வாழ்க்கை என்பது கூட்டல், கழித்தல்,பெருக்கல், வகுத்தல்; ஞான மொழிகள் – 22 (Post.9258)


COMPILED BY KATTUKKUTY

Post No. 9258

Date uploaded in London – –     13 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 22

                                                          Kattukutty

கல்வி – புது மொழிகள்

1.காப்பி அடிப்பவன் காணுமிடமெல்லாம் கண்காணிப்பாளர்!!!

2.படித்து முடிக்கற வரை பரீட்சை காத்திருக்குமா???

3.அளவுக்கு மிஞ்சி படித்தால், அனைத்தும் குழம்பும்.

4.பட்டம் என்றால் இனிப்பு, பரீட்சை என்றால் கசப்பு.

5.பார்த்தால் அப்பாவி, படித்தால் மேதாவி் !!!

6.காலமெல்லாம் சுற்றினாலும், தேர்வில் வென்றால் சரி்.

7.இன்றைக்கு பேனா கேட்பவன், நாளை பேப்பர் கேட்பான்.

8. T.V பார்க்கும் மகிழ்ச்சி, கரண்ட் போனால் போச்சு!!!

9. பிள்ளைக்கழகு பெற்றோர் பணத்தை செலவழித்தல்

10. மாணவன் வருவான் பின்னே, சிகரட் புகை வரும் முன்னே!!!

XXXXXXXXX

பெண்கள் கையில் உங்களை பிடி கொடுத்து விட்டால்,

பின்பு அவளைப் பிடிப்பது கடினமாகி விடும்.

ஒரு சம்சாரியின் புலம்பல்

XXXXXXXXX

ஒரு பிரபல கணித பேரசிரியரின் கணிப்பு

மனித ஜாதியின் வாழ்க்கையை நான்கு விதமாக பிரிக்கலாம்.

கூட்டல், கழித்தல்,பெருக்கல், வகுத்தல்………

XXXXXXXXX

செய்திப் பத்திரிக்கைகள் நமக்கு உடனுக்குடனே இரு பேரிடிச்

செய்திகளை நமக்கு அறிவிக்கின்றன.

ஒன்று மரணச் செயதிகள் . இரண்டு திருமணச் செய்திகள்!!!

XXXXXX

இரசாயன மாணவனின் ஆராய்ச்சி முடிவுகள்

தண்ணீர் என்பது இருவகையான “ஜின்”களின் கலவை.

ஒன்று ஆக்ஸிஜின்- சுத்தமான “ஜின்”

மற்றொன்று ஹைட்ரஜின் – தண்ணீர் கலந்த “ஜின்”

XXXX

உங்களுடைய ஒரு நிமிட கோபத்தால் 60 செகண்டு

மகிழ்ச்சியை இழக்கிறீர்கள்.

மனைவியை விட நாய் மேலானது. அது தன்னுடைய

எஜமானனை நோக்கிக் குலைக்காது !!!

XXXXX

ஞாபகம் என்பது வண்ணாத்திப் பூச்சியைப் போல……

நாம் சப்தம் செய்யாமல் அதை பிடிக்கப் போனால் “விர்” என்று

ஆகாய விமானத்தைப் போல பறந்து போகும். பழைய நிகழ்ச்சிகளை

ஞாபகப் படுத்திக் கொள்வதும் அது போலத்தான்!!!

டீ குடிக்கும்போது நாக்கு சுட்டால் சர்பத் குடிக்கும் போது

ஊதித்தான் குடிக்க வேண்டியிருக்கிறது.

XXXXXX

யாருடைய அன்பு நமக்கு வேண்டுமோ, அவர்களிடம் நமது

அந்தரங்கங்களை சொல்லாமலிருப்பது நல்லது.

பொய் சொல்லி வாழலாமா என்பது அந்தக் காலம்

பொய் சொல்லாமல் வாழ முடியுமா என்கிறது இந்தக் காலம்!!!

கடவுள் ஆறு நாட்கள் உலகத்தை சிருஷ்டித்து விட்டு ஓய்வு

எடுத்துக் கொண்டார். பிறகு பெண்களைப் படைத்தார்.

அதற்கு பிறகு யாருக்குமே ஓய்வு இல்லாமல் போய் விட்டது !!!

XXXXX

ஒரு சராசரியான பெண், தனக்கு மூளையை விட அழகுதான்

இருக்க வேண்டும் என நினைப்பாள்.

ஏனெனில் ஒருசராசரி மனிதன் சிந்திப்பதைவிட, தன்கண்ணால்

காண்பதையே நம்புகிறான்.

XXXXX

நாளாக நாளாக கணவன்மார்களின் “வருமான” சக்தி,

தங்கள் மனைவிமார்களின் “விரும்பும்” சக்தியை சரிக் கட்டவே முடிவதில்லை.

XXXX

tags  ஞான மொழிகள் – 22, வாழ்க்கை, கூட்டல், கழித்தல்,