டாக்டருக்கு நோயாளி, தட்டானுக்குத் தங்கம், ஐயருக்கு பக்தன் வேண்டும் ! (Post 10,114)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,114

Date uploaded in London – 20 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் சுவையான கவிதை!

மனிதர்களின் மனோபாவத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டும் அற்புதமான கவிதை ரிக் வேதத்தின் ஒன்பதாவது மண்டலத்தில் கடைசியில் உள்ளது. இது சோமபானம் பற்றிய பகுதி RV.9-112

முதலில் கவிதையைப் படியுங்கள். பின்னர் என் கருத்துக்களை சொல்கிறேன்.

Xxx

9-112-1

சோமனே ! நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிகளைச்  செய்கிறோம் ;

மனிதர்கள் செய்யும் தொழில்கள் பலதரப்பட்டவை; தச்சன் மரத்தை விரும்புகிறான் ;

அட்டைகள் (Doctors) காயமடைந்தவர்களை விரும்புகிறது ; பிராமணர்கள்  வழிபடுவோர்  வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இந்துவே ! நீ இந்திரனுக்காக பெருகவும்

Xxxx

9-112-2

காய்ந்த, முதிர்ந்த  மரங்களினாலும், பறவைகளின் சிறகுகளாலும் அம்புகள் செய்யப்படுகின்றன

கொல்லன் பட்டறைத் தட்டானும் தங்கத்துக்காக அலைகிறான்

(இங்கு கொல்லன் பட்டறையைக் குறிக்கும் ஊதுலையும் வருவதால் அக்கால இரும்பு/ ஆயுத ஆலைகளைக் குறிக்கின்றன)

இந்துவே ! நீ இந்திரனுக்காக பெருகவும்

xxx

9-112-3

நான் ஒரு புலவன் (ரிஷி சிசு ஆங்கிரசன்  இதைப்  பாடுகிறார்); என் தாய் திரிகைக் கல்லில் தானியங்களை அரைக்கிறாள் ;என் தந்தை ஒரு டாக்டர். பலவிதத் தொழில்களை செய்யும் நாங்கள் செல்வத்தை விரும்பி , இவ்வுலகத்தில் தொழுவத்திலுள்ள பசுக்களை போல இருக்கிறோம்;

(ஒரே இடத்தில் அடைந்து கிடக்கிறோம்) . இந்துவே ! நீ இந்திரனுக்காக பெருகவும்

(இந்த இடத்திலும் கிரிப்பித் Griffith டாக்டர் என்பதை அட்டை என்று மொழி பெயர்த்துள்ளார் . ஆயினும் அட்டைகளை மருத்துவத்தில் பயன்படுத்தியது சுஸ்ருதர் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னதுதான். Please see the link at the end))

Xxx

9-112-4

இழுக்கும் குதிரை இழுப்பதற்கு சுகமான (எடை அதிகம் இல்லாத) தேரை விரும்புகிறது . விருந்தினர்களை அழைப்பவர்கள் இன்பத்தை (கேளிக்கை , அரட்டை, மகிழ்ச்சி )  விரும்புகின்றனர் ; காதலனோ காதலி வருகையை விரும்புகிறான் ; தவளையோ ஆற்று வெள்ளத்துக்காக ( அதை எதிர்பார்த்து) காத்திருக்கிறது .

இந்துவே ! நீ இந்திரனுக்காக பெருகவும்

xxx

எனது கருத்துக்கள் !

ரிக் வேத கால இந்துக்களை நாடோடிகள் என்று சொன்ன மாக்ஸ்முல்லர் கும்பலுக்கும் மார்க்சீய கும்பலுக்கும் செமை அடி , மிதி அடி கொடுக்கும் பாடல் இது. அந்தக்காலத்தில் எத்தனை வகை தொழில்கள் இருந்தன என்பதும் ஆயுதம் செய்யும் தச்சனுக்கு கொள்ளை பணம்- தங்கக் கட்டிகள்/ காசுகள் கிடைத்ததும் இந்தப் பாடலில் இருந்து தெரிகிறது.

ஜாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்பதையும் மூன்றாவது பாடல்/ மந்திரம் விளக்குகிறது .

அந்தக் காலத்தில் குலத் தொழில் முறை இல்லை. ஒரே குடும்பத்தில் கவிஞன், டாக்டர், மாவு அரைக்கும் பெண்மணி ஆகியோரையும்  காண்கிறோம். ஜாதித் தொழில்கள் இல்லை

பாடலின் கடைசி வரிகள் ஒரே மாதிரி இருப்பதை நோக்கவும். இது போல பல்லவி உடைய கவிதைகள் ரிக் வேதம் முழுதும் விரவிக்கிடக்கின்றன. இதை சங்க இயக்கியமான ஐங்குறு நூறு பின்னர் வந்த சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் காணலாம். இது ‘கும்மியடி, கும்மியடி’ போன்ற பாட்டுக்கள் போன்றவை. அந்தக் காலத்தில் இசை வளம் பெருகியதை இந்தப் பல்லவிப் பாட்டுக்கள் காட்டுகின்றன

xxx

டாக்டர்கள் – பிராமணர்கள் – ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் !

அட்டைகள் ரத்தத்தை உறிஞ்சுவதற்காக காயமடைந்தோருக்காக காத்திருக்கின்றன என்பது R T H GRIFFITH கிரிப்பித் சொல்லும் தகவல் ; இந்த இடத்தை ‘நோயாளிகளுக்காக காத்திருக்கும் மருத்துவர்கள்’ என்று ஜம்புநாதன் மொழி பெயர்க்கிறார்   ((மருத்துவன் நோய்கள் (பெருக) வேண்டும் என்று விரும்புகிறான்)) ; ரிக் வேத ஸம்ஸ்க்ருத பகுதியில் மருத்துவர்/ டாக்டர்/ பிஷக்  என்ற சொல்லே உள்ளது .

அலட்சியமாக , பொருத்தமில்லாத சிகிச்சை தரும்  மருத்துவர்களை அட்டை leech என்று கிண்டல் அடிப்பது உண்டு . இது மரியாதைக் குறைவான சொல். தமிழில் பணப் பெருச்சாளி என்றும் ஆங்கிலத்தில் சுறாமீன் loan sharks  என்றும் சொல்லுவது போல.

அப்படியென்றால் டாக்டர்களும் அட்டைகளும் ஒன்று ! ஒருவன் பணத்தை உறிஞ்சுகிறான். அட்டையோ ரத்தத்தை உறிஞ்சுகிறது . இதே போல பிராமணர்களையும் இந்த மந்திரத்தில் சேர்த்திருப்பது அவர்களையும் கிண்டல் செய்யும் விதத்தில் இருக்கிறது. தட்சிணைக்காக காத்திருக்கிறார்கள் என்று பொருள்படும்

பாரதியாரும் இதை மனதில் கொண்டுதான் பிராணர்களைச் சாடும் வரிகளை எழுதினார் போலும் (பேராசைக்காரனடா பார்ப்பான்; அவன் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான்)

Xxx

நாலாவது மந்திரத்தை, பாடலைப் பாருங்கள்; மனித சுபாவத்தை அப்படியே படம் பிடித்து விட்டது. எல்லோரும் சுகத்தை விரும்புகின்றனர். விருந்து கொடுப்போர், தனது வீட்டுக்கு, கல்யாணத்துக்கு, வந்த அனைவரும் கேளிக்கை, தமாஷ் ஆகியவற்றை அனுபவித்து திருப்தியாக மகிழ்ச்சியாக வீடு திரும்புவதை விரும்புகின்றனர்.

பொதுவாக நாம் எல்லோரும் குறைந்த வேலை; நிறைந்த சம்பளத்தை எதிர் பார்க்கிறோம். அது போல தேர் இழுக்கும் குதிரையும் ஆட்கள் அல்லது பொருளின் எடை குறைவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இதுதான் மனிதனின் எண்ணமும்.

இங்கே இன்னொரு விஷயத்தையும் ஆழ்ந்து படிக்கவேண்டும். தேரின் பா கங்கள் தேர் சவாரி, அது கொண்டு வரும் பொருள்கள் பற்றி நூற்றுக்கணக்கான பாடல்கள்/மந்திரங்கள் உள்ளன. இது அந்தக் கால சாலைகளின் உயர்ந்த நிலை,போக்குவரத்து Road Transport வசதிகளைக் காட்டுகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்னர் அற்புதமான சாலைப் போக்குவரத்து இருந்திருக்கிறது . தேர்கள் பற்றி மட்டுமே வேத கால இலக்கியத்தில் 60-க்கும் மேலான சொற்கள் இருக்கின்றன. ‘வைகலும் எண் தேர் செய்யும் தச்சன்’ என்று சங்க இலக்கியமும் இயம்பும். ரிக் வேதமோ அதற்கு 3000 ஆண்டுகளுக்கும் முந்தையது!

1. WE all have various thoughts and plans, and diverse are the ways of men.

     The Brahman seeks the worshipper, carpenter seeks the cracked wood, and leech the maimed. Flow, Indu, flow for Indra’s sake.

 

2. The smith with ripe and seasoned plants, with feathers of the birds of air,

     With stones, and with enkindled flames, seeks him who hath a store of gold. Flow, Indu, flow for Indra’s sake.

 

3. A bard am I, my dad’s a leech, mammy lays corn upon the stones.

     Striving for wealth, with varied plans, we follow our desires like kine. Flow, Indu, flow for Indra’s sake.

 

4. The horse would draw an easy car, gay hosts attract the laugh and jest.

     The male desires his mate’s approach, the frog is eager for the flood, Flow, Indu, flow for Indra’s sake.

नानानं वा उ नो धियो वि वरतानि जनानाम |
तक्षा रिष्टं रुतं भिषग बरह्मा सुन्वन्तमिछतीन्द्रायेन्दो परि सरव ||


जरतीभिरोषधीभिः पर्णेभिः शकुनानाम |
कार्मारो अश्मभिर्द्युभिर्हिरण्यवन्तमिछतीन्द्रायेन्दो परि सरव ||


कारुरहं ततो भिषगुपलप्रक्षिणी नना |
नानाधियोवसूयवो.अनु गा इव तस्थिमेन्द्रायेन्दो परि सरव ||


अश्वो वोळ्हा सुखं रथं हसनामुपमन्त्रिणः |
शेपो रोमण्वन्तौ भेदौ वारिन मण्डूक इछतीन्द्रायेन्दो परि सरव ||

nānānaṃ vā u no dhiyo vi vratāni janānām |
takṣā riṣṭaṃ rutaṃ bhiṣagh brahmā sunvantamichatīndrāyendo pari srava ||


jaratībhiroṣadhībhiḥ parṇebhiḥ śakunānām |
kārmāro aśmabhirdyubhirhiraṇyavantamichatīndrāyendo pari srava ||


kārurahaṃ tato bhiṣaghupalaprakṣiṇī nanā |
nānādhiyovasūyavo.anu ghā iva tasthimendrāyendo pari srava ||


aśvo voḷhā sukhaṃ rathaṃ hasanāmupamantriṇaḥ |
śepo romaṇvantau bhedau vārin maṇḍūka ichatīndrāyendo pari srava ||

இரத்தம் உறிஞ்சும் அட்டை வைத்தியம் (Post No.8033)

https://tamilandvedas.com › இரத்…

· 

24 May 2020 — அட்டை (Leech) என்பது நீரில் வாழும் பிராணி . … சுஸ்ருதரும் அட்டை வைத்தியம் பற்றி …

— subham–

tags — குலத் தொழில், டாக்டர் ,அட்டை, பிராமணன் , தட்டான், தங்கம் ,புலவன்

மாமன்னன் அசோகன் அமைத்த மருந்துத் தொட்டிகள்! (Post No.5135)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 21 JUNE 2018

 

Time uploaded in London –  14-01  (British Summer Time)

 

Post No. 5135

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

மாமன்னன் அசோகன் அமைத்த மருந்துத் தொட்டிகள்! (Post No.5135)

 

சம்ஸ்க்ருதத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சரக ஸம்ஹிதை, சுஸ்ருத ஸம்ஹிதை போன்ற ஆயுர்வேத நூல்களை நாம் அறிவோம். ஆனால் பாலி மொழியில் உள்ள பௌத்த மத நூல்களில் இருக்கும் மருத்துவக் குறிப்புகளை உலகம் அறியாது. புத்தரோ பௌத்தர்களோ மருத்துவ நூல்களை எழுதவில்லை ஆயினும் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய மருத்துவக் குறிப்புகள் அந்த நூல் ல்களிலும் உண்டு.

சில சுவையான செய்திகளை மட்டும் தருவேன்

ஒரு முறை புத்தர் நோய்வாய்ப்பட்டார். உடனே தேவஹித என்ற பிராஹ்மணனிடம் சென்று சுடு நீர் வாங்கி வரும்படி உபவன என்ற சிஷ்யரை அனுப்பி வைத்தார். உடனே அந்தப் ப்ராஹ்மணன் , புத்தரிடம் வந்து அவரை வெந்நீரில் குளிக்கச் சொன்னார். புத்தர் குளித்தவுடன் அவருக்கு வெல்லப்பாகு கலந்த சுடு நீரை சாப்பிட அருளினார். அதைக் குடித்தவுடனே  வாத, பித்த, கப தோஷ வியாதி போயிற்று.

முதலில் மனிதர்களுக்கு ஆசை மூப்பு, பசி என்ற மூன்று நோய்கள் மட்டும் இருந்தன. பின்னர் இது காலப்போக்கில் 96 நோய்களாகப் பல்கிப் பெருகின என்று சுத்தனிபாத என்ற நூல் செப்பும். சிலர் 98 என்றும் பகர்வர்.

புத்தர் காலத்தில் மகத சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னன் பிம்பிசாரன். அவனிடம் புகழ்பெற்ற மருத்துவர் ஜீவகன் இருந்தார். அவர் தக்ஷசீல பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் வாங்கினார். அப்போது மகத சாம்ராஜ்யத்தை ஆட்டிப்படைத்த நோய்கள் குஷ்ட ரோகம், க்ஷய ரோகம் (டி.பி.) , இழுப்பு, ஜூரம் முதலியன ஆகும்

 

கொப்புளங்கள் வந்தால் அதன் மீது கடுகுத் தூளைத் தூவி கட்டுப் போட்டனர்.

தலைவலி தீர பலவித மூலிகை எண்ணைகள் பயன்படுத்தப்பட்டன. மேலும் மூக்கு வழியாக குழாய் மூலம் மருந்து கொடுத்தனர். இரட்டைக் குழாய் வழியாக நாசியின் இரு த்வாரங்கள் வழியே மருந்து தந்தனர். குழாய் வழியாக மருந்துப் புகையும் செலுத்தினர்.

 

மஞ்சள் காமாலை நோய்க்கு பசுமாட்டின் மூத்திரம் கலந்த கஷாயம் தந்தனர்.

மூட்டுவலி முதலிய நோய்களுக்கு ஆவிச் சிகிச்சை தரப்பட்டது. ஆறு அடி குழி ஒன்றில் கரியை நிரப்பினர். அதன்மீது மணலைப் பர்ப்பி அதன் மீது மண்ணாலும் களி மண்ணாலும் பூசினர் அதன் மீது மூலிகைகள் போடப்பட்டன. அதிலிருந்து வரும் புகையில் கை, கால் முதலிய உறுப்பைக் காட்ட வைத்தனர். உடலின் எல்லா உறுப்புகளையும் காட்டி புகை பிடிக்க வைத்தனர்.

அசோகர் காலத்தில் ஒரு புத்த பிக்ஷுவுக்கு நோய் வந்தது. மருந்து கிடைக்காமல் அவர் இறக்க நேரிட்டது. உடனே பாடலிபுத்திர நகரத்தின் நான்கு வாயில்களிலும் நான்கு பெரிய தொட்டிகள் முழுக்க மருந்துகளை நிரப்பி அனைவருக்கும் மருந்து கிடைக்க அசோகர் வசதி செய்தார். புத்தகோசரின் சமந்தபாஸாதிக என்ற புஸ்தகம் இத்தகவலைத் தருகிறது. அவரது கல்வெட்டு ஒன்று மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தனித்தனியே ஆஸ்பத்திரிகள் இருந்த செய்தியைத் தெரிவிக்கின்றன

–SUBHAM–

சாணக்கியன் எச்சரிக்கை- டாக்டர் இல்லா ஊரில் தங்க வேண்டாம் (Post No.4591)

Written by London Swaminathan 

 

Date: 7 JANUARY 2018

 

Time uploaded in London-11-24 am

 

Post No. 4591

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சாணக்கியன் மாபெரும் அறிவாளி; பெரிய அரசியல்வாதி; ராஜ தந்திரி; பொருளாதார நிபுணர்;  நூல்லாசியரும் கூட!

 

ஆயினும் அவர் சொல்லும் சில விஷயங்கள் வியப்பை ஏற்படுத்தும்; ஒருவேளை 2300 ஆண்டுகளுக்கு முன்னால் — அவர் காலத்தில் நாமும் வாழ்ந்திருந்தால் பொருள் விளங்கி இருக்கும்! இதோ அவரது ஸ்லோகங்கள்:–

 

மதியாதார் வாசல் மிதிக்க வேண்டாம்

 

யஸ்மின் தேசே ந ஸம்மானோ ந வ்ருத்திர்ந ச பாந்தவாஹா

ந ச வித்யாகமஹ கஸ்சித்தம் தேசம் பரிவர்ஜயேத்

 

பொருள்:-

மரியாதையோ வாழ்க்கைக்கான ஊதியமோ, சொந்த பந்தங்களோ, அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்புக்களோ எந்த நாட்டில் இல்லையோ அந்த நாட்டில் வசிக்காதே.

சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 8

 

xxxxxx

டாக்டர் இல்லா ஊரில் தங்க வேண்டாம்

 

தனிகஹ ஸ்ரோத்ரியோ ராஜா நதீ வைத்யஸ்து பஞ்சமஹ

பஞ்ச யத்ர ந வித்யந்தே ந தத்ர திவஸம் வஸேத்

 

பொருள்

கீழ்கண்ட ஐந்து இல்லாத இடங்களில் ஒரு நாள் கூட வசிக்கக் கூடாது:

பணக்காரர், வேத பண்டிதர், அரசன், நதீ, டாக்டர்

சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 9

xxxxxx

 

அச்சம், அடக்கம் இல்லாவிடில்….

 

லோகயாத்ரா பயம் லஜ்ஜா தாக்ஷிண்யம் த்யாகசீலதா

பஞ்ச யத்ர ந வித்யந்தே குர்யாத் தத்ர ஸம்ஸ்திதிம்

 

சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 10

பொருள்

கீழ்கண்ட ஐந்து இல்லாத இடங்களில் வசிக்கக் கூடாது:- வாழ்வதற்கான வழி/ வேலை, சட்டத்தைக் கண்டு அச்சம், அடக்கம், நாகரீகம், தர்ம சிந்தனை

 

xxxxx

நண்பனிடம் எல்லாவற்றையும் சொல்லாதே

ந விஸ்வஸேத் குமித்ரே ச மித்ரே சாதி ந விஸ்வஸேத்

கதாசித் குபிதம் மித்ரம் ஸர்வம் குஹ்யாம் ப்ரகாசயேத்

சாணக்கிய நீதி, அத்தியாயம் 2, ஸ்லோகம் 6

 

பொருள்

கெட்ட நண்பனை நம்பாதே; நல்ல நண்பனையும் அதிகம் நம்பாதே; ஏனெனில் ஒரு நாள் கோபம் வந்தால் உன்னுடைய ரஹசியங்களை எல்லாம் பட்டவர்த்தனம் ஆக்கிவிடுவான்.

— சுபம், சுபம் —

 

 

தமிழ் இலக்கியத்தில் டாக்டர்! சம்ஸ்கிருத நூல்களில் டாக்டர்!! (Post No.3540)

7d450-tamil2bdoctors

Written by London swaminathan

 

Date: 13 January 2017

 

Time uploaded in London:- 9-04 am

 

Post No.3540

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

2000 ஆண்டுக்கு முந்தைய தமிழ்ச் சங்க இலக்கியத்தில் டாக்டர்கள் பற்றிய குறிப்புகள் மிகவும் குறைவே. ஆனால் மருத்துவம் பற்றிய பழமொழிகளும் பிற்காலத்தில் எழுந்த இலக்கியங்களில் வரும் மருத்துவக் குறிப்புகளும் தமிழர்களின் மருத்துவ அறிவை விதந்து போறுவனவாய் உள. குறிப்பாக சங்க காலத்துக்குப் பின் எழுந்த திருக்குறளில் மருந்து என்ற தலைப்பில் வள்ளுவர் பாடிய பத்துக் குறள்களும் பத்தரை மத்துத் தங்கக் கட்டிகளே!

 

வாயைக் கட்டுப்படுத்து; பசித்த பின் சாப்பிடு– இதுதான் பத்து குறள்களின் ஒட்டுமொத்த முடிபு. ஆயினும் கடைசி இரண்டு குறள்களில் வரும் கருத்துகள் அக்காலத்தில் டாக்டர், கம்பவுண்டர் /நர்ஸ் ஆகியோர் இருந்ததையும் மருத்துவன் என்பவன் எப்படிப்பட்டவன் என்பதையும் காட்டுகின்றன.

be20e-indian2bdoctor2buk

சங்க இலக்கியத்தில் நற்றிணையில் ஒரே ஒரு டாக்டர் (மருத்துவன்) உவமை உள்ளது:-

 

அரும்பிணி  உறுநர்க்கு வேட்டது கொடாது

மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல

(பாடல் 136, நற்றிணை, நற்றங்கொற்றனார்)

 

“ஒரு நோயாளி கேட்டதை எல்லாம் கொடுக்காமல் அவனுக்கு நோய் தீருவதற்கான மருந்தை  ஒரு டாக்டர் (அறவோன்) கொடுப்பது போல” — என்ற உவமையைப் புலவர் பயன்படுத்துவதிலிருந்து அக்கால மருத்துவர் நிலையை நாம் அறிய முடிகிறது.

 

திருவள்ளுவர், திருக்குறளில்,

நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் (குறள் 948)

 

பொருள்:

முதலில் நோய் என்ன என்று ஆராய்க; பின்னர் நோய் ஏன் வந்தது என்று அறிக; பின்னர் அதற்கான மருத்து என்ன என்பதைக் காண்க; அதற்குப் பின்னர் நோயாளியின் உடலுக்கு ஏற்ற மருந்தை கொடுக்க — என்று அழகாக நான்கு நிலைகலையும் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லுவான் வள்ளுவன்.

 

இதே போல

உற்றவன், தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று

அப்பால் நாற்கூற்றே மருந்து (குறள் 950)

 

பொருள்:-

நோயாளி, டாக்டர், மருந்து, பக்கத்தில் இருந்து உதவி செய்யும் கம்பவுண்டர் அல்லது நர்ஸ் என்ற நான்கு அம்சங்களைக் கொண்டதே மருத்துவம்.

 

இதிலிருந்து அந்தக் காலத்திலேயே டாக்டருக்கு உதவி செய்யும் ஒருவனும் இருந்ததை அறிகிறோம். சிலர் நர்ஸ் என்றும் மற்றும் சிலர் கம்பவுண்டர் என்றும் உரை எழுதியுள்ளனர். எதுவாகிலும் மருத்துவம் உச்ச கட்டத்தை அடைந்து இருந்ததை இது காட்டும்.

 

பரிமேல் அழகர் எழுதிய உரையில் நான்கு  என்பதை விரித்து 4 x4 = 16 ஆக  குண நலங்களை விரித்துரைக்கிறார். அவர் முழுதும் ஆயுர்வேதம் என்ற மருத்துவத்தையே முழுதும் சுட்டிக்காட்டுகிறார்.

 

புத்தர் காலத்தில் ஒரு பிரபல டாக்டர் கண் ஆபரேஷனுக்கு எவ்வளவு கட்டணம் வசூலித்தார் என்பதை முன்னரே எழுதியுள்ளேன். அது போல அருணகிரிநாதர் கொடுக்கும் வியாதிகளின் பட்டியல், முருகன் ஒரு டாக்டர் என்ற திருப்புகழ் பாடல்கள் பற்றியும் எழுதியுள்ளேன். ஒருவேளை உண்பான் யோகி என்ற கட்டுரையிலும்  உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கழகு என்ற கட்டுரையிலும் பல விவரங்களைக் கொடுத்து விட்டேன்.

46713-indian-doctors

சம்ஸ்கிருத நூல்களில் டாக்டர்!

இந்து மதத்தில் கடவுளை டாக்டர் (பிஷக்) என்றே அழைப்பர்; ஏனெனில் அவர் பிறவிப் பிணிக்கு மருந்து தருபவர்! யஜுர் வேதத்தில் பிஷக் என்றே சிவபெருமானை அழைப்பர்.

 

உலகப் புகழ் பெற்ற நூல்கள் எழுதிய சரகரும் சுஸ்ருதரும் சம்ஸ்கிருதத்தில் டாக்டர் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதையும் காண்போம்:-

 

ஒரு சர்ஜனின் (சஸ்த்ர சிகிச்சை செய்யும் டாக்டர்) குண நலன்கள் சுஸ்ருத (சூத்ர) 5-10:-

 

சௌர்யம் = பயப்படாமல் ஆபரேஷன் செய்க;

ஆசுக்ரியா= லாவகமாக, டென்ஷன் ஆகாமல் ஆபரேஷன் செய்க;

அஸ்வதேவேபது= கை நடுங்கக் கூடாது; வியர்த்து ஒழுகக் கூடாது;

அசம்மோஹக = மனதில் குழப்பம் இருக்கக் கூடாது (என்ன செய்யப் போகிறோம் என்பதை தெளிவாக நினைவில் வைத்துக்கொள்க)

 

சௌர்யமாசுக்ரியா சஸ்த்ரதைக்ஷயமஸ்வேதபது

அசம்மோஹஸ்ச வைத்யஸ்ய சஸ்த்ர கர்மணி சஸ்யதே

–சுஸ்ருத (சூத்ர) 5-10

xxxx

 

 

சிறந்த வைத்யனின் குணாதிசயங்கள் (பிஷக்தமஸ்ய ஞானம்):-

 

ஹேது= நோய்க்கான காரணத்தை அறிபவன்;

லிங்க = நோயின் தன்மையை அறிவான்;

ப்ரசமன = என்ன சிகிச்சை தரவேண்டும் என்பதைத் துணிவான்

ரோகாணாம் அபுனர்பவ = அந்த நோய் மீண்டும் வராதபடி தடுப்பான்.

 

இந்த நான்கையும் அறிந்தவனே சிறந்த டாக்டர்!

 

ஹேதௌ லிங்கே ரோகாணாமபுனர்பவே

ஞானம் சதுர்விதம் யஸ்ய ச ராஜார்ஹோ பிஷ்க்தமஹ

–சரக (சூத்ரம்) 9-19

 

xxxx

8f8a8-photo2bfor2bplant2bbased2bdoctors2b2_0

நல்ல டாக்டரின் நாலு தகுதிகள்:–

 

ச்ருதே பர்யவதாதத்வம் = மருத்துவ நூல்களில் பேரறிவு;

பஹுசோ த்ருஷ்டகர்மதா = நல்ல அனுபவ அறிவு;

தாக்ஷ்யம் = திறமை;

சௌசம் = கை சுத்தம், உடல் சுத்தம் , மன சுத்தம், கிளினிக் CLINIC/SURGERY சுத்தம்

 

ஸ்ருதே பர்யவதாதத்வம் பஹுசோ த்ருஷ்டகர்மதா

தாக்ஷ்யம் சௌசமிதி ஞேயம் வைத்யே குணசதுஷ்டயம்

–சரக சூத்ரம் 9-6

xxx

 

நோயாளியை கவனிக்கும் முறை:-

 

மைத்ரீ = நோயாளியை நண்பனாகப் பார்;

காருண்யா = அவனிடம் இரக்கம் காட்டு ( எவ்வளவு கட்டணம் வைத்து ஆளிடம் கறக்கலாம் என்று திட்டம் போடாதே)

ப்ரீதி = அவனுக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் செய்திகளைக் கொடு;

உபேக்ஷணம் = அவனிடம் அனுதாபம் காட்டு ( நோய் வந்ததற்காக அவனைக் குற்றவளிக் கூண்டில் நிறுத்தாதே)

 

மைத்ரீ காருண்யமார்தேஷு சக்யே ப்ரீதிருபேக்ஷணம்

ப்ரக்ருதிஸ்தேஷு பூதேஷு வைத்யவ்ருத்திஸ்சதுர்விதா

–சரக சூத்ர 9-26

 

Please read my old articles:

 

டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்–திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை2  ((Posted on 15 January 2015))

ஒரு வேளை உண்பான் யோகி (ஆமை போல நீண்ட காலம் வாழும் ரகசியம்) posted on 15-11-2012

 

–subham–

 

டாக்டருக்கும் யமனுக்கும் வேறுபாடு என்ன?

cartoon-doctor-8

Compiled by London swaminathan

Post No.2227

Date: 9  October 2015

Time uploaded in London: 9-03 காலை

Thanks for the pictures.

ஒரு அருமையான சம்ஸ்கிருத ஸ்லோகம்.

இது, பல்லாயிரக் கணக்கான சம்ஸ்கிருதப் பாடல்கள் நிறைந்த புத்தகமான சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் நூலில் இருக்கிறது. அதாவது சம்ஸ்கிருத தனிப்பாடல் திரட்டு நூலில் ஒரு பாடல். அதில் டாக்டர்களைப் பற்றிக் கூறுவது உலகில் எல்லா மொழிகளிலும் ‘ஜோக்’-குகளாக உள்ளன.

வைத்யராஜ! நமஸ்துப்யம் யமராஜ சஹோதர!!

யமஸ்து ஹரதே ப்ராணான், வைத்ய: ப்ராணான் தனானி ச!

“ஹே, டாக்டர்! யமரஜனின் சகோதரனே!! உனக்கு வணக்கங்கள்!

யமன் என்பவன் உயிரை (மட்டும்) கொண்டுபோகிறான். டாக்டர்களோ உயரையும் பணத்தையும் சேர்த்துக் கொண்டுபோகிறார்கள்!!!”

இதே கருத்து உலகம் முழுவதிலும் டாக்டர்கள் பற்றிய “ஜோக்”–குகளில் இருப்பதை முன்னரே ஆங்கிலத்தில் நிறைய சம்பவங்கள் மூலம் கொடுத்துள்ளேன்.

டாக்டர்களின் அனுபவமின்மை பற்றியும் பல பொன்மொழிகள் உள. தமிழில் சொல்லுவோம்:

“ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” – என்று! இதுவும் சம்ஸ்கிருதத்தில் காணப்படுகிறது!

ஹத்வா ந்ருணாம் சஹஸ்ரம், பஸ்சாத் வைத்யோ பவேத் சித்த:

ஆயிரம் பேரின் கதையை முடித்தவுடன்தான், ஒரு டாக்டர் பெரிய டாக்டர் ஆகிறார்.

xxx

doctor

யாருக்கு முதல் மரியாதை என்று ஒரு டாக்டருக்கும் வழக்கறிஞருக்கும் வாக்கு வாதம் வரவே டயொஜெனிஸ் (கி.மு.412) என்ற கிரேக்க நாட்டு தத்துவ அறிஞரிடம் சென்றனர். அவர் சொன்னார்:

திருடன் முதலில் போகட்டும்; மரணதண்டனை நிறைவேற்றுபவன் அவன் பின்னால் செல்லட்டும்!

Xxx

அலெக்ஸாண்டர் துமா என்பவர் பிரபல பிரெஞ்சு நாவலாசிரியர். மார்செய் நகரத்தின் பிரபல டாக்டர் ஜிஸ்டால், அவரை விருந்துக்கு அழைத்தார். விருந்து எல்லாம் சுகமாக முடிந்தவுடன் தன்னுடைய ஆல்பத்தைக் காட்டினார் டாக்டர்.

“ஓய், நாவலாசிரியரே! நீரோ எழுத்துச் சித்தர்! எழுத்துத் தச்சர்! எங்கே பார்க்கலாம், உமது கை வல்லமையை? என் ஆல்பத்தில் ஏதாவது எழுதுங்கள் பார்க்கலாம்”– என்றார் டாக்டர் ஜிஸ்டால்.

நாவலாசிரியர் துமா, பேனாவை எடுத்தார், எழுதினார்:

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

—இதை எழுதிக் கொண்டிருக்கையில் டாக்டர் குறுக்கிட்டார். “எழுத்தாளரே உமது புத்தியைக்காட்டிவிட்டீரே! உங்கள் வர்க்கமே சோறு கண்ட இடம் சொர்க்கம் என்னுமினம். நான் விருந்து கொடுத்தவுடன், என்னை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து தள்ளுகிறீர்களே!”

நாவாலசிரியர் சொன்னார்; “அட! ஏன் அவசரப்படுகிறீர்கள்; நான் இன்னும் எழுதியே முடிக்கவில்லையே”- என்று சொல்லிக் கொண்டே கடைசி வரியை எழுதி முத்தாய்ப்பு (முத்தான ஆப்பு) வைத்தார்:

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

 

முழுக்கவிதையையும் படியுங்கள்:—-

 

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

–சுபம்–

இந்துக்கள் கருத்து: டாக்டர்கள், வழக்கறிஞர்கள் பற்றி!

doctor

Research Article No.1995

Written  by London swaminathan

Date 15th July 2015

Time uploaded in London: 18-49

நீதிபதிகள் பாரபட்சமின்றி, விதிப்படி கடமையைச் செய்ய வேண்டும்; அப்பொழுதுதான் மக்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள் – அர்த்த சாஸ்திரம் 3-20-24

எந்த ஒரு அரசன் சட்டப்படி, நியாயமாகக் குடிமக்களைப் பாதுகாக்கிறானோ அவன் சொர்க்கத்துக்குச் செல்லுவான்; அநியாய தண்டனைகள் விதிக்கும் அரசன்/நீதிபதி சொர்க்கத்துக்குச் செல்லமாட்டான் – அர்த்த சாஸ்திரம் 3-1-41

குற்றத்துக்கு ஏற்ற தண்டனை தருவதும், தவறு செய்தவர்களைத் தண்டிப்பதும்,  தன் மகனேயானாலும் தண்டிப்பதுமே இவ்வுலகத்தையும் மேலுலகத்தையும் காக்கின்றன – அர்த்த சாஸ்திரம் 3-1- 42

டயோஜெனிஸ் என்ற கிரேக்க தத்துவமேதை 2300 ஆண்டுகளுக்கு முன்னர், டாக்டர்களைப் பற்றியும், வழக்கறிஞர்கள் பற்றியும் என்ன சொன்னார் என்று நேற்று பார்த்தோம். அதாவது,

டாக்டர்கள் = உயிர் பறிக்கும் யம தர்மர்கள்

வக்கீல்கள் = பணம் பறிக்கும் கொள்ளைக்காரர்கள்

என்ற கருத்து அந்தக் காலத்திலேயே அங்கு இருந்தது.

நமது நாட்டில் டாக்டர்கள் பற்றியும், நீதித் துறை அறிஞர்கள் பற்றியும் மிக உயர்ந்த கருத்தும் மரியாதையும் இருந்தது. நீதித்துறையில் வழக்கறிஞர்கள் என்ற பிரிவு இருந்ததற்கான குறிப்புகள் எனக்குக் கிடைக்கவில்லை. நீதித்துறை பற்றி மனுதர்ம சாத்திரத்தில் எட்டாவது அத்தியாயத்தில் நிறைய குறிப்புகள் கிடைக்கின்றன. கௌடில்யர் ( சாணக்கியர்)  எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் மூன்று, நான்காவது அத்தியாயங்களில் டாக்டர்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. மிகவும் அதிசய விஷயம் அந்தக் காலத்திலேயே நுகர்வோர் பாதுகாப்பு இருந்திருக்கிறது. இதெல்லாம் இப்பொழுதுதான் மேலை நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது. நிறைய பேர் டாக்டர்கள் மீதும், ஆஸ்பத்திரிகள் மீதும் மில்லியன் கணக்கில் பணம் கேட்டு வழக்குப் போட்டபின்னர் இதையெல்லாம் மேலை நாட்டில் கொண்டுவந்தனர்.

இந்துக்களின் யஜூர் வேதத்தில் ருத்ரம் என்னும் பகுதியில், சிவபெருமானையே டாக்டர் (பிஷக்) என்று போற்றுகின்றனர். இது போல மற்ற கடவுளருக்கும் அடைமொழி இருப்பதை முன்னரே கொடுத்துள்ளேன்.

medicalstamps1

அர்த்தசாத்திரம் சொல்லுவதாவது:

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாதான் உலகிலேயே நாகரீகம் வாய்ந்த நாடு- பணக்கார நாடு என்று எனது 1800 கட்டுரைகளிலும் ஏராளமான சான்றுகலைக் கொடுத்துவிட்டேன். புறச் ச்சுழல், நுகர்வோர் பாது காப்பு என்பதெல்லாம் அப்போதே நாம் விவாத்தித்த தலைப்புகள்:

“நோயாளியின் உயிருக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய சிகிச்சையாக இருந்தால் முதலில் அதிகாரிகளுக்குத் தெரிவித்த பின்னரே சிகிச்சையைத் துவக்க வேண்டும்.சிகிச்சை காரணமாக நோயாளி இறந்தாலோ, உடலூனம் அடைந்தாலோ டாக்டருக்கு தண்டணை கொடுக்க வேண்டும்” – 4-1-56

“நோயாளிக்கும் இது பற்றி சொல்லவேண்டும் அல்லது மேற்கண்டவாறு டாக்டருக்கு தண்டனை உண்டு. ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்தினால் என்ன தண்டனையோ அதே தண்டனை தரவேண்டும்”

காயமடைந்த அல்லது விஷ உணவினால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்குச் சிகிச்சை தருவதற்கு, ஒரு வீட்டிற்கு டாக்டர் சென்றால், அது பற்றி கண்காணிப்பு அதைகாரிகளான கோப அல்லது ஸ்தானிக- ருக்கு அறிவிக்க வேண்டும் – 2-36-10

இது போன்ற கடுமையான விதிகள் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே நடைமுறையில் இருந்ததால், டாக்டகள் எல்லோரும் ஒழுங்குக் கட்ட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டனர்.

21  Pirmoji širdies operacija

சில பழமொழிகள்:

வைத்யே க்ருஹச்தே ம்ரியதே கதன்னு

டாக்டர் வீட்டில் இருக்கும்போது மரணம் எங்கே வரும்?

ஆனால் அனுபவமில்லாத , தாமதமாக வரும் டாக்டர்கலைக் கண்டிக்கும் பழமொழிகளும் இருந்தன:

அனுபவ ரஹிதோ வைத்யே  லோகே நிஹந்தி ப்ராணின: ப்ராணான்

அனுபவமில்லாத மருத்துவன் உயிரை வாங்கிவிடுவான்

சீர்ஸே ஸர்ப: தேசாந்தரே வைத்ய:

தலைக்கு மேலே பாம்பு தொங்குகிறது, மருத்துவரோ எங்கோ இருக்கிறார்.

ஹத்வா ந்ருனாம் சஹஸ்ரம் பஸ்ச்சாத் வைத்யோ பவேத் சித்த:

ஆயிரம் பேரைக் கொன்றவனே (அரை) வைத்தியன்.

அதாவது மருத்துவர்கள், தவறுகளின் மூலமும், அனுபத்தின் மூலமும் பாடம் கற்கிறார்கள்.

judiciary 2

நீதித்துறை பொன்மொழிகள்

சாணக்கிய அர்த்த சாஸ்திரத்தில் தவறிழைப்போருக்கான (3-11) தண்டனைகள் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

நீதி மன்றத்துக்கு விசாரணைக்கு வரும் அரசன் புரோகிதர்களுடனும் ஆலோசகர்களுடனும் தகுத உடையில் வரவேண்டும் (மனு ஸ்மிருதி 8-1)

18 வகையான குற்றங்கள் இருக்கின்றன (இந்தப் பட்டியல் எட்டாம் அத்தியாயத்தில் உள்ளது). அரசன் நீதி வழங்கவரவில்லையானால், புரோகிதர்களையும், மூன்று நீதிபதிகளையும் அனுப்ப வேண்டும்(மனு ஸ்மிருதி.

பொய்ச்சாட்சியம் கொடுப்பவன் குற்றவாளி

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். கண், வாய் ஆகிய உறுப்புகளில் ஏற்படும் மாற்றம்,தனை அறியாது செய்யும் சேட்டைகள், அபிநயம், பேச்சு, நடை ஆகியன குற்றவாளியைக் காட்டிவிடும். (மனு ஸ்மிருதி 8-25/26)

அரசனோ அல்லது அவனது சுற்றத்திலுள்ள ஒருவரோ வழக்கு தொடர முடியாது. அதுபோல பிறர் கொண்டுவந்த வழக்கையும் விசாரிக்காமல் ஒதுக்கமுடியாது.

வேட்டைக்குச் செல்லுபவன் எப்படி, காலடிச் சுவடு, ரத்தக் கறை ஆகியவற்றைக் கொண்டு மிருகத்தைக் கண்டுபிடிப்பானோ அதுபோல அரசனும் ஊகத்தின் மூலம் உண்மையைத் தொடரவேண்டும்.

அரசனே விசாரிக்கையில், சாட்சியங்கள், வழக்கின் தன்மை, இடம், பொருள், ஏவல் ஆகியவற்றை அறியவேண்டும். (மனு ஸ்மிருதி 8-44/46)

judiciary

அந்தக் காலத்தில் நீதித்துறை அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், தண்டனை வழங்குவோர், போலீஸ் ஆகியோர் இருந்தனர். ஆனால் வழக்கறிஞர்கள் என்பவர்கள் இருந்ததாகத் தெரியவில்லை. மருத்துவத் துறையில் டாக்டர், நர்ஸ், கம்பவுண்டர்கள் இருந்தது திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரம் மூலம் தெரியவருகிறது.

swami_48@yahoo.com