சோகக் கதை மன்னன் தாமஸ் ஹார்டி (Post.9683)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9683

Date uploaded in London – –3 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சோகக் கதை THOMAS HARDY

(1840 – 1928)

தாமஸ் ஹார்டி ஆங்கிலக் கவிஞர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர். பிரிட்டனில் டார்செட் DORSET  வட்டாரத்தில்  UPPERBROCKHAMPTON-இல் பிறந்தார். சிறுவயதில் பூஞ்சலான (Delicate) உடல்வாகுடைய பையனாக இருந்தாலும் புத்திசாலியாக இருந்தார். பிரெஞ் ச், லத்தீன், ஜெர்மன், கிரேக்க மொழிகளைக் கற்றார். அவரது தந்தையைப் போலவே கட்டி டம் கட்டும் பொறியியல் துறையில் இவருக்கு ஆர்வம். இதனால் 1856 முதல் 1861 வரை DORCHESTER என்னும் இடத்தில் ஒரு கட்டிடக் கலைஞரிடம் பயிற்சியாளராகச் சேர்ந்தார். 1862இல் லண்டனுக்குச் சென்று 5 ஆண்டுகள் கட்டி டக்கலையை பயின்றார்.

     முதல் முதலாக இவர் எழுதியது, தான் கட்டிய வீட்டைப் பற்றித்தான்! இவர் எழுதிய முதல் நாவல் ஒரு கொலை பற்றிய கதை. அதை மக்கள் ரசிக்கவில்லை.

     மேலும் இரண்டு நாவல்களை எழுதினார். ஆனால் அவையும் வெற்றிபெறவில்லை. பின்னர் இவர் எழுதிய “FAR FROM THE MADDING CROWD” இவருடைய பெயரை பரப்பியது.

     THE RETURN OF THE NATIVE, THE MAYOR OF CASTERBRIDGE, TESS OF THE D’URBERVILLES ஆகியன மிகவும் பிரபலமான புதினங்கள். இவர் சோகக் கதைகளை எழுதுவதில் மன்னன்.

     இவர் கடைசியாக எழுதிய JUDGE THE OBSCURE என்னும் நாவலில் அந்தக் கால ஒழுக்கக்கேடுகளை கூறினார். இந்த நாவலை மக்கள் புறக்கணிக்கவே அவர் நாவல் எழுதுவதையே நிறுத்திவிட்டார்.

     ஆனால் தனது கைவண்ணத்தை நாடகம் எழுதுவதில் காட்டினார். நெப்போலியன் ஆட்சிக்கால போர்களை மையமாகக் கொண்ட THE DYNASTYS என்ற நாடகத்தை எழுதினார். வாழ்நாளின் இறுதிநாட்களில் கவிதைகளை அதிகமாக எழுதினார்.

     ஹார்டியின் வாழ்க்கை மேடுபள்ளங்கள் இல்லாமல் சீராகச் சென்றது. இவர் இருமுறை மணம் முடித்தவர். OXFORD, CAMBRIDGE, ST.ANDREWS, ABERDEEN, BRISTOL பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தன.

     WESTMINSTER ABBE-Yயில் (POETS’ CORNER) கவிஞர்கள் மூலையில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.

தாமஸ் ஹார்டி எழுதிய 4 புகழ்பெற்ற புதினங்கள் சோகக்  கதைகள் ஆகும். இதனால் இவரை ‘நாவல் எழுதிய ஷேக்ஸ்பியர்’ என்பர் விமர்சகர்கள்.; ஏனெனில் ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும், சோக நாடகங்கள் புகழ் பெற்றவை.

Hardy has been called the Shakespeare of the English novel and the four great Hardian tragedies — Tess of the D’urbeivilles, Jude the Obscure, The Mayor of Casterbridge and The Return of The Native— have been likened to the four great Shakespearean tragedies.

–subham—

tags- Thomas Hardy, Tragedy Novels, சோகக் கதை, மன்னன், தாமஸ் ஹார்டி ,