மாங்கல்யம் தந்துனானேன!கல்யாணமே, வைபோகமே !! (Post No.8466)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8466

Date uploaded in London – 7 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எல்லா சினிமாக்களிலும், கட்டுரைகளிலும் வரும் இந்த மந்திரம் பிரதானமாகக்  கருதப்படுகிறது .உண்மையில் சப்தபதி முடிந்தால்தான் கல்யாணம் முடிந்ததாக இந்து சட்டம் சொல்கிறது.

இந்த மந்திரம் சொல்லும்போதே ‘கெட்டி மேளம், கெட்டி மேளம்’ என்று கையை ஆட்டுகிறார்கள் . அப்போது நாம் வீசிப் போடும் பூவும் அட்சதையும் மணமக்களைத் தவிர , ஐயர் மற்றும் மாப்பிள்ளை, பெண் வீட்டாரின் சொந்த பந்தங்கள் தலையிலும் விழும்.

உடனே ‘டைனிங் ஹால்’ நோக்கி ஓடுவோம் ; இதில் வீடியோக்காரர், போட்டோகிராபர்கள் அட்டகாசம் வேறு ! மறுபடியும் தாலியைத் தொட்டுக்கொண்டு காமிராவையே பாருங்கள் என்று கட்டளையிடுவார்கள் . போட்டோவுக்காக இரண்டு தடவையா தாலி கட்ட முடியும்?

இந்த மங்களகரமான ஆரம்பத்துடன் ‘கல்யாண ஜோதிட’த்துக்கு வருவோம்.

ஆண் , பெண் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் முன் அவர்களுடைய ஜாதகங்கள்தான் ஒன்றை ஒன்று சந்திக்கும் ஜோதிடர் கைகளில் ! முதலில் வெவ்வேறு கோத்திரம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, வயது வித்தியாசம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, நட்சத்திர பொருத்தம் இருக்கிறதா என்று பார்ப்பார்.

நட்சத்திரங்களில் மிக மிக உயர்ந்தவை என்று ரிஷி முனிவர்கள் தேர்ந்தெடுத்தது நான்கு நட்சத்த்திரங்கள்  ஆகும் :–

மிருகஸீர்ஷம்

மகம்

சுவாதி

அனுஷம்

ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த நான்கு நடத்திரங்களில் ஒன்று இருக்குமானால் பொருத்தமே பார்க்கத் தேவையில்லை என்பது ஆன்றோர்வாக்கு !

எதற்கும் பொருத்தம் பார்த்துவிடலாமே?  என்று கேட்பது பெற்றோர் வாக்கு ஆகும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே நட்சத்திரம் இருந்தால் கல்யாணம் செய்யலாமா? என்ற கேள்வி எழும்.

அதற்கும் பதில் சொல்கிறார்கள் ஆன்றோர்கள்.

ஏக நட்சத்திரப் பொருத்தமுள்ளவை :–

ரோகிணி, திருவாதிரை, மகம், ஹஸ்தம்,

விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி .

இது தவிர மிக மிக முக்கியப் பொருத்தங்கள் இருக்கிறதா என்றும் பார்க்கவேண்டும். அது என்ன முக்கியப் பொருத்தம் என்று கேட்கிறீர்களா ?

தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு  ஆகிய ஐந்தும் முக்கியமானவை.

மேற்கண்ட ஐந்தும் ஒரே நட்சத்திரப் பொருத்தம் உடைய ஜாதகத்தில் இருக்காதெனினும் கீழ் கண்ட  விஷயங்களை பார்ப்பார்கள் :-

திசா சந்திப்பு – ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே திசை ஒரே நேரத்தில் நடக்கக் கூடாது.

பாவ சாமியம் –  பாவ சாமியம் என்பது பெண்ணை விட, அரைப் பாகமாவது ஆணுக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

அவ்வளவுதான் ; பிறகு என்ன ?

மேள, தாளத்துடன் கல்யாணம்தான் .

ஆயினும் தற்காலத்தில் கல்யாணத்துக்கு முன்னே, செல் போனில் பேசிக்கொள்வதும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் சந்திப்பதும் , 100 ஈ  மெயில் பரிமாறிக்கொள்வதும் , போட்டோக்கள் — பல போஸ்களில் — பல வண்ண உடைகளில் அனுப்புவதும் நடக்கின்றன .

தனால் என்ன ? நமக்குத்தான் லட்டு, அப்பளம் , வடை, பாயசம், போலி, தயிர்வடையுடன் அறு சுவை உண்டி கிடைக்கிறதே !!

(இதில் கண்ட விஷயங்களில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் மெயில் அனுப்புங்கள் . ‘பெர்சனல்’ கேள்விகள் இருந்தால் உங்கள் பெயரை வெளியிட மாட்டோம். பதில் மட்டும் ‘பிளாக்’கில்  வரும் . பொதுவான கேள்விகள் இருந்தால் உங்கள் பெயர், ஊருடன் வெளியிட்டு பதில் தருகிறோம். ஜோதிடம் வளர்க ! ஜோதிடர் வாழ்க !!)

TAGS — மாங்கல்யம் ,தந்துனானேன,KATTUKKUTY