அடடா தப்பாப் போச்சே……! Part-2 (Post.8999)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 8999

Date uploaded in London – – 5 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அடடா தப்பாப் போச்சே……! part-2

                                                 Kattukutty

மெகாசீரியல் இயக்குனரோட பொண்ணை கல்யாணம் செய்து

கிட்டது தப்பாப் போச்சே???

ஏன்???

கடைசிவரைக்கும் என் பொண்ணை சிரிக்காம பாத்துக்கோங்க

என்று சொல்றாரே???

xxx

தலைவரை பொங்கல் விழாவிற்கு கூப்பிட்டது தப்பா போச்சு

ஏன்???

பானையைப் பார்த்ததும் சாராயம் காய்ச்ச ஆரம்பிச்சுட்டாரு….

xxxx

அந்த கோடீஸ்வரன் வீட்டுக்கு திருடப்போனது தப்பாப் போச்சு

ஏன்???

செல்லாத 1000/500 ரூபாய் நோட்டுகள அடுக்கி வச்சிருக்காரு???

xxxx

கபாலிய ஆட்டோவில ஏத்தினது தப்பாப் போச்சு

எப்படி???

மீட்டருக்கு மேல ஏதாவது கேட்போம்ன்னு பாத்தா மீட்டரையும்

காணோம் கபாலியையும் காணோம்???

xxxx

அரசியல்வாதியை திருமண விழாவிற்கு கூப்பிட்டது தப்பா போச்சு

ஏன்???

இருபதாம் நம்பர் டோக்கன் கொடுத்து மொய் பணத்தை அப்புறம்

வந்து வாங்கிக்கன்னு சொல்லிட்டாரு……….

xxxx.

பிளம்பரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சே???

எப்படி???

தினமும் குழாய் புட்டு பண்ணித்தரச் சொல்லி தொல்லை பண்றார்??

xxxx

கஞ்சி தொட்டியைத். திறக்க மகளிரணித் தலைவியை கூப்பிட்டது

தப்பாப் போச்சு

ஏன்???

கஞ்சி போடறதுக்கு 4 காட்டன் புடவையை எடுத்திட்டு வந்துட்டாங்க ……..

xxxx

அந்த பாகவதர் கச்சேரிக்கு போனது தப்பாப்போச்சு….

ஏன்???

அந்தக் கச்சேரி ஆரம்பக்கும் போது “கச்சேரி கேட்க வந்தவர்களுக்கு

ஒரு அறிவிப்பு – தயவு செய்து முழு கச்சேரியையும் முடியும் வரை கேளுங்கள்

வெளியே செல்ல முயற்சிக்க வேண்டாம்.வெளியே

மின் வேலி அமைத்துள்ளோம்”………..

xxxx

அந்த குழந்தைப் பட டைரக்டரை கல்யாணம் பண்ணிக்கிட்டது

தப்பாப் போச்சு

எப்படி???

முதலிரவு அறையில் பொண்ணு பால் கொடுத்ததும் பிஸ்கோத்து

ஆன்டின்னு கேட்கறார்???

xxxxx

கொத்தனாரை கட்டிக்கிட்டது தப்பாப்போச்சு

ஏய் என்ன சொல்லற???

சமையல் வேலை செய்யச்சொன்னா சித்தாளு இல்லாம வேலை

செய்ய முடியாதுங்கராரே????

xxxxx

போலீஸா இருந்த பொண்ண நர்ஸ் வேலைக்கு சேர்த்தது

தப்பாப் போச்சு….

ஏன் டாக்டர்???

நோயாளியை “டிஸ் சார்ஜ்” செய்யச்சொன்னா “லத்தி சார்ஜ்”

பண்ணி அனுப்பிச்சிட்டா………

xxxxx

பஸ் கண்டக்டரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு

எப்படி???

சாமான்கள் எடுக்கக்கூட ஏணிப்படிலே நிக்காதேன்னு கூச்சல்

போடறார்………

xxxxx

ஜெயில்ல ஏதாவது வசதி வேணுமான்னு நீதிபதி கைதி கிட்ட கேட்டது தப்பா போச்சு….

ஏன்?? என்ன ஆச்சு???

அவன் பார் வசதி வேணும்ன்னு கேட்டான்!!!

xxxx

குடிகாரரை கட்டிக்கிட்டது தப்பாப் போச்சு

ஏன்??

தினம் தினம் விதம் விதமாய் ஊறுகாய் செய்யச்சொல்லி உயிரை

வாங்குறார்……….

xxxx

நேர்மையான அதிகாரிகளை விலைக்கு வாங்க முடியாதுன்னு

தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சு…..

ஏன்???

அப்ப இரண்டு நாளைக்கு வாடகைக்காவது வாங்குங்கங்கிறார்….

xxxxx….

ஆட்டோ டிரைவரை திருமணம் செஞ்சிகிட்டது தப்பாப் போச்சு

ஏன்???

வீட்ல கூட “ஆட்டோ”ன்னு கூப்பிட்டாத்தான் திரும்பி பார்க்கிறார்!!!

xxxx

தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து தப்பாப் போச்சு???

ஏன்???

தன் கார் நம்பரை 108 ன்னு மாத்துங்கரார்……..

தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சு

எப்படி???

அவர் மனைவிக்கு “நர்ஸ்” பட்டம் கோடுக்கணுமாம்!!,!

xxxx

ஒர்க்ஸ் ஷாப்லே வேல பாத்தவரை கல்யாணம் பண்ணிக்கிட்து

தப்பா போச்சு…..

ஏன்???

குளிக்க போறபோது கூட “வாட்டர் சர்வீஸ்” பண்ணிட்டு வந்துடறேன்

என்கிறார்……..

xxxx

ஜோஸியரோட பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா

போச்சு……..எப்படி???

வாஸ்து பிரகாரம் நான் திண்ணையில் தான் படுக்கணுமாம்????..

xxxx

அரசியல்வாதியை பெண் பார்க்க அழைத்தது தப்பா போச்சு….

எப்படி???

பொண்ணு புடிச்சிருக்கான்னு கேட்டதுக்கு பொதுக்குழு

கூடி முடிவு செய்யம்ன்னுட்டார்!!!

xxxx

ஜோக் எழுத்தாளர காதலிச்சது தப்பா போச்சு…..

ஏன்???

லவ் லெட்டர நாலு வரிக்கு மேல எழுத மாட்டேன்கிறார்

xxxxx

கவர்மென்ட் ஆபீஸுல வேல பாக்கறவர கல்யாணம் பண்ணிகிட்டது

தப்பா போச்சு….

ஏன்???

கவர்ல ரூபாய வைச்சு கைல கொடுத்தாதான் வேலையையே பார்க்க

ஆரம்பிக்கிறாரு……..

xxxx

விதண்டாவாதம் செய்யிற ஆளுக்கு ஜோசியம் சொன்னது

தப்பாப் போச்சு

எப்படி???

உங்களுக்கு ஏழரை நாட்டு சனி பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு

அது என்னன்ன நாடுன்னு கேட்கிறாரு???

xxxxx

டீச்சர பொண்ணு பார்க்க போனபோது பாடச் சொன்னது

தப்பா போச்சு…..

எப்படி???

பா பா பிளாக் ஷீப்ன்னு ரைம்ஸ் பாட ஆரம்பிச்சுட்டா!!!!

      tags- அடடா தப்பாப் போச்சே-2, கல்யாண, பொண்ணு, ஜோக்ஸ்,

                   *** SUBHAM ****

மன்னாதி மன்னர் (மொக்க) ஜோக்ஸ்!!!! (Post No.8986)

மன்னாதி மன்னர் (மொக்க) ஜோக்ஸ்!!!! (Post No.8986)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8986

Date uploaded in London – – 1 DECEMBER 2020

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

மன்னாதி மன்னர் (மொக்க) ஜோக்ஸ்!!!!
Kattukutty
போர் அபாயம் நிகழ்ந்துள்ளதை எப்படி கண்டு பிடித்தீர்கள்
மன்னா???
நிறைய வீரர்கள் மருத்துவ விடுப்பு கேட்கின்றனரே???

xxx

சிம்மாசனத்திற்குப் பின் பதுங்கு குழியா…ஏன் மன்னா???
புலவர்களிடமிருந்து தப்பிக்கத் தான்.!!!

xxxx

நம்ம மன்னர் அரசியல்வாதியாகி விட்டாரா…….எப்படி???
போர்க்களத்தில் எதிரி மன்னரை பார்த்து “வாழ்த்த வயதில்லை,
வணங்குகிறேன்” என்று சொல்லி தப்பிச்சிட்டாரே……….
Xxx

அமைச்சரே எதிரிநாட்டு மன்னர் அனுப்பிய புறாவுக்கு ஒரு காலை
காணோமே???
மன்னா இதுதான் மிஸ்டு கால்…….

xxxx
நம்ம மன்னரின் பலவீனம் அறிந்து, சிறை பிடிச்சுட்டான் எதிரி மன்னன்…….
எப்படி???
பதுங்கு குழி பக்கத்திலே குல்பி ஐஸ் வண்டிய எடுத்துட்டுப் போய்
மணியடிச்சிருக்கான்……!!!
Xxx

நம்ம மன்னர் போருக்கு போனதை இப்படி சொல்லி அசிங்கப்
படுத்தி இருக்கக்கூடாது…..
எப்படி???
ஓட்டப் பந்தயத்திற்கு போயிருக்கார்ன்னு…….

xxxx
எதிரி நாட்டு மன்னன் நாய்ப்படை அமைத்துள்ளானாமே….எதற்கு???
போரின் போது தாங்கள் எந்த பதுங்கு குழியில் மறைந்துள்ளீரகள்
என்று கண்டு பிடிப்பதற்கு!!!
xxxx

போருக்குப் போகும்போதெல்லாம் ஊரடங்கு உத்திரவு போடுகிறாராமே ஏன்???
போர்க்களத்திலிருந்து ஓடிவரும்போது யாரும் பார்த்து விடக் கூடாது
என்பதற்காகத் தான்……..
Xxxx

மன்னா, எதிரி நாட்டு மன்னன் நம் மகாராணியை குதிரையோடு
கடத்திக் கொண்டு போகிறான்…….
அமைச்சரே எப்படியாவது மீட்டுவாருங்கள் குதிரையை!!!

xxxx

மன்னா நாம் வெற்றியை நெருங்கி விட்டோம்…..
எந்த அளவுக்கு??.??
இன்னும் ஒரு மைல் ஓடினால் நம் அரண்மனை வந்து விடும்!!!

xxxx

மந்திரியாரே, தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த கல்
வெட்டுகள் என்ன சொல்கிறது????
உங்கள் பாட்டனாரும் பதுங்குழியில் தான் வாழ்ந்திருக்கிறார்கள்
என்று சொல்கிறது மன்னா…….
xxx

வழக்கம் போல புறா மூலமாக போர்ச் செய்தி அனுப்பும் எதிரி
மன்னர் இப்போது நாய் மூலமாக செய்தி அனுப்புகிறாரே ஏன்???
பதுங்கு குழியில் இருக்கும் உங்களை கண்டு பிடித்து
ஓலை கொடுக்க !!!

xxx

மந்திரியாரே இங்கே மாட்டியிருந்த கேடயம் எங்கே .???
மகாராணி இட்லி சுட எடுத்துச் சென்றுள்ளார்!!!!
xxx

மந்திரியாரே போருக்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் செய்து
விட்டீர்களா???
ஆம் மன்னா, உங்கள் பெயருக்கு நிறைய தொகைக்கு
இன்ஷூரன்ஸ் எடுத்து விட்டேன்……..

xxx

புலவரே, மகராஜாவை திட்டிப் பாடினீர்…..உமக்கு சவுக்கடிதானே
கொடுத்தார்??? பின் கையில் பண முடிப்பு ஏது???
மகாராணி கொடுத்தார் அமைச்சரே!!!!
Xxx

மன்னர் ரொம்ப பயந்த சுபாவம் உடையவர்….
எப்படி சொல்லற???
பதுங்கு குழிக்கு பதில் பறக்கும் கவசம் கேட்கிறாரே!!!

xx

ஆயுதக்கிடங்கைப் பார்த்த மன்னர் அதிர்ச்சி ஆயிட்டாராம்…. ஏன்???
ஆயுதங்களுக்குப் பதிலாக ஒரே பேரீச்சம்பழ கொட்டைகளாக கிடந்துச்சாம்……

xxx

எந்த நாடாக இருந்தாலும்,புதிதாக மன்னர் பதவிக்கு
வருபவர்கள், முதலில் நம்மிடமே போருக்கு வருகிறார்களே
காரணம் என்ன????
முதல் போரில் தோற்றதாக இருக்கக கூடாது என்ற “சென்டிமென்டிற்காக” தான் மன்னா!!!

xxxx

மன்னர் ஏன் மகாராணிக்கு இவ்வளவு நகைகளைப்போட்டு
அலங்கரித்துள்ளார்.???
மகாராணியை கடத்திட்டு போறவங்களுக்கு மன்னர் தரும்
சன்மானம் இவைகள்!!!!

xxxx

மன்னர் ஏன் வேட்டைக்குச் செல்லவில்லை????
வேட்டை வேண்டாம் எல்லாவற்றையும் “டிஸ்கவரி சானலில்”
பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்!!!

xxxx

அனேகமாக எதிரி நாட்டு மன்னர் நம்மீது படைஎடுப்பார் என நினைக்கிறேன்…….
எப்படி சொல்லறே???
பதுங்கு குழி வெட்ட ஆட்கள் தேவைன்னு நம் மன்னர் விளம்பரம்
கொடுத்திருக்காரே………

xxx

தளபதியாரே மன்னரின் பட்டத்துக் குதிரை ஏன் கூனி குறுகி
நிற்கிறது???
போர்களத்தில் மன்னர் தன்னைவிட வேகமாக ஓடி வந்துவிட்டதால்
அவமானப்பட்டு நிற்கிறது……..

xxxx

அமைச்சரே, புலவர் ஏன் “குவாட்டர் “ பாட்டிலோடு வருகிறார்???
“சரக்கு” உள்ள புலவரை அழைத்து வரச்சொன்னீர்களே அது தான்
மன்னா!!!!

xxxx
மன்னர் ரொம்ப அல்பம்ன்னு எப்படி சொல்றே???
போர் இல்லாத சமயம் பதுங்கு குழியை வாடகைக்கு விடறாரே???

xxxx

புலவர் பாடும்போது ரெக்கார்ட் பண்ணச் சொல்றாரே மன்னர் ஏன்??
மறுபடியும் இதே பாட்டை பாடி சன்மானம் பெற்று விடுகிறார்களாம்!!!

xxxx
எதிரி நாட்டு மன்னன் போர்களத்தில் நம் வீரர்களை ஒரே வார்த்தையில் மடக்கிவிட்டனா…….
எப்படி???
பழைய இரும்புக்கு பேரீச்சம் பழம் என்று கூவியதும் நம் வீரர்கள்
அவன் காலடியில் வாள் கேடயங்களை போட்டு விட்டனரே……..
xxxx

புலியை வேட்டையாடச் சென்ற மன்னர் ஏன் திரும்பி வந்துட்டார்???
புலியும் வேட்டையாடும் “மூடில்”தான் காத்திருக்கிறது என தகவல்
சொன்னார்களாம்…….

xxxx

அரண்மளை வைத்தியருக்கு ஏன் மரண தண்டனை???
நோய்க்கு மருந்து கேட்டால் வெடி மருந்து தயாரிச்சு கொடுத்தாராம்……..
xxx

படை வீர்ர்களே எனக்கு ஒரு சத்தியம் செயு்து கொடுங்கள்.
புற முதுகிட்டு ஓட மாட்டோம் என்றா மன்னா???
இல்லை, எனக்கு முன்னால் ஓடி விட மாட்டோம் என்று!!!!

xxxx
நம்மிடம் ஆயுதம் இல்லை என்று எதிரி நாட்டு மன்னனுக்கு
எப்படி தெரிந்தது????
பேரீச்சம்பழக் கடைக்காரன் சொல்லியிருப்பான் மன்னா…..

.tags — மன்னர், ஜோக்ஸ்
***

இன்டர்நெட் லொள்ளு ஜோக்ஸ் & எஸ் எம் எஸ் ஜோக்ஸ் (Post No.6934)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 26 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 7-49 am

Post No. 6934

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously; both blogs attract over 12,000 hits everyday; thanks for your support.