ரிக் வேதத்தில் தமிழ் வேதம் திருக்குறள் (Post No.9806)

IMAGE OF VALLUVAR

Research Article WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9806

Date uploaded in London –2 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நட்புறவு பற்றியும், விருந்தோம்பல் பற்றியும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எவரேனும் பாட்டு பாடியிருப்பார்களா, அதுவும் ரிக்வேதமும் தமிழ் வேதமும் பாடிய அளவுக்குப் படியிருப்பார்களா என்பது சந்தேகமே . நட்பு பற்றி  திருக்குறளில் திருவள்ளுவர் பல அதிகாரங்கள் பாடி இருக்கிறார். ரிக் வேதத்திலோ துதிக்கு துதி நண்பன், நட்புறவு (Friend and Friendship) என்ற சொற்கள் வருகின்றன. அதே போல விருந்தோம்பல் (Hospitality) பற்றியும் இந்தியாவில் மட்டுமே பாடல்கள் இருக்கும். 2300 ஆண்டுகளுக்கு முன்னரே அசோகன் கல்வெட்டுகள் மூலம் நெடுஞ் சாலை நெடுகிலும் சத்திரங்களும் சாப்பாட்டு (Boarding and Lodging) வசதிகளும் இருந்ததை அறிகிறோம்.

ரிக் வேதத்தில் பத்து மண்டலங்களில்  ஆயிரத்துக்கும் மேலான துதிகள் உள்ளன. அவற்றில் 10,000 மந்திரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு குறள் போல  வரிகள் உள்ளவை. சில குறள்களையும் மந்திரங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்

சம்ஸ்க்ருதத்தில் வேதம் இருந்தது. அது தமிழில் இல்லையே என்ற குறையை தமிழ் மறை, தமிழ் வேதம் நீக்கிவிட்டது என்று திருவள்ளுவ மாலையில் ஒருவர் தமிழ் வேதத்தைப் புகழ்ந்துரைத்துள்ளார்

ரிக்.1-5-1

ரிஷி மதுச் சந்திர வைச்வாமித்திரன்  தன்னுடைய சகாக்களை நண்பர்களே! (Comrades)  இங்கே வாருங்கள், உட்காருங்கள் இந்திரனைப் பாடுங்கள் என்று அழைக்கிறார்.

1-6-9

அதே ரிஷி வானுறையும் தெய்வங்கள் என்கிறார். நாம் வள்ளுவர் குறளி ல் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள்  வைக்கப்படும் என்கிறார்

இந்திரனின் தோழர்களான மருத் தேவர்களை அழைக்கும் பொழுது  “வானிலிருந்து அல்லது சொர்க்கத்திலிருந்து வாருங்கள்) என்கிறார் .

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

(அதிகாரம்: இல்வாழ்க்கை குறள் எண்:50 )

xxx

1-8-8

மற்றவர்களுக்கு உதவுவோரை ஊரின் நடுவிலுள்ள பழுத்த மரத்துடன் ஒப்பிடுகிறார் வள்ளுவர் . ரிஷி மதுச் சந்தஸும் அதையே சொல்கிறார்.

“தொழுபவனுக்கு இந்திரனுடைய மொழிகள் சத்தியமாகின்றன . அவை பலவித நன்மைகளைத் தரும்.பழுத்த

பழங்களைத் தாங்கும் மரங்கள் போல இருக்கின்றன.”

இதைச் சொல்லும் கவிஞரின் பெயரை தமிழில் மொழி பெயர்த்தால் தேன் கவி (Mr Honey Poem) என்று அமையும்! என்ன பொருத்தம் பாருங்கள்!!

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின் (குறள் 216)

[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]

xxxx

1-9-8

தோன்றிற் புகழொடு தோன்றுக என்கிறார் வள்ளுவர். அதாவது புகழ் தரும் செய்கைகளைச் செய்து, உலகை விட்டு நீங்கிய பின்னரும் புகழ் தாங்கிய பெயரை விட்டுச் செல்ல வேண்டும் என்பது வள்ளுவனின் கொள்கை.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று. ( குறள் எண் – 236)

ரிஷி மதுச் சந்தஸும் அதையே விரும்புகிறார்.

“இந்திரனே , சகடங்களில் ஏந்தி வரப்படும் உணவுகளையும் ஆயிரம் வழிகளால் வரும் புகழையும் எங்களுக்கு அளிக்கவும்”.

xxx

1-10-9

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.(குறள் 788)

என்கிறார் வள்ளுவர்.

மதுச்சந்தஸ் சொல்கிறார்

“அனைத்தையும் கேட்பவனே, என் அழைப்புக்கு உடனே செவிகொடுக்கவும். என்னுடைய இந்த துதியை நண்பனின் மொழிகளைப் போல அருகில் வைத்துக்கொள்”.

Xxx

1-16-5

மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் என்று ஒரு குறளில் வள்ளுவர் பாடுகிறார். இப்படி மயிரை இழந்தவுடன் இறக்கும் பிராணி இப்போது எதுவும் இல்லை. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்போர் சடை எருமை எனப் பொருள்படும் YAK யாக் என்னும் மிருகத்தை குறிப்பிடுகின்றனர்.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்

(அதிகாரம்:மானம் குறள் எண்:969)

இதே பொருளும், குழப்பமும் ரிக் வேதத்திலும் உளது

இதை பாடியவர் மேதாதிதி காண்வர் .

அவரும் கெளரா (கவரி) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

இதை மொழி பெயர்ப்போர் ‘தாகம் கொண்ட மான்போல’, ‘எருமை போல’ என்று மொழிபெயர்ப்பார்கள்.

கவரி வீசுதல் என்போம். அதிலுள்ள முடி வெண்மையாக இருக்கும்.  கெளரா என்றாலும் வெண்மையே.

கவரி முடி என்பதில் இருந்துதான் பெண்கள் அணியும் சவுரி முடியும் வந்ததோ?

Xxx

1-20-8

மனிதன் தெய்வமாகலாம் என்ற கருத்தை வள்ளுவர் ஒப்புக்கொள்கிறார்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும். (குறள் 50)

ரிஷி மேதாதிதி காண்வன்  ரிபுக்கள் என்னும் தேவர்களை போற்றிப் பாடுகையில் சொல்கிறார்

“வேள்வியைத் தங்கும் ரிபுக்கள் (Rhbus) மானிட வடிவங்களில் இருந்தார்கள் அவர்கள் தங்கள் நற் செயல்களால் உயர்ந்து தேவர்களோடு கிடைப்பதை பகிர்ந்து கொண்டார்கள்”.

xxx

1-23-19

நீர் = அமிர்தம்

“நீரில் அமிர்தம் உண்டு. நீரில் மருந்து இருக்கிறது. ஆகையால் அதை போற்றுங்கள்” — ரிஷி மேதாதிதி காண்வன் 

1-23-20

“நீரே, நான் நீண்ட காலம் சூரியனைக் காண, என் உடலில் எல்லா நோய் நீக்கும் மருந்துகளையும் நிரப்புங்கள் “–ரிஷி மேதாதிதி காண்வன் 

இவ்வாறு ரிக் வேதம் ஆறு மந்திரங்களில் நீரைப் போற்றுவதைக் கண்டு, படித்துத்தான் திருவள்ளுவரும் 10 குறள்களை வான் சிறப்பு என்ற அ திகாரத்தில் பாடினாரோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்

(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:19)

வான் நின்று உலகம் வழங்கி  வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. (குறள் எண்:11)

ஒரு குறளில் வேதம் பயன்படுத்தும் அமிர்தம் என்ற சொல் வருவதும், பகவத் கீதையில் வரும் தானம், தவம் என்ற மேலும் இரண்டு ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இன்னொரு குறளில் வருவதும் என் கருத்துக்குச் சான்று பகரும்.

–தொடரும் ………………………………

IMAGE OF VEDA VYASA

tags- ரிக் வேதம், தமிழ்வேதம், திருக்குறள் , ரிஷி, மதுச்சந்தஸ் , மேதாதிதி காண்வன்

திருக்குறளில் அந்தணரும் வேதமும்! (Post No.9542)

Hindu Saivite Valluvar

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9542

Date uploaded in London – –  –28 APRIL  2021   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருக்குறளில் அந்தணரும் வேதமும்!

ச.நாகராஜன்

Hindu Valluvar from Englishman’s book

உலகம் முழுமைக்கும் வாழ்வாங்கு வாழும் வழியைச் சொல்லும் திருக்குறள் இந்து மதத்தின் அற நூலே ஆகும். அது இந்து மதம் பெரிதும் போற்றும் வேதத்தைப் போற்றும் நூல். ஆகவே வேதம் மற்றும் இந்து மதத்தின் கொள்கைகளான வேதமே அறத்தின் அடிப்படை, புனர்ஜென்மம் உண்டு போன்றவற்றை மறுக்கும் பகுத்தறிவுவாதிகளும் புனர்ஜென்மத்தை மறுக்கும் செமிடிக் மதங்களைச் சார்ந்தோரும் அதைத் தங்களுடையது என்று சொல்வது முடியாத காரியம் – உண்மையின் அடிப்படையில் – திருக்குறளின் அடிப்படையில்!

அந்தணர் என்ற சொல்லை இரு முறையும் அந்தணன் என்ற சொல்லை ஒரு முறையும் 1330 குறள்களில் திருவள்ளுவர் கையாளுகிறார்.

குறள் எண் 8 – அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

                பிறவாழி நீந்தல் அரிது

அறவாழி அந்தணன் என்பது இங்கு இறைவனைக் குறிக்கிறது. அவனது தாளைப் பணியாதார்க்கு பிறவிக் கடலைக் கடப்பது அரிது.

குறள் எண் 30 – அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்

                 செந்தண்மை பூண்டொழுகலான்

எல்லா உயிர்களிடத்தும் செம்மையான அருள் கொண்டு இருக்கும் அறநெறி வழி நிற்போர் அந்தணர் எனப்படுவர்.

குறள் எண் 543 – அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

                  நின்றது மன்னவன் கோல்

அந்தணர் போற்றும் வேதத்திற்கும் அறத்திற்கும் அடிப்படையாக நின்று அமைவது மன்னவனின் செங்கோலே!

‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல்என்ற மணிமேகலை வரிகளை பரிமேலழகர் தனது உரையில் சுட்டிக் காட்டுகிறார்.

இது தவிர பார்ப்பார் கண் என்ற சொல்லை ஒரு இடத்தில் -குறள் எண் 285இல் – எதிர்பார்ப்பவரிடத்தில் –  என்ற பொருளில் பயன்படுத்துகிறார்.

அருள் கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார் கண்

அடுத்து குறள் எண் 134. இதில் பார்ப்பான் என்ற சொல் பார்ப்பனன் என்ற பொருளிலும் ஒத்துக் கொளல் என்பது வேதம் ஓதுதல் என்ற பொருளிலும் மிகத் தெளிவாக அமைகிறது.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

கற்ற வேதத்தை ஒருவேளை மறந்து விட்டான் என்றாலும் கூட அதை மீண்டும் ஓதிக் கொள்ளலாகும். ஆனால் பார்ப்பானின் பிறப்பு ஒழுக்கம் குன்றினால் கெட்டு விடும். இங்கு பரிமேலழகர் தனது உரையில், “அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும் என்கிறார்.

ஆக வேதம் ஓதுதலை மறப்பினும் கூட பிறப்பு ஒழுக்கத்திலிருந்து ஒரு நாளும் ஒரு பார்ப்பான் விலகக் கூடாது என்று வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

அடுத்து மறைமொழி என்று வேதத்தை ஒரு குறளில் குறிப்பிடுகிறார் வள்ளுவர். குறள் எண் : 28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்

Brahmin Valluvar with Punul/ Sacred thread

சான்றோரின் பெருமையை நிலவுலகில் அவரால் கூறப்படும் மறைமொழி காட்டி விடும். மறைமொழி என்பது வேதம்.

ஆனால் சிலரோ இதைத் திரித்து பழமொழி என்கின்றனர். பழமொழியை யார் வேண்டுமானாலும் கூறலாம் என்பதால் மறை மொழி என்பதற்கு வேதம் என்ற பொருளே சிறந்தது.

மணக்குடவர் தன் உரையில் “ கல்வி உடைய மாந்தரது பெருமையை அவரால் சொல்லப்பட்டு நிலத்தின் கண் வழங்கும் மந்திரங்களே காட்டும் என்கிறார்.

பரிமேலழகரும் மந்திரங்கள் என்ற பொருளையே கூறுகிறார். ஆக மறைமொழி என்பது வேத மந்திரங்கள் என்பது தெளிவாகிறது.

அடுத்து மறை என்ற சொல்லை ஏழு இடங்களில் வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

குறள் எண் 847இல் அருமறை சோரும் அறிவிலான் என்று வள்ளுவர் கூறுவதற்கு பொருளாக பரிமேலழகர் “பெருதற்கு அரிய உபதேசப் பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன் என்கிறார். ஆக இங்கு மறையை உபதேசப் பொருள் என்றே கொள்ளலாம்.

குறள் எண் 590இலும் 695இலும் மறை என்பது ரகசியம் என்ற பொருளில் வருகிறது. குறள் எண் 1076இலும் “தாம் கேட்ட மறை என்பதற்கு தாம் கேட்ட இரகசியங்களை எல்லோருக்கும் சொல்லும் கயவரை, ‘பறை என்கிறார்.

குறள் எண் 1138இலும்1254இலும் ‘மறை இறந்து மன்று படும் காமமானது மறைத்திருத்தலையும் மீறி ஊர் உலகிற்கு வெளிப்படும் என்கிறார்.

குறள் எண்1180இலும் (காமத்துப் பால் கண்விதுப்பழிதல் அதிகாரத்தில்) ‘மறைபெறல் என்ற வார்த்தை மறைத்து வைத்திருத்தல் என்ற பொருளில் வருகிறது.

அடுத்து அவி என்ற வார்த்தையை இரு இடங்களில் வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

குறள் எண் : 259

அவி சொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று

வேள்வித் தீயில் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்வதை விட ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

அவி என்பது நெய் முதலிய வேள்வியில் இடுவனவாம். அந்த வேள்வியினால் வரும் பயனை விட இந்த விரதத்தால் வரும் பயன் பெரிது என்பது

பரிமேலழகர் உரை.

இன்னொரு குறள் : எண் 413

செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின்                     ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து

இந்த பூமியில் செவி உணவாகிய கேள்வியினை உடையவர்கள் அவியை உணவாகக் கொண்ட ஆன்றாரோடு – தேவர்களோடு – ஒப்பாவார்.

அறிவால் நிறைந்தவர் என்பதால் ஆன்றார்; துன்பம் அறியாதவர் என்பதால் தேவர் – இது பரிமேலழகர் உரை.

(தேவரை மனம் போன போக்கில் நடக்கும் கயவரோடு ஒப்பிடும் ஒரு குறளும் உண்டு. குறள் எண் 1073 – “தேவர் அனையர் கயவர்!”)

ஆக திருவள்ளுவர் காட்டும் சமுதாயம் வேதம் நிறைந்த தமிழ்நாடு என்பதை அறிகிறோம். அதில் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றாமல் வாழ வேண்டும் என்று வள்ளுவர் அறிவுறுத்துவதைக் காண்கிறோம். அந்தணர் என்போர் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் அருளாளர் என்பதையும் அறிகிறோம்.

வேள்வி, அவி சொரிதல்,  ஆகிய வேத கால பழக்கங்களையும் தேவர் பற்றியும் கூட வள்ளுவர் குறிப்பிடுவதையும் பார்க்கிறோம்.

வள்ளுவர் பாரதீய பண்பாட்டின் அடிப்படையில் குறளைப் படைத்திருக்கிறார் என்பதற்கான சான்றுகளில் மேலே காட்டும் குறள்களும் நல்ல சான்றாகும்.

ஒரு சின்ன உண்மை:-

1967க்குப் பின்னர் வந்த திருக்குறளுக்கான உரைகளில் 99 சதவிகித உரைகளை ஒரு நகைச்சுவைக்காகப் படிக்கலாமே தவிர, பொருள் விளங்கிக் கொள்ளப் படிக்கக் கூடாது. எப்படி எல்லாம் வள்ளுவரைத் திரிக்கலாம் என்பதை “கயிறு திரித்துப் பழக்கப்பட்ட “உ.பி.க்களின் உரைகளிலும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உ.பி.களுக்கு ஜால்ரா போடும் “தமிழ் அறிஞர்களின் உரைகள் மற்றும் கட்டுரைகளிலும் கண்டு திடுக்கிடலாம்!

வள்ளுவரை இவர்களிடமிருந்து காப்பாற்றுவோம் – நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள!

***

Tamil Valluvar

tags– அந்தணர், அந்தணன், மறைமொழி, பார்ப்பான், திருக்குறள்

கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவுகள் திருக்குறளைப் படிக்கலாமா? – 2 (Post.9434)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9434

Date uploaded in London – –  29 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவுகள் திருக்குறளைப் படிக்கலாமா? – 2

ச.நாகராஜன்

திரு எனப்படும் லக்ஷ்மி தேவி

குறள் எண்கள் 179, 519, 617, 920

அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்ச் செரும்

திறன் அறிந்தாங்கே திரு   (குறள் 179)

அற நெறி இதுவே என்று அறிந்து பிறர் பொருளை கவர நினைக்காதவர்களிடம் தானே சென்று சேர்வாள் திரு என்னும் லக்ஷ்மி தேவி.

வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக

நினைப்பானை நீங்கும் திரு  (குறள் 519)

தான் மேற்கொண்ட வினையைக் கண்ணும் கருத்துமாகச் செய்யும் ஒருவனது நட்பை மதிக்காது வெறு விதமாக நினைக்கும் தலைவனை விட்டுத் தாமாகவே திருமகள் நீங்கி விடுவாள்.

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளாள் தாமரையினாள்  (குறள் 617)

தாமரையினாள் என்று அழகுற திருமகளைக் குறிக்கிறார் வள்ளுவர். அவளது அக்காவான முகடி என்னும் மூதேவியையும் இக்குறளில் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

ஒருவனது சோம்பலிலே தான் மூதேவி (மாமுகடி – கரிய மூதேவி) வாழ்கிறாள். முயற்சி உடையவனிடத்தில் தாமரை உறையும் திருமகள் வாழ்கிறாள்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திரு நீக்கப் பட்டார் தொடர்பு (குறள் 920)

இருமனப் பெண்டிர் என்றால்  பொது மகளிர் – வேசிகள்!  பொது மகளிர், கள், சூது ஆகிய இந்த  மூன்றும் திருமகளால் கைவிடப்பட்டாரின்  தொடர்பு ஆகும்.

மூதேவி

குறள் எண்கள் 617, 936

குறள் 617ஐ மேலே கண்டோம்.

அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூதென்னும்

முகடியால்  மூடப் பட்டார்

சூது என்னும் மூதேவியால் விழுங்கப்பட்டவர்கள் வயிறு நிறைய உண்ண உணவு இல்லாமல் பல வகைத் துன்பம் அடைந்து வருந்துவர்.

செய்யவளும் தவ்வையும்!

லக்ஷ்மி தேவியியும் மூதேவியையும் சேர்த்து இன்னொரு குறளிலும் வள்ளுவர் குறிப்பிடுகிறார். குறள் எண் 167இல் திருமகளை செய்யவன் என்றும் மூதேவியை திருமகளின் அக்கா எனப் பொருள்படும் தவ்வை என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறார். இங்கு வள்ளுவரின் நகைச்சுவையையும் நாம் காண்கிறோம். தான் வராமல் தன் அக்காளுக்கு வழி விடுகிறாளாம் இலக்குமி!

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.

பொறாமை கொண்ட ஒருவனைத் திருமகளுக்குப் பிடிக்காது. அவள் தனது அக்கா மூதேவியைக் (தவ்வையை) காட்டி விட்டு விலகி விடுவாள்.

இப்படி பல்வேறு குறள்களில் லக்ஷ்மியையும் மூதேவியையும் வள்ளுவர் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

யமன்

குறள் எண்கள் 269, 326, 765, 1083, 1085

யமனை மிகத் தெளிவாகக் கூற்றம் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட்டவர்க்கு   (குறள் 269)

தவ வலிமை பெற்றவருக்கு எமனிடமிருந்து தப்புதலும் கை கூடும்.

உதாரணம் : மார்க்கண்டேயன் கதை

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான்  வாழ்நாள் மேல்

செல்லாது உயிர் உண்ணும் கூற்று  (குறள் 326)

உயிரை உண்ணுபவன் எமன் (கூற்று). கொல்லாமை என்ற பெரும் நோன்பினை மேற்கொண்டவர் மீது அவர் தம் வாழ்நாளை உயிரைக் கவரும்

எமன் கவர்ந்து செல்ல மாட்டான்.

கூற்றுடன் மேல் வரினும் கூடி எதிர் நிற்கும்

ஆற்றல் அதுவே படை    (குறள் 765)

படையின் இலக்கணம் பற்றிச் சொல்லப் புகுந்த வள்ளுவர் எமனே சினந்து வந்து எதிர் நிற்பினும் பயப்படாமல் எதிர் கொள்ளும் ஆற்றல் கொண்டதே படை என்று படைக்கான இலக்கணத்தைக் கூறுகிறார்.

அடுத்து இன்ப இயல் பேச வந்த வள்ளுவர் பிரான் காமத்துப் பாலில் இரு குறள்களில் எமனைக் குறிப்பிடுகிறார்.

பண்டறியேன் கூற்றென்பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கெட்டு (குறள் 1083)

முன்னால் எமனைப் பற்றிச் சொன்ன போதெல்லாம் அவன் யார் என்று அறிய மாட்டேன், அடடா, இப்போது இதோ அறிந்து கொண்டேன், என் முன்னால் நிற்கும் இந்தப் பெண் தகையின்

பொருத்தமான கண்களைக் கண்டு! அவள் பார்வையால் வீழ்ந்தேன் என்கிறான் தலைவன்.

தகை என்பதால் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களை உடைய மங்கைநல்லாள் என்கிறார் வள்ளுவர்.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கம் இம் மூன்றும் உடைத்து   (குறள் 1085)

உயிர் உண்ண வரும் கூற்றமோ – எமன் தானோ?

கூர்மையாகப் பார்ப்பதால் கண்களோ?

மருண்டு பார்ப்பதால் மான் பிணை தானோ?

இந்த மூன்றின் தன்மையையும் இந்தப் பெண்ணின் கண்கள் கொண்டிருக்கின்றனவே!

இப்படி இந்து மத புராண இதிஹாஸங்கள் கூறும் தெய்வங்களைச் சிறப்புற அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பாலிலும் கையாள்வதோடு கடவுள் வாழ்த்தை முகப்பு அதிகாரமாக வைத்துள்ளார் தெய்வப் புலவர் வள்ளுவர்.

இப்போது சொல்லுங்கள், கடவுள் இல்லை என்று சொல்வோருக்கு திருவள்ளுவரின் திருக்குறள் பற்றிப் பேச உரிமை இல்லை அல்லவா!

கடவுளை ஒப்புக் கொண்டால் மட்டுமே ‘அகர முதல என்று ஆரம்பித்து  வள்ளுவரைப் பயில ஆரம்பிக்கலாம். இல்லையேல் ஆத்திகவாதிகளிடம் வள்ளுவரை பத்திரமாக விட்டு விட்டு பகுத்தறிவுகள் செல்லலாம்!

                         ***                     முற்றும்

tags–கடவுள் இல்லை,  திருக்குறள்,     பகுத்தறிவு,

பகுத்தறிவுகள் திருக்குறளைப் படிக்கலாமா? – 1 (Post No.9429)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 9429

Date uploaded in London – –  28 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவுகள் திருக்குறளைப் படிக்கலாமா? – 1

ச.நாகராஜன்

பகுத்தறிவே, பகுத்தறிவே, உனக்கு ஒரு கேள்வி…

‘நீயோ கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்கிறாய். அதே சமயம் திருக்குறள் தமிழனின் தலை சிறந்த நூல், உலகப் பொது நூல் என்கிறாய்’

அது பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இல்லையே?!’ – இது தான் நாம் பகுத்தறிவுகளுக்கு முன் வைக்கும் கேள்வி!

 கடவுளைப் போற்றித் துதிக்கும், அனைவரையும் துதிக்க அறிவுறுத்தும் வள்ளுவரின் திருக்குறளை கடவுள் இல்லை என்று 

tags–கடவுள் இல்லை , பகுத்தறிவுகள்,  திருக்குறள்,

பணம், பணம், பணம்– ரிக் வேதமும் தமிழ் வேதமும் புகழ்மாலை (Post No.4923)

பணம், பணம், பணம்– ரிக் வேதமும் தமிழ் வேதமும் புகழ்மாலை (Post No.4923)


WRITTEN by London Swaminathan 

 

Date: 17 April 2018

 

Time uploaded in London –  13-53 (British Summer Time)

 

Post No. 4923

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

‘பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்’ – என்பது தமிழ்ப் பழமொழி. ரிக் வேதமும், தமிழ் வேதமாகிய திருக்குறளும் பணத்தைப் போற்றுகின்றன. தமிழ் வேதம் என்று திருவள்ளுவமாலை போற்றும் திருக்குறளை விடப் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையுடைத்து ரிக் வேதம் . ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபி சுமார் 6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று வானியல் குறிப்புகளை வைத்து மொழிந்தார். அவர் உரைத்ததை இன்று வரை தகர்த்தார் எவருமிலர். நிற்க

 

பணம் ஜிந்தாபாத்! பணம் வாழ்க! ஏன்? ஏன்?

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகியாங்கு (குறள் 247)

 

பொருள்

பணம் இல்லாதவர்களுக்கு இந்த உலகத்தில் நல்ல வாழ்வு இல்லை; அது போல அருள் (கருணை) இல்லாதவர்களுக்கு சுவர்க்கத்தில் இடம் இல்லை.

 

தொல்காப்பியரும் திருவள்ளுவரும் அதி தீவிர இந்துக்கள். ஆர். எஸ். எஸ்.காரர்கள் தோற்றுப்போவார்கள்!!

 

ஸம்ஸ்க்ருதத்தில் சொன்ன தர்ம, அர்த்த , காம என்ற வரிசையில் தீவிர இந்துத்வவாதியான திருவள்ளுவர் திருக்குறளை அமைத்தார். த்ருண தூமாக்கினி என்னும் தொல்காப்பிய ரிஷியோ இதைப் பல இடங்களில் அதே வரிசையில் செப்பிச் சென்றார்.

 

ஆக பொருள் (பணம்) என்பதன் முக்கியத்துவத்தைத் தொல்காப்பிய ரிஷியும் வள்ளுவ முனியும் வலியுறுத்துவர்.

 

இன்னொரு குறளில் வள்ளுவன் விளம்புவது யாதெனின்,

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்

அற்றார் மற்று ஆதல் அரிது (248)

 

உலகில் பணம் இல்லாதவர்களுக்கு திடீரென லாட்டரிப் பரிசு அடிக்க வாய்ப்பு உண்டு; ஆனால் கருணை இல்லாதவர்களுக்குப் பாவம் சேர்வதால் மீண்டும் வளம்பெறுவது கடினமே.

 

இவ்வாறு பல இடங்களில் வள்ளுவன் நுவல்வதோடு, வாணிகம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை  அப்படியே வள்ளுவத்தில் கையாளுவதால் அவர் நல்ல பிஸினஸ்வாதி என்றும் தெளிவு பெறலாம்.

 

சாணக்கிய நீதியில் சாணக்கியன் பகர்வான்-

 

கெட்ட வழியில் சம்பாதித்த பணம் பத்து ஆண்டுகளுக்கு இருக்கும். பதினோராவது ஆண்டு துவங்கும் போது அடியோடு, வேரோடு பிடுங்கிக் கொண்டு போய்விடும்.

 

செல்வம்  என்பது சக்கரம் போல. அது மாறி மாறி வரும் என்று ரிக் வேதம் புகலும். அதை மேற்கூறிய (248) குறளில் கண்டோம்.

15-6

அன்யாயோபார்ஜிதம் வித்தம் தச வர்ஷாணி திஷ்டதி

ப்ராப்தே சைகாதசே வர்ஷே ஸமூலம் தத் வினஸ்யதி

 

 

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659

 

பிற மக்களை அழ, அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்; உண்மையாக உழைத்து சம்பாதித்த பணம் போனாலும், அதில் ஒரு நன்மையே ஏற்படும்.

இனி ரிக் வேதத்துக்குள் நுழைவோம்:-

 

எங்களுக்குச் செல்வத்தைக் கொடு; அதன் மூலம் தாக்கும் சக்தியையும் கொடு- என்று வேத மந்திரம் சொல்கிறது (ரிக் வேதம் 3-46)

 

பணம் இருந்தால்தான் எதிரிகளைத் தாக்கும் சக்தியும்  கிடைக்கும்.

 

ஆயினும் பணம் என்பது மோட்ச சாம்ராஜ்யத்துக்கு வழி இல்லை என்பதை பிருஹத் ஆரண்யக (பெருங்காட்டு உபநிஷதம்) உபநிஷத் தெளிவுபடுத்தும்:-

‘செல்வம் மூலம் முக்தி பெற முடியாது’- நாலாவது அத்யாயம், ஐந்தாவது பிராஹ்மணம், பிரு. உபநிஷத்.

 

xxx

 

கவச ஐலூஷன் என்ற ரிஷி பாடுகிறார் (10-31-2)

மனிதர்கள் செல்வம் பற்றி சிந்திக்கட்டும்

சட்டபூர்வ வழிகளிலும் வழிபாட்டின் மூலமும் வெல்லட்டும்

நன்கு சிந்தித்து விவேகத்துடன் செயல்படட்டும்

சுய சிந்தனையால் திறமையுடன் செயல்படட்டும்.

 

க்ருத்ஸமடர் என்ற ரிஷியும் செல்வம் பற்றிப் பாடுகிறார் (2-21-6)

 

இந்திரா! எங்களுக்கு நல்ல புதையல்கள் கிடைக்கட்டும்

திறமையான சிந்தனையையும் பிரகாசமான புத்தியையும் கொடு

செல்வம் அதிகரிக்கட்டும், உடல் ஆரோக்கியம் பெருகட்டும்

இனிமையான பேச்சு அமையட்டும், நாட்கள் நல்லதாக இருக்கட்டும்.

 

ஆக செல்வத்திதை வேண்டுவது, உலகின் பழமையான புஸ்தகத்தில் இருப்பது குறிப்பிடத் தக்கது. உலகில் இந்துக்கள் மட்டுமே இப்படி அறம்- பொருள்- இன்பம்- வீடு (மோக்ஷம்) என்று வாழ்க்க்கைக்கு நான்கு தூண்கள் நிறுவியவர்கள். வேறு எந்த ஒரு மதத்திலும் இவ்வாறான தெளிவான வரையறை இல்லை!

 

MY OLD ARTICLES ON THE SAME THEME

பண மோசடி பற்றி வள்ளுவன், சாணக்கியன் …

https://tamilandvedas.com/…/பண-மோசடி-பற்றி-வள…

Translate this page

1 Mar 2018 – அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659. பிற மக்களை அழ,அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்; உண்மையாக உழைத்து சம்பாதித்த பணம் போனாலும், அதில் ஒரு நன்மையே …

பாவங்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பாவங்கள்/

Translate this page

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயன் நற்பாலவை (659). பிறரை அழவைத்து பிடுங்கிய பணம்எல்லாம், உன்னை அழ அழச் செய்துவிட்டு ஓடிப்போகும். உனக்கு பொருளே நஷ்டமானாலும், புண்ணியம் செய்தால் அது பிற்காலத்தில் பலன் தரும். இடுக்கட் படினும் இளிவந்த …

அஜீரணம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/அஜீரணம்/

Translate this page

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயன் நற்பாலவை (659). பிறரை அழவைத்து பிடுங்கிய பணம்எல்லாம், உன்னை அழ அழச் செய்துவிட்டு ஓடிப்போகும். உனக்கு பொருளே நஷ்டமானாலும், புண்ணியம் செய்தால் அது பிற்காலத்தில் பலன் தரும். இடுக்கட் படினும் இளிவந்த …

குறள் உவமை | Tamil and Vedas

https://tamilandvedas.com/category/குறள்-உவமை/

Translate this page

அன்யாயோபார்ஜிதம் வித்தம் தச வர்ஷாணி திஷ்டதி. ப்ராப்தே சைகாதசே வர்ஷே ஸமூலம் தத் வினஸ்யதி.அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659. பிற மக்களை அழ,அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் …

 

–subham–

 

 

அடி, உதை, கொல்! கருமிகளுக்கு எதிராக தமிழ்வேதமும் ரிக் வேதமும்! (4328)

அடி, உதை, கொல்! கருமிகளுக்கு

எதிராக தமிழ்வேதமும் ரிக் வேதமும்! (4328)

 

Written by London Swaminathan

 

Date: 23 October 2017

 

Time uploaded in London- 11-30 am

 

 

Post No. 4328

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

கருமிகளையும் கஞ்சர்களையும் கண்டால் இந்துக்களுக்குப் பிடிக்காது. வேத காலம் முதல் வள்ளுவர் காலம் வரை அவர்களைச் சாடியிருக்கிறார்கள். வள்ளுவர் கருமி களின் தாடையில் குத்துவிட்டு கரும்பு போலக் கசக்கிப் பிழி என்கிறார். வேத கால ரிஷிகள் கருமிகளைத் தீர்த்துக் கட்டுங்கள் என்கின்றனர். செல்வத்தின் பயனே ஈதல் என்கிறார் புறநானூற்றுப் புலவர்.

 

இதோ சில பொன்மொழிகள்:

 

கன்னத்தில் அடி, கையை முறுக்கு, கரும்பு போல நசுக்கு!

 

தமிழ் வேதம் ஆகிய திருக்குறள் சொல்லும்:

 

அதிகாரம் 108, கயவர்கள் பற்றியது. அதில் கஞ்சர்களையும் சேர்த்துத் திட்டுகிறார். கயவர்களின் கன்னத்தில் அடித்து ஆளை நொறுக்கு என்றும் சொல்வான் வள்ளுவன்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்

கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)

 

பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.

 

பரிதியார் உரை:கொறடாலே அடிப்பவர்க்குக் கொடுப்பர்

காளிங்கர் உரை: கொடிறு போல இடுக்கிப் பிடித்து உடம்பை உடைக்கும் திறமையால் கூனிய கையினை உடையோர்.

 

இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ் (1078)

 

ரிக் வேதம் சொல்கிறது:

 

இந்திரனுக்கு பரிசு கொடுக்காதவர்களை அவன் எப்போது தன் காலடியில் களைகளைப் போட்டு மிதிப்பது போல மிதிப்பான்? (1-84-8)

 

(இங்கே இந்திரன் என்பது கடவுள் என்ற பொருளில் வந்துள்ளது; தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் கடவுளுக்கும் அரசனுக்கும் ஒரே சொல்தான்; நிறைய எடுத்துக் காட்டுகள் உண்டு; இதோ ஒன்று மட்டும்; கோ= அரசன், கடவுள்; கோவில்= அரண்மனை, இறைவன் உறைவிடம்; வேதங்களில் இந்திரன் என்பது அரசனையும், இறைவனையும் குறிக்கும்; இன்றுவரை நாம் கூட ராஜேந்திரன், மஹேந்திரன் என்று பெயர் வைத்துக் கொள்கிறோம்; இந்திரன் என்ற பெயர் இல்லாத நாடே மனித குலமே உலகில் கிடையாது. ஆங்கிலத்தில் ANDREW ஆன்ரூ என்பர்; அயிந்திர= அண்டிர= ஆன்ருANDREW; ஆய் அண்டிரன் என்ற தமிழ் மன்னன்= அஜேந்திரன்; எனது பழைய ஆய்வுக் கட்டுரைகளில் மேல் விவரம் காண்க)

கருமிகளிடம் செல்வம் தங்காது/நிலைக்காது–RV 7-32-21

 

கருமிகளைக் கொல்லுங்கள்– 1-184-2

 

கொல்லச் சுரப்பதாம் கீழ் – என்ற வரிகள் மூலம் ரிக் வேத கருத்தை நாலடியாரும் ஆதரிக்கிறது (இரவலர் கன்றாக ஈவர்……..கொல்லச் சுரப்பதாம் கீழ்).

 

தொல்காப்பியரும் கருமிகளைத் திட்டுகிறார்:

கொடுப் போர் ஏத்திக் கொடா அர்ப்பழி த்தலும் -1036

 

MY OLD ARTICLES

வள்ளுவனும் வன்முறையும் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/வள்ளுவனும்-வன்ம… – Translate this page

வள்ளுவனும் வன்முறையும் · வள்ளுவர் சிலை. எழுதியவர் லண்டன் சுவாமிநாதன். ” அன்பென்று கொட்டு முரசே — மக்கள் அத்தனை பேரும் …

 

31 தொல்காப்பியப் பொன்மொழிகள் (Post No.3194). tolkappian-katturai. Written by London swaminathan. Date: 27 September 2016. Time uploaded in London:8-17 AM. Post No.3194. Pictures are taken from various …

 

–SUBHAM—

 

 

திருக்குறளில் பேய் நட்சத்திரம்! ஒரு அதிசயத் தகவல்! (Post No.4151)

Algol is a binary star

Written by London Swaminathan

 

Date: 12 August 2017

 

Time uploaded in London- 6-53 am

 

Post No. 4151

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

 

(என் பிளாக்குகளில் வரும் கட்டுரைகளைப் பயன்படுத்துவோர், எழுதியவர் பெயரையும், பிளாக்கின் பெயரையும் வெட்டாமல் பயன்படுத்தவும்; இதனால் தமிழ் வாழும்; உங்களையும் எவரும் ஏமாற்றமாட்டார்கள்!—London swaminathan)

ஒரு திருக்குறளில் பேய் பற்றிப் பேசுகிறார் திருவள்ளுவர். கடவுளை நம்பாதவன் பேய் என்கிறார். இது எல்லா நூல்களிலும் உள்ள விஷயம்தான். ஆனால் வேறு யாரும் சொல்லாத, ஒரு சுவையான விஷயத்தைச் சொல்லுகிறேன்.

 

 

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் — குறள் 850

 

“உயர்ந்தோர் பலரும் உண்டென்று சொல்லும் பொருளைத், தனது புல்லறிவால் இல்லை என்று மறுப்பவன் இப்பூமியில் காணப்படும்  பேய் என்றே கருதப்படுவான்”.

 

இந்தக் குறளில் ‘அலகை’ என்ற ஒரு சொல் ‘பேய்’ என்ற பொருளில் கையாளப்படுகிறது. சங்க இலக்கியத்தில் வேறு எந்த இடத்திலும் இப்பொருளில் இச்சொல் பயிலப்பட்டதாகத் தெரியவில்லை.

 

புறநானூற்றிலும், மலைபடுகடாமிலும் சேர்ந்து மூன்று இடங்களில் ‘அலகை’ என்ற  சொல் இடம்பெற்றும் அங்கெல்லாம் பேய் என்று பொருள்படவில்லை.

 

அந்தக் கால ஆனந்தவிகடன் தமிழ் அகராதி தரும் பொருளைப் பார்ப்போம்:

அலகை:–

கற்றாழை, பிசாசம், பேய்க்குமட்டி, பேய், பிசாசு

அலகைக் கொடியாள்- காளியம்மை

அலகைத் தேர் – பேய்த் தேர் (கானல் நீர்)

 

ஆக அலகை என்பது பேய் எனப்படும். இந்தியில் ‘அலக் அலக்’ என்றால் வேறு வேறு என்று பொருள். இப்படி வேறு வேறாகத் தோன்றும் ஒரு நட்சத்திரம் ஆல்கால் (ALGOL)  எனப்படும். அது அராபிய மொழிச் சொல் என்பர். அதன் பொருள் பேய். அ தாவது தமிழிலும் அராபிய மொழியிலும்  பேய் எனப்படும் .

இப்பொழுது ஆல்கால் (அலகை) நட்சத்திரம் பற்றிக் காண்போம்:

 

இதை பேய் நட்சத்திரம் என்று ஏன் அழைக்கின்றனர்? ஏனேனில் இது திடீரென்று மறையும், திடீரென்று தோன்றும். அலக் அலக் (வேறு வேறு) என்ற இந்திச் சொல்லுக்கு ஏற்ப!

இது பெர்ஸியஸ் (Perseus) எனப்படும் பறக்கும் குதிரை நட்சத்திர மண்டலத்தில் இருக்கிறது

இதை கார்கான் (Gorgon) என்னும் கிரேக்க அரக்கியுடனும் ஒப்பிடுவர்.

இது மூன்று நட்சத்திரக் கூட்டத்தில் இருப்பதால் சுமார் பத்து மணி நேரத்திற்கு பார்ஸ்வ கிரஹணத்துக்கு (பகுதி நேர) உள்ளாகும். அதாவது மற்ற நட்சத்திரங்களின் ஒளியால் இது ஒளி மங்கிக் காணப்படும். இரண்டு நாள் 20 மணி நேரம் 49 நிமிடத்துக்கு ஒரு முறை இதன் ஒளித்தரம் குறைந்து விடுகிறது. ஒரு நட்சத்திரத்தை மற்றொரு நட்சத்திரம் சுற்றிவருவதால் ஆல்கால் மறைந்தும் விடும் (கிரஹணம் ஏற்படும்)

 

 

3200 ஆண்டுகளுக்கு முன்னரே அதிர்ஷட் நாள்- துரதிர்ஷ்ட நாள் காலண்டரில் ஆல்கால் (ALOGOL) தோற்றத்தை எகிப்தியர்கள் பதிவு செய்து வைத்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லுவர். அவர்களுக்கு திருவள்ளுவர் ‘அலகை’ பற்றிச் சொன்னது தெரியாது

 

அல்-கூல் என்ற அராபியச் சொல்லிலிருந்து ஆல்கால் வந்ததாக எசைக்ளோபீடியாக்கள் செப்பும். அராபிய மொழியில் ‘கூல்’ (GHOUL) என்றால் பேய். ஆனால் ஆராய்ச்சியா ளர்களுக்கு இந்திய மொழிகள் தெரியாததால் வந்த குழப்பம் இது. தமிழிலும் ‘கூளி’ என்றால் பேய். கலிங்கத்துப் பரணி முதலிய நூல்களில் இந்தச் சொல்லைக் காணலாம்.

 

இப்பொழுது ஒரு சந்தேகம்!

தமிழ் மொழியில் உள்ள கூளி (பேய்), அலகை (பேய்) ஆகிய எல்லாம் அராபிய மொழியில் புகுந்தது எப்படி? ‘அலக் அலக்’ என்னும் இந்திச் சொல் சம்ஸ்கிருத மொழியிலிருந்தே வந்திருக்க வேண்டும். ‘மாறி மாறி’ ஒளிர்வதால் ‘வேறு வேறு’ (அலக் அலக்) என்பது பொருத்தமாகத் தோன்றுகிறது.

 

திருவள்ளுவரைத் தவிர, அவருக்கு முன்னதாக, பேய் என்னும் பொருளில் ‘அலகை’ பயன்படுத்திய சான்றுகளும் இல்லை. இவை அனைத்தும் பல கேள்விக்குறிகளை எழுப்புகின்றன. ஆனால் எனக்குப் பிடித்த, எனது கொள்கையான மொழிக் கொள்கையை உலகம் ஒப்புக் கொண்டால் இந்தப் புதிருக்கு விடை காணலாம்.

அதாவது உலக மொழிகள் யாவும் — பழைய மொழிகள் மட்டும் — சம்ஸ்கிருதம் தமிழ் ஆகிய இரண்டிருந்தே பிரிந்தன. ஒருவேளை சிந்துவெளி/ சரஸ்வதி நதி தீர நாகரீக  எழுத்தைப் படிக்க முடிந்தால் விட்டுப்போன — காணாமற்போன — இணைப்பு, பாலம் (Link, Bridge) கிடைத்துவிடும்.

 

சுருங்கச் சொல்லின் பழைய மொழிகளின் மூலச் சொல்லை சம்ஸ்கிருதத்திலோ தமிழிலோ கண்டு பிடித்துவிடலாம்.

 

பேய் நட்சத்திரம் பற்றி அறிந்தோ அறியாமலோ அலகை என்ற சொல்லை  வள்ளுவர் மட்டும் பயன்படுத்தி இருப்பது வியப்புக்குரியது.

வாழ்க வள்ளுவன்! வளர்க தமிழ்!!

TAGS: அலகை, ஆல்கால், பேய் நட்சத்திரம், திருக்குறள், கூளி

–subham–

திருக்குறளுக்கு தமிழ் வேதம் என்று பெயர் சூட்டியது யார்? (Post No.4086)

Written by London Swaminathan


Date: 16 July 2017


Time uploaded in London- 6-34 am


Post No. 4086


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

திருக்குறளைப் பாராட்டி 53 புலவர்கள் பாடிய பாடல்கள் திருவள்ளுவ மாலையில் இடம் பெறும். இதைத்தவிர அவ்வையார், இடைக்காடர் ஆகிய இருவர் பாடல்களையும் சேர்த்து 55 பாடல்கள் என்றும் கொள்வர். இதில் பல புலவர்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ள வேதத்துடன் ஒப்பிட்டு திருக்குறளை தமிழ் வேதம் என்று அழைக்கின்றனர். அவர்கள் சூட்டிய பெயர்தான் தமிழ் வேதம். இதோ அந்தப் பாடல்கள்:

 

ஆரியமுஞ் செந்தமிழும் ஆராய்ந்திதனினிது

சீரியதென் றொன்றைச் செப்பரிதா – லாரியம்

வேதமுடைத்துத் தமிழ்திரு வள்ளுவனா

ரோது குறட்பா வுடைத்து

வண்ணக்கஞ் சாத்தனார்.

 

சம்ஸ்கிருதத்தையும், தமிழையும் ஆராய்ந்து இதைக் காட்டிலும் இது சிறப்புடைத்தென்று ஒன்றைத் தெரிந்து சொல்லுதல் முடியாது; சம்ஸ்கிருதம் வேதமுடையது; தமிழ் திருவள்ளுவர் தந்த குறட் பாக்களை உடையது.

 

இங்கு சம்ஸ்கிருதத்துக்கு வேதத்தால் பெருமை; தமிழுக்கு திருக்குறளால் பெருமை என்று வண்ணக்கஞ் சாத்தனார் கூறுகிறார்

 

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கூறுகிறார்:-

 

ஐயாறு நூறு மதிகார மூன்றுமா

மெய்யாய வேத பொருள்விளங்கப் – பொய்யாது

தந்தானுலகிற்குத் தான் வள்ளுவராகி

யந்தா மரை மேலயன்

 

அதிகாரம் நூற்று முப்பத்து மூன்றுமாம்,  உண்மையான வேதப்பொருள் பொய்யாது விளங்க அழகிய தாமரை மலர் மேல் வீற்றிருக்கின்ற பிரம்மா, வள்ளுவராகி உலகில் வந்தான்.

 

பிரம்மாவின் நான்கு முகங்களிலிருந்து நான்கு வேதங்கள் வந்தன என்று புராண, இதிஹாசங்கள் விளம்பும். அது போல திருக்குறள் என்னும் தமிழ் வேதத்தை அளித்ததும் அவனே— என்பார் காரிக்கண்ணனார்.

 

வெள்ளி வீதியார் சொல்வார்

செய்யா மொழிக்குந் திருவள்ளுவர் மொழிந்த

பொய்யா மொழிக்கும் பொருளொன்றே — செய்யா

வதற்குரியா ரந்தணரே யாராயி னேனை

யிதற்குரியா ரல்லாதாரில்

ஒருவராலே செய்யப்படாத மொழியாகிய வேதத்துக்கும் —–(அபௌருஷேயம்=வேதங்கள் மனிதன் இயற்றியது அல்ல) —திருவள்ளுவாரால் அருளிச் செய்யப்பட்ட பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே. ஆராய்ந்து பார்த்தால்  செய்யப்படாத அந்த வேதம் ஓதுதற்குரியோர் அந்தணர் மட்டுமே; ஆனால் திருக்குறளை ஓதுதற்குரியவர் எல்லோரும் ஆவர்.

 

நாமகள் செப்பியது

நாடா முதனான் மறைநான் முகனாவிற்

பாடா விடைபாரதம் பகர்ந்தேன் — கூடாரை

யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாற பின்

வள்ளுவன் வாயதென் வாக்கு

 

பொருள்:

பகைவரைப் புறமுதுகு காட்டச் செய்து வெற்றி பெற்ற, வேற் படையுடைய பாண்டிய ராஜனே!  படைப்புக் காலத்தில் பிரம்மாவின் வாயிலிருந்து நான்கு வேதங்களைப் பாடினேன்; இடைக்காலத்தில் பாரதம் பகர்ந்தேன்; அதற்குப் பிற்பட்ட காலத்தில் என்னுடைய வாக்கு வள்ளுவன் வாயின் கண்ணதாயிற்று

 

ஆகவே சரஸ்வதியின் கூற்றுப்படி, வேதமும், பாரதமும், திருக்குறளும் ஒவ்வொரு காலத்தில் சரஸ்வதியின் வாயிலிருந்து வந்தவையே.

வேதம் = மஹா பாரதம் = திருக்குறள்

மஹா பாரதத்தை பஞ்சமோ வேத: = ஐந்தாவது வேதம் என்பார்கள்.

திருக்குறளை ஆறாவது வேதம் என்று சொல்லாமல் சொல்கிறாள் சரஸ்வதி!

Tags:- தமிழ் வேதம், தமிழ் மறை, திருக்குறள்

–சுபம்–