WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,542
Date uploaded in London – – 8 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Q & A ON ‘DRAVIDAS’ IN INSCRIPTION; ARE THEY BRAHMINS?
எனது பெயர் XYZ, நான் கன்னியாகுமரி மாவட்டம்…
தமிழர் என்ற அடையாளம் இருக்க திராவிடர் என்ற வேற்று மொழிச் சொல்லின் அடையாளம் நமக்கு எதற்கு என்று தேடத் துவங்கியதில் முக்கியமாக உங்கள் பதிவு கிடைத்தது .. மட்டற்ற மகிழ்ச்சி!!
திராவிடர் என்பவர்கள் பிராமணர்கள் என்பது தெளிவாகிறது!
ஆனால்,
8ம் நூற்றாண்டு சஞ்சன் பட்டையம் சேரன்,சோழன்,பண்டிய மன்னர்களை திராவிட மன்னர்கள் என்று குறிப்பிடுகிறது என்ற வாதம் வருகிறது!!
அப்படி என்றால் நம் மன்னர்கள் பிராமணர்களா ?
உங்கள் பதிலை ஆவலோடு காத்திருக்கிறேன்!
நன்றி
XXXXXXXX
கைபேசி : YYYYYYYYYYYYY
REPLY FROM LONDON SWAMINATHAN , 5TH JANUARY 2022, LONDON, U.K.
அன்புடையீர் ,
கட்டுரைகளைப் படித்தமைக்கு நன்றி.
திராவிட என்பது ‘தெற்கு’ என்று பொருள்படும்.
எங்கெங்கு எல்லாம் திராவிட என்று வருகிறதோ அங்கங்கு எல்லாம் ‘தெற்கு’ என்று போட்டுப் பாருங்கள் பொருள் மாறாது..
குமாரில பட்டர் என்பவர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவரும் திராவிட பாஷைகள் என்ற சொல்லைப் பயன்படுத்திவிட்டு, தமிழ்ச் சொல்லான ‘சோறு’ என்பதை எடுத்துக் காட்டாகத் தருகிறார்.
2130 ஆண்டுகளுக்கு முன்னர் காரவேலன் என்ற கலிங்க மன்னன் வெளியிட்ட ஹத்தி கும்பா கல்வெட்டிலும் ‘த்ரமிள சங்கடன்’ – என்கிறான். ‘தமிழ்க் கூட்டணி’ அல்லது ‘திராவிட கூட்டணி’ என்று பொருள்படும்.
தமிழ்- த்ரமிள- ஆகி – த்ரவிட ஆனது என்பது ஒரு சாரார் வாதம்.
இல்லை , இல்லை தமிழ் என்பதே திராவிட- த்ரமிள- என்ற சொல்லில் இருந்து வந்தது என்பது இன்னொரு சாரார் வாதம். இவை எல்லாம் மிகவும் பிற்பட்ட சொற் பிரயோகம் .
எட்டாம் நூற்ராண்டு முதல்தான், திராவிட என்ற சொல்லைக் காண்கிறோம்.
நான் சொல்ல வந்தது வெள்ளைக்காரர்களும் , பிஷப் கால்டுவெல்களும் கதைப்பது போல, இது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல. பஞ்ச திராவிடர் என்று பிராமணர்களும் அழைக்கப்பட்டனர். அவர்கள் வட இந்தியாவைச் சேராத பிராமணர்கள். அங்கும் தெற்கு என்ற பொருளே பிரதானம்.
சுருங்கச் சொல்லின் ‘திராவிட’ என்றால் ‘தென்பகுதி’.
அந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லை பல கட்சிகள் வைத்திருப்பது வியப்பான விஷயம்.
திராவிட வேதம் (திவ்யப் பிரபந்தம்), திராவிடாசார்யா என்ற பெயர்களையும் ஒப்பிடுக.
இதையெல்லாம் விட, மிக விந்தையான விஷயம்– திராவிடம் என்பது தமிழ் நாடு அல்ல. 56 தேசங்களில் சேர, சோழ , பாண்டிய நாடுகளை எல்லாம் சொல்லிவிட்டு அதற்கு வெளியே திராவிடத்தைக் காட்டி இருக்கிறார்கள்.
நீங்கள் சொல்லும் கல்வெட்டிலும் தென் பகுதி என்று வாசியுங்கள்; அதற்குள் சேர சோழ பாண்டிய நாடுகள் வந்து விடும் .
சுருங்கச் சொல்லின் திராவிட என்பது இனப் பெயர் அல்ல. “தெற்கு” என்பதே பொருள்.
DRAVIDA= SOUTH INDIA
இதே போல பாரதியார் பாடல் முழுதும் வரும் ‘ஆரிய’ (ARYA IN BHARATIYAR POEMS) என்பது இனப்பெயர் அல்ல. வடக்கிலுள்ள ‘படித்தவர்’, ‘நாகரீகமானவர்’, ‘பண்பாளர்’ (EDUCATED, CIVILIZED PEOPLE OF NORTH INDIA) என்பதே பொருள். புறநானூற்றிலும் வடக்கு வாழ் முனிவர்கள், மன்னர்களுக்கே இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது . “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்” என்றால் “வடக்கிலிருந்து படையெடுத்தவர்ளை” வென்றவன் என்பதே பொருள். ஆரிய மன்னர்களான கனக விஜயன் தலையில் கல்லை ஏற்றி சுமந்து வரச் சொன்னான் சேரன் செங்குட்டுவன் என்றால், அவர்கள் “வடக்கில் வாழ்ந்த” குறு நில மன்னர்கள் என்பதே பொருள்.
ARYA= NORTH INDIA (GEOGRAPHICAL AND NOT RACIAL)
‘திராவிட’ என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் எங்குமே இல்லை. ஆனால் ‘ஆரிய’ என்ற சொல் சங்கத் தமிழ் காலத்திலேயே வழக்கில் உள்ளது.
நன்றி
Swami/ London swaminathan
XXXXXX
ஐயா, மன்னிக்கவும் , நான் குறிப்பிட்ட அந்த தகடு ஆதாரம் கிடைத்து விட்டது அதில் நான் சொல்வது போல் இல்லை !!
திராவிள என குறிப்பிட்டிருப்பது வேறு மன்னர்களை தான் ..
முகநூலில் ஒருவருடன் விவாதம் செய்யும் போது அவர் குறிப்பிட்டவை இது!! சோழர்களை தான் பிற நாட்டில் உள்ளவர்கள் திராவிட என அழைத்தார்கள் என்று வாதிட்டார் !! அதற்கு சான்றாக இந்த தகடை காட்டினார்!! அவர் ஆயுதமே போலி (அட்டை கத்தி)
உங்களுடன் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி ❤️
பின் நாட்களில் ஏதாவது சந்தேகங்கள் வந்தால் தொடர்பு கொள்கிறேன் …
-ரெXXXXXXX
XXXXX
தமிழ் மன்னர்களை வேற்று மொழியின் குறிப்பிட்டிருக்கும் கல்வெட்டுகள் சான்றுகள் ஏதாவது உள்ளதா ?
சோழ மன்னர்கள் , பாண்டிய மன்னர்கள் அல்லது தமிழ் மன்னர்கள் ? இப்படி ஏதாவது குறிப்புகள் காணக்கிடைக்கிறதா ?
தமிழகத்திற்கு வெளியே ..
நன்றி
RXXXXXXXXX
XXXXX
YES. THERE ARE INSCRIPTIONS OUTSIDE TAMIL NADU.
EARLIEST INSCRIPTIONAL EVIDENCE IS FROM ASOKA.
PERIOD OF EMPEROR ASOKA (304 TO 232 BCE)
HE DID NOT NAME THE KINGS BUT MENTIONED
CODA, PANDIYA, SATIYAPUTO AND KELALAPUTO AS NEIGHBOURS TO HIS KINGDOM IN ROCK EDICT II
(CODA= CHOLZA; SATHYAPUTO= ATHIYAMAN; KELALAPUTO= CERALA = CHERAS)
AND AGAIN ,IN HIS EDICT XIII, ASOKA SAYS
CODA, PANDIYA AND AS FAR AS TAMBAPANNI, DHARMA IS SPREAD
(CHOZA, PANDYA AND TAMBRA PARANI;
BUT TAMBAPANNI IS SRI LANKA ACCORDING TO SOME SCHOLARS)
NEXT COMES FROM ORISSA……
KALINGA KING KHARAVELA (170 BCE) SAYS
I RECEIVED PEARLS AND ELEPHANTS FROM PANDYA KING THROUGH ELEPHANT SHIPS.
swami
XXXX
ஐயா,
இதற்கான சான்றுகள் உள்ளனவா ?
நன்றி
RXXXXXXXXXXXX
XXXXX
YES. THERE IS AMPLE EVIDENCE.
ALL INFORMATION GIVEN ABOVE IS FROM RECORDED INSCRIPTIONS.
YOU HAVE TO GO TO BIG LIBRARY OR ARCHEOLOGICAL LIBRARY TO GET THEM.
HERE IN LONDON, I GET EVERYTHING FROM BRITISH LIBRARY AND LONDON UNIVERSITY LIBRARY. I WILL PHOTOCOPY THEM AND POST IT WHEN I GO TO LIBRARY NEXT TIME.
SWAMI (London swaminathan) 7th January 2022
xxxxx
tags திராவிடர்கள், பிராமணர்களா ? , Dravidians, Brahmins
You must be logged in to post a comment.