஸ்ய மர்மாணி யே பாஷந்தே நராதமாஹா

த ஏவ விலயம் யாந்தி வல்மீகோதர ஸர்பவத்

9-2

 

வள்ளுவான் உரைப்பான்:–

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான் (1076) — தாம் கேட்ட ரஹஸியங்களை ஊர் அறியச் சொல்பவன் திருடன்; அவன் ஒரு டமாரம்; தாங்களாகவே பேட்டை தோறும் அடிக்கும் பறைகள் (டமாரம் அடிப்பவன்).

Orignal Tiruvalluvar Picture from an old book.

இன்னும் வரும்…………………..

 

சுபம்- சுபம்-