WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,656
Date uploaded in London – – 13 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 17
அதர்வண வேதத்தில் உள்ள 63 மந்திரங்கள் உடைய பூமி சூக்தத்தின் மேலும் சுவையான பகுதிகளைக் காண்போம்:-
பாடல்/ மந்திரம் 55
அதோ யத் தேவி ப்ரதமானா புரஸ்தாத் தேவைருக்தாத் வ்ய ஸர்போ மஹித்வம்
ஆத்வா ஸு பூதமவிசத்ததா நீம கல்பயதாஹா ப்ரதிசஸ்சதஸ்ரஹ -55
பாடல் 55 பொருள்
முன்னேறிச் செல்லும் தேவிய! உன்னை தேவர்கள் போற்றி, உன் புகழை விரிவாக்கியுள்ளனர்.அதனால் உன்னுள் பெரும் புகழ் நுழைந்துவிட்டது நீயே நான்கு திசைகளையும் உனதாக்கிக் கொண்டுவிட்டாய் .
இதன் விளக்கம் – பூமாதேவியை தேவர்களும் புகழ்ந்து போற்றுகின்றனர். அதனால் அவள் புகழ் மேலோங்கி அவள் நாலு திசைகளிலும் கொடிகட்டிப் பறக்கிறாள் .
இதை பாரதியாரும் சத்ரபதி சிவாஜி பாடலில் சொல்கிறார் ,
தேவர்கள் வாழ்விடம் திறலுயர் முனிவர்
ஆவலோ டடை யும் அரும்புகழ் நாடு
ஊனமொன்றறியா ஞான மெய்ப் பூமி
வானவர் விழையும் மாட்சியார் தேயம்
பூமி சூக்தப் புலவன் பூமா தேவி பற்றிப் பகன்றதை, பாரதியார், பாரத தேவி மீது ஏற்றிப் பாடிவிட்டார்!
XXX
பாடல்/ மந்திரம் 56
யே க்ராமா யதரண்யம் யாஹா ஸபா அதி பூம்யாம்
யே ஸம் க்ராமா ஸமிதயஸ் தேஷு சாரு வதேம தே -56
பாடல் 56ன் பொருள்
கிராமங்களில், காடுகளில், பாரிலுள்ள அனைத்து சபைகளில் , மக்கள் கூடும் கூட்டங்களில் , சமிதிகளில் உன் புகழ் படுவோம்; இனிமையானதையே சொல்லுவோம்
இது மிகவும் பொருள் பொதிந்த பாடல். கிராம சபை முதல் ஐ.நா . சபை வரை பூமியை — பாரத பூமியைப் புகழ்வோம் ; காதுக்கு இனிமையானதைப் பேசுவோம்.
என்ன பக்தி பாருங்கள் !!!
இதில் இரண்டு முக்கியமான மொழியியல் LINGUISTIC FACTS விஷயங்கள் வருகின்றன.
சபை SABHA என்ற சொல்லை திருவள்ளுவரும் அவருக்கு முந்தைய சங்கப் புலவர்களும் அவை என்று மாற்றிப் பாடியுள்ளனர். அதாவது தமிழில் ச- என்னும் எழுத்தில் சொற்கள் வரக்கூடாது என்று பிராமண தொல்காப்பியன் — த்ருண தூமாக்கினி – தடை போட்டுவிட்டான்; ஏனெனில் ஸம்ஸ்க்ருதத்தில் , டஸ் புஸ் என்று ஸ – வில் துவங்கும் சொற்களே அதிகம். ஆகையால் வடக்கிலிருந்து சிவன் அனுப்பிய அகஸ்தியர் — தொல்காப்பியரின் குருநாதர் — ஸ -வுக்குத் தடை விதித்தார் போலும். வியாஸ மகரிஷிக்கு ஸ -கார குக்ஷி என்று பெயர்; நினைத்த இடங்களில் எல்லாம் ஸ – எழுத்தை அள்ளி வீசி விட்டார்.
“ச” வரும் இடமெல்லாம் ஒரு உயிர் எழுத்தைப் போட்டு அவை ஆக்கிவிட்டனர் தமிழர்கள் .
இந்த ஸபா என்னும் சொல் ரிக்வேதத்தில் வரும் சொல். இன்றும் லோக் ஸபா, ராஜ்ய ஸபா, தமிழ்நாடு சட்ட மேலவையில் உள்ளது. ஆக தமிழர் பயன்படுத்தும் சட்டை, சட்டம், அவை எல்லாம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்.
ச – வில் துவங்கும் எல்லா சொற்களும்) ஸம்ஸ்க்ருதச் சொற்கள் என்பதை 18 மேல் கணக்கு நூல்களிலும் (சங்க இலக்கியம்) 18 கீழ்க் கணக்கு நூல்களிலும் (திருக்குறள், பழமொழி, நாலடியார் முதலியன) காணலாம்.
XXXX
இதையும்விட இரண்டு முக்கிய அதிசயங்கள் உள்ளன.
ஸபா எப்படி அவை ஆனது ?
‘ப = வ’ ஆக மாறி ‘பை = வை’ ஆகிவிட்டது. (B=V; V=B)
இன்றும் வங்கத்தை பெங்கால் BENGAL என்று வ=ப மாற்றத்தைக் காண்கிறோம்.
இந்த ப= வ B= V மாற்றம் 3000 ஆண்டுப் பழமை உடைய ஈரானிய – பாரசீக இலக்கியத்திலும் உளது. அஸ்வ என்பதை அஸ்ப ASVA = ASBA என்பர். ஈரான் என்ற பெயரோ ஆர்ய ARYA = IRAN என்பதன் திரிபு, மரூஉ என்பதை உலகமே ஒப்புக்கொள்கிறது. எப்படித் தமிழிலும் ப- வ ஆனது.??
ஆக லண்டன் சாமிநாதன் சொல்லும் THEORY/HYPOTHESIS தியரியே சரி; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் வெவ்வேறு குடும்பம் என்று சொல்லும் BISHOP CALDWELL கால்டுவெல் கும்பலுக்கு வேட்டு வைக்கும் சொல் இது.
இதை விடப் பெரிய அதிசயம் ரிக் வேத, அதர்வண வேத “சமிதி” என்னும் சொல்; கமிதி COMMITTEE என்று உலக மொழிகளில் புழங்குகிறது ; பிரெஞ்சு மொழி செய்த குழப்பத்தால் ச = க C= K ஆக மாறுகிறது; சமிதி என்பதை SAMITI = COMMITTEE இன்றும் நாம் ஆங்கிலத்தில் கமிட்டி என்று பயன்படுத்துகிறோம். சமிதி என்று எழுதிவிட்டு அதை கமிட்டி என்று உச்சரிக்கிறோம் !!!
காடுகளிலும் கூட புகழ் பரப்புவோம் என்று அதர்வண வேத புலவன் செப்புவது நோக்கற்பாலது. என்ன சிம்பிள் SIMPLE LANGUAGE மொழி பாருங்கள்!! இந்த மந்திரத்தில் உள்ள கிராமம், ஸபா, சமிதி, ஆரண்யம் பூமி – எல்லாம் கிராமத் தமிழனுக்கும் கூடப் புரியும்; தெரியும்
COMMITTEE = SAMITI
SABHA = AVAI; LOK SABHA, RAJYA SABHA
ARANYAM, GRAMA, BHUMI
CHARU = SWEET ; CHARU LATHA
XXX
பாடல்/ மந்திரம் 57
அஸ்வ இவ ரஜோ துதுவே வி தான் ஜனான் ய ஆக்ஷியன் ப்ருதிவீம் யாத ஜாயத
மந்த்ரா க்ரேத் வரீ புவனஸ்ய கோபா வனஸ்பதீனாம் க்ருபிரோஷதீனாம் –
57
பாடல் 57-ன் பொருள்
பூமாதேவி ஆனவள், குதிரை தன் கால் தூசியை உதறித் தள்ளுவது போல இதுவரை தோன்றியவர்களை எல்லாம் தான் பிறந்த நாளிலிருந்து உதறிவிட்டாள் ; அவள் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கிறாள்; இந்த ப் பூமியிலுள்ள தாவரங்களையும் மரம் செடி கொடிகளையும் காப்பவள் அவளே.
நல்ல கருத்து ; தோன்றிய மனிதர்களை உதறித்தள்ளிய போதும் தொடர்ந்து மரம் செடி கொடி கானகங்களை உதறவில்லை ; பசுமை என்னும் ஆடையுடன், நீலத் திரை கடல் சூழ வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
மனிதர்களின் நிலையாமை பற்றிப் பாடிய புறநானூற்றுப் புலவர் பாடல்களை இது நினைவுபடுத்தும்.
பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தியற்றே!
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி அனைத்தும் ஆற்றாது; ஆகலின்
கைவிட்டனரே காதலர்; அதனால்
விட்டோரை விடா அள், திருவே;
விடாஅதோர் இவள் விடப்பட்டாரே
–வான்மீகியார், புறம் 358
பொருள்:
கதிரவன் சுற்றும் இந்த வளம் செறிந்த பூமிக்கு ஒரே நாளில் 7 பேர் அரசனானதும் உண்டு. இல்லறத்தையும், துறவறத்தையும் ஒப்பிட்டால் துறவறமே சிறந்தது. தவம் மலை என்றால், இல்லறம் சிறு வெண்கடுகு (ஐயவி) போன்றதாகும். தவம் செய்ய முடியாததால்தான், காதலர்கள் இல்லறத்துக்கு வந்தனர். வீடு பேற்றை விரும்பியோர் இல்லறத்தைக் கைவிட்டனர். யார் வருந்தி வருந்தி அழைக்கவில்லையோ அவளிடம் லெட்சுமி போய் ஒட்டிக்கொள்வாள். இல்வாழ்வில் அழுந்தியோரிடம் தங்க மாட்டாள்.
–தொடரும் ……………………………
tags– அவை, சட்டை, சட்டம் , தமிழ் , மேலவை, ஸம்ஸ்க்ருதம், சபை
You must be logged in to post a comment.