இதாலிய கவிஞர் பொகாஸியோ (Post No.9700)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9700

Date uploaded in London – –7 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

BOCCACCIO

ஜியோவன்னி பொக்காசியோ GIOVANNI BOCCACCIO ஒரு இதாலிய எழுத்தாளர் – கவிஞர். பொக்காஸியோவின் THE DECAMERON டெகமெரான் என்னும் நூல் மறுமலர்ச்சி (RENAISSANCE) காலத்தில் தோன்றிய அழகான நூல்.

     1313இல் பிறந்த ஜியோவன்னி பொக்காஸியோ 1375இல் இறந்தார்.

     பிளாரன்ஸ் FLORENCE நகரத்தின் பணக்கார வணிகரின் மகன் இவர். ஆனால் அவரது தந்தை மிகவும் கண்டிப்பான பேர்வழி. மகனை எழுத்துத் துறையில் ஈடுபடுத்த விருப்பமில்லை. ஆகவே சட்டம் பயில்வதற்காக பொக்காஸியோவை நேபிள்ஸ் நகரத்திற்கு அனுப்பினார். பின்னர் அவர் ANJOU நகரில்  ROBERTஇன் அரசபையில் நீதிமன்ற உறுப்பினர் COURTIER ஆனார்.

அங்கு மன்னரின் அழகிய மகள் M மரியா தெ அக்வினோவைக் ARIA D’ AQUINOவைக்  கண்டு காதல் கொண்டார். இந்த பெண்ணையே முக்கிய கதாபாத்திரமாக வைத்து டெகமெரான் நூலை எழுதினார். இந்த நூலில் பியா மேட்டா (சிறிய ஒளிப் பிழம்பு) FIAMETTA என்ற கதாபாத்திரம் அவரது காதலி !

     1340இல் பொக்காஸியோவின் தந்தையின் வியாபாரம் நொடித்துப் போனது. பொக்காஸியோ ஊர் திரும்ப நேரிட்டது. 1341இல் அவர் டெகமெரான் எழுதிய போது இதாலியில் பிளேக் (BLACK DEATH) நோய் பரவியிருந்தது.

 பிளேக் நோயிலிருந்து தப்பிக்க ஒரு நண்பர் குழு ஒரு கிராமத்திற்குச் செல்கின்றனர். பொழுது போவதற்காக ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கின்றனர். இவ்வாறு நூறு கதைகள் நிறைந்தது இந்த

டெக்காமெரான் DECAMERON  நூலாகும். இவைகளில் சில துயரக்கதைகள். இன்னும் சில நகைச்சுவையானவை. இந்த புத்தகம் இவருக்குப் பெரும் புகழை ஈட்டித்தந்தது. இவரை போப்பாண்டவர் பல இடங்களுக்கு தூதுவராக அனுப்பினார்.

     அவருக்கு வயது ஆக ஆக மதப்பற்று அதிகரித்தது. நோயும் ஏற்பட்டது. CERTALDO என்னும் இடத்திற்குச் சென்று நிம்மதியாய் வாழ்ந்தார். இறுதி நாட்களை அமைதியாகக் கழித்தார். 1374இல் இவரது அருமை நண்பரும் இதாலியப் பெருங்கவிஞருமான PETRARCH இறந்த செய்தி வந்தது. அதற்கடுத்த ஆண்டு இவரும் இறந்தார்.

ஆயிரத்தொரு இரவுகள் என்ற அராபிய கதைத்தொகுப்பு ஸம்ஸ்க்ருதத்திலுள்ள பிருஹத் கதா மாதிரியில் அமைந்தது என்பதை பலரும் அறிவர். அதாவது இந்த மாதிரியை வைத்து அவரவர் நாட்டிற்கு ஏற்ப கதாபாத்திரங்களையும் சூழ்நிலையையும் மாற்றி புனைப்பட்ட கதைகள்

. இதே போல சம்ஸ்க்ருதத்தில் உள்ள தச குமார சரித்திரம் என்ற நூலை முன்மாதிரியாக வைத்து எழுதப்பட்டது இத்தாலிய மொழி

டெக்காமெரான்  நூல். அதை எழுதியவர் பொக்காசியோ .

–subham–

Tags–   ஜியோவன்னி பொக்காசியோ , டெகாமெரான், பொக்காஸியோ