தூய்மை பற்றி வள்ளுவனும், அதர்வண  வேதமும் (Post No.10,411)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,411

Date uploaded in London – –   5 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great

தூய்மை பற்றி வள்ளுவன் பல்வேறு இடங்களில் பேசுகிறான். அதர்வண வேதத்திலும் ரத்தினச் சுருக்கமாக ஒரு துதி உள்ளது. முதலில் அதை பார்த்துவிட்டு வள்ளுவனுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

அதர்வண வேதம், ஆறாவது காண்டம், துதி 19; சூக்தம் எண்  192

1.தேவர்கள் என்னைத் தூய்மை செய்க!

மானிடர்கள் என்னை அறிவால் தூய்மை செய்யட்டும்!

உலகிலுள்ள எல்லாப் பொருட்களும் என்னைத்  தூய்மைப் படுத்தட்டும்!

தூய்மை செய்பவன் / பவமானன்  என்னைத்  தூய்மைப்  படுத்தட்டும் !

2.விவேகம் பெறவும், சக்தி பெறவும், நீண்ட ஆயுள் பெறவும், அசைக்கமுடியாத பாதுகாப்பு பெறவும் என்னைத்  தூய்மைப்  படுத்தட்டும் !

3.ஸவித்ரு தேவனே சோம ரஸத்தை நசுக்கிப் பிழிவதாலும் வடிகட்டுவதாலும் சுத்தப்படுத்துமாறு   தூய்மைப்  படுத்துக

XXXX

எனது வியாக்கியானம்

தூய்மை எனப்படுவது இருவகைப்படும்.

உள்ளத் தூய்மை

உடல் தூய்மை

வள்ளுவன் அழகாகச் சொல்கிறான்

புறந் தூய்மை நீரான் அமையும் அகந் தூய்மை

வாய்மையால் காணப்படும் – குறள் 298

நீரினால் உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

சத்தியத்தால் உள்ளத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்..

சத்தியம் என்பது மூவகைப்படும்- உண்மை, வாய்மை, மெய்மை .

அதாவது மனம், மொழி, உடல் (THOUGHT, WORD AND DEED) ஆகியவற்றில் சத்தியத்தைப் பின்ப ற்றுத்தலை ‘திரிகரண சுத்தி’ என்பர். இதுதான் உண்மையான சத்தியம்.

இதை முதல் மந்திரம் அழ்காகச் சொல்கிறது.

தேவர்களே என்னை சுத்தப்படுத்துங்கள் என்று சொல்லிவிட்டு ‘சான்றோர்கள், அறிவால் என்னை சுத்தம் செய்யட்டும்’ என்கிறார் இதை பாடிய  ரிஷி. அதாவது கேள்வி ஞானம் மூலம், படிப்பது மூலம் நாம் சுத்தம் – மனச்  சுத்தம்–  பெறுகிறோம். அடுத்தபடியாக சோப்பு, சீயக்காய் முதலிய  .. எல்லாப் பொருட்களையும் சுத்தம் செய்வதைக் குறிப்பிடுகிறார். வள்ளுவனும் குளியல் முதலியவற்றை ‘நீரான் அமையும்’ என்று சொல்லிவிட்டார்.

இரண்டாவது மந்திரம், தூய்மையால் கிடைக்கும் நன்மைகளைப்  பட்டியல் இடுகிறது. சுத்தமாக இருந்தால் விவேகம், சக்தி, நீண்ட ஆயுள், பாதுகாப்பு கிடைக்குமாம். இதை விளக்க நம்முடைய புராணங்களில் பல கதைகள் உண்டு. நளன் என்னும் மன்னனைப் பிடிப்பதற்கு சனைஸ்சரன் (சனி பகவான்) காத்திருந்தானாம். எளிதில் முடி யவில்லை ; ஒரு நாள் கால் கழுவி வந்த போது ஒரு சிறிய பகுதியில் தண்ணீர் படவில்லை. அங்கே அசுத்தம் இருந்தது. அது வழியாகப் புகுந்த சனி பகவான் அவனை ஏழரை ஆண்டுகளுக்கு ஆட்டிவைத்தான். மனைவியைப் பிரிந்து காட்டில் கஷ்டப்பட்டுட்டான் . இதை கலி அல்லது சனி என்பர். இரண்டுக்கும் கருப்பு/ அழுக்கு என்பதே பொருள்.

மூன்றாவது மந்திரத்துக்கு இரண்டு விதமாகப் பொருள் சொல்லலாம் .சோம ரசத்தை எடுக்க, சோமக்கொடியை நசுக்கி ஜுஸ் JUICE எடுத்து, அதை வடிகட்டி, ஹோமத்தில் ஆகுதி செய்வார்கள்; பின்னர் அருந்துவார்கள்; அது போல என் மனதையும் நசுக்கிப் பிழிந்து வடிகட்டி சுத்தம் செய்யவும். மற்றோர்  பொருள் – ஸோம ரசத்தை சாப்பிட்டால் மனம் சுத்தம் அடையும் என்று கல்வெட்டும் வேத மந்திரமும் கூறும். அப்படி சுத்தம் அடையட்டும் என்று ரிஷி சொல்கிறார் போலும்.

XXX

மனத் தூய்மை  பற்றி வள்ளுவன்

மனத் தூய்மை  பற்றி வள்ளுவன் சொல்லும் இடம் வேறு ஒரு த ப்பின் கீழ் வருவதால் பலருக்கும் தெரியாமல் போய்விடுகிறது.  சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தின் கீழ் நாலைந்து குறள்களில் நல்ல கருத்த்துக்களை முன்வைக்கிறார்.

மனம் போல மாங்கல்யம்

ஒருவர் என்ன நினைக்கிறாரோ அதுவாகவே  மாறிவிடுவர். பாசிட்டிவ் / ஆக்கபூர்வ எண்ணங்கள் இருந்தால் அது நல்ல பலன் தரும் ; இதைத்தான் மனம் போல மாங்கல்யம் என்றும், மனம் இருந்தால் மார்க்கம்/ வழி உண்டு என்ற பழமொழியும்  கற்றுத் தருகிறது

மனந் தூய்மை செய்வினை  தூய்மை இரண்டும்

இனந் தூய்மை  தூவா வரும் -455

மனந் தூயார்க்கெச்சம்  நன்றாரும் இனந் தூயார்க்கு

இல்லை நன்றாகா வினை – குறள் 456

இந்த இரண்டு  குறள்களும் நல்ல கருத்துக்களை விளக்குகின்றன.

மனத்தின் தூய்மை முக்கியம்; செய்யும் தொழிலின் தூய்மையும் முக்கியம்; இவை இரண்டுக்கும் மிக முக்கியமானது யாருடன் சேர்ந்து அதைச் செய்கிறோமோ  அவர்களுடைய குணமும் உதவியும் அவசியம்; அதை பொருத்தே வெற்றி அமையும் ; சத் சங்கம் அவசியம். – குறள் 455

மனம் சுத்தமாக இருந்தால் பிள்ளைகள், புகழ் எல்லாம் நல்லபடியாகவே அமையும் ; அவர்களுக்கு  கெட்டது எதுவுமே வராதாம் . இதை பகவத் கீதையில் கண்ணனும் சொல்கிறான்.

பார்த்தா! (அர்ஜுனா )

நிச்சயமாக நல்லதைச் செய்பவன் எவனும் தீய நிலையை அடையவே மாட்டான் அவனுக்கு இம்மையிலும் அழிவு இல்லை; மறுமையிலும் அழிவு இல்லை.  — பகவத் கீதை 6-40

ந ஹி கல்யாணக்ருத் கச்சித்  துர்க்கதிம் கச்சதி – 6-40

தம்ம பதத்திலும் புத்தர் இதையே செப்புகிறார் (காண்க 314)

–சுபம் –

TAGS- பகவத் கீதை 6-40, குறள் , அதர்வண வேதம், தூய்மை

நூறு வயதானவர்களின் மகிமை! (Post No.3136)

100-yr-old-berry-seller

100 year old lady sells berries on the road!

Written by London Swaminathan

 

Date: 8 September 2016

 

Time uploaded in London: 21-34

 

 

Post No.3136

 

Pictures are taken from various sources; thanks.

A over 100 year old Sadhu at the Shambhu Nath Hindu Cremation Area, Kathmandu Nepal

A over 100 year old Sadhu with his incredible long hair at the Shambhu Nath Hindu Cremation Area, Kathmandu Nepal

ஒரு பந்தியில் (வரிசையில்) யார் யார் உட்கார்ந்தால் அந்த வரிசையே தூய்மையாகிவிடும், புனிதமாகிவிடும் என்று மனுஸ்மிருதியில், மனு ஒரு பட்டியல் கொடுக்கிறார். அதில் 100 வயதுக் கார்களையும் சேர்த்திருக்கிறார். அவர்கள் அனுப்பும் VIBRATIONS வைப்ரேஷன்ஸ் — எல்லோரையும் உயர்த்திவிடும். அதுவும் அவர்களை யாருடன் சேர்த்து வைத்திருக்கிறார் என்பதைப் பார்க்கையில் 100 வயதானவர்களின் மதிப்பு இன்னும் உயர்கிறது!

அவர்களுக்கு “பங்தி  பாவனாள்” என்று பெயர்

 

ஆக்ரயா: சர்வேஷு வேதேஷு சர்வ ப்ரவசனேஷு ச

ஸ்ரோத்ரியான் அன்வயஜா: ச ஏவ விக்ஞேயா:  பங்க்திபாவனா:

 

வேதார்த்தவித்ப்ரவக்தா ச ப்ரஹ்மசாரி சஹஸ்ரத:

சதாயுஸ்சைவ விக்ஞேயா: ப்ராஹ்மணா:  பங்க்திபாவனா:

 

மனு 3- 184-186

 

வேதங்களைக் கற்றுத் தேர்ந்த அறிஞர்கள், அதன் ஆறு அங்கங்களையும் (ஷட்+ அங்கம்= ஷடங்கம்=சடங்கு) அறிந்தவர்கள், அவர்கள் வம்சத்தில் பிறந்தவரகள், ஆகியோர் வரிசையைப் புனிதப்படுத்துவர்.

 

குருவினிடத்தில் வேதப் பொருளை அறிந்தவன்,  அதைச் சொல்லிவைப்பவன், பிரம்மச்சாரி, ஆயிரம் பசுக்களை தானம் செய்தவன், நூறு வயதானவன் ஆகியோரும் எங்கே உட்காருகிறார்களோ அந்த வரிசையே தூய்மை ஆகிவிடும்!

 

மனு ஸ்மிருதியில் மூன்றாவது அத்தியாயத்தில் மனு இதைச் சொல்லுகிறார்.

0phil

இந்தப் பட்டியலில் உள்ள எல்லோரும் வேதம் கற்றவர்கள், தானம் செய்தவர்கள். ஆனால் இதில் வயதுக்கு மதிப்பு கொடுக்கப்பட்டிருப்பது விஷேஷமானது.  நூறு வயது ஒருவர் வாழ்கிறார் என்றால் அவர் வாழ்வு சுத்தமானதாக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்; மேலும் வேத மந்திரங்களில்  நிறைய இடங்களில் “நூறாண்டுக் காலம் வாழ்க; நோய் நொடியில்லாமல் வாழ்க” என்ற பிரார்த்தனை வருகிறது.

 

வேதங்களின்படி ஒருவனுடைய ஆயுள் நூறு வயதுதான். ஆயுர்வேத, சோதிட சாத்திரப்படி ஒருவனின் வயது 120 ஆகும்.

 

வாழ்க நூற்றாண்டு கண்டோர்!