

Written by LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 30 NOVEMBER 2019
Time in London – 6-57 am
Post No. 7278
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
பண்டிகை நாட்கள்—
டிசம்பர் 8- கீதா ஜயந்தி ; 10- கார்த்திகை தீபம் ; 11- பாரதியார் பிறந்த தினம் 12- பாஞ்சராத்ர தீபம் ; 17 –திருப்பாவை, திருவெம்பாவை விழா துவக்கம் ; 25- கிறிஸ்துமஸ்
அமாவாசை -25; பவுர்ணமி -11; ஏகாதசி –8,22
முகூர்த்த நாட்கள் —1, 2, 6, 11, 15.
பாரதியார் பிறந்த மாதமாதலால் 31 பாரதி மேற்கோள்களைக் காண்போம்
தமிழ் வாழ்க , பாரதி வாழ்க

xxx
நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறை தீர்ப்பு
டிசம்பர் 2 திங்கட் கிழமை
ஒன்று பரம்பொருள் நாம் அதன்மக்கள் , உலகு இன்பக்கேணி
டிசம்பர் 3 செவ்வாய்க் கிழமை
வாழிய செந்தமிழ் , வாழ்க நற்றமிழர்
டிசம்பர் 4 புதன் கிழமை
பன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே
பார்மிசை ஏதொரு நூல் இது போலே?
டிசம்பர் 5 வியாழக் கிழமை
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க
டிசம்பர் 6 வெள்ளிக் கிழமை
தெள்ளு கலைத் தமிழ் வாணி நினக்கு ஒரு விண்ணப்பம் செய்திடுவேன்
எள்ளத்தனைப்பொழுதும் பயனின்றி இராதென் நாவினிலே வெள்ளமெனப் பொழிவாய்
டிசம்பர் 7 சனிக் கிழமை
பாரதநாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்

டிசம்பர் 8 ஞாயிற்றுக் கிழமை
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு
டிசம்பர் 9 திங்கட் கிழமை
ஊனம் ஒன்றும் அறியா ஞான மெய்ப்பூமி
வானவர் விழையும் மாட்சியார் தேயம்
டிசம்பர் 10 செவ்வாய்க் கிழமை
வெற்றியேயன்றி வேறேதும் பெறுகிலேம்
டிசம்பர் 11 புதன் கிழமை
முன்னர் நமது இச்சையால் பிறந்தோமில்லை

முதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை
டிசம்பர் 12 வியாழக் கிழமை
பொய்க்கும் கலியை நான் கொன்று பூ லோகத்தார் கண்முன்னே
மெய்க்கும் கிருதயுகத்தினையே கொணர்வேன் தெய்வ விஃதியிதே
டிசம்பர் 13 வெள்ளிக் கிழமை
தர்மமே வெல்லும் எனும் சான்றோர் சொல்லும் பொய்யாமோ
டிசம்பர் 14 சனிக் கிழமை
நமக்குத் தொழில் கவிதை , நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்
டிசம்பர் 15 ஞாயிற்றுக் கிழமை
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்
டிசம்பர் 16 திங்கட் கிழமை
ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டினிலே

AS MINISTER – MANIKKAVASAGAR

AS AN ASCETIC – MANIKKAVASAGAR
டிசம்பர் 17 செவ்வாய்க் கிழமை
எண்ணிய முடிதல் வேண்டும் ,நல்லவே எண்ணல் வேண்டும்

டிசம்பர் 18 புதன் கிழமை
வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
டிசம்பர் 19 வியாழக் கிழமை
சாதி இரண்டொழிய வேறில்லை என்றே தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்
டிசம்பர் 20 வெள்ளிக் கிழமை
அன்பு சிவம் உலகத்துயர் யாவும் அன்பினில் போகும்
டிசம்பர் 21 சனிக் கிழமை
மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று – அந்த மூலப் பொருள்
ஒளியின் குன்று ; நேர்த்தி திகழும் அந்த ஒளி யை – எந்த நேரமும் போற்று சக்தி என்று
டிசம்பர் 22 ஞாயிற்றுக் கிழமை
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே
டிசம்பர் 23 திங்கட் கிழமை
வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி
டிசம்பர் 24 செவ்வாய்க் கிழமை
பூமியில் இனி எவர்க்கும் அடிமை செய்யோம்- பரி
பூரணனுக்கே யடிமை செய்து வாழ்வோம்

டிசம்பர் 25 புதன் கிழமை
வாழ்வுமுற்றும் கனவெனக் கூறிய
மறை வலோர்தம் உரை பிழையன்று காண்
டிசம்பர் 26 வியாழக் கிழமை
சாமி நீ சாமி நீ கடவுள் நீயே
தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம்
டிசம்பர் 27 வெள்ளிக் கிழமை
அறம் வளர்ந்திடுக மறம் மடிவுறுக
டிசம்பர் 28 சனிக் கிழமை
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்
டிசம்பர் 29 ஞாயிற்றுக் கிழமை
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்
டிசம்பர் 30 திங்கட் கிழமை
பண்டைச் சிறுமைகள் போக்கி என் நாவில் பழுத்த சுவைத்
தெண் தமிழ் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே
டிசம்பர் 31 செவ்வாய்க் கிழமை
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்
Xxxx subham xxxxx

Bonus Quotes
நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்,அச்சம் வேண்டேன் அமைதி வேண்டினேன்
xxx
மனத்திற் சலனம் இல்லாமல் , மதியில் இருளே தோன்றாமல் .
நினைக்கும்பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செ யல்வேண்டும்
xxx
கனக்கும் செல்வம் நுறு வயது இவையும் தர
நீ கடவாயே
xxxx
தோகைமேல் உலவும் கந்தன் சுடர்க்கரத்து இருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை வணங்குவது எமக்கு வேலை
xxx
சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை
xxx
ஓம்சக்தி அருளால் உலகில் ஏறு , ஒரு சங்கடம் வந்தால் இரண்டு கூறு
xxxx
இன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே
எதற்கும் இனி உலைவதிலே பயன் ஒன்றில்லை
xxxx
ஆயிர வருடம் அன்பிலா அந்நியர் ஆட்சியின் விளைந்த
அல்லல்கள் எண்ணில
–subham
