துலுக்கப் படைகளை விரட்டிய அனுமன் பாடல்! (Post No.6758)

Written by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 10 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  17-5
6

Post No. 6758

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

அருணாசலக் கவிராயர் (1711-1779) வாழ்க்கை பல விநோதச் செய்திகள் அடங்கியது. அதில் ஒன்று அவர் அனுமன் மீது பாடல் பாடி தூள் கிளப்பியது ஆகும். இதைக் கேட்ட படையினர், வீராவேசத்துடன் போராடி துலுக்கப் படைகளை விரட்டி அடித்தனர். இதோ 1945ம் ஆண்டில் யோகி சுத்தானாந்த பாரதியார் எழுதிய நூலில் இருந்து ஒரு காட்சி.

இவர் சங்கீத மும்முர்த்திகள் காலத்துக்கும் முந்தியவர். ராமனின் புகழ்பாடும் ராம நாடகக் கீர்த்தனை பாடி ராம பக்தர்களின் இருதயத்தில்  அழியா இடம்பெற்றவர். ஏன் பள்ளி கொண்டீர் ஐயா என்று திருவரங்க நாதன் மீது பாடல் பாடியவர். கம்பனைப் போலவே தன்னுடைய நூலையும் அதே கோவிலில் –ஸ்ரீரங்கம் கோவிலில் –அரங்கேற்றியவர். tamilandvedas.com, swamiindology.blogspot.com

தந்தை பெயர்-  நல்ல தம்பிப் பிள்ளை, தாயார் பெயர் வள்ளியம்மை, மனைவி பெயர் மீனாட்சி. பிறப்பிடம் தில்லையாடி, வாழ்ந்த ஆண்டுகள் 67.