தொகுத்து வழங்குபவர்:லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்: 1967
தேதி: 2 ஜூலை, 2015; லண்டன் நேரம்: காலை 8-40
மேலும் சில சம்ஸ்கிருத பழமொழிகள்:–
1.ஆத்மசித்ரம் ந ப்ரகாஸயேத்
தன்னுடைய குறைகளை வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது.
உன்னுடைய ஓட்டைகளைத் தம்பட்டம் அடிக்காதே/ வெளிச்சம் போடாதே
2.பலாயமானஸ்ய சௌரஸ்ய கந்தைவ லாப:
ஓடும் திருடனுக்கு கோமணமும் லாபம்தான்
(எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்)
3.அபேயேஷு தடாகேஷு பஹுதரமுதகம் பவதி
குடிப்பதற்கு ஏற்றதல்லாத குளங்களில் தண்ணீர் நிரம்ப இருக்கிறது
(கருமியிடம் உள்ள பணம் போல)
4.இதமரண்யே ருதிதமிவ
இது காட்டில் அழுதது போல
5.அர்த்தி தோஷம் ந பஸ்யதி – சாணக்ய நீதி தர்பண:
உனக்கு கார்யம் நடக்க வேண்டுமானால் குற்றம் குறைகளைப் பார்க்காதே
6.அவ்ருத்திகம் த்யஜேத் தேசம்
வருமானம் இல்லாத தேசத்தை விட்டுவிடு (ஓரிடத்தில் வெற்றி கிட்டாவிடில் அதே இடத்தில் வசிக்காதே)
7.அசக்தாஸ்தத்பதம் கந்தும் ததோ நிந்த்யம் ப்ரவர்ததே
ஒரு நிலையை எட்ட முடியாதவர்கள் அதை நிந்திப்பர்
(சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும் கதை)
(கிட்டினால் ராமா, கோவிந்தா, கிட்டாவிட்டால் ஒன்றுமில்லை)
8.அஸ்வா யஸ்ய ஜயஸ்தஸ்ய – சாணக்ய நீதி தர்பண
குதிரை உடையவனுக்கு வெற்றி
9.ஆத்மார்தே கோ ப்ருத்வீம் த்யஜேத் – மஹாபரதம்/பஞ்சதந்திரம்/சாணக்கியய நீதி தர்பணம்
ஆத்மஞானத்துக்காக உலகையே தியாகம் செய்வர்
தன்னுயிரைப் பாதுகாக்க தேசத்தையே விட்டும் செல்லலாம்
10.உத்தீர்ணே ச பரே பாரே நௌகாயா: கிம் ப்ரயோஜனம் – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்
கரை கடந்த பின்னால் படகினால் என்ன பயன்?
(ஏறிய ஏணியை எத்தி உதைப்பர்)
11.உப்யதே யத் யத் பீஜம் தத்ததேவ ப்ரோஹதி
எதை விதைக்கிறாயோ அதுதான் கிடைக்கும்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
தினை விதைத்தவன் தினை அறுப்பான்
12.க: ஸரீர நிர்வாபயித்ரீம் சாரதீம் ஜ்யோஸ்தனாம் படாந்தேன வாரயிதி – சாகுந்தலம்
சூட்டைத் தணிக்கும் சரத் சந்திர ஒளியை, யார் துணியில் கட்டி எடுக்க முடியும்?
You must be logged in to post a comment.