
Menkaure and his wife
Written by London swaminathan
Date: 14 March 2017
Time uploaded in London:- 9-18 am
Post No. 3722
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
எகிப்திய பாரோக்கள் (பர ராஜ = மன்னர்கள்) சொந்த தங்கைகளையே திருமணம் செய்துகொண்டனர். இதனால் அவர்கள் பலவகை மரபியல் நோய்களுக்கு உள்ளானார்கள். மேற்காசியாவை ஆண்ட ஹிட்டைட்டுகள் (Hittites) இப்படி யாரேனும் திருமணம் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை என்று அறிவித்தார்கள். இவை எல்லாம் வரலாற்றில் காணப்படும் சுவையன செய்திகள்!
எகிப்திய சரித்திரத்தில் பழைய ராஜ்யம், நடு / மத்திய ராஜ்யம், புதிய ராஜ்யம் (Old, Middle and New Kingdoms) என்றும் குழப்பமான (அராஜக= அரசனற்ற) காலங்களை இடைப்பட்ட காலம் (Intermediate Periods) என்றும் வரலாற்றாசிரியர்கள் பிரித்துள்ளனர். புதிய ராஜ்யத்தின் துவக்கத்தில் இரண்டாம் அஹோதேப் ( Ahotep II மஹாதேவி என்பது இப்படித் திரிந்திருக்கலாம்) தனது சகோதரனையே கல்யாண ம் செய்துகொண்டார். அவருடைய பெயர் தா அல்லது காமோசி (Taa or Kamose) என்று நம்பப்படுகிறது.
(மோசி/மோசஸ்/ மூசு பலா, தேப்/தேவி பற்றிய எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் காணவும்)
அவர்களுக்குப் பிறந்த மகன் ஆமோசியும் (Ahmose) தனது தங்கையை திருமணம் செய்துகொண்டான். அவளுடைய பெயர் ஆமோசே நவரதிரி Ahmose Nefertiry (நவ ரதி).
அவர்களுக்குப் பிறந்த மகன் ஆமெனோதேப் ( Amenhotep) சமணதேவன்). அவன் தனது சகோதரி மேர்யாடாமுனை (Merytamun மாரி அம்மன்) மணந்தான்.

statue of Hatshepsut
இதற்குப் பின்னர் ஆண்ட மன்னன் துதமோசிக்கு (Thutmose) ஹட்சேப்சுத் (சத்ய சுதா Hatshepsut) என்ற மகள் பிறந்தாள். அவள் தனது ஒன்றுவிட்ட சகோதரனை கல்யா ணம் செய்துகொண்டாள். அவன் மன்னனான போது அவன் பெயர் இரண்டாம் துதமோசி.
இந்தக் காலகட்டத்தில் சகோதர-சகோதரி கல்யாணம் நடைபெற்ரது உண்மை என்பதும், இது சம்பிரதாய சடங்கு அல்ல– உண்மையான திருமணம் என்பதும் உறுதியாகிவிட்டது.
எகிப் தி ய மன்னர்களின் பெயர்களில் உலகம் முழுதும் தெரிந்த மன்னன் துதன்காமுன் Tutankhamun (துஷ்டகாமினி). அவனும் அவனுடைய ஒன்றுவிட சகோதரி அங்கசேனாமுன்னை (தேவ சேனா/ தெய்வானை என்பது போன்ற ஒரு சம்ஸ்கிருதப் பெயர் என்பது என் துணிபு) கல்யாணம் செய்துகொண்டான்.
(துதன் காமுனின் ரத்தின- தங்கப் புதையல் அப்படியே கிடைத்ததால் அவன் பெயர் உலகம் முழுதும் பரவியது அவன் இளம் வயதில் இறந்ததால் அவனை BOY KING பாய் கிங் — மாணவ அரசன் — என்பர்).
அப்பாவும் மகளும் திருமணம் செய்துகொண்ட அபூர்வ நிகழ்ச்சிகளும் உண்டு. மூன்றாம் அமனோதேப் Amenhotep (சமண தேவன்), இரண்டாம் ரமேஸஸ் Ramesses II (ராம சேஷன், ரமேசன்) ஆகியோர் தங்களுடைய மகளைத் திருமணம் செய்தனர். ராமசேஷனுக்கு பிண்டாநட் Bintanat (விந்தியாநாத்) என்ற மகள் பிறந்தாள்

Akhenaten and his wife Nefertiti
பழைய ராஜ்யத்தில் (OLD KINGDOM) இப்படி நடந்ததற்கான குறிப்புகள் உள்ளன. ஆனால் உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஆனால் டாலமி (PTOLEMY II) காலத்தில் மீண்டும் 200 வருடங்களுக்கு இந்த வழக்கம் நடைமுறைக்கு வந்தது. டாலமி காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டாகும் (இந்தியாவில் அசோகன் ஆண்ட காலத்தை ஒட்டி)
அரசர் அளவில் இப்படி நடந்தபோதும் சமுதாயத்தில் இப்படி நடந்ததாகத் தகவல் இல்லை. ஆகவே இது சமுதாயம் வெறுத்த ஒரு வழக்கம் என்றே கருதப்படுகிறது. இது எப்படித் தெரிகிறதென்றால் புதிய சாம்ராஜ்யத்தில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசர் கல்லறைப் பணியில் ஈடுபட்ட ஒரு தொழிலாளி, அவனுடைய தாயாருடனும் மகளுடனும் கள்ள த் தொடர்பு வைத்துக்கொண்டதோடு வேறு ஒரு பெண்ணை தன் மகனுடன் சேர்ந்து அனுபவித்ததாக அவன் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவனுடைய பெயர் நபாமுன் (நவமுனி).
இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. மன்னர்கள் மட்டும் எப்படி குடும்ப உறுப்பினர்களை யே அனுபவித்தனர்? இதற்குக் காரணம் என்ன?
பெண்வழி (Female line) அரச மரபு இருந்ததால் தங்கள் குடும்பத்துக்குள்ளேயே ராஜபோகத்தை வைத்துக்கொள்ள அப் படிச் செய்தனர் என்பது ஒரு ஊகம்.
வெளியிடத்தில் பெண் எடுத்தால் அரசாட்சி கை மாறிவிடுமோ என்ற அச்சம் காரணமாக இருந்திருக்கலாம். அல்லது எகிப்தில் இருப்பதே ஒரு ராஜ குடும்பம்- அந்த ராஜ குடும்பத்திலேயே உறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்று கருதி இருக்கலம். இப்பொழுதும் கூட சில ஜாதியினர் தங்கள் ஜாதிக்குள்ளேயே — ஒரு சிறு வட்டத்துக்குள்ளேயே — திருமணம் செய்வதைப் பார்க்கிறோம். தமிழர்கள் அத்தை, மாமன் மகள், மகன்களை க் கட்டுவதைக்கூட வெளிநாட்டினர் COUSIN MARRIAGE கஸின் மேரேஜ் என்றுதான் இன்றும் சொல்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு புதுமை.
தெய்வங்களின் கதைகளிலும் இப்படி வருவதாலும் எகிப்திய அரசர்கள் தெய்வங்கள் என்று கருதப்பட்டதாலும் இப்படி நடந்ததாகக் கருதுவோரும் உண்டு. பைபிள் கூறும் முதல் மனிதனாகிய ஆதாம் அவன் இடுப்பு எலும்பில் உருவான ஏவாளையே (ADAM AND EVE) மனைவியாகக் கொண்டான். அதாவது மகளையே மணந்தான்!
ஆதாம்- ஏவாள் ஆகிய இருவருக்குப் பிறந்த சகோதர சகோதரிகள் ஒருவரை ஒருவர் மணந்ததாலும் புணர்ந்ததாலும் மக்கள் பெருகினர் என்று பைபிள் வாக்குவாதத்தில் ஈபடுவோர் செப்புவர்.
பைபிளின் பழைய ஏற்பாட்டில் இது போன்ற பல குறிப்புகள் உண்டு.
எகிப்தைப் பொறுத்தமட்டில் எல்லா காரணங்களும் ஊகங்களே; உறுதியான காரணம் எதுவும் எழுதப்படவில்லை.
xxxxxxxxxxxxxxxxxxx சுபம் xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
My Research Articles on Egypt
Did Indians build Egyptian Pyramids?
27 august 2012
Hindu Gods in Egyptian Pyramids
16 september 2012
Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda
26 september 2012
Mata and Pita in Egyptian Religion! – 17 November 2014
Vedas and Egyptian Pyramid Texts
29 August 2012
(Part 3)
5 september 2012
More Tamil and Sanskrit Names in Egypt
Research paper written by London Swaminathan
Research article No.1413; Dated 15th November 2014.
Flags: Indus Valley-Egypt similarity
15 october 2012
First Homosexual King in History! (Post No.3692) 5-3-2017
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி எகிப்து அதிசய ஒற்றுமை!
14 october 2012
எகிப்திய நாகரீகத்தில் மேலும் பல தமிழ்ப் பெயர்கள்!!
Research paper written by London Swaminathan
Research article No.1414; Dated 16th November 2014.
எகிப்தில் திருமூலர் கருத்துக்கள்
POST No. 716 dated 21 Novemeber 2013
சுமேரியா, எகிப்தில் இந்திரன் வழிபாடு!
15 September 2014
எகிப்திய அதிசயங்கள் 17 கட்டுரைகள்
1.எகிப்திய அதிசயங்கள்-1: மிஸ்ர தேசம் என்று ஏன் பெயர்? (Post No.3638) posted on 15-2-2017
2.எகிப்திய அரசனுக்கு ஐந்து பெயர்கள்! எகிப்திய அதிசயங்கள்-2 (Post No.3641) posted on 16-2-2017
3.எகிப்தில் இந்தியப் பண்பாட்டின் தாக்கம்: எகிப்திய அதிசயங்கள்- பகுதி 3 (Post No.3648)posted 18-2-2017
4.எகிப்தில் சூர்ய வம்சம்: எகிப்திய அதிசயங்கள்-பகுதி 4 (Post No.3651) posted 19-2-2017
5.ஆதிகால எகிப்திய புலவரின் புலம்பல்; எகிப்திய அதிசயங்கள்-5 (Post No.3654) posted 20-2-2017
6.எகிப்தில் நரபலி:எகிப்திய அதிசயங்கள்-பகுதி 6 (Post No.3657) posted on 21-2-2017
7.எகிப்தில் இந்திய நீலக்கல்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 7 (Post No.3660) posted on 22-2-2017
8.மனித முகம்; சிங்க உடல்! ஸ்பிங்ஸ்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 8 (Post No.3664) posted on 23-2-2017
9.எகிப்தில் 30 வம்சங்கள்: அதிசய தகவல்கள்-பகுதி 9 (Post No.3667)
posted on 24-2-2017
10.பிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி: எகிப்திய அதிசயங்கள்-10 (Post No.3670)posted on 25-2-2017
11.பெரிய பிரமிடு– எகிப்திய அதிசயங்கள் -பகுதி 11, posted on 27-2-2017
12.வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும்- எகிப்திய அதிசயங்கள்-12 (Post No.3684) posted on 2-3-2017
13.சுவர்களில் எழுதப்பட்ட சமயச் சடங்குகள்- எகிப்திய அதிசயங்கள்-13 (Post No.3687)posted on 3-3-2017
14.மன்னர்களுடன் படகுகளை புதைத்தது ஏன்? எகிப்திய அதிசயங்கள் –14 (Post No.3689) posted on 4-3-2017
15.சித்திர எழுத்துக்கள் – எகிப்திய அதிசயங்கள் –15 (Post No.3693)
posted on 5-3-2017
16.விசித்திர உருவம் கொண்ட தெய்வங்கள்: எகிப்திய அதிசயங்கள்-16 (Post No.3696) posted on 6-3-2017
17.எகிப்தில் இந்து தெய்வங்களின் வழிபாடு- எகிப்திய அதிசயங்கள் – பகுதி 17 (Post No.3705)
xxxx
எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 1 (கட்டுரை எண் 2803) by S Nagarajan; posted on Date: 12 May 2016
2.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 2 (Post No.2806) by S Nagarajan; posted on Date: 12 May 2016
3.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 3 (Post No.2809) BY S NAGARAJAN; posted on Date: 14 May 2016
5000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய நகரத்தின் கண்டுபிடிப்பு (Post No. 3487) by S Nagarajan, posted 27-12-2016
Please Read my earlier Posts
The Great Scorpion Mystery in History – Part 1 (posted 10 November 2012)
The Great Scorpion Mystery in History – Part 2(posted 10 November 2012)