தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா QUIZ (Post No.4649)

Written by London Swaminathan 

 

Date: 22 JANUARY 2018

 

Time uploaded in London – 17-40

 

Post No. 4649

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா — என்றெல்லாம் பெருமையாகச் சொல்லிக் கொள்வோம்; அந்தப் பெருமைக்குரியவர் நீங்களா என்பதை கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதில் தந்து நிரூபியுங்கள் பார்க்கலாம். இந்த வாசகங்களை யார் சொன்னார்கள்?

 எந்த நூலில் சொன்னார்கள்?

 

1.கண்ணாடிக் கன்னத்தைக் காட்டி என் உள்ளத்தைப்

புண்ணாக்கிப் போடாதே, போ போ மறைந்துவிடு

xxxxxxxx

 

2.மா முது பார்ப்பான் மறைவழி காட்டிட

தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை!

xxxxxx

 

3.செயற்கரிய செய்வார் பெரியார்

 

xxxxx

 

4.அஞ்சுவதி யாதொன்றுமில்லை அஞ்ச வருவதுமில்லை

 

xxxxx

 

5.வடகலை தென்கலை வடுகு கன்னடம்

இடம் உள பாடை யாது ஒன்றின் ஆயினும்

xxxxxx

 

6.அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்

திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பிமறம் கந்தாக நல் அமர் வீழ்ந்த நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க!

xxxxx

 

7.வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை, ஐயோ!

எலி இழுத்துப் போகின்றது, என்?

xxxxx

 

8.ஐயநா வழித்தாளுக்கு அங்காந்திட

வையம் ஏழும் கண்டாள் பிள்ளை  வாயுளே

xxxxxxxx

 

9.சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே

தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்;

நீதிநெறியினின்று பிறர்க்குதவும்

நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்

xxxxxx

 

10.தமிழ்ச் சொல் வடசொல் என்னும் இவ்விரண்டும்

உணர்த்தும் அவனை உணரலும் ஆமே

 

xxxxxx

 

ANSWERS:-

  1. பாரதிதாசன் பாடல்கள், 2. இளங்கோ, சிலப்பதிகாரம், 3. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 4. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 5. கம்பன் கம்பன், கம்ப ராமாயணம், 6. சங்க கால அவ்வையார் ,புறநானூறு, 7. காளமேகம், , தனிப்பாடல்கள், 8. பெரியாழ்வார் திருமொழி, திவ்யப் பிரபந்தம், 9. பாரதியார் பாடல்கள், 10. திருமூலர் எழுதிய திருமந்திரம்

 

–SUBHAM–