Date: 5 DECEMBER 2017
Time uploaded in London- 5-13 am
WRITTEN BY S NAGARAJAN
Post No. 4460
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
டிசம்பர் 5 : அரவிந்தர் அஞ்சலி
காலத்திற்கு முன்னரே அவதரித்த அரவிந்தர்!
ச.நாகராஜன்
1
அரவிந்தர்!
பாரத மண்ணிலே உதித்த அபூர்வமான அவதார புருஷர்.
அவரது பேரறிவு பரந்தது; எல்லையற்றது; ஆழம் காண முடியாதது.
அவரது பேரருள் பணியும் அப்படித்தான்!
வங்கத்திலே பிறந்து உலகினருக்கு வழிகாட்ட புதுவையிலே வந்து வசித்தார்.
அவர் பிறந்தது 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி.
அவரது சமாதி தினம் டிசம்பர் 5, 1950
அவரிடம் கடிதம் மூலமாகவே ஏராளமான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டவர் அவரது அணுக்க பக்தரான நிரோத்பரன். (நிரோத்பரனைப் பற்றி இந்தக் கட்டுரை ஆசிரியர் நூறாண்டு வாழ்ந்த பெரியோர் வரிசையில் கட்டுரை எழுதியுள்ளார்.அதைப் படித்து அவரைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.)
அவரது கடிதங்களிலிருந்து அவர் பெற்ற சுவையான செய்திகள் மற்றும் அருள் உரைகள் ஏராளம். அரவிந்தரின் அறிவின் வீ ச்சையும், அவரது பணிகள் பற்றியும் கூறத் தகுதி படைத்த மிகச் சிலருள் அவரும் ஒருவர்.
2
அரவிந்தரின் அறிவு எல்லையற்றது என்பதை அவரே சுட்டிக் காட்டி இருக்கிறார். தான் காலத்திற்கு முன்னரே வந்து பிறந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆகவே மக்கள் அவரைப் பற்றி முழுமையாக அறிய இன்னும் சற்றுக் காலம் பிடிக்கும்!
அரவிந்தர் யார் என்று ஒரு கட்டுரையை ஜோதி பத்திரிகையில் நிரோத்பரன் எழுதியுள்ளார். அதில் அவரது அபார அறிவு பற்றியும் அவரது பணி பற்றியும் விளக்கியுள்ளார். அவரது கட்டுரையின் ஆங்கில மூலத்தை இங்கே பார்ப்போம்:
The vast world of knowledge he had possessed remains unparalleled. He has himself admitted to us that what he knows will remain untold even if he goes on writing for twelve years. We asked him, “Will all that knowledge remain unknown to us and posterity?” “Learn first of all what I have written,” he replied with a sweet smile, and added. “I am afraid I have come perhaps before my time.” Comes to mind a mighty line from one of his poems: “I have drunk the Infinite like a giant’s wine.”
Only with the help of such a Wine could he have given to India and the world his four major contributions: a national awakening and fiery thirst for total independence, a new and deeper interpretation of the Vedas, the rediscovery of the Supermind, and a life-embracing system of Integral Yoga.
இன்னும் பன்னிரெண்டு வருடங்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டே போனாலும் தனது அறிவில் ஒரு பகுதியைக் கூடப் பகிர்ந்து கொண்டதாக ஆகாது என்ற அரவிந்தரை அந்த அறிவெல்லாம் நாங்களுக்கும் எங்கள் சந்ததியினரும் அறியாமலேயே இருந்து விடுமோ என்று கேட்ட போது, அவர், “முதலில் நான் எழுதியதை அனைத்தும் படியுங்கள்” என்று புன்னகையுடன் கூறினார்.
“ஒருவேளை நான் காலத்திற்கு முன்பு பிறந்து விட்டேனோ என்று எனக்குத் தோன்றுகிறது” என்று தொடர்ந்து கூறினார், அரவிந்தர்.
அவரது ஆங்கிலக் கவிதைகளில் ஒரு வரியை நிரோத்பரன் நினைவு கூர்கிறார்.
‘எல்லையற்றதை நான் ராட்ஸச மது போலக் குடித்தேன்’ என்பதே அந்த வரி.
அப்படிப்பட்ட ராட்ஸச மதுவினால் தான் அவர் இந்தியாவிற்கு உலகிற்கும் நான்கு பிரதானமான கொடைகளை அளித்துள்ளார்.
- தேசீய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதலும் முழு சுதந்திரத்திற்கான தணியாத தாகத்தை ஏற்படுத்துதலும்
- வேதத்திற்கான ஒரு புதிய ஆழ்ந்த அர்த்தத்தைத் தருதல்
- சூப்பர்மைண்ட் எனப்படும் அதிமானஸ மனதை மறுபடியும் கண்டுபிடித்தல்
- வாழ்க்கையைத் தழுவி அமையும் ஒரு ஒருங்கிணைந்த யோகத்தை உருவாக்கல்
3
நிரோத்ரன் குறிப்பிடும் நான்கு மகத்தான பணிகளால், 1) இந்தியர்கள் விழிப்புணர்ச்சி பெற்று சுதந்திரத்தை அடைந்தனர்
2) வேதத்திற்கான ஒரு அரிய ஆய்வால் அதன் உள்ளார்ந்த அர்த்தம் பெறப்பட்டது. இதைப் பின்னர் கபாலி சாஸ்திரிகள் உள்ளிட்டோர் விரிவு படுத்தி விளக்கம் எழுதினர். 3) சூப்பர் மைண்ட் எனப்படும் அதிமானுட மனம் பற்றிய அதிசயிக்கத் தக்க உண்மைகளை அறிந்தது. 4) யோகத்தை வாழ்க்கையுடன் இணைக்கும் புது யோக முறையை உலகம் அறிந்து கொண்டது.
4
இப்படிப்பட்ட மகத்தான பணியை உடனடியாக அவர் செய்து முடித்து விடவில்லை. அதற்கான கடுமையான தவத்தை அவர் மேற்கொண்டார்.
அவர் கூறுவதை அவர் வார்த்தைகளிலேயே பார்ப்போம்:
“It took me for years of inner striving to find a real way, even though the divine help was with me all the time, and even then, it seemed to come by an accident; and it took me ten more years of intense yoga under a supreme inner guidance to trace it out and that was because I had my past and the world’s past to assimilate and overpass before I could find and found the future.”
5
இந்தியாவிற்கு ஒளி மயமான எதிர்காலம் இருப்பதாக உறுதி கூறியுள்ளார் அரவிந்த மஹரிஷி.
ஆனால் அந்த ஒளிமயமான பாரதத்தை உருவாக்க ஒவ்வொருவரும் தன் அரிய பங்கை ஆற்ற வேண்டும்.
அவரது நினைவு ஏற்படுத்தும் உத்வேகத்தால், தேச பக்தியுடன் தெய்வ பக்தியை ஒருங்கிணைத்து வேத உண்மைகளை உலகிற்கு அளித்து உலகை வேத பூமியாக மாற்ற உறுதி பூணுவோம்!
–subham–