பாரி மகள் போட்ட தங்க சோறு! தமிழர் வளம்!! (Post No.3288)

gold

Written by London Swaminathan

 

Date: 25 October 2016

 

Time uploaded in London: 19-32

 

Post No.3288

 

Pictures are taken from various sources; thanks. They are used for representational purpose. They may not have direct connection to the article below.

 

 

தயிர் சாதம், புளியஞ் சாதம், சாம்பார் சாதம் — எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். தங்க (Gold) சாதம், தங்க சோறு கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

 

செல்வம் கொழிக்கும் நாட்டில் மட்டுமே இது சாத்தியம் ஆகும். பாரி வள்ளல் ஆண்ட தமிழகத்தில் தங்கத்துக்குப் (Gold) பஞ்சமில்லை!

 

பாரி வள்ளல் இறந்த பின்னர் ஒரு நாள் பாரியின் மகளிர் சங்கவை, அங்கவை ஆகியோர் இருந்த இடத்துக்கு பாணர் குல மகளிர் பாடிக்கொண்டு வந்தனர். அப்படி வருவோருக்கு உணவும், உடையும், பொன்னும் கொடுப்பது பாரி கடைப்பிடித்த நடைமுறை.

 

ஆனால் பாரி மகளிர் வீட்டில் அரிசியும் இல்லை, பொங்குவதற்குப் பானையும் இல்லை.

ஏனெனில் வறட்சி நிலவிய காலம் அது.

பெண் என்றால் ஏதாவது தங்க நகை அணிந்திருப்பார்கள் அல்லவா? அதுவும் பாரி மன்னனின் மகள்கள் என்றால் நகை இல்லாமலா போகும்?

 

தாங்கள் அணிந்திருந்த பொன் நகைகளை அப்படியே உலையில் இட்டு அதையே சோறாக இலையில் போட்டார்கள் பாரி மகளிர். இல்லை என்ற சொல்லை அகராதியில் காணாத குடும்பம் பாரி மன்னன் குடும்பம்.

 

இந்தச் செய்திக்கு ஆதாரம் என்ன?

1200 ஆண்டுகளுக்கு முன் எழுந்த பழமொழி 400 என்னும் நூலில் அருமையான ஒரு பாடல் இந்தச் செய்தியைக் கூறுகிறது:–

 

மாரியொன்றின்றி வறந்திருந்த காலத்தும்

பாரி மடமகள் பாண்மகற்கு – நீருலையுள்

பொன்றிறந்து கொண்டு புகாவாக நல்கினாள்

ஒன்றுறா முனிறிலோ வில் – பழமொழி

 

pot-of-gold-psd87858

இன்னொரு பாடலில் கோழியை விரட்ட ஒரு பெண் தன் காதில் அணிந்த தங்க குண்டலங்களை எறிந்ததாக உள்ளது. இதை மிகைப்படுத்தப்பட்டக் கற்பனை என்று யாராவது நினைத்தாலும், அந்தக் கற்பனையும் கூட தங்கம் செழிக்கும் நாட்டில்தான் வர முடியும். பிச்சைக்காரகள் உள்ள சமுதாயத்தில் கல்லும் மண்ணாங்கட்டியும்தான் உவமையாக வரும்!