தண்டலையார் சதகம்- 31 பழமொழிகள் (Post No.9316)

மார்ச் 2021  நற்சிந்தனை காலண்டர் (Post No.9316)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9316

Date uploaded in London – –27 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தண்டலையார் சதகம் என்றும் பழமொழி விளக்கம் என்று கூறப்படும் நூலில் 100 பழமொழிகள் உள்ளன. அவற்றில் 31 பழமொழிகளை இந்த மாத காலண்டரில் காண்போம்

பண்டிகை/விடுமுறை நாட்கள் :–மார்ச் 11- மகா சிவராத்திரி ;  14- காரடையான் நோன்பு ; மார்ச் 28-பங்குனி உத்திரம் , ஹோலி

ஏகாதசி – 9, 24; அமாவாசை – 13; பௌர்ணமி -28;

முஹுர்த்த நாட்கள் – 3, 5, 10, 11, 15, 24, 31

.****

மார்ச் 1 திங்கட் கிழமை

திருவிளக்கிட் டார்தமையே தெய்வமறிந் திடும்வினையும் தீரும் தானே! (01) பழமொழி: “திருவிளக்கிட்டாரைத் தெய்வமறியும்”, “விளக்கிட்டால் வினைதீரும்”

xxx

மார்ச் 2 செவ்வாய்க்  கிழமை

வான்செய்த நன்றிக்கு வையகம்என் செய்யுமதை மறந்தி டாதே

உலகத்தை வாழவைக்கும் மழைக்கு நன்றிகாட்ட உலகமக்கள் என்னசெய்ய முடியும்?

xxx

மார்ச் 3 புதன்  கிழமை

இட்டபடி யேயொழிய வேறாசைப் படில்வருவ தில்லை தானே!(03)

இட்டபடி அல்லாமல் வேறு ஆசைப்பட்டால் கிடைத்திடுமோ?

xxx

மார்ச் 4 வியாழக்  கிழமை

நன்மைசெய்தார் நலம்பெறுவர் தீமைசெய்தார் தீமைபெற்று நலிவர் தாமே. (04) நன்மைசெய்தார் நன்மைபெறுவர் தீமைசெய்தார் தீமை பெறுவர்.

xxx

மார்ச் 5 வெள்ளிக்  கிழமை

நல்லறமாம் வள்ளுவர்போல் குடிவாழ்க்கை மனைவியுடன் நடத்தி நின்றால்

இல்லறமே பெரிதாகும் துறவறமும் பழிப்பின்றேல் இயற்கை தானே. (05)

பழமொழி: இல்லறமே பெரிது

xxx

மார்ச் 6 சனிக்  கிழமை

கொக்கெனவே நினைந்தனையோ கொங்கணவா என்றொருத்தி கூறி னாளே. (06)

கொக்கெனவே நினைந்தனையோ கொங்கணவா

xxx

மார்ச் 7 ஞாயிற்றுக்  கிழமை

பன்றிபல ஈன்றுமென்ன குஞ்சரம்ஒன் றீன்றதனாற் பலனுண் டாமே. (07)

பழமொழி: பன்றிபல குட்டி போட்டால் என்ன? யானையின் ஒருகுட்டிக்கு இணையாமோ?

xxxx

மார்ச் 8 திங்கட் கிழமை

நல்லதுகண் டால்பெரியோர் நாயகனுக்(கு) என்றதனை நல்கு வாரே. (08)

பழமொழி: நல்லதுகண்டால் நாயகனுக்குக் கொடுப்பர். (நாயகன்=இறைவன்)

xxx

மார்ச் 9 செவ்வாய்க்  கிழமை

வருவிருந்தோ டுண்பதல்லால் விருந்தில்லா(து) உணுஞ்சோறு மருந்து தானே.(09) விருந்தில்லாத சோறு மருந்து.

xxx

மார்ச் 10 புதன்  கிழமை

சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி பொழிந்துவிடும் தன்மை தானே. (10)

சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பெய்தாற்போலே.

xxx

மார்ச் 11 வியாழக்  கிழமை

எறும்பெண்ணா யிரமப்பாற் கழுதையுங்கை கடந்ததென்றோன் எண்ணந் தானே. (11)

 ‘எறும்பு எண்ணாயிரம் போனது அப்பால் கழுதையும் கைகடந்தது, என்றாற் போல’.

xxx

மார்ச் 12 வெள்ளிக்  கிழமை

உப்பிட்ட பேர்கடமை உளவரையும் நினைக்குமிந்த உலகம் தானே. (12)

 உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

xxx

மார்ச் 13 சனிக்  கிழமை

காட்டுக்கே எரித்தநிலா கானலுக்கே பெய்தமழை கடுக்கும் தானே. (13)

: காட்டுக்கு எரித்தநிலா, கானலுக்குப்பெய்த மழை போல

xxx

மார்ச் 14 ஞாயிற்றுக்  கிழமை

கங்கையிலே படர்ந்தாலும் பேய்ச்சுரைக்காய் நல்லசுரைக் காயா காதே. (14)

கங்கையிலே படர்ந்தாலும் பேச்சுரைக்காய் நல்லசுரைக்காய் ஆகாது.

xxx

மார்ச் 15 திங்கட் கிழமை

மழைவிட்டும் தூவானம் விட்டதில்லை யாயிருந்த வண்ணந்தானே. (15)

பழமொழி: மழைவிட்டும் தூவானம் விடவில்லை.

xxx

மார்ச் 16 செவ்வாய்க்  கிழமை

துர்ச்சனப்பிள் ளைக்(கு)ஊரார் புத்திசொல்லு வார்என்றே சொல்லு வாரே. (16) பழமொழி: துர்ச்சனப்பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்லுவார்.

xxx

மார்ச் 17 புதன்  கிழமை

பொறுத்தவரே ஆள்வார் பொங்கினவர் காடுறைந்து போவர் தாமே. (17)

பொறுத்தவர் பூமி ஆள்வார்,பொங்கினவர் காடாள்வார்.

xxx

மார்ச் 18 வியாழக்  கிழமை

பிள்ளைபெற் றவர்தமைப்பார்த் திருந்துபெரு மூச்செறியும் பெற்றி யோரே. (18) பழமொழி: பிள்ளை பெற்றவளைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டாளாம்

xxx

மார்ச் 19 வெள்ளிக்  கிழமை

எண்ணமெல்லாம் பொய்யாகும் மௌனமே மெய்யாகும் இயற்கை தானே. (19) மௌனமே மெய்

xxx

மார்ச் 20 சனிக்  கிழமை

முன்னுக்கொன் றாயிருந்து பின்னுக்கொன் றாய்நடந்து மொழிவர் தாமே.(20) முன்னுக்கொன்றாய்ப் பின்னுக்கொன்றாய்ப் பேசுவார் முகத்தில் விழிக்கக் கூடாது.

xxx

மார்ச் 21 ஞாயிற்றுக்  கிழமை

விடியன்மட்டும் மழைபெயினு மதினோட்டாங் கிளிஞ்சின் முளைவீசி டாதே. (21) விடியவிடிய மழைபெய்தாலும் ஓட்டாங்கிளிஞ்சில் முளைக்காது

xxx

மார்ச் 22 திங்கட் கிழமை

ஐங்காதம் போனாலும் தன்பாவம் தன்னுடனே ஆகும் தானே. (22)

ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது

xxx

மார்ச் 23 செவ்வாய்க்  கிழமை

நாயறியாது ஒருசந்திச் சட்டிபா னையினந்த ஞாயம் தானே. (23)

நாய்க்குத் தெரியுமோ ஒருசந்திப்பானை?/

நக்குற நாய்க்குச் செக்குந்தெரியாது, சிவலிங்கமும் தெரியாது!

xxx

மார்ச் 24 புதன்  கிழமை

எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார் வாழ்ந்தாலு மென்னுண் டாமே. (24)

பழமொழி: எட்டிபழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

xxx

மார்ச் 25 வியாழக்  கிழமை

காதவழி பேரில்லான் கழுதையோ(டு) ஒக்குமெனக் காண லாமே. (25)

பழமொழி: காதவழி பேரில்லான் கழுதைக்கொப்பான்

xxx

மார்ச் 26 வெள்ளிக்  கிழமை

தெரியாத செவிடன்கா தினிற்சங்கு குறித்ததெனச் செப்ப லாமே.(26)

செவிடன்காதில் ஊதிய சங்குபோல.

xxx

மார்ச் 27 சனிக்  கிழமை

தன்னுயிர்போல் எந்நாளும் மன்னுயிருக் கிரங்குவதும் தக்க தாமே. (27)

தன்னுயிர்போல் மன்னுயிர்க்கு இரங்கவேண்டும்

xxx

மார்ச் 28 ஞாயிற்றுக்  கிழமை

சருகரிக்க நேரமன்றிக் குளிர்காய நேரமில்லாத் தன்மை தானே. (28)

சருகரிக்க நேரமன்றிக் குளிர்காய நேரமில்லை.

xxx

மார்ச் 29 திங்கட் கிழமை

போதிலே மவுனமிராப் போதிலே ருத்ராக்கப் பூனை தானே. (29)

பழமொழி: உருத்திராட்சப் பூனை போல ;

xxx

மார்ச் 30 செவ்வாய்க்  கிழமை

தானொன்று நினைக்கையிலே தெயவமொனறு நினைப்பதுவும் சகசந்தானே. (30) பழமொழி: தானொன்றுநினைக்கத் தெய்வமொன்றுநினைக்கும்.

xxx

மார்ச் 31 புதன்  கிழமை

மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி வாழ்வதிலை மெய்ம்மை தானே. (31)

பழமொழி: மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி வாழ்வானோ?

xxx சுபம் xxx

tags-  தண்டலையார் சதகம்,  பழமொழிகள், மார்ச் 2021 காலண்டர்