குண்டா இருந்தா “கொலஸ்ட்ரால்”? மெலிந்தால் “சுகர்”? கோபப்பட்டால் “பிரஷர்!? (Post 8921)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 8921

Date uploaded in London – – 12 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள் – 8

நீ சிரித்துப் பார் உன் முகம் உனக்குப்பிடிக்கும்,

மற்றவர்களை சிர்க்க வைத்துப் பார், உன் முகம்

எல்லோருக்கும் பிடிக்கும்!!!

xxx

நீ நேசிக்கும் இதயத்தில் பல்லாண்டு காலம் வாழ்வதைவட,

உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார்,

இதயத்தின் சுகம் தெரியும்

xxx

வளர்ந்த பின் வளைவது பெருமை,

வளைந்தே இருப்பது சிறுமை.

xxx

விரும்புவதால் கருவறையில் மீண்டும் இடம் கிடைப்பதில்லை,

வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டு போகப்போவதில்லை,

இருக்கும் போதே மகிழ்ச்சியாக இருப்போமே!!!

xxx

மன நிறைவு என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம்

ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை………

xxx

சில நேரங்களில் தனிமை கடினம், சில நேரங்களில்

தனிமைதான் இனிமை!!!

xxx

மரணத்தைப்பற்றி கவலைப்படாதே……நீ இருக்கும் வரை அது

வரப்போவதில்லை, அது வரும் போது நீ இருக்கப்போவதில்லை!!!

xxx

புரியாததை புரிந்து கொள்ளுங்கள், புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள், வெற்றி நிச்சியம் !!!!

xxx

வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிச் செல்லும்

ஆனால் அன்புதான் உன்னை வீட்டிற்கு அழைத்து வரும் !!!

xxxx

அறிவுரை தேவைப் படும்போதுதான் ,

ஆணவம் கண்ணை மறைக்கும்.

xxxx

குண்டா இருந்தா “கொலஸ்ட்ரால்” இருக்கான்னு கேக்கறாங்க

மெலிந்திருந்தால், “சுகர்” இருக்கான்னு கேக்குறானுங்க,

கோப ப்பட்டால் “பிரஷர்” இருக்குதாங்கறாங்க,

அமைதியா இருந்தா “ஏதும் பிரச்சனையான்னு”கேட்குறாங்க,

என்னா “லைப்” டா சாமி………….”

xxxxx

பெருமையா சொல்லிக்க முடியாதது……….

விபசாரியிடம் வைத்திருக்கும் உறவு,

லஞ்சமா வாங்குற பணம்…….

xxxx

வரப்பு தகறாருக்கு கோர்ட்டுக்குப்போனா,

வக்கீல் பீஸுக்கு வயலையே வித்தாகணும்!!!

Xxxx

ஒழுக்கம் இல்லாத கல்வி, மூடியில்லாத சோடா மாதிரி !!!

படிக்கும் புத்தகத்தை பாதியில் புடுங்குவது, முதல் இரவு

அறையின் கதவைத்தட்டுவது போலகும்……..

xxxx

“காசு” வாங்காமல் கடமை ஆற்றியது அந்தக் காலம்,

அது “பொற்காலம்”.

கடமையாற்ற “காசு”வாங்கியது “முற்காலம்”.

“காசு”வாங்கியும் கடமையாற்றாதது “தற்காலம்.”!!!

xxxx

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, மற்றவர் மனதில்

நீ வாழும் வரை !!!

xxxx

நாம் தேவையில்லை என்று சிலர் நினைக்கத்துவங்கும் முன்,

நீ விலகி நிற்க கற்றுக் கொள்வது சிறந்தது………

xxxx

ஆசைப் படுவதை மறந்து விடு, ஆனால் ஆசைப்பட்டதை

மறந்துவிடாதே !!!

xxxxx

என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும், அதனால்,

அவிச்ச முட்டை போட முடியாது !!!

xxxx

8 திடீர் சந்தேகங்கள்

1)தண்ணீரில் இருக்கும் மீனுக்கு தாகம் எடுக்குமா???

2)மரத்தில் தூங்கும் பறவைகள் கீழே விழுமா???

3)கட்டி முடிக்கப்பட்ட வீட்டை ஏன் BUILD’ING’ ன்னு சொல்றோம்???

4)”நன்றாக மேம்படுத்தப் பட்ட நாய் உணவு”- அதை யார்

டேஸ்ட் பண்ணி பார்த்தார்கள்???

5)பணம் மரத்தில் விளைவதில்லை, பின் ஏன் பேங்குகளுக்கு

“BRANCHES” என பெயர் வைத்திருக்கிறார்கள்???

6) நாம் தண்ணீருக்குள் அழ முடியுமா???

7)வட்டமாக இருக்கும் “பிட்சா”விற்கு ஏன் சதுர டப்பா???

8)பசை ஏன் பசை பாட்டிலில் ஒட்டுவதில்லை???

To be continued……………………….

tags — நவீன, ஞான மொழிகள் – 8, குண்டா

Xxxx  subham  xxxxxx