மார்கழித் திங்கள், மடி நிறையப் பொங்கல் ! (Post No.10,486)

#WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,486

Date uploaded in London – –   25 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great

சுமார் 60 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன; மதுரையில் நடந்த மதுரமான நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. இப்போதெல்லாம் அப்படி நடக்கின்றனவா என்று தெரியவில்லை. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகமே சீன வைரஸ் தாக்குதலில் இருப்பதால் இப்போது நடக்கவும் வாய்ப்புகள் குறைவு.

மதுரையில் எங்கள் காலத்தில் இருந்த பல நிறுவனங்கள் அழிந்து விட்டன.

முதலில் திருப்பாவையில் துவங்குகிறேன் .

மதுரையில் இருவர் தங்கள் வாழ்க்கையையே திருப்பாவையைப் பரப்புவதற்கு அர்ப்பணித்து இருந்தனர். ஒருவர் திருமதி ராஜம்மாள் சுந்தரராஜன்; மற்றொருவர் திருமதி சீதாலெட்சுமி பாலகிருஷ்ண ஐயங்கார். .

ராஜம்மாள் சுந்தராஜன் மறைவுக்குப் பின்னர் அவரது வலது கையாக விளங்கிய விசாலாக்ஷி பாவைப் பாடல்களைப் பரப்பினார். அதே போல திருமதி சீதாலெட்சுமிக்குப் பிறகு அவருடைய புதல்வி பத்மாசனி திருப்பாவையைப் பரப்பினார்.

ஒவ்வொரு ஆண்டும் காஞ்சி சங்கராச்சாரியார் , திருப்பாவை முப்பதையும் ஒப்பிப்போருக்கு வெள்ளிக் காசுகளைக் கொடுத்தனுப்புவார். மாயவரத்தைச் சேர்ந்த திரு ராமமூர்த்தி, மடத்தின் பிரதிநிதி. அவர் எங்கள் வீட்டில் உணவருந்திவிட்டு திருப்பாவைப் பள்ளிகளுக்குச் செல்லுவார். நாங்கள் அந்த வெள்ளிக்காசுகளைக் காட்டச் சொல்லி வியப்புடன் பார்ப்போம். என் தங்கையும் எதாவது ஒரு திருப்பாவைப் பள்ளிக்கு 30 நாட்களும் செல்லுவார்.

திருமதி ராஜம்மாள் சுந்தரராஜன் ஏராளமான கல்லூரி மாணவிகளையும் கவர்ந்து இழுத்தார். அவர் செய்த நாட்டிய நாடகங்கள் இதற்கு ஒரு கரணம். அந்தக்காலத்தில் வத்சலாபாய் என்ற பள்ளிக்கூட பஸ், பணக்கார வீட்டுப் பெண்களை பஸ்ஸில் ஏற்றிச் செல்லும். அந்த பஸ்ஸில் வார விடுமுறை நாட்களில்  பல ஊர்களுக்குச் சென்று அடியார்களின் வாழ்க்கை வரலாறுகளை நாட்டிய நாடகமாக நடத்திக் காண்பித்தனர். எங்கள் குடும்பத்தினரையும் அழைத்துச் செல்லுவார்கள். அவர்களுடைய  நாட்டிய நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பழனி, தாராபுரம், உடுமலைப் பேட்டை முதலிய இடங்களுக்குத் சென்ற பயணம் இன்றும் நினைவில் நிற்கிறது.

கட்டுரைக்குத் தலைப்பு “மார்கழித் திங்கள், மடி நிறையப் பொங்கல்” என்று கொடுத்தற்குக் காரணம் எல்லா நாட்களும் நெய் ஒழுகும் பொங்கல், தொன்னையில் கிடைக்கும். திருப்பா வைக்காக வராவிட்டாலும் பொங்கலுக்காக வரும் கூட்டம் கொஞ்சம் இருக்கும். கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா – பாடல் அன்று ‘நெய்யில் மிதக்கும்’  சர்க்கரைப்  பொங்கலும் கிடைக்கும்.

மதுரை தானப்ப முதலீத் தெரு டிரஸ்ட் ஹவுஸில் பிரம்மாண்டமான அண்டாக்களில் பொங்கல் வடிப்பர்.

இது தவிர நாங்கள் வசித்த வடக்குமாசி வீதியில் யாதவர்கள் திறம்பட நிர்வகித்த கிருஷ்ணன் கோவில் இருந்தது. அதிகாலை 4-30 மணி முதல் திருப்பாவை மற்றும் பக்திப் பாடல்கள் ஒலி பெருக்கி மூலம் வரும். இந்தப் பாட்டு வந்தால் இத்தனை மணி என்று கடிகாரத்தைப் பார்க்காமலேயே தெரிந்து கொள்ளும் அளவுக்கு கண கச்சித ஒலிபரப்பு .

இது தவிர மீனாட்சி கோவிலில் திருவெம்பாவை, தேவாரப் பாடல்களை ஓதுவார்கள் பாடுவார்கள். நட ராஜர் முன்னிலையில் அதிகாலையில் ஞானப் பால் என்ற சுவைமிகு ஏலக்காய், கிராம்பு போட் பால் விநியோகிப்பர். ஆளுக்கு ஒரு உத்தரணி தான்; அதற்கு நீண்ட க்யூ வரிசை. ஆனால் என் தாய் தந்தையர் செய்த புண்ணியம் எங்களுக்கு மட்டும் கோவில் பேஷ்கார் ஒரு பாட்டிலில் தனியாகக் கொடுத்து விடுவார் . எனது தந்தை தினமணிப் பத்திரிகையில் விரிவான ஆன்மீகச் செய்திகளை வெளியிடுவதால் இந்த சிறப்புக் கவனிப்பு..

அந்தக் காலத்தில் ஆன்மீகச் செய்திகளை வெளியிட்டால் அது இளப்பமான விஷயம். ஹிந்து என்ற பெயர்கொண்ட  பத்திரிகை கூட கடைசி பக்கத்தில் மூன்று அங்குலத்துக்கு செய்தி போடுவார்கள்; என் தந்தை வே. சந்தானம் அந்த மரபுகளை உடைத்து எறிந்து முதல் பக்கத்தில் தெய்வீக செய்தி வெளியிடுவார். தினமணியின் ‘இன்றைய நிகழ்ச்சி’யைப் பார்த்தால் அன்றைய தினம் மதுரையில் நடக்கும் அத்தனை நல்ல விஷயங்களும் கிடைத்துவிடும்.

இது தவிர மேலும் ஒரு நிகழ்ச்சி –அதி காலை 4 மணிக்கு பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு 4 மாசி வீதிகளும் மார்கழி மாதம் முழுதும் அன்பர்கள் வீதி உலா வருவர் . இவ்வாறு இரண்டு மூன்று குழுக்கள் செய்ததாக ஞாபகம். அதில் சில நாட்கள் தந்தையுடன் நானும் சகோதரர்களும் கலந்து கொண்டோம்.

மாதத்தில் ஒரு முறை திருப்பாவை ஊர்வலம்  பெரிய அளவில் நடத்தப்படும். இவை தவிர, ந. சீ. சுந்தரராமன் நடத்திய தேவாரப்பள்ளி , திருப்புகழ் தியாகராஜன் நடத்திய திருப்புகழ் சபை, வானமாமலை சகோதரர்கள் நடத்திய தெய்வ நெறிக் கழகம் , மொட்டைக் கோபுர பூசாரி யாழ்கீத சுந்தரம்பிள்ளை நடத்திய பூஜை, மற்றும் கார்த்திகை மாத சங்காபிஷேகம் ஆகியன மதுரையின் தெய்வீக மனத்தை அதிகரித்தன.

மதுரையில் இருந்த 3,4 வேத பாடசாலைகள், தமிழையுயும் ஸம்ஸ்க்ரு தத்தையும் இரு கண்களாகப் பரப்பி வந்த ராமேஸ்வரம் வேத பாடசாலை, வாரத்தில் இரு முறை திலகர் திடலில் நடந்த புகழ்மிகு பிரம்மாண்ட வார சந்தைகள் . புகழ் மிகு ‘பூ மார்க்கெட்’ ஆகியன எல்லாம் அரசியல்வாதிகளால் அழிக்கப்பட்டுவிட்டன. ‘பவதி பிட்சாம் தேஹி’ என்று வீட்டு வாசலில் உச்சுக் குடுமி தாங்கிய சிறுவர்கள் வந்து பிக்ஷை பெற் றதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன.

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழிய (ஆண்டாள்)

திருவெம்பாவை இருபதும் செப்பினார் வாழிய  (மாணிக்க வாசகர்).

–subham–

PICTURES ARE FROM DIFFERENT PLACES; NOT MADURAI

tags- திருப்பாவை , திருவெம்பாவை, பொங்கல் , பஜனை, மதுரை, வெள்ளிக்காசு

பாரதி, திருவெம்பாவை பாடிய சுவையான சம்பவம் (Post No.7333)

COMPILED BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 12 DECEMBER 2019

 Time in London – 13-27

Post No. 7333

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

தமிழ் சுடர்மணியில் பேரறிஞர் வையாபுரிப்  பிள்ளை ,

 பாரதியார்   பற்றிச் சொன்ன இரண்டு சுவை யான

சம்பவங்கள் இதோ:-

subham

தாய்லாந்தில் வேஷ்டி கட்டும் தமிழ் பிராஹ்மணர்கள்! (Post No.5003)

Written by London Swaminathan 

 

Date: 12 May 2018

 

Time uploaded in London – 8-43 am (British Summer Time)

 

Post No. 5003

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

தாய்லாந்தில் தமிழ் என்றே தெரியாமல், கோவிலில் ‘டிருவெம்பாவை’ (திருவெம்பாவை, மாணிக்கவாசகர்) ஓதிய கதையை தெ.பொ.மீ. போன்ற அறிஞர்கள் அந்தக் காலத்திலேயே எழுதிவிட்டனர். ஆனால் ஸத்ய வ்ரத சாஸ்திரி (1982) எழுதிய தாய்லாந்து பற்றிய ஆங்கில நூலில் மேலும் பல சுவையான செய்திகளைத் தருகிறார்.

 

தாய்லாந்து இப்பொழுது புத்தமத நாடு. ஆனாலும் இந்துமதத்தின் தாக்கத்தையும் ஸம்ஸ்க்ருதத்தின் செல்வாக்கையும் பண்பாட்டிலும் மொழியிலும் காண முடிகிறது. பல இந்துக் கோவில்களும் உள.

 

இங்கே பிராஹ்மணர்கள் வசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ‘’தாய்’’ (THAI LANGUAGE) மொழி மட்டுமே பேசுகின்றனர். நடை, உடை, பாவனையில், ஏனைய மக்களிடமிருந்து வேறு பட்டவர்கள். தூய வெள்ளை ஆடை மட்டுமே உடுத்துவர்; வேஷ்டி அணிகின்றனர். காலில் ஷூ, ஸாக்ஸ் அணிந்தாலும் அவையும் வெண்மையே.

 

ஆயிரக்கணக்கில் பிராமணர்கள் இருந்தும் தீக்ஷை எடுத்தவர்களை மட்டுமே பிராஹ்மணர் என்று சொல்லுவர். இப்படிப் பார்த்தால் ஐம்பது, அறுபது பேர் மட்டுமே பிராஹ்மணர். இந்த தீட்சையை வழங்குபவர் ராஜ குரு. அவர் இல்லாவிடில் ஹுவன் ப்ராம் (சுவர்ண பிராஹ்மண) இந்தப் பட்டத்தை வழங்குவார்.

 

ராஜ குரு என்பவரும் பிராஹ்மணரே; அவரை மற்றவர்களைக் கலந்தாலோசித்து மன்னர் தேர்ந்தெடுப்பார்.

மன்னர் கொடுக்கும் மான்யத்தொகை மிக மிகக் குறைவு என்பதால் ஏனைய பூஜைகள் மூலம் அவர்கள் தட்சிணை வாங்கிப் பிழைக்கிறார்கள்.21 வயத்துக்கு மேலுள்ள எந்தப் பிராஹ்மணனும் இதற்குத் தகுதி உடையவரே.

‘ட் ரி யம் பாவ்ய’, ‘ட் ரி ப் பாவ்ய’

 

1982 ஆம் ஆண்டு வெளியான இந்த நூலில் சாஸ்திரி மேலும் கூறுகிறார். ராஜ குரு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் ‘ட் ரி யம் பாவ்ய’, ‘ட் ரி ப் பாவ்ய’ விழா நடத்த வேண்டும். இவை தமிழில் உள்ள திருவெம்பாவை, திருப்பாவை என்பன ஆகும்.

முதலாவது விழாவில் சிவ பெருமானை மூன்று கட்டங்களில் வழிபடுவர். முதலில் இறைவனை ஆவாஹனம் செய்து, பின்னர் ஊஞ்சலில் எழுந்ததருளிச் செய்து, புனித நீரால் அபிஷேகம் செய்து, சாதம் முதலிய பிரஸாதங்களைப் படைப்பர். பின்னர் கடவுளை வழி அனுப்புவர். இது பத்து நாட்கள் நடைபெறும் விழா.

 

இதே காலத்தில் புதிய பிராஹ்மணர்களுக்கும் தீக்ஷை வழங்கப்படும். அவர்கள் ‘பூ சுத்தி’, ‘பூத சுத்தி’ செய்துவிட்டுக் கோவிலிலேயே தரையில் படுத்து உறங்குவர். மரக்கறி உணவை மட்டுமே உண்ணுவர். இந்த விரதம் டிசம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை நடக்கும். யார் யார் பிராமணர் பட்டம் பெற விரும்புகிறாரோ அவரவர்களுக்கு ராஜ குரு தீட்சை தருவார். தினமும் கணேசர், உமை, சிவன் வழிபாடு மாலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை நடைபெறும்.

 

சிவபெருமான் இந்தப் பத்து நாட்களுக்குப் பூமிக்கு வருவதாகச் சொல்லி, திருவெம்பாவை படிப்பர். நவக்ரக வழிபாட்டுடன் பூஜைகள் துவங்கும். இரவு நேரத்தில் திருவீதி உலா நடக்கும். மக்கள் புத்தாடை அணிந்து வீடுகளை அலங்கரிப்பர்.

 

ஊஞ்சல் திருவிழாவும் உண்டு. இறைவனை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவர். இரண்டு தூண்களுக்கு இடையே ஒரு குவளையில் தண்ணீர் வைப்பர். இதுதான் சமுத்திரம்/கடல்.

இதுபற்றிய கதை ஒன்றும் சொல்லுவர். சிவ பெருமான் தன்னுடைய ஒரு காலால் பூமியை அமுக்கி நிலைபெறச் செய்தார். ஆயினும் அது வலிமையுடையதா என்று ஐயப்பாடு எழுந்தது. உடனே நாக தேவதைகளை அழைத்து பூதளத்தை அசைக்கச் சொன்னார். அப்போதும் அசையவில்லை. உடனே இறைவனுக்கு மட்டில்லா மகிழ்ச்சி. ஊஞ்சல் கட்டிய இரண்டு தூண்கள் இரண்டு மலைகள் ஆகும்; நடுவில் குவளையில் வைக்கப்பட்ட நீர் கடல் ஆகும். இவை எல்லாம் இறைவன் கருணையால் எல்லை தாண்டாமல் ஒழுங்காக இருக்கின்றன என்பதைக் காட்டுவதே இதன் தாத்பர்யம்.

 

இதே போல நாராயணணின் புகழ்பாட ‘ட் ரி ப் பாவ்ய’ (திருப்பாவை) விழா நடக்கும் சிவன் சென்றவுடன் நாராயணன் பூமிக்கு வந்ததாக ஐதீகம். இவ்வறு விழா நடத்திய பின்னர் பிராஹ்மணர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தங்கள் கைகளாலேயே மொட்டை அடிப்பர் அல்லது முடி இறக்கி குடுமி வைப்பர். இப்போதெல்லாம் கொஞ்சம் முடியை மட்டும் அடையாளபூர்வமாக வெட்டுகின்றனர்.

ஏர் உழும் பணி

அந்தக் காலத்தில் ராஜகுருவானவர் வேத முழக்கம் செய்தார். இப்போது அது இல்லையாம்.

 

Thai Rajaguru with Kanchi Shankaracharya

பணி

 

அந்தக் காலத்தில் அரசர்களே முன்னின்று பயிரிடுதலைத் துவக்கினர். இப்படி ஜனக மஹாராஜா ஏர் உழுதபொழுதுதான் சீதா தேவி கண்டு எடுக்கப்பட்டாள். இந்த வேத கால வழக்கம் தமிழ் இலக்கியத்திலும் உண்டு. தாய்லாந்தில்  இது நடத்தப்படும் முறை மிகவும் சுவையானது.

ராஜகுரு பஞ்சாங்கத்தைப் பார்த்து வைகாசி மாதம் நாள் குறிப்பார். முதல் நாள் பௌத்தர்கள், மரகத புத்தர் சிலை முன்னர் ஜபம் செய்வர். மறு நாள் அதிகாலையில் பிராஹ்மணர்கள் கௌரி, தரணி (பூமி), கங்கா (கங்கை நதி) பூஜை துவங்குவர். பலவகை தானியங்களை நீருடன் கலந்து தூவுவர். குறிப்பிடப்பட்ட நேரத்தில் மன்னர் வருவார். அவர் தனது பிரநிதியை அனுப்பி காளைகளை வணங்கி ஏர் உழச் செய்வார். அந்தப் பிரதி நிதி மரகத புத்தர் கோவில் புல்வெளியில் ஏரை முன்னும் பின்னும் இழுப்பார். பின்னர் காளைகள் திரும்பிச் செல்லும்.

 

ஏருழும் பிரதிநிதிக்கு முன்னர் பிராமணர்கள் செல்லுவர். மங்கையர் மங்களப் பொருட்களை ஏந்தி வருவர்.

ஏழு பொருள் சோதனை!

ஏர்  உழுதல்  முடிந்த பின்னர் காளை மாட்டு ச் சோதனை நடக்கும். மது, புல், எள், நெல், தண்ணீர், சோளம், பயறு வகைகளை வைத்து காளை மாட்டிடம் காட்டுவர். அது எதன் மீது பாய்ந்து முதலில் தின்கிறதோ அது அந்த ஆண்டு செழித்து வளரும் என்பது நம்பிக்கை.

 

காளை மாடு நெல்லையோ பயறு வகைகளையோ சோளத்தையோ முதலில் சாப்பிட்டால் அந்த வகை தானியம் அந்த ஆண்டில் அமோக விளைச்சல் பெறும். தண்ணீரை முதலில் சாப்பிட்டால் வெள்ளம் வந்து பயிர்கள் அழியும்; புல்லையோ எள்ளையோ சாப்பிட்டால், தானிய விளைச்சல் அரை குறையாக இருக்கும். மதுவைச் சாப்பிட்டாலோ வறட்சி தாண்டவம் ஆடும். நாட்டில் அமைதியின்மை ஏற்படும் என்று அறிவிப்பர். அத்துடன் ஏர் உழும் விழா இனிதே நிறைவு பெறும்.

இது தவிர பிராஹ்மணர்களின் பங்கு பணி வேறு சில சடங்குகளிலும் உண்டு. அவற்றைத் தனியே காண்போம்.

–சுபம்–

 

 

பத்தாம் நம்பர்! மாணிக்க வாசகருக்குப் பிடித்த எண் 10! ஏன்? (Post No. 3457)

Written by London swaminathan

 

Date: 17 December 2016

 

Time uploaded in London:- 7-21 AM

 

Post No.3457

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் திருவெம்பாவை உள்பட 51 பகுதிகள் உள்ளன. அவற்றில் 656 பாடல்கள்; அதவது மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகள் இருக்கின்றன.

51 பாடல் பகுதிகளில் இருபதுக்கும் மேலான பகுதிகளுக்கு “பத்து” அல்லது “பதிகம்” என்றே தலைப்பிட்டுள்ளார். இதி லிருந்து இவருக்கு மிகவும் பிடித்த எண் பத்து என்பது தெளிவு; இதோ சில பகுதிகளின் பெயர்கள்:-

அச்சப் பத்து, அடைக்கலப் பத்து, அதிசயப் பத்து, அருட்பத்து, அற்புதப் பத்து, அன்னைப் பத்து, ஆசைப்பத்து, உயிருண்ணிப் பத்து, கண்டபத்து, குயில் பத்து, குலாப்பத்து, குழைத்த பத்து, செத்திலாப்பத்து சென்னிப் பத்து, பிடித்த பத்து, பிரார்த்தனைப் பத்து, புணர்ச்சிப்பத்து, யாத்திரைப் பத்து, வாழாப்பத்து. இது தவிர பல பாடல்கள் பதிகம் என முடிவுறும்.

 

பத்துடையீர், ஈசன் பழவடியீர், பாங்குடையீர்

 

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிர் எழுந்தென்

அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்

 

பத்துடையீர், ஈசன் பழவடியீர், பாங்குடையீர்

புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ

எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியாமோ

சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை

இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்

 

-திருவெம்பாவை 3 (திருவாசகம்)

 

 

பொருள்:-

முத்தைப் போன்ற வெண்மையான பற்களை உடைய பெண்ணே! முன்பெல்லாம் எனக்கு முன்னே எழுந்து, எதிரே வந்து, என் தந்தை; இன்ப வடிவினன்; அமுதம் போல இனியன் என்று வாயூறித் தித்திக்கப் பேசுவாய்; எழுந்து வந்து வாயிற் கதவைத் திற!

 

அள்ளூறல்= நாவில் எச்சில் ஊறுதல்

 

இதில் பத்துடையீர் என்ற சொல்லுக்கு இருவிதமாகப் பொருள் கூறுவர் சான்றோர்; பத்து என்பது பற்று என்பதன் மரூஉ; அதாவது மருவிய வடிவம்

 

மற்றொரு பொருள் பத்து குணங்களுடையவர். இது எப்படிப் பொருந்தும்? என்று கேட்கலாம். அப்பர் பெருமானும் “பத்துகொலாம் அடியார் செய்கைதானே” — என்கிறார்.

அப்படியானால் அந்த 10 குணங்கள் என்ன,என்ன என்ற கேள்வி எழும்

அவை:

1.விபூதி, உருத்திராக்கம் அணிதல்

2.குரு வழிபாடு

3.அன்புடன் சிவனைத் துதி பாடல்

4.மந்திர ஜெபம்

5.இறை வழிபாடு செய்தல்

6.யாத்திரை செய்து சிவத் தலங்களைத் தரிசித்தல்

7.சிவபுராணம் கேட்டல்

8.சிவன் கோவில்களை சுத்தமாக வைத்துப் பரிபாலித்தல்

9.சிவன் அடியாரிடத்து உண்டல் (கண்ட இடங்களில் சாப்பிடாமல் இருத்தல்)

  1. தொண்டர்க்குத் தொண்டு செய்தல்

என்று சான்றோர் உரை எழுதியுள்ளனர்.

 

இவைகளில் 3, 4, 5 ஆகிய மூன்றும் ஒன்று போலத் தோன்றும் ஆயினும் நன்கு சிந்தித்துப் பார்த்தால் வேறு வேறு என்பது விளங்கும்.

திருச்சத்தகம் என்னும் பகுதியில் “எட்டினோடு இரண்டும் அறியேனையே” (பட்டிமண்டபம் ஏற்றினை) என்று கூறுவதும், திருமூலரும் “எட்டும் இரண்டும் இனிதறிகின்றலர்” என்று பாடி இருப்பதும் ஒப்பு நோக்கற்பாலது. எட்டும் இரண்டும் என்பதற்கு வேறு பல விளக்கங்களும் உண்டு.

 

–Subham–