தினமணி ரகசியம்: திருடனுக்கு தேள் கொட்டிய கதை! (Post No.3298)

18-05-1996_din_001_cty_mds

Written  by London Swaminathan

 

Date: 28 October 2016

 

Time uploaded in London: 18-59

 

Post No.3298

 

Pictures are taken from various sources; thanks

 

திருடனுக்கு தேள் கொட்டினால் என்ன ஆகும்? சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது. கூச்சல் போட முடியுமா? அப்படிப் போட்டால் ‘உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி’ என்பது போல, தேள் கொட்டிய கடுப்புடன், ஆட்கள் அடிக்கும் கடுப்பும் சேர்ந்து விடும்.

 

இதே போல பத்திரிக்கைகளில் தவறு நேர்ந்தால் சில விஷயங்களில் “திருத்தம்” என்று போடுவோம். இன்னும் சில விஷயங்களில் திருத்தம் போடாமலிருப்பதே மேல். அதாவது தேள் கொட்டிய திருடன் போல மௌனமாக இருந்து விடுவோம்.

நான் 16 ஆண்டுக்காலத்துக்கு மதுரை தினமணி பத்திரிக்கையில் சீனியர் சப் எடிட்டராகவும்(SENIOR SUB EDITOR)  5 ஆண்டுக் காலத்துக்கு மேல் பி பி சி தமிழோசையில் ப்ரொட்யூசராகவும் (PRODUCER,BBC WORLD SERVICE) வேலை பார்த்தபோது நிறைய சுவையான அனுபவங்கள் உண்டு. திடீர் திடீரென சில நினைவுகள் வரும்போதெல்லாம் அவைகளை எழுதுகிறேன். முன்னர் கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள்,  A N சிவராமனின் லவ் லெட்டர் நோட்டு என்றெல்லாம் சில கட்டுரைகள் எழுதினேன். இந்த பிளாக்கில் நேரம் கிடைக்கும்போது வாசியுங்கள்

 

 

ஒரு முறை சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் என்பதற்குப் பதிலாக, கேஸ் காலி புரம்

 

என்று வெளியாகிவிட்டது. மறுநாள் எங்கள் சப் எடிட்டர்களில் ஒருவரே கண்டுபிடித்து செய்தி ஆசிரியர் வெ.சந் தானத்திடம் காட்டினார். பேசாமலிருப்பதே உத்தமம், திருத்தம் எதுவும் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

 

 

இன்னொரு தடவை இதைவிட மோசமான ஒரு தவறு நேர்ந்தது. குன்றக்குடி அடிகளார் என்பதற்குப் பதிலாக, குறக்குன்டி அடிகளார்

என்று அச்சாகிவிட்டது. அப்போதும் திருத்தம் வெளியிடக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. வெறும் இடமாறு தோற்றப் பிழைதான்! ஆயினும் அர்த்தம், அனர்த்தம் ஆகிவிட்டது.

 

 

பாதிக்கப்பட்டவர்களும் திருத்தம் வெளியிடச் சொல்லி ஆட்சேபணை கிளப்பவில்லை. அவர்களைப் பொருத்தமட்டில் இந்த செய்தியை இப்படித் திருத்தி வாசியுங்கள் என்று வெளியிட்டால், அது “எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை” என்று நாமே காட்டிக் கொடுத்ததாகிவிடும் என்பது தெரியும். ஆயினும் இந்தச் செய்தி, அதன் புரூப் PROOF ஆகியன யார் கையில் எல்லாம் போயிற்றோ அவர்கள் எல்லாருக்கும் திட்டும் வசையும் கிடைக்கும். அப்போதுதான் அடுத்த முறையாவது சரியாக படி (புரூப்) திருத்துவர் என்பது தாத்பர்யம்!!

 

இதுதான் திருடனுக்கு தேள் கொட்டிய கதை!

 

MOBILE TEXTS மொபைல் டெக்ஸ்ட்

 

இதெல்லாம் ஏன் திடீரென்று நினைவுக்கு வந்தது என்றால், தினமும் மொபைல் போனில் TEXT டெக்ஸ்ட் அனுப்பும்போது நாம் ஒன்று அடிக்க அதுவாக ஏற்கனவே இருக்கும் சொற்களில் ஒன்றைப் போட்டுவிடுகிறது அவசரத்தில் சரி பார்க்காமல் SEND அனுப்பு என்ற பட்டனை சொடுக்கினால் அது பெரிய தலைவலியாக முடியும். இப்படி நானே சிலருக்கு டெக்ஸ்ட் அனுப்புகையில் மிகவும் அபத்தமான MESSAGE மெஸ்ஸேஜ் போனதுண்டு. பின்னர் VERY SORRY வெரி ஸாரி சொல்லி தப்பித்துக் கொண்டேன்.

 

ஒவ்வொரு பத்திரிக்கையிலும் ஸ்டைல் புக் STYLE BOOK என்று ஒன்று உண்டு. அதாவது அந்தப் பத்திரிக்கையில் ஊர்ப் பெயரையோ ஆட்கள் பெயரையோ எழுதும் போது இந்தமாதிரி SPELLING ஸ்பெல்லிங்தான் இருக்க

வேண்டும். சில சொற்களைப் பயன்படுத்தக்கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பர்.

 

முஸ்லீம்களின் ஒரு பிரிவினர் பெயரை அப்படியே எழுதினால் தமிழில் அபஸ்வரமாக இருக்கும் என்பதால் சன்னிSUNNY முஸ்லீம் என்று எழுதுவோம். இதற்கு இடக்கர் அடக்கல் (EUPHEMISM என்று தமிழில் பெயர். டாய்லெட் போய் வந்தோம் என்று சொல்லுவதற்குப் பதிலாக, நாம் “கால் கழுவி வந்தோம்” என்போம்.

 

பி.பி சி. தமிழோசையில் நான் மயிரிழையில் தப்பித்தார் என்று எழுதியபோது என் ‘பாஸ்’ BOSS சங்கர் அண்ணா, “தம்பி அடுத்த முறை எழுதும் போது நூலிழையில் தப்பினார்” என்று சொல்லுங்கள் என்று சொல்லிக்கொடுத்தார்.

 

மற்றொரு இலங்கைப் பெண்மணி, துப்பாக்கி என்பதற்குப் பதிலாக துவக்கு என்று சொல்லும் போதும் திருத்துவார். பாரிய, பாரதூரமான, அங்குரார்ப்பணம் என்ற சொற்களைப் பயன்படுத்துகையிலும் நல்ல தமிழ்ச் சொற்களைத் தருவார்.

 

இன்னும் பல சுவையான விஷயங்களை நினைவுக்கு வருகையில் தருகிறேன்.

 

-சுபம்–