Written by london swaminathan
Date: 12 May 2016
Post No. 2804
Time uploaded in London :– 17-57
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
க்ருபண இவ தாதா ந பூதோ ந பவிஷ்யதி
ந புஞ்சன்னேவ சர்வஸ்வம் பரஸ்மை ச: ப்ரதாஸ்யதி
“உலகிலேயே மிகப் பெரிய கொடையாளிகள் கருமிகள்தான்!! அவர்களைப் போல கடந்த காலத்தில் இருந்ததுமில்லை; எதிர்காலத்தில் இருக்கப் போவதுமில்லை. ஏனெனில் அவர்கள் சாப்பிடுவது கூட இல்லை. எல்லாவற்றையும் பிறருக்கே (இறந்தபின்) விட்டு விடுகிறார்கள்.”
இது சம்ஸ்கிருதக் கவிஞர் ஒருவரின் கிண்டல்!
தமிழ் கவிஞர் வேறு ஒரு விதமாக கருமிகளைக் கிண்டல் செய்கிறார். மனிதர்களை மூன்று வகையாகப் பிரித்து விடுகிறார். மனிதர்கள் மூன்று வகையான மரங்களைப் போன்றவர்கள் என்கிறார்
உத்தமர்தாம் ஈயுமிடத்தோங்கு பனை போல்வரே
மத்திமர்தாந் தெங்குதனை மானுவரே – முத்தலரும்
ஆம் கமுகு போல்வராம் அதமர் அவர்களே
தேங்கதலியும் போல்வார் தேர்ந்து
–நீதிநெறிவெண்பா
பனைமர மனிதர்கள்
பனைமரத்துக்கு தண்ணீர்விடவே வேண்டாம்; அது தண்ணீர் விடாமலே பலன் தரும்; உத்தம மனிதர்களும் அவ்வகையே. பலனை எதிர்பாராமல் பலன் தருவர்.
தென்னைமர மனிதர்கள்
தென்னை மரத்துக்கு அவ்வப்பொழுது தண்ணீர் விட்டால்தான் பலன் தரும். அது போல நடுத்தர (மத்திம) மனிதர்கள், பிறர் உதவி செய்தால் அந்த அளவுக்கு திருப்பி உதவி செய்வர்.
பாக்கு மரமனிதர்கள்
பாக்கு மரமும் வாழை மரமும் எப்பொழுதும் தண்ணீர் விட்டால்தான் பலன் தரும்; அது போன்ற மனிதர்கள் கடைத்தர மனிதர்கள். எப்பொழுதும் பாராட்டினாலோ, பலன் கிடைக்கும் என்று தெரிந்தாலோதான் உதவி செய்வார்கள்.
முள் சூழ்ந்த பழ மரம் போன்ற மனிதர்கள்
தமிழர்கள் இயற்கை அன்பர்கள். நிறைய பாடல்களில் மனிதர்களையும் மரங்களையும் ஒப்பிட்டு தங்களது கருத்துக்களைச் சொல்லுவார்கள். நல்ல பழம் கொடுக்கும் மரங்களைச் சுற்றி முள் புதர் வளர்ந்தால் அனதப் பழங்கள் யாருக்கும் பயன்படாது. அது போல சில நல்ல கொடையாளிகளைச் சுற்றி கெட்ட மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் முட்செடிகளைப் போல தானும் கொடுக்கமாட்டார்கள், மற்றவர்களையும் கொடுக்கவிட மாட்டார்கள்.
தாமும் கொடார் கொடுப்போர் தம்மையும் ஈயாதவகை
சேமம் செய்வாரும் சிலருண்டே – ஏம நிழல்
இட்டுமலர் காய்கனிகளிந்து உதவு நன்மரத்தைக்
கட்டுமுடை முள்ளெனவே காண்
–நீதிநெறிவெண்பா
தென்னை மரத்தின் தியாகம்!
பர்த்ருஹரி என்னும் சம்ஸ்கிருதப் புலவனும் அவ்வையாரும் தென்னை மரத்தை உவமையாக்கி ஒரு கவிதை புனைந்துள்ளனர்.
தென்னை மரத்தைப் பார்! பூமிக்கடியில் இருக்கும் வெறும் தண்ணீரை உறிஞ்சி எடுத்து அதைத் தலையால் (இளநீரால்) இனிய இளநீராக்கித் தருகிறது ஒருவருக்கு உதவி செய்தால் ஒருநாள் அவரும் இளநீர் போலத் திருப்பித் தருவர்.:-
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தரும் கொல்லென வேண்டா – நின்று
தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்
–வாக்குண்டாம்
–சுபம்–
You must be logged in to post a comment.