
அக்டோபர் 2020 நற்சிந்தனை காலண்டர்
COMPILED BY LONDON SWAMINATHAN
Post No. 8755
Date uploaded in London – –30 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பண்டிகை நாட்கள் – 2-காந்தி ஜெயந்தி , 17-நவராத்ரி ஆரம்பம், துலா விசு புண்ய காலம்;
25-சரஸ்வதி பூஜை, 26-விஜய தசமி, தசரா .
பவுர்ணமி -1, 31; அமாவாசை -16; ஏகாதசி விரதம் – 13, 27
முகூர்த்த தினங்கள் – 18, 26, 29, 31
கடந்த எட்டு ஆண்டுகளில் 3000 தமிழ் பொன்மொழிகளையும் 3000 ஆங்கிலப் பொன்மொழிகளையும் ஸப்ஜெக்ட் -வாரியாக SUJECT WISE தமிழ், ஸம்ஸ்க்ருத புஸ்தகங்களிலிருந்து கொடுத்துள்ளேன். எனக்கே வியப்பு; எல்லாம் இறைவன் செயல்.
அக்டோபர் 1 வியாழக்கிழமை
அயோக்ய புருஷோ நாஸ்தி , யோஜகஸ் தத்ர துர்லபஹ – சுபாஷித ரத்ன பாண்டா காரம்
உலகில் உதவாக்கரை என்று எவருமிலர் ; அவரவர் திறமையைக் கண்டு உபயோகிக்கும் ஆட்கள் தான் இல்லை .
***

அக்டோபர் 2 வெள்ளிக்கிழமை- GANDHI JAYANTI
அதி ப்ரவ்ருத்தா சால்மலி வாரணஸ்தம்போ ந பவதி – சாணக்கிய நீதி சாஸ்திரம்
இலவம் பஞ்சு மரம் எவ்வளவு உயர வளர்ந்தாலும் யானையைக் கட்டிப்போட உதவாது.
****
அக்டோபர் 3 சனிக்கிழமை
அயோக்யாய பதம் தத்தம் ஸர்வதா ஹானிக்ருத் பவேத் – கே ஆர்
தகுதியற்றவனிடம் பொறுப்பை ஒப்படைப்பது எல்லாவகையிலும் ஆபத்து
***
அக்டோபர் 4 ஞாயிற்றுக்கிழமை
குருட்டுப் பூனை விட்டத்தில் பாயும்
***
அக்டோபர் 5 திங்கட் கிழமை
தக்கார் தக்கவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும் – திருக்குறள் 114
ஒருவன் இறந்தபின்னர் நிற்கும் புகழோ வசையோ அவரைக் காட்டிக்கொடுத்துவிடும் .
***
அக்டோபர் 6 செவ்வாய்க்கிழமை
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல் – திருக்குறள் 517
யார் எதை திறமையாக செய்வார் என்று சிந்தித்து அந்த வேலையை அவனுக்குக் கொடு.
***
அக்டோபர் 7 புதன் கிழமை
அங்கணம் சம்ஸ தே வக்ரம் நர் தனே குசலோ ஜனஹ
ஆடத் தெரியாத தேவடியாள் தெருக்கோணல் என்றாளாம்
***
அக்டோபர் 8 வியாழக்கிழமை
யோக்யம் யோக்யாய தாதவ்யம் – ஸதோபதேச ப்ரபந்த
தகுதியுள்ளவருக்கு தகுதியானதைத் தாருங்கள்
***

அக்டோபர் 9 வெள்ளிக்கிழமை
யோக்யேனார்த்தஹ கஸ்ய ந ஸ்யாஜ்ஜனேன – சிசுபால வதம்
தகுதியுள்ள மனிதர்களால் பயன் அடையாதோர் உண்டா
***
அக்டோபர் 10 சனிக்கிழமை
யோ யஸ்மின் கர்மணி குசலஹ ஸ தஸ்மின் நியோக் தவ்யஹ- சாணக்கிய நீதி
யாருக்கு எந்த வேலையில் திறமை இருக்கிறதோ அவரிடம் அந்த வேலையை ஒப்படை
***
அக்டோபர் 11 ஞாயிற்றுக்கிழமை
சகடம் ச்வா ந கர்ஷதி – கே ஆர் கஹாவத் ரத்னாகர்
வண்டியை இழுக்க நாய் உதவாது
***
அக்டோபர் 12 திங்கட் கிழமை
மந்தார மாலா மாலோக்ய மாலத்யாம் கோ ஹி சாதரஹ – ப்ருஹத் கதா மஞ்சரி
தேவ லோக மந்தார மலர் மாலை கிடைத்த பின்னர் , மல்லிகையை நாடுவோமா
****
அக்டோபர் 13 செவ்வாய்க்கிழமை
கையில் வெண்ணெய் இருக்கையில் நெய்க்கு அலைவாருண்டா ?- தமிழ் பழமொழி
****
அக்டோபர் 14 புதன் கிழமை
சிறு துரும்பும் பல்குத்த உதவும் (யாரையும் ஒதுக்காதீர்கள் )
****
அக்டோபர் 15 வியாழக்கிழமை
ஹேம் நஹ சம்லக்ஷ்யதே ஹயக்நெள விசுத்திஹி ஸ்யாமிகாபி – ரகு வம்சம் 1-10
தங்கத்தின் தூய்மையை நெருப்பில் பரிசோதிப்போம்
(ஒருவரின் தன்மை/தகுதி கஷ்டம் வரும்போது தெரிந்து விடும்)
அக்டோபர் 16 வெள்ளிக்கிழமை
பாரிஜாத லதாபருங்கொ ந ஹி ஜாதிஷு சாதராக -ப்ருஹத் கதா மஞ்ச ரி
பாரிஜாத மலரை மொய்க்கும் வண்டு, மல்லிகைப் பூவுக்கு மதிப்பு தராது

அக்டோபர் 17 சனிக்கிழமை- NAVARATRI BEGINS- DOLL DISPLAY IN SOUTH INDIAN HOMES
தன் முதுகு தனக்குத் தெரியாது (தன்னைப் பற்றி மற்றவர் கருத்தைக் கேட்கவேண்டும் )
அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமை
வெளவிய கருமம் எண்ணித் துணி – தமிழ்ப் பழமொழி
அக்டோபர் 19 திங்கட் கிழமை
வீர சூரனானாலும் முன்படை வேண்டும் (டீம் ஒர்க் team work அவசியம்) தமிழ்ப் பழமொழி
அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை
அடிக்க அடிக்க அம்மியும் நகரும் ; முயற்சி திருவினை ஆக்கும் —தமிழ்ப் பழமொழி
அக்டோபர் 21 புதன் கிழமை
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ—நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?– பாரதி பாடல் (Good Things/People are available from unexpected places)
XXX
அக்டோபர் 22 வியாழக்கிழமை
“முயல்விட்டுக் காக்கைப் பின் போனவாறே-
அப்பர் தேவாரம் – பழமொழிப்பதிகம்
அக்டோபர் 23 வெள்ளிக்கிழமை
“கரும்பிருக்க இரும்பு கடித்து எய்த்தவாறே-
அப்பர் தேவாரம் – பழமொழிப்பதிகம்
அக்டோபர் 24 சனிக்கிழமை
சுகஹ ஸ்லோகான் வக்தும் ப்ரபவதி ந காகஹ க்வசிதபி – ஸுபாஷித ரத்னாவளி
கிளிதான் ஸ்லோகங்களைத் திரும்பச் சொல்லும் காகத்தினால் ஒருபோதும் செய்ய முடியாது

அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை- Sarasvati Puja
தலைவனை நம்பாதே ; தத்துவத்தை நம்பு –தமிழ்ப் பழமொழி (YOU DON’T NEED TO IMITATE YOUR BOSS; BUT STICK TO PRINCIPLES/ RULES)
அக்டோபர் 26 திங்கட் கிழமை- Vijaya Dasami
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்- தமிழ்ப் பழமொழி
பாடப்பாட ராகம், மூட மூட ரோகம் PRACTICE MAKES PERFECT
அக்டோபர் 27 செவ்வாய்க்கிழமை
புராண மித்யேச்வ ந சாது சர்வம் –மாளவிகாக்னி மித்ரம்
பழமை என்பதால் மட்டும் பெருமை சேர்ந்துவிடா து
அக்டோபர் 28 புதன் கிழமை
வ் ருதா வ்ருஷ்டிஹி ஸமுத்ரேஷு – சாணக்கிய நீதி 11-12
கடலில் பெய்யும் மழை எல்லாம் வீண் (தகுதியற்றவருக்கு பதவி கொடுப்பது வீண் )
*****
அக்டோபர் 29 வியாழக்கிழமை
ந பேகஹ கோகநதிநீ கிஞ்சல்கா வாத கோவிதஹ – கதா சரித் சாகரம்
செந்தாமரையின் மகரந்தத் தாதுக்களை அனுபவிக்க தவலைக்குத் தகுதி இல்லை
****
அக்டோபர் 30 வெள்ளிக்கிழமை
ந ஹி தாபயிதும் சக்யம் சாகராம்ப ஸ் த்ருனோ நுகயா – ஹிதோபதேசம்
கடல் நீரை வைக்கோல் தீப்பந்தத்தைக் கொண்டு சூடுபடுத்த முடியாது
அக்டோபர் 31 சனிக்கிழமை
வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக
நினைப்பானை நீங்கும் திரு – Tirukkural 519
நன்றாக வேலை செய்பவனின் நட்பை இழந்தால் , உள்ளதும் போய்விடும்
TAGS– தகுதி, திறமை, பொன்மொழிகள் ,அக்டோபர் 2020 காலண்டர்

—SUBHAM–