டிரிங்கர்ஸ் கிளப்-3 தண்ணியும் கிண்ணியும்-3 (Post No.8686)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8686

Date uploaded in London – –15 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டிரிங்கர்ஸ் கிளப்-3, DRINKERS CLUB -3 , தண்ணியும் கிண்ணியும்-3

மயங்கி விழுந்தாள் தேவயானி….. காதலனைக் காணோம்

காலை கண்விழித்த அசுர குரு எவ்வளவோசமாதானப் படுத்திப்

பார்த்தார் தேவயானியை.எனக்குத் தேவை என் கசன்

இல்லை எனில் நான் தற்கொலை செய்து கொள்வேன்…..

அப்போதுதான் விளங்கியது அந்த விளாங்கா மண்டை

குருவுக்கு…….ஞான திருஷ்டியில் பார்த்தார் கசா

எங்கியிருக்கிறாய் நீ???? இங்கே இருக்கிறேன் குருவே,

அவர்   வயிற்றுக்குள்ளிருந்து சப்தம்கேட்டது……..அப்போதுதான்

தெரிந்து தனது சுரா பானத்திலேயே கசன்  சாம்பலை

கரைத்திருக்கிறர்கள் என்று…….

தேவயானி உயிரை விடுவதற்கு முன் கசனை உயிரோடு வெளியே

கொண்டு வரவேண்டுமே???

ஏய் கசா உனக்கு சஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் செய்கிறேன்.

நீ உயிரோடு வந்த பின் அந்த மந்திரத்தைச்சொல்லி நீ என்னை

எழுப்பு…….அப்படியே நடந்தது. தேவயானிக்கு சந்தோஷம்

என்றால் அப்படி சந்தோஷம்!!!. ஓடி வந்து கசன்  கையை பிடித்துக

கொண்டு என்னைத் திருமணம் செய்து கொள்……

கசன் முடியாது

பெண்ணே!!! நான் உன் தகப்பன் வயிற்றிலிருந்து வந்திருக்கிறேன்.

நீ எனக்கு சகோதரி முறை வேண்டும்

கசன், அசுர குரு சுக்ராச்சரியாரியாரைப் பார்த்து நான். வந்த வேலை முடிந்தது.

கீழே விழுந்து நமஸ்காரம் செய்து தேவயானி கதறக்கதற

தேவலோகம்   சென்று விட்டான்.

தேவயானி தான் சொன்னபடியே யாருக்கும் தெரியாமல் கிணற்றில்

குதித்து விட்டாள். கதறி கதறி அழுகிறர் அசுர குரு.

இப்போது முழு மதியுடன் யோசனை செய்து பார்க்கிறார் அசுர குரு.

எல்லாம்   இந்த பாழாய்ப் போன சுரா பானத்தினால் வந்தது.

இந்தா பிடி சாபம்

எவனவன் இந்த சுரா பானத்தை அருநதுகிறானோ அவன் மதி

இழப்பானாகட்டும்

அவன் வீட்டில  பெண்மணிகளினால் சண்டை வரட்டும்;

அவன் குடும்பம் பிரியட்டும்

அவன் செயலிழந்து போகட்டும். அவன் வாய் குழறட்டும்;

எல்லோரும் அவனை ஏளனமாக பார்க்கட்டும்.

உடை அவிழ்ந்தது கூட தெரியாமல் போகட்டும்]

அவன் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடட்டும்

அவன சொந்தமெல்லாம் அவனைக் கண்டு எள்ளி நகைக்கட்டும்.

சுமார் 5000 வருடங்களுக்கு முன் அவர் இட்ட சாபம் இன்றும்

பலிக்கிறதா இல்லையா????

இனி மேலும் யாராவது குடிக்க நினைத்தால் மேல்கண்ட

சாபம் உங்கள் நினைவுக்கு வரட்டும். குடிக்க நினைத்தாலும்

உங்கள் மனைவி , மகள் முகங்கள் நினைவுக்கு வரட்டும்

உங்கள் பர்ஸ் (Purse/ wallet) உங்களைப் பார்த்து சிரிக்காமல் இருக்கட்டும்

தமிழ் நாட்டிலுள்ள மொத்த distilleries & breweries. – 17

மொத்த உற்பத்தி சுமார் மாத த்திற்கு 85 லட்சம் “பெட்டிகள்”

தழிழ் நாட்டிலுள்ள மொத்த TASMAC கடைகள் – 5,146.

ஒரு நாள் Tasmac வருமானம் 70 லிருந்து 80 கோடி ரூபாய்கள்

தீபாவளி / பொங்கல் /new year/ஒரு நாள் வருமானம் 120 கோடி

தமிநாட்டிற்கு ஒரு வருட வருமானம் 30,000 கோடி ரூபாய்கள்.

மொத்த இந்தியாவிற்கும் வருட வருமானம்

2.5 லட்சம் கோடி ரூபாய்கள் !!!!

இ வை அ னைத்தும் உங்கள் ப ண ம் ! ! ! !

(அனைத்து தகவல்களும் google லில் இருந்து எடுக்கப்பட்டவை)

நன்றி வணக்கத்துடன் கத்துக்குட்டி

tags– டிரிங்கர்ஸ் கிளப்-3 ,  தண்ணியும் கிண்ணியும்-3