ஆர்க்டிக் பனி உருகுகிறது! Post No. 2376

polarbear480x270

வட துருவக் கரடி, நீந்த முடியாமல் தவிக்கிறது; கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர், தண்ணீர்!!!

  1. ஆர்க்டிக் பனி உருகுகிறது!

 

 Radio Talk written by S NAGARAJAN

Date: 10 Decemberember 2015

Post No. 2376

 

Time uploaded in London :– 8-43 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ஆர்க்டிக் பிரதேசத்தை ஆராய முதன் முதலாக முயன்றவர் நார்வேயைச் சேர்ந்த ப்ரிட்ஜாப் நான்ஸேன் (Fridrjof Nansen)  ஆவார். 1893ஆம் ஆண்டு பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து எப்படியேனும் அதை ஆராயக் கங்கணம் கட்டிக் கொண்ட அவர் அங்குள்ள பனி பிரதேசத்தைப் பார்த்துத் திகைத்துப் போனார். நீர்ப் பாதையே தென்படவில்லை. அவரது கப்பலைச் சுற்றி இருந்த பனிப் பாறைகள் தொடர்ந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை  இருந்ததால் தனது முயற்சியில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

 

 

ஆனால் அதே ஆர்க்டிக் பிரதேசத்தை இன்று ஒப்பிட்டுப் பார்த்தால் சுலபமாக அதில் செல்லும்படியான நீர்ப் பாதை உருவாகியுள்ளது! பனிப்பாறைகள் உருகி வருவதே இதன் காரணம் ஆகும்.

 

pg-6-arctic-ice-pa

இன்னொரு ஆச்சரியமான விஷயம், அங்கு சமீபத்தில் ஆர்க்டிக்கை ஆராயப் போன விஞ்ஞானி ஒருவருக்கு தரையைத் தோண்டிக் காட்டிய அப்பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் ஒரு உருளைக்கிழங்கைக் காட்டினார். இது வியப்பூட்டும் விஷயம் ஆகி விட்டது, எதுவுமே விளைய முடியாத பனிப்பாறைகள் இருக்கும் பகுதியில் பனி உருகி நிலப்பகுதியும் நீர்ப்பகுதியும் அதிகரிப்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.

 

 

நான்ஸேனுக்குப் பின்னால் 1926ஆம் ஆண்டு ஆர்க்டிக் பிரதேசத்தை ஆராய முனைந்த ரோல்ட் அமுண்ஸென் (Roald Amundsen) ஆர்க்டிக்கை முதன்முதலாக அடைந்தார்.

 

 

2007ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாடலைட் படங்கள் ஆர்க்டிக் எப்படி மாறி விட்டது என்பதைக் காண்பித்தது. இப்போது விஞ்ஞானிகள் நடத்தும் ஆய்விலோ ஆர்க்டிக் பகுதியில் உஷ்ணமான கடல் நீர் பாய்ந்து இன்னும் பனியை உருக்கும் என்று தெரிய வருகிறது.

 

 

பொதுவாக உலகில் அதிகமாகி வரும் உஷ்ணநிலை கடும் பனிப்பாறைகளையே உருக வைக்கிறது என்றால் அதன் பாதிப்பு எவ்வளவு கடுமையானது என்பதை நாம் சுலபமாக உணரலாம்.

 

 

இயற்கையின் சமச்சீர் தன்மையைக் காக்கும் ஆர்க்டிக் பனியை அப்படியே இருக்குமாறு காப்பது மனித குலத்தின் கையிலேயே உள்ளது. அதை எண்ணி செயல்படுவோமாக!

 

***