டாக்டர், நர்ஸ் பெயர்கள் சொல்லும் அபூர்வக் கல்வெட்டுகள் (Post No.5054)

Written by London Swaminathan 

 

Date: 28 May 2018

 

Time uploaded in London – 7-43 am

 

Post No. 5054

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

டாக்டர், நர்ஸ் பெயர்கள் சொல்லும் அபூர்வக் கல்வெட்டுகள் (Post No.5054)

தாய்லாந்து நாட்டில் குனோய் KUNOI என்னும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மருத்துவமனை கல்வெட்டுகள், அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த டாக்டர்கள், நர்ஸ்கள், அங்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி தகவலகளை பொறித்துள்ளன. இது ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ள கல்வெட்டு. குனோய் KUNOI என்னும் இடத்தில் தோண்டும் வேலைகள் நடந்தபோது இந்தக் கல்வெட்டுகள் கிடைத்தன. இதில் பெரிய, நடுத்தரமான, சிறிய கல்வெட்டுகள் உள. நடுத்தர அளவு கல்வெட்டுகளில் இந்தச் செய்திகள் உள. இவை ஏழாவது ஜயவர்மன் காலத்தியவை. அவன் இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்தை ஆண்டனன். மருத்துவமனை பற்றிய கல்வெட்டு அடிப்பகுதி உடைந்து காணாமற்போய்விட்டது

 

 

கம்போடியா, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, மலேயா, இந்தோநேஷியா முதலிய நாடுகளில் 1500 ஆண்டுகளுக்கு இந்து மத ராஜாக்கள் ஆட்சி நடந்தது. அந்த நாடுகள் அனைத்திலும் முக்கியமான ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் இருக்கின்றன. அவைகளில் இருந்து மிக முக்கியமான செய்திகள் கிடைக்கின்றன. பெரும்பாலான கல்வெட்டுகள் பாங்காக், காங்கேயன் முதலிய நகரங்களில் மியூஸியங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் கிடைத்த கல்வெட்டுகள் ஆயிரத்துக்கும் அதிகம்.

 

வட தாய்லாந்து வழியாக KHMER க்மேர் (குமரிக் கண்ட?) நாகரீகம் தாய்லாந்தில் நுழைந்தது. வியட்நாமில்தான் மிகப்பழைய ஸம்ஸ்க்ருத கல்வெட்டு உளது. இது ஸ்ரீஇமாறன் (திருமாறன்) என்ற பாண்டிய மன்னனுடையது. அதன்பிறகு கம்போடியாவில் நிறைய ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் கிடைத்தன. சம்பா என்று அழைக்கப்பட்ட வியட்நாம் ஆட்சியில் மட்டுமே 800 ஸம்ஸ்க்ருத

கல்வெட்டுகள் உள.

 

வட தாய்லாந்தில் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கிடைத்தது. இதுதான் தாய்லாந்தின் பழைய கல்வெட்டு. இதில் மஹேந்திரவர்மன் என்ற மன்னன், சிவனின் வாஹனமான நந்தியை நிர்மாணம் செய்தி உளது.

இதில் விநோதம் என்னவென்றால் அதேகாலத்தில் காஞ்சீபுரத்தில் மாபெரும் பல்லவ மன்னனான மஹேந்திர பல்லவன் நந்தி சின்னத்தோடு ஆட்சி புரிந்துள்ளான். இருவருக்குமிடையேயான தொடர்பு ஆராயப்படவேண்டியது. கம்போடிய, தாய்லாந்து மன்னர்களும் பல்லவர்களைப் போல  ‘வர்மன்’ பட்டத்துடன் ஆண்டனர் என்பதும் குறிப்பிடற்பாலது.

 

மஹேந்திரவர்மன் கல்வெட்டு சூரின் (SURIN PROVINCE) மாகாணத்தில் கிடைத்   தது; அவன் எல்லா நாடுகளையும் வெற்றிகொண்டதற்காக சிவ பிரானுக்கு ‘நந்தி’ அமைத்ததாகக் கல்வெட்டு செப்புகிறது

 

இந்தியாவை போலவே அங்கும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் தானம் கொடுத்தது, கோவில் கட்டியது முதலிய செய்திகள் உள. இவை இல்லாவிடில் அந்த நாட்டின் வரலாறே அழிந்து போயிருக்கும். தமிழ் நாட்டிலும் இப்படி பிரம்மதேய (பிராமணருக்கு தானம்), தேவதான (கோவிலுக்கு தானம்) கல்வெட்டுகள் இல்லாவிடில் வரலாறே தெரியாமல் போயிருக்கும். இலக்கியங்களில் தேதி தெரியாது; கல்வெட்டுகளில் ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கும்.

 

பாங்காக் நகர மியூஸியத்தில் இரண்டாவது உதயாதித்ய  வர்மணின் ஸம்ஸ்க்ருத கல்வெட்டு பல சுவையான செய்திகளைத் தருகிறது பிராமண அர்ச்சகர் பரம்பரை பற்றிய செய்தி இது. தமிழ்நாட்டில் வேள்விக்குடி சாசனம் எப்படி பிராமணர்களுக்கு பாண்டிய மன்னர்கள் பழங்காலம் முதல் தானம் செய்ததைக் குறிப்பிடுகிறதோ அதே போல இந்த தாய்லாந்து கல்வெட்டு கைவல்ய சிவாச்சார்யார்கள் பற்றி சுமார் 400 ஆண்டுக் கதைகளைக் கோடிட்டுக் காட்டுகிறது

 

இது பிரசாத் கோக் சுதோத் தாம் என்னும் இடத்தில் கிடைத்தது. இப்பொழுது பாங்காக் தேஸீய மியூஸியத்தில் இருக்கிறது

 

க்மேர் வன்ம்சத்தை ஸ்தாபித்த ஜயவர்மன் காலத்தில் இருந்து அந்த பிராமணக் குடும்பம் மன்னர்களுக்கு சேவை செய்து வருவதாகக் கூறும் இக் கல்வெட்டு 1052 ஆம் ஆண்டினது ஆகும்; ஜயவர்மன் 802-ல் வம்சத்தை நிறுவினான். அவன் ஜாவவிலிருந்து (இந்தோநேஷியா) வந்து இந்திரபுரத்தில் அரசு நிறுவிய கதை; பின்னர் அதை ஹரிஹராலயத்துக்கு மாற்றிய கதை ஆகிய அனைத்தையும் இக் கல்வெட்டு விளம்புவதால் தாய்லாந்து வரலாற்றுக்கும் க்மேர் வரலாற்றுக்கும் இன்றியமையாதது இது என வரலாற்றுப் பேரறிஞர்கள் உரைப்பர்.

 

 

அத்தோடு க்மேர் அரசாட்சி முறை, அவர்களுடைய நம்பிக்கைகள், அவர்களுக்குக் குருவாக விளங்கிய பிராமணர்கள் ஆகியோர் பற்றிய செய்திகளையும் மொழிகிறது.

11 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

 

பிரஸாத் பனம் ரங் (PRASAT PHNOM RUNG) என்னும் இடம் மிகப் பிரஸித்தமானது. அங்குதான் நிறைய இந்துக் கடவுளரின் சிலைகள், சிற்பங்கள் இடம் பெறுகின்றன. அங்கு 11 ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் கிடைத்தன. இதிலிருந்து வட தாய்லாந்தின் 400 ஆண்டு வரலாற்றை அறிகிறோம். பத்தாம் நூற்றாண்டு முதல் ஆண்ட நரேந்திர ஆதித்யன், அவன் மகன் ஹிரண்யன் ஆகியோரின் வீரப் பிரதாபங்களை இவை நுவலும்.

 

27க்கு 53 (27×53) செண்டிமீட்டர் உடைய (ஒன்றரை அடிக்கும் மேல் உயரம்) உள்ள ஒரு ஸம்ஸ்க்ருத கல்வெட்டு சிவ பெருமானின் துதியோடு துவங்குகிறது. சிவ பெருமானை மஹா யோகி என்று புகழ்கிறது. அதில் ஹிரண்யன் தனது தந்தைக்குத் தங்கத்தினால் சிலை செய்து வைத்ததாகப் புகல்வான். சைவ மடங்களுக்குப் புதுக் கட்டிடங்கள் கட்டியதைக் கொண்டாடும் முகத்தான் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது.

ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸம்ஸ்க்ருத கல்வெட்டு நாலே வரிகளில் உளது.

 

மடங்களில் கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்கள், சிவன், விஷ்ணு, லிங்கம் ஆகிய மூர்த்திகளை நிறுவியது ஆகியான பற்றிப் பகரும் கல்வெட்டுகளும் உள. அனைத்தும் அரிய பெரிய செய்திகளைத் தருகின்றன.

 

தமிழர் ஒருவர் சென்று ஸம்ஸ்க்ருத

கல்வெட்டுகளைத் தமிழ்நாட்டுக் கோவில்களுடன் ஒப்பிடுவது பல முக்கிய செய்திகளைத் தரக்கூடும். ஸம்ஸ்க்ருத மொழி அறிவின்றி பழந் தமிழர்களின் கடலாதிக்கத்தை அறிவது அரிதிலும் அரிது.

 

ஆங்கிலேயர்கள் எழுதிய 1992 ஆம் ஆண்டு நூலில் உள்ள தகவல்களை நான் வடித்துத் தந்தேன். அவர்களுக்கு ஆழமான அறிவும் பற்றும் இல்லை என்பதால் நாம் ஆராய வேண்டியது அவஸியமாகும். ஆயிரம்   ஸம்ஸ்க்ருத

கல்வெட்டுகளை ஆராயும் கடமை நமக்குளது.

ஸம்ஸ்க்ருதம் படிக்க! தமிழ்  வாழ்க!!

 

-சுபம்,சுபம்-

தாய்லாந்தில் வேஷ்டி கட்டும் தமிழ் பிராஹ்மணர்கள்! (Post No.5003)

Written by London Swaminathan 

 

Date: 12 May 2018

 

Time uploaded in London – 8-43 am (British Summer Time)

 

Post No. 5003

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

தாய்லாந்தில் தமிழ் என்றே தெரியாமல், கோவிலில் ‘டிருவெம்பாவை’ (திருவெம்பாவை, மாணிக்கவாசகர்) ஓதிய கதையை தெ.பொ.மீ. போன்ற அறிஞர்கள் அந்தக் காலத்திலேயே எழுதிவிட்டனர். ஆனால் ஸத்ய வ்ரத சாஸ்திரி (1982) எழுதிய தாய்லாந்து பற்றிய ஆங்கில நூலில் மேலும் பல சுவையான செய்திகளைத் தருகிறார்.

 

தாய்லாந்து இப்பொழுது புத்தமத நாடு. ஆனாலும் இந்துமதத்தின் தாக்கத்தையும் ஸம்ஸ்க்ருதத்தின் செல்வாக்கையும் பண்பாட்டிலும் மொழியிலும் காண முடிகிறது. பல இந்துக் கோவில்களும் உள.

 

இங்கே பிராஹ்மணர்கள் வசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ‘’தாய்’’ (THAI LANGUAGE) மொழி மட்டுமே பேசுகின்றனர். நடை, உடை, பாவனையில், ஏனைய மக்களிடமிருந்து வேறு பட்டவர்கள். தூய வெள்ளை ஆடை மட்டுமே உடுத்துவர்; வேஷ்டி அணிகின்றனர். காலில் ஷூ, ஸாக்ஸ் அணிந்தாலும் அவையும் வெண்மையே.

 

ஆயிரக்கணக்கில் பிராமணர்கள் இருந்தும் தீக்ஷை எடுத்தவர்களை மட்டுமே பிராஹ்மணர் என்று சொல்லுவர். இப்படிப் பார்த்தால் ஐம்பது, அறுபது பேர் மட்டுமே பிராஹ்மணர். இந்த தீட்சையை வழங்குபவர் ராஜ குரு. அவர் இல்லாவிடில் ஹுவன் ப்ராம் (சுவர்ண பிராஹ்மண) இந்தப் பட்டத்தை வழங்குவார்.

 

ராஜ குரு என்பவரும் பிராஹ்மணரே; அவரை மற்றவர்களைக் கலந்தாலோசித்து மன்னர் தேர்ந்தெடுப்பார்.

மன்னர் கொடுக்கும் மான்யத்தொகை மிக மிகக் குறைவு என்பதால் ஏனைய பூஜைகள் மூலம் அவர்கள் தட்சிணை வாங்கிப் பிழைக்கிறார்கள்.21 வயத்துக்கு மேலுள்ள எந்தப் பிராஹ்மணனும் இதற்குத் தகுதி உடையவரே.

‘ட் ரி யம் பாவ்ய’, ‘ட் ரி ப் பாவ்ய’

 

1982 ஆம் ஆண்டு வெளியான இந்த நூலில் சாஸ்திரி மேலும் கூறுகிறார். ராஜ குரு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் ‘ட் ரி யம் பாவ்ய’, ‘ட் ரி ப் பாவ்ய’ விழா நடத்த வேண்டும். இவை தமிழில் உள்ள திருவெம்பாவை, திருப்பாவை என்பன ஆகும்.

முதலாவது விழாவில் சிவ பெருமானை மூன்று கட்டங்களில் வழிபடுவர். முதலில் இறைவனை ஆவாஹனம் செய்து, பின்னர் ஊஞ்சலில் எழுந்ததருளிச் செய்து, புனித நீரால் அபிஷேகம் செய்து, சாதம் முதலிய பிரஸாதங்களைப் படைப்பர். பின்னர் கடவுளை வழி அனுப்புவர். இது பத்து நாட்கள் நடைபெறும் விழா.

 

இதே காலத்தில் புதிய பிராஹ்மணர்களுக்கும் தீக்ஷை வழங்கப்படும். அவர்கள் ‘பூ சுத்தி’, ‘பூத சுத்தி’ செய்துவிட்டுக் கோவிலிலேயே தரையில் படுத்து உறங்குவர். மரக்கறி உணவை மட்டுமே உண்ணுவர். இந்த விரதம் டிசம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை நடக்கும். யார் யார் பிராமணர் பட்டம் பெற விரும்புகிறாரோ அவரவர்களுக்கு ராஜ குரு தீட்சை தருவார். தினமும் கணேசர், உமை, சிவன் வழிபாடு மாலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை நடைபெறும்.

 

சிவபெருமான் இந்தப் பத்து நாட்களுக்குப் பூமிக்கு வருவதாகச் சொல்லி, திருவெம்பாவை படிப்பர். நவக்ரக வழிபாட்டுடன் பூஜைகள் துவங்கும். இரவு நேரத்தில் திருவீதி உலா நடக்கும். மக்கள் புத்தாடை அணிந்து வீடுகளை அலங்கரிப்பர்.

 

ஊஞ்சல் திருவிழாவும் உண்டு. இறைவனை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவர். இரண்டு தூண்களுக்கு இடையே ஒரு குவளையில் தண்ணீர் வைப்பர். இதுதான் சமுத்திரம்/கடல்.

இதுபற்றிய கதை ஒன்றும் சொல்லுவர். சிவ பெருமான் தன்னுடைய ஒரு காலால் பூமியை அமுக்கி நிலைபெறச் செய்தார். ஆயினும் அது வலிமையுடையதா என்று ஐயப்பாடு எழுந்தது. உடனே நாக தேவதைகளை அழைத்து பூதளத்தை அசைக்கச் சொன்னார். அப்போதும் அசையவில்லை. உடனே இறைவனுக்கு மட்டில்லா மகிழ்ச்சி. ஊஞ்சல் கட்டிய இரண்டு தூண்கள் இரண்டு மலைகள் ஆகும்; நடுவில் குவளையில் வைக்கப்பட்ட நீர் கடல் ஆகும். இவை எல்லாம் இறைவன் கருணையால் எல்லை தாண்டாமல் ஒழுங்காக இருக்கின்றன என்பதைக் காட்டுவதே இதன் தாத்பர்யம்.

 

இதே போல நாராயணணின் புகழ்பாட ‘ட் ரி ப் பாவ்ய’ (திருப்பாவை) விழா நடக்கும் சிவன் சென்றவுடன் நாராயணன் பூமிக்கு வந்ததாக ஐதீகம். இவ்வறு விழா நடத்திய பின்னர் பிராஹ்மணர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தங்கள் கைகளாலேயே மொட்டை அடிப்பர் அல்லது முடி இறக்கி குடுமி வைப்பர். இப்போதெல்லாம் கொஞ்சம் முடியை மட்டும் அடையாளபூர்வமாக வெட்டுகின்றனர்.

ஏர் உழும் பணி

அந்தக் காலத்தில் ராஜகுருவானவர் வேத முழக்கம் செய்தார். இப்போது அது இல்லையாம்.

 

Thai Rajaguru with Kanchi Shankaracharya

பணி

 

அந்தக் காலத்தில் அரசர்களே முன்னின்று பயிரிடுதலைத் துவக்கினர். இப்படி ஜனக மஹாராஜா ஏர் உழுதபொழுதுதான் சீதா தேவி கண்டு எடுக்கப்பட்டாள். இந்த வேத கால வழக்கம் தமிழ் இலக்கியத்திலும் உண்டு. தாய்லாந்தில்  இது நடத்தப்படும் முறை மிகவும் சுவையானது.

ராஜகுரு பஞ்சாங்கத்தைப் பார்த்து வைகாசி மாதம் நாள் குறிப்பார். முதல் நாள் பௌத்தர்கள், மரகத புத்தர் சிலை முன்னர் ஜபம் செய்வர். மறு நாள் அதிகாலையில் பிராஹ்மணர்கள் கௌரி, தரணி (பூமி), கங்கா (கங்கை நதி) பூஜை துவங்குவர். பலவகை தானியங்களை நீருடன் கலந்து தூவுவர். குறிப்பிடப்பட்ட நேரத்தில் மன்னர் வருவார். அவர் தனது பிரநிதியை அனுப்பி காளைகளை வணங்கி ஏர் உழச் செய்வார். அந்தப் பிரதி நிதி மரகத புத்தர் கோவில் புல்வெளியில் ஏரை முன்னும் பின்னும் இழுப்பார். பின்னர் காளைகள் திரும்பிச் செல்லும்.

 

ஏருழும் பிரதிநிதிக்கு முன்னர் பிராமணர்கள் செல்லுவர். மங்கையர் மங்களப் பொருட்களை ஏந்தி வருவர்.

ஏழு பொருள் சோதனை!

ஏர்  உழுதல்  முடிந்த பின்னர் காளை மாட்டு ச் சோதனை நடக்கும். மது, புல், எள், நெல், தண்ணீர், சோளம், பயறு வகைகளை வைத்து காளை மாட்டிடம் காட்டுவர். அது எதன் மீது பாய்ந்து முதலில் தின்கிறதோ அது அந்த ஆண்டு செழித்து வளரும் என்பது நம்பிக்கை.

 

காளை மாடு நெல்லையோ பயறு வகைகளையோ சோளத்தையோ முதலில் சாப்பிட்டால் அந்த வகை தானியம் அந்த ஆண்டில் அமோக விளைச்சல் பெறும். தண்ணீரை முதலில் சாப்பிட்டால் வெள்ளம் வந்து பயிர்கள் அழியும்; புல்லையோ எள்ளையோ சாப்பிட்டால், தானிய விளைச்சல் அரை குறையாக இருக்கும். மதுவைச் சாப்பிட்டாலோ வறட்சி தாண்டவம் ஆடும். நாட்டில் அமைதியின்மை ஏற்படும் என்று அறிவிப்பர். அத்துடன் ஏர் உழும் விழா இனிதே நிறைவு பெறும்.

இது தவிர பிராஹ்மணர்களின் பங்கு பணி வேறு சில சடங்குகளிலும் உண்டு. அவற்றைத் தனியே காண்போம்.

–சுபம்–

 

 

தாய்லாந்தில் தமிழ் பொங்கல் பண்டிகை (Post No.4994)

Research article Written by London Swaminathan 

 

Date: 9 May 2018

 

Time uploaded in London – 10-22 am (British Summer Time)

 

Post No. 4994

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

தமிழர்கள் பொங்கல் பண்டிகையை அறுவடை விழாவாக கொண்டாடுகிறார்கள்; அன்றைய தினம் சூரியனை வழிபட்டு, பொங்கல் வைக்கிறார்கள். மறுநாளன்று ‘கோ மாதா’வான பசுமாட்டை வணங்கி கிருஷ்ணன் சிலையுடன் ஊர்வலம் விடுகிறார்கள். யாதவ குல மோஹனனான கண்ணன் பெயரில் ஜல்லிக்கட்டு விளையாடுகிறார்கள். இந்த வீர விளையாட்டின் வருணனை சங்க இலக்கிய நூலான கலித்தொகையில் உளது.

 

பொங்கல் என்று சொல்லும் பண்டிகையின் உண்மைப் பெயர் சங்கராந்தி. ஒரு உணவுப் பண்டத்தின் பெயரில் பண்டிகை இராது என்பது வெளிப்படை. தீபாவளி என்றால் லட்டு என்பது போல சங்கராந்தி என்றால் பொங்கல் சாப்பிடுவோம்.

சங்கராந்தி என்பது தென் கிழக்காசியா முழுதும், இந்தியாவில் தென் குமரி முதல் வட இமயம் வரை, கொண்டாடப்படுகிறது.

தாய்லாந்து, லாவோஸ் ஆகிய இரண்டு நாடுகளில் இதைக் கொண்டாட அழகான கதை சொல்லப்படுகிறது. அதாவது புத்த மத, நாட்டுப்புற கதைகளை எல்லாம் இதில் இணைத்து விட்டார்கள். ஆனால் இந்துமதப் பெயர் மட்டும் ‘சொங்ராங்’ (சங்கராந்தி) என்ற பெயரில் அப்படியே இருக்கிறது இந்து மதத்தின் வழக்கங்களும் மேரு மலையும் அப்படியே உளது.

 

இதோ சுவையான கதை!

 

தர்மாபரணன் என்ற ஒரு அறிவாளி வாழ்ந்து வந்தான். அவன் ஏழு வயது முதலே பேரர்றிஞன். ஆதி சங்கரர், சம்பந்தர் போல இளம் வயது மேதை. விக்ரமாதித்தன் போல பறவைகள் மிருகங்கள் பேசுவதை அறிந்தவன். அவன் மீது அந்த நாட்டின் மன்னன் கபிலபிரம்மனுக்கு ஒரே பொறாமை. அவனை போட்டிக்கு அழைத்தான். கபிலனுக்கு ஏழு பெண்கள்/புதல்விகள்.

 

 

இதோ பார்! சின்னப்பையா! நான் ஒரு விடுகதை போடுவேன். நீ சரியான பதில் சொன்னால், நானே என் தலையை வெட்டிக் கொள்வேன்; அப்படிச் சொல்லவில்லையானால் நீயே உன் தலையை வெட்டிக்கொள்ள வேண்டும் . சரியா? என்றான் கபிலன்.

 

உடனே சரி என்று தலை அசைத்தான் தர்ம ஆபரணன்.

 

விடுகதை இதுதான்:-

மனிதனுடைய ஜீவன் காலையில், நண்பகலில், மாலையில் எங்கே உளது?

 

தர்மன் இதைப் பற்றி யோசித்துக் கொண்டே இருந்தான்; அவனுக்குத்தான் பறவைகளின் மொழி தெரியுமே! அவை இது பற்றி என்ன பேசிக்கொள்கின்றன என்று ஒட்டுக் கேட்டான். விடையும் கிடைத்து விட்டது.

நேராக கபிலனிடம் சென்று இதோ தயார் என்றான்

 

என் கேள்விக்கு என்ன பதில்? என்றான் மன்னன் கபிலன்.

தர்மன் சொன்னான்:–

காலையில், மனிதனின் ஜீவன் முகத்தில் உளது; ஆகையால்தான் நாம் துயில் எழுந்தவுடன் முகத்தைக் கழுவுகிறோம்.

 

மதியம், நமது ஜீவன் மார்பில் உளது;ஆகையால்தான் சந்தனம் பூசுகிறோம்.

 

மாலையில், நமது ஜீவன் காலில் உள்ளது. ஆகையால்தான் படுக்கைக்கு போகும் முன் கால் கழுவிவிட்டு படுக்கச் செல்கிறோம்.

 

இதைக் கேட்டவுடன் கபிலன் தன் தலையை வெட்டிக்கொண்டான். அதைச் சீவிய வேகத்தில் தலை காற்றில் பறந்தது.

 

கபிலனுக்கு ஏழு மகள்கள் உண்டல்லாவா?

அவர்கள் நினைத்தார்கள்; இந்தத் தலை பூமியில் விழுந்தால் பூமி எரிந்து கருகிவிடும்; காற்றில் இருந்தால் அனல் காற்றால் பூமி வறண்ட பாலை வனம் ஆகி விடும்; கடலில் விழுந்தால் அது வற்றிப்போய் விடும். ஆகையால் மேரு மலை மீதுள்ள குகையில் வைப்போம். ஒவ்வொரு ஆண்டும் முறை வைத்து அதைப் பாது காப்போம் என்று  எழுவரும் முடிவு செய்தனர். ஆண்டுக்கு ஒரு முறை — சங்கராந்தி தினத்தன்று– அதை ஊர்வலமாக எடுத்துச் செல்வோம் என்று முடிவு செய்தனர்.

 

காலப்போக்கில் அந்த ஏழு பெண்களுக்கும் பிடித்த உடை, உணவு, வாஹனம், தோற்றம் ஆகியவற்றை தாய்லாந்து மக்கள் கற்பித்தனர்; ஏழு நங்கைகளையும் வாரத்தின் ஏழு கிழமைகளுக்கு சொந்தம் ஆக்கினர். அவர்கள் கையில் ஆயுதம் அல்லது ஒரு பொருளைக் கொடுத்தனர்.

 

சங்கராந்தி நாள் எந்தக் கிழமையில் ஏற்படுகிறதோ அந்த கிழமைக்கு உரிய மங்கையின் கையில் என்ன உள்ளது, அவள் என்ன ஆடை அணிந்திருக்கிறாள்? அதன் வர்ணம் என்ன? போன்ற அம்சங்களை வைத்து அந்த ஆண்டில் என்ன நடக்கும் என்பதை  மக்கள் ஆரூடம் கூறினர்.

 

இந்த வழக்கத்தை இப்பொழுதும் மதுரை சித்திரைத் திருவிழாவில் காணலாம். கள்ள அழகர் (விஷ்ணு) என்ன நிற ஆடை உடுத்தி, வைகை ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்றவாறு மழை அறுவடை, நாட்டின் வளம் இருக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். பச்சைப் பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினால் பசுமை மிக்க அறுவடை இருக்கும் என்பது போல தாய்லாந்தில் கையில் வாளேந்திய சிவப்பு நிற மங்கைக்கு உரிய நாளில் சங்கராந்தி ஏற்பட்டால் யுத்தம் போர் மூளும் என்று தாய் மக்கள் நம்பினர்.

லாவோஸ் நாட்டில் அன்றைய தினம் மேருமலையைப் போல மணற் கோபுரங்களைக் கட்டி, அதற்கு மஞ்சள் ஆடை உடுத்தி, தோரணம் கட்டி, பூஜை புனஸ்காரங்களைச் செய்து நைவேத்யம் படைத்து வணங்குவர். அந்த படைப்புப் பொருட்களை புத்த பிக்ஷுக்களுக்கு வழங்குவர்.

 

இப்படிப் பல கதைகளை இணைத்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினாலும் சம்ஸ்க்ருத, தமிழ் சொற்கள் அப்படியே அப்பண்டிகையில் ஒட்டிக் கொண்டு இருக்கின்றன. தாய்லாந்து, லாவோஸ் நாட்கள் சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிட்டு பக்தர்களை ஊக்குவிக்கின்றன.

 

கிழமைகளையும் அதற்குரிய நங்கைகளின் பெயர்களையும் அவரவர்க்குரிய உடை, உணவு, வர்ணம், ஆயுதம், வாஹனம் முதலியவற்றையும் கீழே உள்ள பட்டியலில் காண்க:–

  • Sunday: TungsateveeRed dress, preferred wild fruit, discus in the right hand, shell in the left hand, garuda as the vehicle.

 

  • Monday: Korakatevee Yellow dress with pearl ornaments, preferred butter oil, dagger in the right hand, walking cane in the left hand, tiger as the vehicle.

 

 

  • Tuesday: Ragsotevee Light red dress with agate ornaments, preferred blood, trident in the right hand, arrow in the left hand, pig as the vehicle.

 

  • Wednesday: Montatevee Emerald green dress with cats eye ornaments, preferred milk and butter, sharp iron in the right hand and walking cane in the left hand, donkey as the vehicle.

 

 

  • Thursday: Kirineetevee Greenish yellow dress with emerald ornaments, preferred nuts and sesame seeds, elephant hook in the right hand, gun in the left hand, elephant as the vehicle.

 

  • Friday: Kimitatevee White dress with topaz ornament, preferred banana, dagger in the right hand, Indian vina in the left hand, buffalo as the vehicle.

 

 

  • Saturday: Mahotorntevee Black dress with onyx ornaments, preferred hog deer, discus in the right hand, trident in the left hand, peacock as the vehicle.

 

 

வாழ்க தமிழ்!!  வளர்க இந்துமதம்!