தமிழில் அலங்காரம்! (Post No.5455)

Written by S NAGARAJAN

Date: 22 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 5-42 AM (British Summer Time)

 

Post No. 5455

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

தமிழில் அலங்காரம்!

 

.நாகராஜன்

 

ஒரு கவிதையை நன்கு ரசிக்க அலங்காரம் அல்லது அணி பற்றிய அறிவு நிச்சயம் தேவை.

 

முகம் அழகாக இருக்கிறது என்று சொல்வதை விட சந்திரன் போன்ற முகம் என்றால் நமக்கு இன்னும் நன்றாகப் புரியும்.

அவள் அழகில் ரம்பா என்று சொல்லும் போது ரம்பையை நாம் நேரில் கண்ட்தில்லை என்றாலும் அர்த்தம் என்னவோ புரிகிறது.

இப்படி உவமை, உருவகம் என பல்வேறு அணிகள் நமது புரிதல் தன்மையையும் அர்த்தத் தெளிவு காணலையும் தருவதோடு அழகு உணர்தலையும் மேம்படுத்துகின்றன.

 

பரத முனிவர் நாட்டிய சாஸ்திரத்தில் நான்கு அலங்காரங்களைப் பற்றிச் சொல்கிறார்.

 

சம்ஸ்கிருத இலக்கணத்திலோ சப்தாலங்காரம், அர்த்தாலங்காரம் என இரு வகை அலங்காரங்களைப் பார்க்கிறோம். இவற்றின் பட்டியல் நீளமானது.

 

தமிழில் சிறு எண்ணிக்கையில் ஆரம்பித்த அணிகளின் பட்டியல்  வீர சோழியம் நூலில் 35ஐ எட்டியது.

 

பின்னர் தண்டியலங்காரம் அலங்காரங்களின் பட்டியலில் 35ஐத் தர மாறனலங்காரமோ 64ஐத் தொட்டது.

 

திருத்தணிகை விசாகப்பெருமாளையர் அணியிலக்கணமோ 100 அணிகளைப் பட்டியலிட்டு விளக்கியுள்ளது.

இறுதியாக வந்த குவலயாநந்தம் என்ற நூலோ 120 அணிகளின் பட்டியலைத் தருகிறது.

 

அந்தப் பட்டியல் வருமாறு:-

1) உவமையணி

2) இயையின்மையணி

3) புகழ்பொருளொப்பணி

4) எதிர்நிலையணி

5) உருவக அணி

6) திரிபணி

7) பலபடப்புனைவணி

8) நினைப்பணி

9)  மயக்கவணி

10) ஐயவணி

11) வெற்றொளிப்பணி

12) தற்குறிப்பணி

13) உயர்வுநவிற்சியணி

14) ஒப்புமைக்குழுவணி

15) விளக்கணி

16) பின்வருவிலக்கணி

17) தொடர்முற்றுவுவமையணி

18) எடுத்துக்காட்டுவமையணி

19) காட்சியணி

20) வேற்றுமையணி

21) உடனவிற்சியணி

22) இன்மை நவிற்சியணி

23) சுருங்கச் சொல்லணி

24) கருத்துடையணி

25) கருத்துடையடைகொளணி

26) சிலேஷையணி

27) புனைவில்லிப் புகழ்ச்சியணி

28) புனைவுள்ளி வினையணி

29) பிறிதினவிற்சியணி

30) வஞ்சப்புகழ்ச்சியணி

31) வஞ்சப்பழிப்பணி

32) எதிர்மறையணி

33) முரண்மேல் வினையணி

34) பிறிதாராய்ச்சியணி

35) காரணவாராய்ச்சியணி

36) கூடாமையணி

37) தொடர்பின்மையணி

38) தகுதியின்மையணி

39) தகுதியணி

40) வியப்பணி

41) பெருமையணி

42) சிறுமையணி

43) ஒன்றுக்கொன்றுயுதவியணி

44) சிறப்புநிலையணி

45) மற்றதற்காக்கலணி

46) காரணமாலையணி

47) ஒற்றைமணிமாலையணி

48) மாலை விளக்கணி

49) மேன்மேலுயர்ச்சியணி

50) நிரல்நிறையணி

51) முறையிற்படர்ச்சியணி

52) மாற்றுநிலையணி

53) ஒழித்துக்காட்டணி

54) உறழ்ச்சியணி

55) கூட்டவணி

56) வினைநுதல் விளக்கணி

57) எளிதின் முடிவணி

58) விறல் கோளணி

59) தொடர்நிலைச் செய்யுட் பொருட் பேறணி

60) தொடர்நிலைச் செய்யுட்  குறிப்பணி

61) வேற்றுப்பொருள் வைப்பணி

62) மலர்ச்சியணி

63) கற்றோர் நவிற்சியணி

64) பேருய்த்துணர்வணி

65) பொய்த்தற்குறிப்பணி

66) வனப்பு நிலையணி

67) இன்பவணி

68) துன்பவணி

69) அகமலர்ச்சியணி

70) இகழ்ச்சியணி

71) வேண்டலணி

72) இலேசவணி

73) குறிநிலையணி

74) இரத்தினமாலையணி

75) பிறிதின் குணம்பெறலணி

76) தொல்லுருப் பெறலணி

77) பிறிதின்குணப்பேறின்மையணி

78) தன்குணமிகையணி

79) மறைவணி

80) பொதுமையணி

81) மறையாமையணி

82) சிறப்பணி

83) இறையணி

84) நுட்பவணி

85) கரவுவெளிப்படுப்பணி

86) வஞ்சநவிற்சியணி

87) குறிப்பு நவிற்சியணி

88) வெளிப்படை நவிற்சியணி

89) உத்தியணி

90) உலகவழக்கு நவிற்சியணி

91) வல்லோர் நவிற்சியணி

92) ம்டங்குதனவிற்சியணி

93) தன்மை நவிற்சியணி

94) நிகழ்வினவிற்சியணி

95) வீறுகோளணி

96) மிகுதி நவிற்சியணி

97) பிரிநிலை நவிற்சியணி

98) விலக்கணி

99) விதியணி

100) ஹேதுவணி

101) சுவையணி

102) கருத்தணி

103) வன்மையணி

104) சேர்க்கையணி

105) பாவகத் தோற்றவணி

106) பாவகச் சேர்க்கையணி

107) பாவகக் கலவையணி

108) காட்சிப் பிரமாணவணி

109) அநுமானப் பிரமாணவணி

110) ஒப்புப் பிரமாணவணி

111) சொற் பிரமாணவணி

112) பொருட்பேற்றுப் பிரமாணவணி

113) நுகர்ச்சியின்மை

114) பிறப்புப் பிரமாணவணி

115) எடுத்துக்காட்டுப் பிரமாணவணி

116) சேர்வையணி

117) உறுப்புறுப்பிக் கலவையணி

118) இரண்டு முக்கியமாகக் விளங்குங் கலவையணி

119) ஐயக் கலவையணி

120) ஒரே சொல்லையணுகி விளங்குங் கலவையணி

 

இப்படி 120 அணிகளைப் பற்றியும் தெரிந்து கொண்டால் கவிஞனின்  கவிதா ஞானமும் பொருள் வீச்சும் நன்கு புரியும்.

இதற்கான செய்யுள்கள் தமிழிலக்கியத்தில் ஏராளம் காணலாம்.

அவற்றை அணி விளக்கத்தோடு இனி வரும் கட்டுரைகளில் சிறிது காண்போம். சம்ஸ்கிருதத்தில் உள்ள அலங்காரங்களையும் தமிழ்க் கவிஞர்கள் விடவில்லை. அதையும் ஆங்காங்கே ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழின் அருமையும் பெருமையும் நன்கு புரியுமல்லவா! சிறிது தமிழிலக்கியக் களத்தினுள் இறங்குவோமா?

***