
Post No. 8675
Date uploaded in London – –13 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
(மூன்று வார தொடர்)
(இதன் நோக்கமே இதில் குடிக்காதவர்களையும் பெண்களையும்
சேர்க்க வேண்டுமென்பதே. அன்பர்கள் அனைவரும் அவர்களது
சகோதரிகளையும் தங்கள் தங்கள் மனைவியையும் இதில்
சேர்த்து பயனுறுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறான் கத்துக்குட்டி)
முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரே சண்டை……
இரண்டு பக்கங்களிலும் பயங்கர மரணங்கள்
( நீங்கள் நினைப்பது எனக்குத் தெரிகிறது…….என்னையா
கத்துக்குட்டி, தலைப்புக்கும் நீ விடற “ரீலுக்கும்” சம்பந்தமே
இல்லாமலிருக்கிறதே……..தயவு செய்து தொடர்ந்து படியுங்கள்
இது விட்டலாச்சார்யா கதையை விட இன்ட்டரஸ்டிங்காக
இருக்கு என உறுதி கூறுகிறேன்).
தினம் தினம் இது மாதிரி நடந்து கொண்டிருக்கிறது.
தேவர்களிடையே ஒரு சல சலப்பு ……நேற்று நான்தான்
கொன்னேன் இந்த முண்டாசுரனை….. இன்று வந்து கிண்ணுன்னு
நிக்கிறானே???? மற்றொரு தேவர் ஆமா நேற்று கொன்ன
காலாசுரன் என்முன் காலை ஆட்டி சண்டைக்கு வா என்று சவால்
விடுகிறானே…….
இறந்து போன அனைவரும் மறுநாள் உயிருடன் சண்டைக்கு
வந்து நிற்கிறார்களே??? என்ன அதிசயம்????
அனைவரும் தேவ குருவான பிருகஸ்பதியின் முன் நின்றார்கள்.
“குருவே சண்டையில் நாங்கள் கொன்ன அனைத்து அசுர ர்களும்
மறு நாள் உயிருடன் மீண்டும் சண்டைக்கு வந்து நிற்கிறார்களே
நமது எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது்அவர்கள்
எண்ணிக்கை “கான்ஸ்டன்டாக” அப்படியே இருக்கிறது???
அப்போது தேவ குரு தனது C B I மூலமாக ஆராய்ந்ததில்
அசுர குரு சுக்கிராச்சாரியார் இறந்து போனவர்களின் உடலை
எடுத்து வரச்சொல்லுவாராம் . சஞ்சீவினி என்ற மந்திரத்தைச்
சொல்லுவாராம். உடனே இறந்தவர் எல்லோரும் உயிர் பெற்று
எழுந்து விடுவார்களாம்….
என்னடா இது இந்த தேவ குலத்திற்கு வந்த சோதனை???
உடனே முக்கிய தலைவர்களின் அந்தரங்க ஆலோசனைக்
கூட்டம் கூடியது. முடிவு ஒரு சீக்ரட் ஏஜன்ட் ஒருவரை(007 ஐ).
அனுப்பி அந்த சஞ்சீவினி மந்திரத்தை தெரிந்து கொண்டு
வர வேண்டியது. சீக்ரட் ஏஜன்ட்டாக தேவ குரு பிருகஸ்பதியின்
மகனான ஜேம்ஸ் பாண்ட் கசன் என்பவனை அனுப்ப வேண்டியது .

“ப்ராஜக்ட்- சஞ்சீவ்” ரெடி!!!
வெற்றிலை , பாக்கு, எல்லாவித பழங்கள், நவ ரத்தின மாலைகள்
பொற் காசு நிரம்பிய தட்டுகள், பூ மாலைகள் சுமார் நூறு பேர்
சுமக்க அசுர குரு சுக்கிரச்சரியாரின் காலில் விழுந்தான் கசன்.
“தேவ குரு பிருகஸ்பதியின குமரரான கசன் உங்கள் காலில்
விழுகிறேன்”
ஆச்சரியம் தாங்க வில்லை அசுர குருவுக்கு!!! எதிரியின் மகன்
நம்காலில் விழுவதா????
எழந்திரு மகனே!, உனக்கு என் ஆசீர்வாதங்கள். உனக்கு என்ன
வேண்டும்????
குருவே உங்களிடம் சீடனாக சேர வந்திருக்கிறேன்
என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்……
அந்த மரியாதை ,உபசாரம் , பொன் பொருள்களைக்
கண்டு மயங்கிய அவர் “அவண்ணமே ஆகட்டும்”!!!!
(தொடரும்)
இனி மேதான் இன்ட்ரஸ்டிங் சீன்கள் வரும் தொடர்ந்து படிக்கவும்)
To be continued……………………………
tags– டிரிங்கர்ஸ் கிளப், தண்ணியும் கிண்ணியும்