Written by London Swaminathan
Date: 3 MARCH 2018
Time uploaded in London – 13-18
Post No. 4804
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
மேல் ஜாதி கீழ் ஜாதி பற்றி மனு, நெடுஞ்செழியன், சாணக்கியன், சாணக்கியன் ஒரே கருத்து! (Post. 4804)
நான்கு வருண (ஜாதி) மக்களில், கீழ் ஜாதியைச் சேர்ந்தவன் கற்றால் அவனையே எல்லோரும் வணங்குவர், போற்றுவர் என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் புறநானூற்றிலும், வள்ளுவன் திருக்குறளிலும், சாணக்கியன் சாணக்கிய நீதியிலும், மனு அவரது தர்மசாஸ்திரத்திலும் உரைக்கின்றனர்.
மேல்பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு (குறள் 409)
பொருள்
உயர் குடியில் பிறந்திருந்தாலும் கல்லாதவராக இருந்தால், கீழ்க்குடியில் பிறந்து கல்வி கற்றுச் சிறந்து விளங்கும் கற்றாரைப் போலப் பெருமை பெற முடியாதவர்களே.
xxx
எந்த ஜாதியானாலும் கல்யாணம் கட்டு– சாணக்கியன்
“விஷப்பொருளில் அமிர்தம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;
அழுக்கான பொருள்களுக்கு இடையே தங்கம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;
கீழ் ஜாதி மக்களிடம் அறிவு இருந்தால் அதை ஏற்றுக்கொள்;
கீழ் மட்டத்தில் பிறந்த பெண் குணவதியாக இருந்தால் அவளை ஏற்றுக்கொள்”
விஷாதப்யம்ருதம் க்ராஹ்யமமேத்யாதபி காஞ்சனம்
நீசாதப்யுத்தமாம் வித்யாம் ஸ்த்ரீரத்னம் துஷ்குலாதபி
–சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 16
xxxx
மனு தர்ம சாஸ்திரத்தில்
மனு தர்ம சாஸ்திரத்தில் ஒரு அழகான பொன்மொழி உள்ளது. கீழ் ஜாதி மேல் ஜாதி பற்றியெல்லாம் கவலைப் படாதே.
“விஷத்திலிருந்தும் அமிர்தம் கிடைக்கும்;
குழந்தையிடமிருந்தும் புத்திமதி கிடைக்கும்;
எதிரியிடமிருந்தும் நற்குணத்தைக் கற்கலாம்;
தூய்மையற்ற பொருள்களிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கலாம்”
மனு ஸ்ம்ருதி 2-239
“பெண்கள், நகைகள், கல்வி, நீதி/சட்டம்,
தூய்மைபெறுதல், நல்ல அறிவுரை, கைவினைப் பொருட்கள்
ஆகியவற்றை எவரிடமிருந்தும் ஏற்கலாம்”.
மனு ஸ்ம்ருதி 2-240
“அரிய சந்தர்ப்பத்தில், பிராமணர் இல்லாதவரிடத்தும் வேதத்தைக் கற்கலாம். அவ்வாறு கற்கும் வரை, அவரைக் குருவாகக் கருதி அவர் பின்னால் கைகட்டி, வாய் புதைத்து மரியாதையுடன் செல்லலாம்”.
மனு ஸ்ம்ருதி 2-241
xxx
புற நானூற்றில் நெடுஞ்செழியனும்
இதையே ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனும் புற நானூற்றில் சொன்னார் (183)
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே”
பொருள்:-
“நான்கு ஜாதிகளில், கீழ் ஜாதிக்காரன் ஒருவன் கற்றறிந்த மேதாவியானால் மேல் ஜாதிக்காரனும் அவனிடம் போய்க் கற்கலாம்” (புறம்.183)
அதாவது 4 ஜாதிகளில், கற்றுத் தேர்ந்தவனை, பிராமணனும் வணங்குவான்.
மேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் …
https://tamilandvedas.com/…/மேல்-ஜாதி-கீழ்-ஜா…
16 Apr 2017 – மேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் சொன்னது! … இதனை உணர்ந்து இருந்தும் பிறன் மனைவியின் கற்பினை அழித்தாய் – என்று மனு நீதி சாஸ்திரத்தில் சொன்னபடி நடக்கும் ராமன் (வாலியிடம்) … என்னால் குணங்களுக்குத் தக்கபடி நான்கு ஜாதிகள் உண்டாக்கப்பட்டன.
–subham–