வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! (Post No. 2494)

IMG_9761

பிப்ரவரி 2016 (மன்மத தை-மாசி) காலண்டர்

Compiled by london swaminathan

Date: 31 January 2016

 

Post No. 2494

 

Time uploaded in London :–  12-31

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

இந்த மாதக் காலண்டரில் தமிழ் பற்றிய 29 மேற்கோள்கள் இடம்பெறுகின்றன.

 

திருவிழா நாட்கள்: 8-தை அமாவாசை, சீனப்புத்தாண்டு, 14-ரத சப்தமி, காதலர் தினம், 15-பீஷ்மாஷ்டமி, 22-மாசிமகம், கும்பகோணத்தில் மஹாமகம், பல கோவில்களில் தெப்பத் திருவிழா

அமாவாசை:8

பவுர்ணமி- 22

ஏகாதசி: 4, 18

சுபமுஹூர்த்த நாட்கள்- 3,5, 10, 12, 17, 19, 26.

IMG_9765

பிப்ரவரி 1 திங்கட் கிழமை

மாண்ட வரதன் சரண் வணங்க எதிர்வந்தான்

நீண்ட தமிழால் உலகை நேமியில் அளந்தான் (கம்பன்)

பிப்ரவரி 2 செவ்வாய்க் கிழமை

நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்

தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் (கம்பன்)

பிப்ரவரி 3 புதன் கிழமை

நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான்

என்றும் உள தென் தமிழ் இயம்பி இசைகொண்டான் (கம்பன்)

 

பிப்ரவரி 4 வியாழக் கிழமை

வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்- தொல்காப்பிய பாயிரம்-பன்பாரனார்

 

பிப்ரவரி 5 வெள்ளிக் கிழமை

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே

தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம் – பாரதியார்

 

 

IMG_9814

பிப்ரவரி 6 சனிக் கிழமை

ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்- பாரதியார்

 

பிப்ரவரி 7 ஞாயிற்றுக் கிழமை

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்- பாரதியார்

பிப்ரவரி 8 திங்கட் கிழமை

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையகமே — பாரதியார்

பிப்ரவரி 9 செவ்வாய்க் கிழமை

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்.

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்- பாரதியார்

பிப்ரவரி 10 புதன் கிழமை

தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்

இங்கமரர் சிறப்புக் கண்டார்

 

 

IMG_9816

பிப்ரவரி 11 வியாழக் கிழமை

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித்திருநாடு– பாரதியார்

 

பிப்ரவரி 12 வெள்ளிக் கிழமை

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே- அதைத்

தொழுது படித்திடடி பாப்பா- – பாரதியார்

 

பிப்ரவரி 13 சனிக் கிழமை

இறவாய் தமிழோடிருப்பாய் நீ (பாரதியார்)

 

பிப்ரவரி 14 ஞாயிற்றுக் கிழமை

தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத் தமிழ் இன்பதமிழ் எங்கள் உயிருக்கு நேர் –பாரதிதாசன்

 

பிப்ரவரி 15 திங்கட் கிழமை

சென்றணைந்து மதுரையினில் திருந்திய நூற் சங்கத்துள்

அன்றிருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில் – – பெரியபுராணம்

 

 

IMG_9776

பிப்ரவரி 16 செவ்வாய்க் கிழமை

தெள்ளித் தெளிக்கும் தமிழ்க் கடலின் அன்பினைந்திணை என எடுத்த இறைநூல்—மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

பிப்ரவரி 17 புதன் கிழமை

சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழறியும் பெருமாளே! தன்னைச் சேர்ந்தோர் நன்னிதியே! திருவாலவாயுடைய நாயகனே!—திருவிளையாடல் புராணம்

 

பிப்ரவரி 18 வியாழக் கிழமை

அறைகடல் வரைப்பில் பாடை அனைத்தும் வென்று ஆரியத்தொடு

உறழ்தரு தமிழ் தெய்வத்தை உள்நினைந்து ஏத்தல் செய்வாம்- சீகாளத்திப் புராணம்

 

 

பிப்ரவரி 19 வெள்ளிக் கிழமை

கடல் அமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல்

பரப்பின் தமிழ்ச் சுவை திரட்டி மற்றவர்க்குத்

தெளிதரக் கொடுத்த தெந்தமிழ்க் கடவுள்- கல்லாடம்

 

பிப்ரவரி 20 சனிக் கிழமை

உலகு அளித்தனை தமிழ் தெளித்தனை

ஒன்றும் ஆயினை, பலவும் ஆயினை – காசிக் கலம்பகம்

 

 

IMG_9820

பிப்ரவரி 21 ஞாயிற்றுக் கிழமை

தமிழால் வைதாரையும் வாழவைப்போன் – கந்தரலங்காரம்

 

பிப்ரவரி 22 திங்கட் கிழமை

பொழிந்து ஒழுகு முதுமறையின் சுவை கண்டும் புத்தமுதம்

வழிந்து ஒழுகும் தீந்தமிழின் மழலை செவி மடுத்தனையே – மதுரைக் கலம்பகம்

பிப்ரவரி 23 செவ்வாய்க் கிழமை

செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை

முத்தமிழும் நான் மறையும் ஆனான்  — தேவாரம்

பிப்ரவரி 24 புதன் கிழமை

தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை—திருவாசகம்

 

பிப்ரவரி 25 வியாழக் கிழமை

சாறு சுவைஎனக் கூறநின்று இட்ட

ஆரியம் தீந்தமிழ் என்மனார் அவையே

ஓரிருமகாரின் பேறுகண்டு அவற்றுள்

கன்னியந்தமிழின் செவ்வியைப் புணர்ந்தோய் – பொய்கையார்

 

IMG_9764

 

பிப்ரவரி 26 வெள்ளிக் கிழமை

ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலி நீர் ஞாலத்து இருள் அகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏணையது

தன்னேர் இலாத தமிழ் – தொல்லியல்

 

பிப்ரவரி 27 சனிக் கிழமை

இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்- பிங்கலந்தை

 

பிப்ரவரி 28 ஞாயிற்றுக் கிழமை

தமிழ் தழிய சாயலவர் – சிந்தாமணி

 

பிப்ரவரி 29 திங்கட் கிழமை

பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே இங்கு பரிசுரைப்பார்…………..திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்—ஆண்டாள்

 

–சுபம்–

மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள்

habits-logo

சுவாமியின் பொன்மொழி காலண்டர் – ஜனவரி 2015

மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள்

Compiled by London Swaminathan

Post No.1525; Dated  29    December 2014.

Important Days:  Ekathasi Jan.1 (Vaikunda Ekathasi), 16, 30; Amavasya 20, Pournami- Jan.4

Festivals: Arudra Darsana 5; Bogi Festival 14; Pongal/Makara Sankaranti 15; Republic Day of India 26; Ratha saptami 26; Bhishmashtami 27.

ஆருத்ரா தரிசனம்-ஜனவரி 5, போகி 14, பொங்கல் 15, குடியரசு தினம் 26, ரத சப்தமி 26

ஜனவரி 1 வியாழக் கிழமை

பூட்டைத் திறப்பது கையாலே நல்ல

மனம் திறப்பது மதியாலே

பாட்டைத் திறப்பது பண்ணாலே – இன்ப

வீட்டைத் திறப்பது பெண்ணாலே – பாரதியார்

ஜனவரி 2 வெள்ளிக் கிழமை

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள்  595

ஜனவரி 3 சனிக் கிழமை

மணி வெளுக்கச் சாணையுண்டு – எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்துமாரி!

மனம் வெளுக்க வழியில்லை – எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்துமாரி! – பாரதியார்

ஜனவரி 4 ஞாயிற்றுக் கிழமை

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – குறள் 596

ஜனவரி 5 திங்கட் கிழமை

உத்தரேத் ஆத்மனாத்மானம் – பகவத் கீதை (6-5)

ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும்

ஜனவரி  6 செவ்வாய்க் கிழமை

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் – தமிழ் பழமொழி

ஜனவரி 7  புதன் கிழமை

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் – பாரதியார்

ஜனவரி 8 வியாழக் கிழமை

மனம் போல மாங்கல்யம் — தமிழ் பழமொழி

ஜனவரி 9 வெள்ளிக் கிழமை

மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிம வேண்டும் — பாரதியார்

1-piece-of-mind

ஜனவரி 10 சனிக் கிழமை

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியராகப் பெறின் — திருக்குறள்  666

ஜனவரி 11 ஞாயிற்றுக் கிழமை

உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து

வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப்

பரிசிலர்க்கு அடையா வாயிலோயே – புறநானூறு 206

ஜனவரி 12 திங்கட் கிழமை

சென்றதினி மீளாது மூடரே! நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம். – பாரதியார்

ஜனவரி 13 செவ்வாய்க் கிழமை

மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் – உலக நீதி

ஜனவரி 14 புதன் கிழமை

தம்மபதத்தில் புத்தர் சொல்கிறார்:

மனம் அலை பாயக்கூடியது; நிலையற்றது. அது இஷ்டப் பட்ட இடத்திற்குச் சிறகடித்துப் பறக்கும். மனதைக் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால் அப்படிக் கட்டுப்படுத்துவது  மிகவும் நல்லது. கட்டுப்படுத்தப்பட்ட மனதானது, இன்பத்தில் உறைவிடம் ஆகும்.(35)

ஜனவரி 15 வியாழக் கிழமை

“அஸம்சயம் மஹாபாஹோ மனோ துர்நிர்க்ரஹம் சலம்

அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேன் ச க்ருஹ்யதே” (6—35)

“தோள்வலி படைத்த அர்ஜுனா! மனம் அடக்குதற்கரியது; இதில் சந்தேகம் இல்லை. பயிற்சியாலும் வைராக்யத்தாலு (திட உறுதி) அடக்கமுடியும்”.

ஜனவரி 16 வெள்ளிக் கிழமை

மனதுக்கு மனதே சாட்சி; மனச் சாட்சியைவிட மறு சாட்சி வேண்டாம்- தமிழ் பழமொழிகள்

ஜனவரி 17 சனிக் கிழமை

எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும் – பாரதியார்

ஜனவரி 18 ஞாயிற்றுக் கிழமை

மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி – திருக்குறள் 453

(மனத்தின் காரணமாகவே மாந்தர்க்கு அறிவு உண்டாகும்)

ஜனவரி 19 திங்கட் கிழமை

மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் — திருக்குறள் 457

(மனத்தின் தூய்மை உரி இனத்துக்கு எல்லாம் நன்மையும் இனிமையும் தரும்)

ஜனவரி 20 செவ்வாய்க் கிழமை

மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும் — திருக்குறள் 456

(தூய மனம் உடையாருக்கு நல்ல பிள்ளைகளும் புகழும் எஞ்சும்)

mind

ஜனவரி 21 புதன் கிழமை

நினைமின் மனனே நினைமின் மனனே

சிவபெருமானைச் செம்பொன் அம்பலவனை

நினைமின் மனனே நினைமின் மனனே  —-பட்டினத்தடிகள்

ஜனவரி 22 வியாழக் கிழமை

யானை வேட்டுவன் யானையும் பெறுமே;

குறும்பூழ் வேட்டுவன் வறும்கையும் வருமே

அதனால் உயர்ந்த தேட்டத்து உயர்ந்தசினோர்க்குச்

செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்

தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும் – புறநானூறு 214

ஜனவரி 23 வெள்ளிக் கிழமை

மன நலத்தின் ஆகும் மறுமை — திருக்குறள் 459

(நல்ல மனம் உடையாருக்கு மறுமையிலும் இன்பம் கிட்டும்)

ஜனவரி 24 சனிக் கிழமை

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது  சத்தாகி என்

சித்தமிசை குடி கொண்ட தேசோ மயானந்தமே. — தாயுமானவர்

ஜனவரி 25 ஞாயிற்றுக் கிழமை

மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனம் தூய்மை தூவா வரும் — திருக்குறள் 455

ஜனவரி 26 திங்கட் கிழமை

வாய்கொண்டு உரைத்தல்அரிது என் செய்கேன்
என்செய்கேன் வள்ளல்உன் சேவடிக்கண்
மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
வாய்ந்துழலும் எனதுமனது

பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
பித்துண்ட வன்குரங்கோ
பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
பேதைவிளை யாடுபந்தோ – வள்ளலார் பாடல்

human_brain

ஜனவரி 27 செவ்வாய்க் கிழமை

“மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!

ஒன்றையே பற்றி ஊசல் ஆடுவாய்

அடுத்ததை நோக்கி அடுதடுத்து உலாவுவாய்

.நன்றையே கொள் எனில் சோர்ந்து கை நழுவுவாய்

விட்டுவிடு என்றதை விடாது போய் விழுவாய்

தொட்டதை மீள மீளவும் தொடுவாய் – பாரதியார்

ஜனவரி 28 புதன் கிழமை

காடும் கரையும் மனக்குரங்கு கால் விட்டோட அதன்பிறகு

ஓடும் தொழிலால் பயனுளதோ ஒன்றாய் பலவாய் உயிர்க்குயிராய்

ஆடும் கருணைப் பரஞ்ஜோதி அருளைப் பெறுதற்கு அன்புநிறை

தேடும் பருவம் இதுகண்டீர் சேரவாரும் ஜெகத்தீரே! – தாயுமானவர் பாடல்

ஜனவரி 29 வியாழக் கிழமை

மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி

சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது

மதன் எனும் பாறை தாக்கி மறியும் போது, அறிய ஒண்ணாது

உனை உனும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே

–அப்பர் தேவாரம் 4-46

ஜனவரி 30 வெள்ளிக் கிழமை

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் — தமிழ் பழமொழி

ஜனவரி 31 சனிக்கிழமை

சிந்தா நாஸ்தி கில – தேஷாம் சிந்தா சிந்தா நாஸ்தி கில

சமதம கருணா சம்பூர்ணாணாம்

சாது சமாகம சங்கீர்ணானாம் – சதாசிவ பிரம்மேந்திரர்

(நல்ல குணங்கள், சாதுக்களின் தொட்ர்புடையோருக்கு மனக்கவலை இல்லை)

Contact swami_48@yahoo.com