நாராயணனின் 4 கவிதைகள் (Post No.9989)

WRITTEN BY LONDON POET A NARAYANAN

Post No. 9989

Date uploaded in London – 17 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டன் கவிஞர் ஏ .நாராயணன், ஆகஸ்ட்  2021ல் எழுதிய 4 கவிதைகள் :

(ரசாயன பாடத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அத்திபள்ளி நாராயணன் சமீபகாலமாக கவிதை மழை பொழிந்து வருகிறார்.அவருடைய கவிதைகள் இந்த ‘பிளாக்’கில் முன்னரே வெளியாகியுள்ளன- SWAMINATHAN.)

xxx

தாமரையோ மறையோ

குவித்த கரமொத்த தாமரை மொட்டு

குட்டை நீரில் நெட்டாய் நிற்கத் தொட்

டதோ காலை இளங்கதிரோன்  விரிந்ததோ

இதழ்கள் முத்துப் பனித்துளிகள் ஒத்தணம்

கொடுக்க அடுக்கடுக்காய் இதழ்கள்

நடுவே மகரந்தமே மந்தகாசமாக

நறுமணம் வீசிய நல் வரவேற்பில்

தேனீக்களிதழ் இதழாய்த் தாவித்தாவிய

ரீங்காரமோ! தாமரையிலமர்ந்த பிரம்மன்

ஓதிய வேதம் பதிந்த இதழ்கள் துடிப்பு?

இதழ் பதிந்த வேதத்தை மொட்டு நிலை

யிலிரவெலா மோதிப் பயின்றுக் காலை

யிலே கதிரோன் தட்டி எழுப்ப விரித்த

இதழ்களில் மொய்த்த வண்டுகள் வேதம்

பயில வேதமே இனிய நாதமாய் ஒலித்த

வாணியின் வீணை இசையோ! இவ்வண்டு

களின் ரீங்காரமாயின் வேதமும் நாதமும்

கமலக்கண்ணனிடம் சங்கமமான சாம

வேதமாய் வேய் குழலொலித்த கானம்

தாமரை தன்னுள்ளடக்கிய மறையே

— நாராயணன்

xxxx

எது வழி?

உருவமும் அருவமும் அவரவர் அறி வழி

தருவதும் பெருவதும் அவரவர் தவ நெறி

நிற்பதும் நடப்பது மவன் விதித்த வழி

நிர்க்குணமும் சகுணமும் நிழலும்

நிசமும் போன்ற மொழி

சமத்துவமும் தத்துவமும்

சம நிலை மனமொழி

அரியும் அயனும் அவரவர் அறியும் வழி

— நாராயணன்

xxxx

மாலனோ மாயனோ

ஒன்றோ பலவோ

ஒன்றினின்று பலவோ

பலகூடி ஒன்றோ

படைப்பில் பலவும்

ஒன்றுமாய் நின்று

மாயையில் மக்களை

மேய்ப்பவன் மாலனே

–நாராயணன்

xxx

                           அறுபடும் அறம்

அவரவர் அறம் அவரவர் நிலைக்கேற்ப

அதனினு மினிதோ இருப்பதைப் பகிர்வது

வழிந்தோடும் ஏரி வாய்க்காலாய்ப் பாய்வது போலோ

வரம்புக்கு விஞ்சிய செல்வன் வாரிக் கொடுப்பது

வறுமையிலு மிருந்ததைப் பகிர்ந்தின்புறுவோனையோ 

வானவரும் வையகத்தோருமென்றும் வாழ்த்துவர்

நாராயணன் 

–subham—

tags-  நாராயணன், கவிதைகள், எது வழி , தாமரை, அறுபடும் அறம் ,மாலனோ ,மாயனோ 

தெய்வீகத் தாமரை!!!- Part 2 (Post No.8747)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8747

Date uploaded in London – –28 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தாமரையும் உணவும்

தாமரையின் கிழங்கும், தண்டுகளையும் துண்டு துண்டாக வெட்டி

உப்பிட்டு காய வைத்து விடுவார்கள். இதை எண்ணெயில்

பொறித்து சாப்பிட மிக ருசியாக இருக்கும். இதில் வைட்டமின்

“C “யும், மாங்கனீஸும் நிறைய உண்டு.மேலும் இது நார்ச் சத்து

மிகுந்தது. தாமரை விதையின் ருசியே அலாதி!!! தற்சமயம்

இதை உப்பிட்டு “பாப் கார்ன்” வறுத்து அல்லது பொரித்து

சாப்பிட வசதியாக விற்கிறார்கள்

தாமரையும் மருத்துவமும்

தாமரைப்பூ, கிழங்கு, தண்டு,மொட்டு, விதை அனைத்துமே மருத்துவ

குணமுடையவை.சித்த வைத்தியர்கள் இதை “மருத்துவ தெய்வ

மலர்” என்று போற்றுவர்.

மிகவும் உபயோகமாக இருப்பது வெண்தாமரையே!!!

வெண் தாமரை இதழை கஷாயம் வைத்து குடித்தால் மூளை

வளர்ச்சியடையும்.

மனோவியாதிகள் தீரும். இதய வியாதிகளுக்கு நல்லது.

தாமரை இதழ்களை வைத்து சர்பத் செய்து சாப்பிட இரத்த

மூலம்,சீதபேதி, இருமல் போன்ற வியாதிகள் கட்டுப்படுகின்றன.

தலை முடி வளரவும் கருக்கவும் தாமரை இதழ்கள் உதவுகின்றன!!!

மேற்கொண்டு சித்த வைத்தியர்களை கண்டு பேசி மருந்துகளை

கேட்டு தெரிந்து கொண்டு உபயோகப்படுத்தவும்.

தாமரையும் இலக்கியமும்

“வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.”

தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத்தண்டின்

அளவும் இருக்கும். அது போல மனிதரின் வாழ்க்கையின் உயர்வும்

அவர் மனதில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.

தாமரையை வைத்து அருமையான பாடம் கற்பிக்கிறார் வள்ளுவர்

ஆழி சூழ் உலகெலாம் பரதனே ஆள,நீ போய்

தாழிருஞ்சடைகள் தாங்கித் தாங்களும் தவம் பூமி

வெங்கானம் நண்ணி மேற்கொண்டு புண்ணியத்துறைகள் ஆடி

ஏழிரண்டாண்டடில் வா….

இதைக் கேட்ட ராமன் முகம்

“அப்போதலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா”

என்றி அருமையாக உவமை கூறுகிறார் கம்பர் பெருமான்!!!

அத்தோடு விடவில்லை, மீண்டும் தாமரைக்கு உவமை கூறுகிறார்

கம பர்

மெய்த் திருப்பதம் மேவு என்ற போதினும்

இத்ததுருத் துறந்து ஏகு என்ற போதினும்சித்திரத்தின் அலர்ந்த

செந்தாமரை

ஒத்திருக்கும் முகத்தினை உன்னவாள்!!!

சரி தரு நாவுக்கரசர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்

பூவினுக்கருங்கலம் பொங்கு தாமரை

நாவினுக்கருங்கலம் நமச்சிவாயவே!!!! ( தேவாரம்)

தாமரை கற்றத் தரும் பாடம்

தாமரை வேர் தனக்குத்தேவையான தண்ணீர் தவிர ஒரு சொட்டு

கூட அதிகமாக எடுத்துக்கொள்ளாது. மேலும், பூவின்மேலும்,

இலையின் மேலும் தண்ணீர் பட்டாலும் முத்துப்போல் உதிர்த்து

விடும்.

அதுபோல

பொதுவாழ்வில் உள்ளவர்கள் “தாமரை “போல் இருக்க வேண்டும்.

தனது உழைப்புக்குரிய சம்பளத்தைத் தவிர ஒரு ரூபாய் கூட

பொதுப்பணத்தை எடுக்க க்கூடாது.

தாமரையும் ஞானியும்

தாமரை எப்படி சேறும் சகதியும் உள்ள இடத்தில் மலர்ந்து எவ்வளவு

கீழ்மட்டத்திலிருந்தாலும் ஞானிகளும் கீழ் மட்ட ஜாதி, மத, இனத்திலும் தோன்றுவார்கள்

இலையும் பூவும் மேல் மட்டத்திலேயே எப்போதும் மிதப்பதினால்

ஞானிகளும் சமுதாய சகதிகளிலிருந்து விடுபட்டு ஞானம் என்னும்

சூரியனையே , அதாவது உண்மை என்னும் நிலையையே நோக்கி

விரும்பி செல்வார்கள்

எப்பொழுதும் தாமரை சூரியனையே பார்த்திருப்பதினால், “அறிவு”

என்னும் ஞானச் சுடரையே ஞானிகள் விரும்பி பார்த்து சென்று

கொண்டிருப்பார்கள்.

மேலும் பூவினமீதோஇலையின்மீதோதண்ணீர்பட்டாலும்,

முத்துப் போல உதிர்த்து விடுகிறது.ஞானிகளும் தன்னைச்

சுற றி நடப்பதிலிருந்து விடு பட்டு ஞானத்தை அடைகிறாரக

கணித த்தில் தாமரை

எட்டு தாமரை இதழ்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி

ஒரு ஊசியால் சடக்கென்று குத்தினானால் எவ்வளவு நேரம்

ஆகுமோ அதை “ஷணம்” என்று சொல்லப்படுகிறது. இது

போன்ற இரண்டு ஷணம் சேர்ந்தது ஒரு நொடி………இப்படிப்

போகிறது பழைய வாய்ப் பாடு…..தறசமயம் இது புழக்கத்தில்

இல்ஐ என்றாலும் உதாரணத்திக்காக உபயோகப்படித்தப் படுகிறது.

ஒரு “ஷண”நேரத்தில. நடந்து விட்டது…..

தாமரையின் வாழ்க்கை நமக்கொரு பாடம்.தெய்வத்தன்மையை

அடைய ஒரு வழி காட்டி.

முயல்வோம் வெற்றி பெறுவோம்!!!

tags- தாமரை-2

தெய்வீகத் தாமரை!!!- Part 1

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8743

Date uploaded in London – –27 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தெய்வீகத் தாமரை!!!

நமது பாரதத்தில் எல்லா கடவுளோடும் சம்பந்தப் படுத்தப் பட்ட

ஒரு பொருள் உண்டென்றால் அது தாமரையாகத்தான் இருக்கும்.தூய்மையின்

அடையாளமாக க கருதப்படும் இந்த

“சேற்றில் விளைந்த செந்தாமரைதான்”, நமது நாட்டின் தேசீய

மலராகும். நமது நாட்டிற்கு மட்டுமல்ல வியடநாம் நாட்டிற்கும்

இதுவே தேசீய மலர்!!!

பகவான் கிருஷ்ணன் பகவத்கீதையில் சொல்ல மறந்தது

மலர்களிலிலே நான் தாமரை” ஏன் தெரியுமா???

அவரே “தாமரைக்கண்ணனாக”உதித்ததினால்தான்!!!

தாமரையின் பிறப்பிடம்

ஆதி காலத்தில் ஆதிசேஷன் மீது ஆனந்த சயனத்திலிருந்த

மஹா விஷ்ணுவின் வயிற்றில் தோன்றியதே இந்த தாமரை மலர்!!!

மஹாவிஷ்ணு மட்டுமல்லாமல் மஹா லட்சுமியும் தனது இருப்பிடமாக

கொண்டு விட்டாள்!!!எல்லா தெய்வங்களுக்கும் இருப்பிடமாகி

விட்டது தாமரைப்பூ!!! ஒன்று ஆசனமாக, நிற்கும் உபகரணமாக

அல்லது கையில் பூவாகவோ, மொட்டாகவோ……..

கவுதம புத்தராகட்டும், வர்த்தமான மகா வீர்ராகட்டும் தாமரைப்பூவே

ஆசனமாயிற்று!!! கல்விக் கடவுளாகிய ஸரஸ்வதியோ தனக்கென

ஒரு வெள்ளை கலரை செலக்ட் செய்து கொண்டு விட்டாள்!!!வெள்ளைத் தாமரைப்பூவிலிருப்பாள், வீணை செய்யும்

ஒலியிருப்பாள்!!

எகிப்து கோவில்களில் தாமரைப்பூ முக்கிய இடம் வகிக்கிறது

சைனா,ஜப்பான், மலேஷியா,போன்ற தென் கிழக்கு ஆசிய

நாடுகளில் உள்ள எல்லா கோவில்களிலும், கடவுளர்களிடமும்

கட்டங்களிலும் தாமரைப் பூவிற்கே முதலிடம்……மற்ற வெளிநாடுகளில் அழகிற்காக காகிதம், மெட்டி,தெர்மாகோலில்

செய்து அலமாரிகளில் வைத்துக் கொள்கிறார்கள்.

இப்பூவுலகில் தாமரை

தாமரையின் பிறப்பிடமே சேரும் சகதியும்தான்…….

ஆகையினால்தான் ஏழையாகப் பிறந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு

வந்தவரை “சேற்றில் விளைந்த செந்தாமரை” எனகிறோம்.

குளம், குட்டை தேங்கிய கலங்கிய தண்ணீரில் இரட்டை விதை

கொண்ட நீர்வாழ் தாவரமாக வளர்கிறது தாமரை……எக்காலமும்

ஓடும் நீரில் இது விளையாது.

இதன் அமைப்பு

மிக மிக அழகான வண்ணமான இளம் ரோஸ் கலரும் வெண்மையும்

கலந்த கவர்ச்சிகரமாக தோற்றமளிக்கும் இந்த செந்தாமரை சூரியன்

வரும்போது மலரும். சூரியன் மறையும்போது குவியும்.மலர்ந்த

செந்தாமரை சுமார் 6 அங்குல அகலத்திற்கு அழகாக நிறைய இதழ்களுடன் காட்சி அளிக்கும். இந்த பூவிற்குப் பெயர் சதபத்ரி.

“சதபத்ரி” என்றால் 100 இதழ்கள் கொண்டது என்று அர்த்தம்.

சேற்றிலிருந்து கிழங்கு, கிழங்கிலிருந்து தண்டு .இந்த தண்டு

முளைத்து பெரிய இலைகள் இரண்டு உருவாகும்.இலையின்

அடிப்பாகத்திலுள்ள காம்பிலிருந்து உருவாகிறது பூ!!!!தனக்குத்

தேவையான தண்ணீர் தவிர ஒருசொட்டு கூட அதிகமாக

எடுக்காது!!!பூவிலும், இலையிலும் பட்ட தண்ணீரும் முத்துப்போல்

வழிந்தோடிவிடும்!!!

பழமொழி – “தாமரைக்கும் தண்ணீருக்கும் எப்போதுமே சண்டை

வந்ததில்லை”

இதன் அறிவியல் பெயர்

“நெலம்போ நூசி fபேரா” – NELUMBO NUOCI FERRA

இது “மக்னோலியாப்சிடா” பிரிவைச் சேர்ந்தது.

தாமரையின் மற்ற பெயர்கள்

அரவிந்தம்,பங்கேருகம், கோகனகம், முளரி, புண்டரீகம், வனசம்,

அம்போருகம், கமலம், இண்டை, சத பத்ரி, வாரிஜம், ஜலஜம்,

அம்புஜம், சரோஜம்,நளினம்,கமலம், அரும்பு, செங்கமலம்,

ராஜீவி.

கவனிக்க-நமது பெண்களுக்கு இருக்கும் அதிகமானவை

தாமரையின் மறு பெயர்கள்தாம்!!.

நன்றி- திரு. சந்தானம் சுவாமி நாதன் எழுதிய

“தாமரையின்வேறு பெயர்கள் “என்ற tamilandvedas

இதழுலிருந்து நம்பர்- 5 6 4 0, தேதி 8 நவம்பர் 2018

எடுக்கப்பட்டது

ஆகாயத் தாமரை

இப்படி ஒரு கொடியினம் தண்ணீரின் மிக வேகமாகப் படர்ந்து

சேத த்தை விளைவிக்கிறது. சில மருத்துவ குணம் இருந்தாலும்

தீமைகள் அதிகமாக இருப்தினால் இதை வளர விடாமல்

தடுப்பது நமது கடமை.

பொற்றாமரைக் குளம்

மதுரை ஶ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுள்ள குளத்தின் பெயர்

பொற்றமரைக் குளமாகும் .முன்னொரு காலத்தில் இந்த இடம்

கடம்ப வனமாகவும்,நடுவே சுயம்பு லிங்கமாக இருந்த சிவ

பெருமானுக்கு இந்திரன் இந்த குளத்திலிருந்த பொன்னாலாகிய

தாமரைகளால் அர்ச்சனை செய்ததாக வழக்கு.

இன்று அந்த ஞாபகார்த்தமாக 3 “அடி “அகலமுள்ள அழகிய “பொன்னாலாகிய தாமரை”

அந்த குளத்தில் மிதப்பதைக் காணலாம்.

தாமரையும் தெய்வீகமும்

அறிவிற்சிறந்த சான்றோர்கள் பவுர்ணமி, மற்றும் நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் செந்தாமரை இதழ்கள் கொண்டு தேவிக்கு அர்சசனை செய்கிறார்கள்.

செந்தாமரை மலர்களையே வரிசையாக கோர்த்து மாலையிட்டு

வேண்டிக் கொள்வதும் உண்டு.

தாமரை மணி மாலைகள் ஜபம் செய்வதற்கும் கழுத்தில் அணிவதற்கும் உடலுக்கும், உள்ளத்திற்கும், சிறந்ததாகும்.

To be continued…………………………………………..

tags– தாமரை, தெய்வீகம்

தாமரைக்கு தமிழில் எத்தனை பெயர்கள்? (Post No.5640)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 8 November 2018

GMT Time uploaded in London –16-26
Post No. 5640

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் நிகண்டுகளில் தாமரைக்கான பெயர்களைத் தருகையில் ஸம்ஸ்க்ருதப் பெயர்களையும் சேர்த்தே தருவர். ஏனெனில் சங்க காலம் முதல் இன்று வரை எல்லா அகராதிகளிலும் நிகண்டுகளிலும் ‘தமிழ்’ என்ற பெயர் இருந்தாலும் பாதி ஸம்ஸ்க்ருத்ப் பெயர்களே!!! அதை நினைவில் வைத்துக்கொண்டு கட்டத்தில் உள்ள 19 தாமரை மலரின் பெயர்களைக் கண்டு பிடியுங்கள். மலர் என்று மட்டும் பார்த்தால், இந்துப் பெண்களின் பெயர்களில் அதிகம் இடம் பெறுவதும் தாமரை மலரின் பெயர்களே.

 

கீழ்கண்ட பெயர்கள் உள்ளன:-

தாமரை, மலர், வாரிஜம், அம்புஜம், ஜலஜம்

அம்போருகம், கமலம், அரவிந்தம், இண்டை,

புண்டரீகம், முளரி, பங்கஜம், சதபத்ரி, பதுமம்

சரோஜம், நளினம், அரும்பு, முண்டகம், ராஜீவ.

சரோஜா, நளினி, பத்மா, அம்புஜம், ஜலஜா, கமலா முதலிய பெயர்கள் தாமரையின் பெயர்கள் என்று பலருக்குத் தெரியாது.

மலர் என்றால் தாமரை; இந்தியாவின் தேசீய மலரும் தாமரை.

Tags– தாமரை,  பெயர்கள்

தாமரை வாழ்க; தாமரை வெல்க

நூற்று இதழ் அலர் – சத பத்ர யோனிம்: தாமரை உவமைகள் (Post No.3809)

Written by London swaminathan

 

Date: 11 APRIL 2017

 

Time uploaded in London:- 21-43

 

Post No. 3809

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

காளிதாசனும் சங்க காலப் புலவர் முதுகண்ணன் சாத்தனாரும் தாமரை பற்றி ஒரே சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இரண்டு உவமைகளிலும் சொல் ஒற்றுமை தவிர வேறு சுவையான செய்தியும் உள்ளது.

 

தமிழில் கோவில் என்றால் வைணவர்களுக்கு திருவரங்கம்; சைவர்களுக்கு சிதம்பரம். இதே போல மலர் என்று சொன்னால் தமிழில் தாமரை, வடமொழியில் புஷ்பம் என்று சொன்னால் தாமரை.

 

ரிக்வேதத்திலும் அதர்வ வேதத்திலும் புஷ்ப, புஷ்கரம், புண்டரீகம் என்ற மூன்று சொற்கள் தமரைக்குப் பயன்படுத்தப் படுகிறது.

புஷ்கரம் இருக்கும் இடம் புஷ்கரணி (கோவில் குளம்)

தாமரைக்கு சம்ஸ்கிருதத்தில் அதிகமான பெயர்கள்!  இந்துப் பெண்களின் பெயர்கள் பெரும்பாலும் பூ — அதிலும் குறிப்பாக — தாமரை தொடர்பானதாகவே இருக்கும் (கமலம், பங்கஜம்,நீரஜம், அரவிந்த, தாமரை…. என்று).

 

காளிதாசன் மட்டும் 90 இடங்களில் தாமரை உவமையைப் பயன்படுத்தியுள்ளான். பெண்களின் முகம், கை, கால், விரல், உதடு என்று பல இடங்கள். மலராத மொட்டு- சோகமான முகத்துக்கும் மலர்ந்த பூ- சிரித்த முகத்துக்கும் உவமை. ஆனால் சூரியனைக் கண்ட தாமரை போல என்ற உவமை சங்க இலக்கியத்தில் இல்லை- காளிதாசனில் உண்டு.

தாமரைக்குள்ள பல பெயர்களில் சத பத்ரம் ( நூற்றிதழ்), சஹஸ்ரபத்ர (ஆயிரம் இதழ்) என்ற பெயர்களும் அடக்கம்.

 

பிரம்ம தேவன் தாமரையில் அமர்ந்திருப்பதனால் அவருக்கு சதபத்ர யோனி என்ற பெயர் உண்டு. பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் தொப்புளில் இருந்து தாமரைமேல் பிறந்தவர்.

 

இதை காளிதாசன் குமார சம்பவ காவியத்தில் (KS 7-46) பயன்படுத்துகிறான்

 

“சிவன் ஓரக்கண்ணால் பார்த்தபோது பிரம்மாவைப் பார்த்து தலை அசைத்தாராம்; விஷ்ணுவைப் பார்த்தவுடன் ஓரிரு வார்த்தைகள் பேசினாராம்; இந்திரனைப் பார்த்து புன்னகை உதிர்த்தாராம். மற்றவர்களை  ஒரு ‘லுக்’ (look) விட்டாராம். அதாவது ஒரு பார்வை மட்டுமே. அந்தக் காலத்தில் அரசர்கள், மற்றவர்களை அந்தஸ்து, பதவிக்கு ஏற்ற முறையில் வரவேற்றது இப்படித்தான்.

 

லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்டுதோறும் ஆயிரம் பிரமுகர்களுக்கு மஹாராணி விருந்து கொடுப்பார். எனக்கும் என் மனைவிக்கும் அழைப்பு வந்திருந்தது. நாங்கள் போயிருந்தோம். மஹாராணி எலிசபெத் அம்மையார் எங்களுக்கு மிக அருகில் வந்தார். ஆனால் எங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை. நாங்கள் அவரை முன்பின் அறியாதவர்கள். எங்களுக்கு மிக அருகில் சில பிரமுகர்கள், எம்.பி.க்கள் பிரபுக்கள் (Lords) ஆகியோரும் நின்றிருந்தனர். அவர்களில் சிலரைப் பார்த்தார்; சிலரைப் புன்னகைத்தார்; ஒரு சிலரிடம் ஓரிரு வார்த்தைகள் நவின்றார். இதைத்தான் காளிதாசன் குமார சம்பவ காவியத்தில் சிவ பெருமானும் செய்ததாகப் பாடுகிறான்.

 

அந்தப் பாடலில் அவன் பிரம்மாவுக்குப் பயன்படுத்திய சொல் சதபத்ரயோனிம். இதை முதுகண்ணன் சாத்தனார் (புறநானூறு 27) எப்படிப் பயன்படுத்துகிறார் என்று காண்போம்:

 

சேற்று வளர் தாமரை பயந்த, ஒண்கேழ்,

நூற்று இதழ் அலரின் நிரைகண்டன்ன

வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து,

வீற்றிருந்தோரை எண்ணும் காலை

உரையும் பாட்டும் உடையோர் சிலரே;

மரை இலை போல மாய்ந்தசினோர் பலரே;

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி

எய்துப என்ப, தம் செய்வினை முடித்து எனக்

………………………

(புறம்.27, சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது)

பொருள்:-

“சேற்றில் வளரும் தாமரையில் தோன்றிய செந்தாமரை மலரின் நூற்றுக் கணக்கான இதழ்களும், தம்முள் வேற்றுமையில்லாமல் உயர்வுடன் தோன்றும்.  அதுபோல வேற்றுமை இல்லாத உயர்ந்த குடியில் பிறந்து வாழ்ந்தவராயினும், அவர்களுள் உரையும் பாட்டுமாகப் புகழப்பட்டோர் சிலரே ஆவார். தாமரையின் இலை போல புகழில்லாமல் இறந்தவர்களே அதிகம். புலவர் பாடும் புகழுடையோர்– வானத்தில் விமானியே இல்லாமல் தானே இயங்கும் விமானத்தில் பறக்கும் அளவுக்கு உயர்வர். அவர் தாம் செய்த செயல்களை எல்லாம் இப்பூவுலகில் செம்மையாக நிறைவேற்றியவர் ஆவர்”.

 

இந்தப் பாட்டில் நூற்றிதல் தாமரை = சத பத்ர என்ற செய்தியுடன் விமானி இல்லாத விமானம், அதில் புனித ஆத்மாக்கள் பறப்பது, புகழுடையோர் சிலர்;  புகழில்லாமல் வாழ்பவரே மிகப் பலர்– என்ற செய்தியும் கிடைக்கிறது.

 

காளிதாசன் தாமரை தொடர்பாக 90 உவமைகளைப் பயன்படுதினான். சங்கத் தமிழில் சுமார் 20 உவமைகள் உள்ளன. படித்துப் பயன்பெறுக.

 

-சுபம்–