
Written by London Swaminathan
Date: 22 NOVEMBER 2017
Time uploaded in London- 19-03
Post No. 4422
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
கீழேயுள்ள ஸ்லோகங்கள் குறித்த எனது கருத் து:—-
இந்த ஸ்லோகங்களில் மிகவும் முக்கியமானது 49-ஆவது ஸ்லோகம்; தாவரங்களுக்கு உள்ளறிவு உண்டு, அவைகள் சுக துக்கங்களை அனுபவிக்கின்றன என்ற பேருண்மையை, அறிவியல் கருவிகள் இல்லாத காலத்தே உலகிற்கு அறிவித்த மாபெரும் விஞ்ஞானி மனு!
மனுதர்ம நூல் ஒரு சட்டப் புத்தகம்; அதில் தாவரங்கள் பற்றிய இப்படியொரு விஷயம் இருப்பது வியக்கத்தக்கது!
அதற்கு முன்னர் தாவரங்களை, பூக்கும் தாவரம், பூக்காத தாவரம், கொடிகள், புல் வகைகள் என்றெல்லாம் பிரிக்கிறார். தாவரங்களை வகைப்படுத்துவது காலம்தோறும் மாறிவருகிறது. லின்னேயஸ் என்பவர் தாவரங்களை குடும்பங்களாகவும் உப குடும்பங்களாகவும் அதில் தனித்தனி பெயர் உடையனவாகவும் (Family, Genus, Species) பிரித்ததை உலகம் இப்போது பின்பற்றி வருகிறது. இவை எல்லாம் 300, 400 வருடங்களுக்குள் வந்தவை. அதற்கு முன்னரே மனு முதலானோர் தாவரம்,பி ராணிகளை வகைப்படுத்த முயன்றதே அவர்களின் அறிவியல் அணுகுமுறைக்குச் சான்று பகர்வனவாக உள்ளன!
உயிருள்ளவைகளை நான்கு வகையாக பிரிக்கிறார் மனு. விலங்கியல் தாவரவியலைப் பொருத்த பொதுவான பிரிவினை இது.
(1)ஸ்வேதஜ= வேர்வையிலிருந்து பிறந்தவை (ஸ்வெட் என்னும் ஆங்கிலச் சொல் ஸ்வேத என்ற சம்ஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்தது; இந்த இடத்தில் ஸ்வேத என்பதை ஆவி, நீராவி என்னும் பொருளுடைத்தாய் உரைகாரர்கள் கருதுவர்),
(2)அண்டஜ (முட்டையிலிருந்து தோன்றுபவை),
(3)ஜராயுஜஹ= கர்ப்பப்பையில் தோன்றுபவை, (4)உத்பீஜ = பூமியிலுள்ள விதையிலிருந்து மேல் நோக்கி எழும் மரம், செடி, கொடி வகையறா.
அந்தக் காலத்தில் இவைகளைப் பிரிக்க வேண்டும் என்று எண்ணி அதை வகைப் படுத்தியதே இவர்கள், கைபர் கணவாய் வழி வத நாடோடிகள் அல்ல, மாபெரும் அறிவு படைத்த உலகத்தின் முதல் அறிவுள்ள குடிமகன்கள் என்பதைக் காட்டும்.
இன்னும் 50 ஆண்டுகளில் நாம் படித்த விலங்கியல் தாவர இயல் நூல்களைக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு புதிய டி,என்.ஏ. பிரிவினை (D N A Classification; Genetic mapping) வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆக, காலம் தோறும் மாறும் விஞ்ஞானத்தை முதலில் துவக்கி வைத்தவர்கள் நாமே. அந்தக் கால மக்களுக்கு எப்படிப் புரிய வைக்க முடியுமோ அந்த மொழியில் எழுதப்பட்டது மானவ தர்ம சாஸ்திரம் எனப்படும் மனு நீதி நூல் என்பதை அறிக; உணர்க; தெளிவு பெறுக.

ஆரிய மாயை- திராவிட மாயை
கீழேயுள்ள ஸ்லோகங்களில் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. ஆரிய- திராவிட என்னும் பிரிவினை சங்கத் தமிழ் நூல்களி லோ, சமுத்திரம் போலக் கரை காண முடி யாத அளவுப் பெருகிக் கிடக்கும் சம்ஸ்கிருத நூல்களிலோ எங்கும் இல்லை; ஆனால் மதத்தைப் பரப்பி நாடு பிடிக்க வந்த பிரித்தாளும் சூழ்ச்சியினர் பரப்பிய திராவிடர்- ஆரியர் என்ற புதிய இனப்பாகுபாட்டை நாம் பள்ளிக்கூடத்தில், கல்லூரியில் கற்பித்து வருகிறோம். ஆனால் மனுவோ புற நானூற்றிலும், புராண இதிஹாசஙகளிலும் உள்ள பிரிவை சொல்கிறார். நாகர், கந்தர்வர், யக்ஷர், தேவர், மானுடர் இராக்ஷசர், அசுரர் என்று. இப்படி 18 வகையாகப் பிரித்த பிரிவே நம் இலக்கியத்தில் உள்ளன. அதை விட முக்கியமான உண்மை அசுரர்களும், ராக்ஷஸர்களும், மானுடரும் தேவரும் ஒரே மனுக்குலத்தில் உதித்தவர்கள் என்பதை மனுவே சொல்லும் ஸ்லோகங்களை இங்கே கொடுத்துள்ளேன்.
வெளி நாட்டு “அறிஞர்கள்” (???) ம றைத்து வரும் விஷயம் இது. அவர்களே நம்மை திராவிடர்- ஆரியர் என்று பிரித்ததற்கு தமிழில், சம்ஸ்கிருதத்தில் ஆதாரமே இல்லை.

ஜாதிகள் உண்டு அடி பாப்பா!
ஜாதிகள் உண்டு என்பதை ரிக்வேதத்தில் உள்ள புருஷசூக்தம் (10-90) தெளிவாகச் சொல்லுகிறது; ஆனால் அவை பகவத் கீதை சொல்லுவது போல குணத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்டவை. ஆதிகாலத்தில் அப்படித்தான் இருந்தது. நாலு வகைச் சாதிகளை 4000 வகைச் சாதிகளாகப் பிரித்ததும் நாம்தான். புராண, இதிஹாசங்களில் வேதத்தில் ஆதாரம் இல்லை. அறிவு உடைய எல்லோரும் பிராம ணர். நாட்டைக் காப்போர் எல்லோரும் க்ஷத்ரியர்; வணிகம் செய்வோர் எல்லோரும் வைஸ்யர்; உடலுழைப்பு செய்வோர் அனைவரும் சூத்திரர். இந்த தொழில் முறைப் பாகுபாட்டை பல்லாயிரம் ஜாதிகளாகப் பிரித்தது நாம்தான்.
அதிலும் “இந்தியாவில் இரு வகை மக்களே உண்டு ஒன்று பிராமணர்; மற்றொன்று சூத்திரர்; அவர்களில் பிராமணர் எல்லோரும் ஆரியர்; மற்ற எல்லோரும் சூத்திரர்” என்று பிரித்தது வெளி நாட்டு பிரித்தாளும் சூழ்ச்சியினர்; அவர்களுக்குத் துணை போனவர்கள் நம்மூர் அரசியல்வாதிகள்; மார்கஸீய வாதிகள்!
சுருங்கச் சொன்னால், மக்கள் இனம் ஒன்று- வசுதைவ குடும்பகம்- யாதும் ஊர், யாவரும் கேளிர் – என்பதை மனு தர்மத்தின் முதல் அத்தியாயத்திலேயே காண்கிறோம்.
கால்டுவெல்களையும் மாக்ஸ்முல்லர்களையும் படிப்பதற்கு முன்னால் மனுவைப் படித்து, ‘கொள்ளுன எது?, தள்ளுவன எது?’ என்பதை நாமே கற்கலாம்; காட்டலாம்.
மாநிலத்துக்கு மாநிலம் வேறு வேறு சட்டம்; நாட்டுக்கு நாடு வேறு சட்டம் உள்ள விநோத உலகத்தில் மனுவை மட்டும் கோபிப்பதில் பொருள் இல்லை.

முதல் அத்தியாயம்
ஸ்லோகம் 31
உலகம் வளர்ச்சி அடைவதற்காக தன்னுடைய முகத்திலிருந்து பிராமணனையும், தோளிலிருந்து க்ஷத்ரியனையும், தொடையிலிருந்து வைஸ்யனையும், காலிலிருந்து சூத்திரனையும் உண்டு பண்ணினார்.
- அந்த பிரம்மாவானவர் தனது உடலை இரண்டு துண்டமாக்கி, ஒன்றை ஆணாகவும், ஒன்றைப் பெண்ணாகவும் உண்டாக்கினார். அந்த ஆண் பெண் சேர்க்கையாலே விராட புருஷனை படைத்தார்.
33.அந்த விராட புருஷன் தவம் செய்து, இந்த உலகத்தைச் சிறப்பாக படைப்பதற்காக யார் ஒருவனை உருவாக்கினாரோ அவர்தான் நான் (மனு)
34.நானும் அனேக உயிரினங்களைத் தோற்றுவிப்பதற்காக, செயற்கரிய தவம் செய்து, பிராணிகளைப் படைக்கும் வல்லமை படைத்த பத்து மகரிஷிகளைப் படைத்தேன். அவர்கள் பிரஜாபதிகள் ஆவர்.
- அந்த ரிஷிகளின் பெயர்கள்:- மரீசி, அத்ரி, அங்கீரஸ், புலஸ்தியர், புலகன், கிரது, பிரசேதஸ், வசிஷ்டன், பிருகு, நாரதன்
36.மிகுந்த ஒளிபடைத்த இந்தப் பிரஜாபதிகள் ஏழு மனுக்களையும், தேவர்களையும், சுவர்க்காதி லோகங்களையும், காந்தர்வர்களையும், தவ சீலம் உடைய மஹா முனிவர்களையும் உண்டாக்கினார்கள்
37.இந்தப் பிரஜாபதிகள் யக்ஷர்கள், வாசுகி முதலிய நாகர்கள், ரத்தவெறி கொண்ட காட்டுமிராண்டிகள், சர்ப்பங்கள், கருடன், இராக்ஷசர்கள், பைசாசர், அப்சரஸ்கள், அசுரர்கள், பறவைகள், பித்ருக்கள்
38.மின்னல், இடி, மேகம், இந்திர தனுசு எனப்படும் வானவில், தூமகேது (வால் நடசத்திரம்), பூகம்பம் (நில அதிர்ச்சி) முதலான இயற்கைச் சீற்றங்கள்

39.கின்னரர், வானரர் , மீன்கள், பலவகைப் பட்சிகள், பசுக்கள், மிருகங்கள், மனிதர்கள், இரண்டு பக்கத்தில் பற்களுள்ள புலி முதலிய விலங்குகள்.
40.புழு, உலண்டுப்பூச்சி, விளக்கணைப் பூச்சி (விட்டில்), எட்டுக்கால் பூச்சி (சிலந்தி) ஈ, முகடு, கொசு, பலவகையான மரங்கள்
- இவை அனைத்தையும் பிரஜாபதிகள், என்னுடைய கட்டளைப்படி, தவம் செய்து, பிராணிகளின் தொழிலுக்கு ஏற்ப, தாவர, ஜங்கமத்தை (அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள்) உருவாக்கினர்.
42அடுத்ததாக பிராணிகளின் உற்பத்தி வரிசையும் அவற்றின் செய்கைகளையும் சொல்கிறேன்
43.பசுக்கள், மிருகங்கள், இரு புறம் பற்களை உடைய புலி முதலிய விலங்குகள், இராக்கதர் (ராக்ஷஸர்), பைசாசர் (பிசாசு), மனிதர்கள் ஆகியோர் சராயு என்னும் கர்ப்பப் பையில் உண்டாகி கர்ப்பப் பையுடன் பிறக்கின்றனர்.
44.பலவித பறவைகளும், நீரில் வாழும் முதலை, ஆமை, மீன், கரையில் வசிக்கும் ஓணான் ஆகியனவும் முட்டையில் இருந்து பிறக்கின்றன
45.கொசு, சிலந்தி, ஈ, மோட்டுப் பூச்சிகள் இவை புழுக்கதால், வேர்வையால் உண்டாகின்றன. இவைகளைப் போன்ற புழு, எறும்பு முதலியன உஷ்ணத்தால் உண்டாகின்றன.
- மரங்கள் விதைகளால், கிளைகளால் பூமியைப் பிளந்து மேல் நோக்கி வளர்கின்றன. இந்த மரங்களில் இருந்து வேறுபட்ட புடலை முதலிய கொடி, நெல் முதலிய பயிர்களும் பலன் கொடுத்தவுடன் அழிந்து போகின்றன.
- பூவாமல் காய்க்கும் அத்தி முதலிய மரங்களுக்கு வனஸ்பதி என்று பெயர். பூக்கும் மற்றுப் பூத்துக் காய்க்கும் மரங்கள் என மரங்கள் இரண்டு வகைப்படும்.
(பூவாது காய்ப்பன வனஸ்பதி= காட்டு ராஜாக்கள்; பூத்துக் காய்ப்பன = சாதரண மரங்கள்)

48.சில செடிகள் கொத்துக் கொத்தாயும் சில செடிகள் தூறாகவும் உண்டாகின்றன. புற்கள், கோரைகள், கொடிகள் இவைகள் விதைகளாலும் கொடிகளாலும் உண்டாகின்றன.
49.பாபகர்மத்துக்குக் காரணமாகிய பலவகை உருவம் படைத்த, தமோ குணத்தினால் சூழப்பட்ட இந்த தாவர ஜாதிகளுக்கு உள்ளறிவும் சுக துக்கங்களும் உண்டு.
50.பிரம்ம உற்பத்தி முதல், மரங்களின் உற்பத்தி வரை கோரமான சம்சார சாகரத்தின் உற்பத்தி சொல்லப்பட்டது.

- But for the sake of the prosperity of the worlds he caused the Brahmana, the Kshatriya, the Vaisya, and the Sudra to proceed from his mouth, his arms, his thighs, and his feet.
- Dividing his own body, the Lord became half male and half female; with that (female) he produced Virag.
- But know me, O most holy among the twice-born, to be the creator of this whole (world), whom that male, Virag, himself produced, having performed austerities.
- Then I, desiring to produce created beings, performed very difficult austerities, and (thereby) called into existence ten great sages, lords of created beings,
- Mariki, Atri, Angiras, Pulastya, Pulaha, Kratu, Praketas, Vasishtha, Bhrigu, and Narada.
- They created seven other Manus possessing great brilliancy, gods and classes of gods and great sages of measureless power,
- Yakshas (the servants of Kubera, the demons called) Rakshasas and Pisakas, Gandharvas (or musicians of the gods), Apsarases (the dancers of the gods), Asuras, (the snake-deities called) Nagas and Sarpas, (the bird-deities called) Suparnas and the several classes of the manes,
- Lightnings, thunderbolts and clouds, imperfect (rohita) and perfect rainbows, falling meteors, supernatural noises, comets, and heavenly lights of many kinds,
39 (Horse-faced) Kinnaras, monkeys, fishes, birds of many kinds, cattle, deer, men, and carnivorous beasts with two rows of teeth,

- Small and large worms and beetles, moths, lice, flies, bugs, all stinging and biting insects and the several kinds of immovable things.
- Thus was this whole (creation), both the immovable and the movable, produced by those high-minded ones by means of austerities and at my command, (each being) according to (the results of) its actions.
- But whatever act is stated (to belong) to (each of) those creatures here below, that I will truly declare to you, as well as their order in respect to birth.
- Cattle, deer, carnivorous beasts with two rows of teeth, Rakshasas, Pisakas, and men are born from the womb.
- From eggs are born birds, snakes, crocodiles, fishes, tortoises, as well as similar terrestrial and aquatic (animals).
- From hot moisture spring stinging and biting insects, lice, flies, bugs, and all other (creatures) of that kind which are produced by heat.
- All plants, propagated by seed or by slips, grow from shoots; annual plants (are those) which, bearing many flowers and fruits, perish after the ripening of their fruit;
- (Those trees) which bear fruit without flowers are called vanaspati (lords of the forest); but those which bear both flowers and fruit are called vriksha.
- But the various plants with many stalks, growing from one or several roots, the different kinds of grasses, the climbing plants and the creepers spring all from seed or from slips.
- These (plants) which are surrounded by multiform Darkness, the result of their acts (in former existences), possess internal consciousness and experience pleasure and pain.
- The (various) conditions in this always terrible and constantly changing circle of births and deaths to which created beings are subject, are stated to begin with (that of) Brahman, and to end with (that of) these (just mentioned immovable creatures).

31 to 50
ं१।३१अ/ लोकानां तु विवृद्ध्यर्थं मुखबाहूरुपादतः ।
ं१।३१च्/ ब्राह्मणं क्षत्रियं वैश्यं शूद्रं च निरवर्तयत् ॥ 31॥
ं१।३२अ/ द्विधा कृत्वाऽत्मनो देहमर्धेन पुरुषोऽभवत् ।
ं१।३२च्/ अर्धेन नारी तस्यां स विराजमसृजत् प्रभुः ॥ 32॥
ं१।३३अ/ तपस्तप्त्वाऽसृजद् यं तु स स्वयं पुरुषो विराट् ।
ं१।३३च्/ तं मां वित्तास्य सर्वस्य स्रष्टारं द्विजसत्तमाः ॥ Bछ्.Sछ्॥
ं१।३४अ/ अहं प्रजाः सिसृक्षुस्तु तपस्तप्त्वा सुदुश्चरम् ।
ं१।३४च्/ पतीन् प्रजानामसृजं महर्षीनादितो दश ॥Bछ्.Sछ्॥
ं१।३५अ/ मरीचिमत्र्यङ्गिरसौ पुलस्त्यं पुलहं क्रतुम् ।
ं१।३५च्/ प्रचेतसं वसिष्ठं च भृगुं नारदमेव च ॥ Bछ्.Sछ्॥
ं१।३६अ/ एते मनूंस्तु सप्तान् यानसृजन् भूरितेजसः ।
ं१।३६च्/ देवान् देवनिकायांश्च महर्षींश्चामितोजसः ॥ 36॥

ं१।३७अ/ यक्षरक्षः पिशाचांश्च गन्धर्वाप्सरसोऽसुरान् ।
ं१।३७च्/ नागान् सर्पान् सुपर्णांश्च पितॄणांश्च पृथग्गणम् ॥ Bछ्.Sछ्॥ %[ं।
ं१।३८अ/ विद्युतोऽशनिमेघांश्च रोहितैन्द्रधनूंषि च ।
ं१।३८च्/ उल्कानिर्घातकेतूंश्च ज्योतींष्युच्चावचानि च ॥ Bछ्.Sछ्॥
ं१।३९अ/ किन्नरान् वानरान् मत्स्यान् विविधांश्च विहङ्गमान् ।
ं१।३९च्/ पशून् मृगान् मनुष्यांश्च व्यालांश्चोभयतोदतः ॥ Bछ्.Sछ्॥
ं१।४०अ/ कृमिकीटपतङ्गांश्च यूकामक्षिकमत्कुणम् ।
ं१।४०च्/ सर्वं च दंशमशकं स्थावरं च पृथग्विधम् ॥ 40॥
ं१।४१अ/ एवमेतैरिदं सर्वं मन्नियोगान् महात्मभिः ।
ं१।४१च्/ यथाकर्म तपोयोगात् सृष्टं स्थावरजङ्गमम् ॥ Bछ्.Sछ्॥

ं१।४२अ/ येषां तु यादृशं कर्म भूतानामिह कीर्तितम् ।
ं१।४२च्/ तत् तथा वोऽभिधास्यामि क्रमयोगं च जन्मनि ॥ Bछ्.Sछ्॥
ं१।४३अ/ पशवश्च मृगाश्चैव व्यालाश्चोभयतोदतः ।
ं१।४३च्/ रक्षांसि च पिशाचाश्च मनुष्याश्च जरायुजाः ॥ Bछ्.Sछ्॥ %[ंंअनुषाश्च ]
ं१।४४अ/ अण्डजाः पक्षिणः सर्पा नक्रा मत्स्याश्च कच्छपाः ।
ं१।४४च्/ यानि चैवं।प्रकाराणि स्थलजान्यौदकानि च ॥ Bछ्.Sछ्॥
ं१।४५अ/ स्वेदजं दंशमशकं यूकामक्षिकमत्कुणम् ।
ं१।४५च्/ ऊष्मणश्चोपजायन्ते यच्चान्यत् किं चिदीदृशम् ॥ Bछ्.Sछ्॥
ं१।४६अ/ उद्भिज्जाः स्थावराः सर्वे बीजकाण्डप्ररोहिणः ।
ं१।४६च्/ ओषध्यः फलपाकान्ता बहुपुष्पफलोपगाः ॥ Bछ्.Sछ्॥
ं१।४७अ/ अपुष्पाः फलवन्तो ये ते वनस्पतयः स्मृताः ।
ं१।४७च्/ पुष्पिणः फलिनश्चैव वृक्षास्तूभयतः स्मृताः ॥ Bछ्.Sछ्॥
ं१।४८अ/ गुच्छगुल्मं तु विविधं तथैव तृणजातयः ।
ं१।४८च्/ बीजकाण्डरुहाण्येव प्रताना वल्ल्य एव च ॥ Bछ्.Sछ्॥
तमसा बहुरूपेण वेष्टिताः कर्महेतुना ।
अन्तस्संज्ञा भवन्त्येते सुखदुःखसमन्विताः ॥ 49॥
एतदन्तास्तु गतयो ब्रह्माद्याः समुदाहृताः ।
घोरेऽस्मिन् भूतसंसारे नित्यं सततयायिनि ॥ 50॥

Tags: மனுநீதி நூல் -4, பிராணிகள் தாவரங்கள் பிரிவு, தாவரவியல்,விலங்கியல் அறிவு, திராவிடர், ஆரியர் பிரிவினை
–Subham–
You must be logged in to post a comment.