Written by London swaminathan
Date: 6 March 2017
Time uploaded in London:- 6-10 am
Post No. 3696
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
இந்துக்களின் தெய்வங்களான பிள்ளையார், அனுமார், ஹயக்ரீவர், நரசிம்மர், வராகாவதாரம் முதலிய உருவங்களை மேலைநாட்டினர் பார்த்தால் மனதுக்குள் சிரிப்பார்கள்; இது என்னடா? இவர்கள் எல்லாம் (STONE AGE) கற்காலத்தில், (Iron Age)உலோக காலத்தில், ஆதிகாலத்தில் (Primitive) வாழ்கிறார்களா? என்று உள்ளுக்குள் நகைப்பார்கள். ஆனால் அவற்றின் தத்துவங்களை விளக்கினால் வியப்பார்கள்; நம்மை மதிப்பார்கள். இது போலத்தான் எகிப்திய தெய்வங்களும். 120-க்கும் மேலான முக்கிய தெய்வங்களின் பட்டியல் உள்ளது. எகிப்திய தெய்வங்களைப் பற்றிய தனி புத்தகங்களும் உள்ளன. இவைகளைப் புரிந்துகொள்ள இந்துமதம் மிகவும் துணை புரியும். ஆனால் 5000 ஆண்டுக் காலமாக வாழும் இந்துமதம் போலன்றி மத்திய கிழக்கில் வணங்கப்பட்ட 3000 தெய்வங்களும், எகிப்தில் வணங்கப்பட்ட சுமார் 200 தெய்வங்களும் மியூசியங்களில் காட்சிப் பொருள்களாகிவிட்டன!!!
வேத காலத்தில் 30, 40 தெய்வங்களுடன் இருந்த இந்துமதம், பின்னர் எப்படி நூற்றுக் கணக்கான தெய்வங்களை உருவாக்கியதோ, வேத காலத்தில் இருந்த நாலே ஜாதி எப்படி இன்று 4000 ஜாதிகளாக மலர்ந்தனவோ அதுபோல எகிப்தின் 5000 ஆண்டுக்கால வரலாற்றில் தெய்வங்கள் பல்கிப் பெருகின. இந்து மதத்தில் எப்படி தலபுராணங்களில் ஒவ்வொரு ஊரிலும் தெய்வம் பற்றிக் கதைகள் உளவோ அதுபோல எகிப்திலும் உள்ளூர் தெய்வங்கள் வளர்ந்தன. ஆனால் இந்து மதத்திலுள்ள, உயரிய கருத்துக்கள் — மனிதனும் தெய்வமே= அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி — போன்ற தத்துவார்த்த கருத்துகள் அங்கே வளர்ந்ததாகத் தெரியவில்லை. புராண அளவில் கதைகள் நின்றனவே அன்றி உபநிஷதம் கண்ட உண்மைப் பொருள் அளவுக்குப் போகவில்லை.
மூன்றடுக்கு தெய்வங்கள்
எகிப்திய தெய்வங்களைப் பொதுவாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1.தேவதைகள் குடியிருக்கும் சில பொருள்களுக்கு (Fetishes) மந்திர சக்தி உண்டு என்று எண்ணி அவைகளை வழிபடுதல்.
2.மனித உருவிலுள்ள கடவுளர் (Gods in Human forms)
3.மிருகங்கள், பறவைத் தெய்வங்கள் (Zoomorphic Gods)
நிறைய பேருக்கு கடைசி வகைதான் எகிப்திய தெய்வங்கள் என்ற எண்ணம் இருக்கிறது. அதவது, நாய், பூனை, ஆடு, சிம்மம், கொக்கு, வாத்து, வண்டு, கழுகு குரங்கு, முதலை, காளை முதலியவற்றின் படங்களைப் பார்த் தவுடன் அது மனதில் பதிந்துவிடுகிறது.
இயற்கையை அவர்கள் போற்றியதை இந்த தெய்வங்கள் பிரதிபலிக்கின்றன. மகிழ்ச்சி, இன்பம் என்ற கருத்தை வெளிப்படுத்த அவர்கள் வரைந்த சித்திர எழுத்து ‘பசுவும் கன்றும்!’
கடவுள், இறைவன், ஆண்டவன் என்றெல்லாம் தமிழில் பொதுவாகச் சொல்லுவது போல எகிப்திய மொழியில் NETJER நெட்ஜெர் என்று தெய்வத்தை அழைத்தனர்.
வேத காலத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு அம்சம் (Truth and Order) உண்மையும் ஒழுங்கும்.
ஆங்கிலச் சொற்களான உண்மையும் ஒழுங்கும் —-TRUTH ட்ரூத், RHYTHM ரிதம் ஆகியன எல்லாம் சம்ஸ்கிருதச் சொல்லான ருதம் ‘RTAM’ என்பதிலிருந்து வந்தவையே. இது வேதகாலச் சொல். இதை எகிப்தியரும் நம்பினர்.
ஆரம்பகால தெய்வங்கள்:
ஆதம் ATUM = படைப்புக்கடவுள்
ரே RE =சூரியக் கடவுள்
ஹதோர் HATHOR, ஈஸிஸ்/ ஐஸிஸ் ISIS = தேவி
நெய்த்NEITH == போர் தேவதை
ப்தா PTAH (பிதா) = சக்திக் கடவுள்
ஆசிரிஸ் OSIRIS
சேத் SET = தீமையின் கடவுள்
ஹோரஸ் HORUS = மன்னர் கடவுள்
பிற்கலத்தில் பல புராணக் கதைகளை உருவாக்கி ஆசிரிஸ் – சேத் – ஹோரஸ் பகைமையைக் காட்டினர்.
இது இந்து மதத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் இடையே பிற்காலத்தில் மோதல்களை உண்டாக்கியதற்குச் சமம்.
தத் (THOTH) என்னும் கடவுள் மொழிகளின் கடவுள்; ஹெர்மாபாலிஸ் என்ற நகரில் வழிபடப்பட்டார்.
மாதா(Ma’at) என்ற இளம்பெண் உண்மை, நேர்மை, ஒழுங்கு /கட்டுப்பாடின் தெய்வமாக வழிபடப்பட்டாள். எகிப்தில் மனிதர்களின் தோற்றத்துடன் தொடர்புடைய கடவுள் மாத் (ஆ). கடவுள் உலகைப் படைக்க முடிவு செய்தவுடன் மாதாவை கையில் தூக்கி உதட்டில் முத்தமி ட் டார். ஒரு சதுப்பு நிலத்திலிருந்து நீர்ப்பறவை குரல் எழுப்பியவுடன் படைப்பு துவங்கியது என்பது எகிப்திய கதை.
பல தெய்வங்கள் — ஆசிரிஸ் உள்பட — மேற்காசியாவிலிருந்து வந்தவை. இதனால் காலப்போக்கில் எகிப்திய கடவுளரின் பங்கு பணிகள் மாறின.
இந்துக்களுக்கு வேதம் என்பது ரகசியப் பொருள் உடைய மந்திரங்கள்; அதன் மேலோட்டமான இலக்கிய அர்த்தத்தைப் பார்க்கக்கூடாது என்பது தெரியும். அதனால் சங்க காலத் தமிழர்கள், வேதங்களை மறை (ரஹசியம்) என்று மொழி பெயர்த்தனர். அது போல எகிப்திலும் ரஹசியப் பெயர் உடைய ஒரு சக்தியைக் கண்டு (He whose Name is Hidden) தெய்வங்களும் பயந்தன என்ற வழக்கு உண்டு.
மிக சக்தி வாய்ந்த ஹோரஸ் என்ற தெய்வத்தை பருந்து வடிவில் (கழுகு) சித்திரம் வரைவர். இந்தப் பருந்துகூட பெரிய கடவுளின் (HIDDEN GOD) அரண்மனையில் மதில்சுவரில் உட்கார்ந்து இருக்கும் என்பர். இதை இந்து மதத்திலுள்ல பிரம்மன் அல்லது தேவி பாகவதத்தில் வரும் திருமூர்த்திகளும் வணங்கும் தேவிக்கு ஒப்பிடலாம்.
எகிப்திய வரலாற்றில் இந்த மறைந்திருக்கும் தெய்வம் (He whose Name is Hidden) யார் என்பதை எழுதாவிடிலும் சிலர் அமன் (AMUN) என்னும் தெய்வம்தான் என்று சிலர் சொல்லுவர். இந்துக்களின் அம்மன் அல்லது பிரமன் இப்படித் திரிந்திருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏனெனில் பிதா, சவிதுர் (ஹதோர்) ஹோரஸ் (சோலஸ்= சோலார்= சூர்ய), ரே முதலிய சம்ஸ்கிருதச் சொற்கள் அவர்களின் கடவுளர் பெயர்களில் உள்ளன.
நட்சத்திரக் கடவுள்கள் (Star Gods= Stellar Deities)
நட்சத்திரங்கள் என்பன புண்யாத்மாக்கள், தேவர்கள் என்று இந்துக்கள் கருதினர் (Vanaparva in Mahabharata). பிரமிடுகள் கட்டத் துவங்கியதிலிருந்து இந்த நம்பிக்கை வலுப்பட்டது. இறைவனான மன்னன், இறந்தவுடன் நடசத்திரங்களுக்கு அப்பால் பயணம் செய்வான் என்று நம்பினர். இதனால் நட்சத்திரங்களை நோக்கி பிரமிடின் சாளரங்களை அமைத்தனர். குறிப்பாக சிவனுடன் தொடர்புடைய ORION ஒரியன் (ஓரையன்=அரையன்) நட்சத்திர மண்டலம் இவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அங்குதான் சிவனுடைய ஆருத்ரா நட்சத்திரமும், மிருக சீர்ச நட்சத்திரமும் உள்ளன.
கட்டாய குருமார் (PRIEST SERVICE) சேவை
சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளில் கட்டாய ராணுவ சேவை உள்ளது போல ஆரம்பகாலத்தில், உயர் பதவியிலுள்ள எல்லோரும், கோவில்களில் கட்டாயமாக குருமாராக (குருக்களாக ) இருக்கவேண்டும் என்று இருந்தது. இது நம்பூதிரிகளைப் போல ஒரு குறிப்பிட்ட காலம் செய்ய வேண்டிய பணி. பின்னர் குருக்கள் வேலை தனித் தொழிலாக பரிணமித்தது. எல்லா கோவில்களிலும் ராஜாதான், கொள்கை அளவில் தலைமை குருக்கள். அங்கு வேலை பார்க்கும் குருக்கள் ராஜாவின் பிரதிநிதி. சில கோவில்கள் காலப்போக்கில் மிகவும் பிரபலமாகி அதன் குருக்களும் செல்வாக்குடையவர் ஆயினர்.
1.மெம்பிஸ் (Priest of Ptah of Memphis) நகர பிதா கோவில் குருக்கள்
2.ஹீலியோபாலிஸ் ரே (Priest of Re of Heliopolis) கோவில் குருக்கள்
3.தீப்ஸ் நகர அமன் (Priest of Amun of Thebes) கோவில் குருக்கள் – ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்
முதலில் கடவுள் என்பவர் ராஜாவின் ஆள், பொதுமக்களுக்குத் தொடர்பில்லை என்று இருந்தது. ஆனால் காலப்போக்கில் கடவுள் எல்லோருக்கும் தொடர்புடையவர், எல்லோரையும் கட்டுப்படுத்துபவர் என்ற கொள்கை வளர்ந்தது. இதனால் கோவில்கள் செல்வாக்கும் செல்வமும் பெற்றன.
எகிப்தில் தத்துவக் கருத்துகள் (Philosophical) காணப்படவிடினும் உண்மை, நீதி, நேர்மை, ஒருவரை ஒருவர் மரியாதையுடன் நடத்துவது ஆகியன இருந்தன. எகிப்தியர்களுடைய நம்பிக்கைகள் என்ன என்பதை மிகவும் பிற்காலத்தில் எழுந்த கிரேக்க நூல்கள் மூலமே அறிய முடிகிறது.
முக்கிய தெய்வங்களின் பட்டியலையும் பங்கு பணிகளையும் அடுத்த பகுதியில் இந்து சமய தெய்வங்களுடன் ஒப்பிட்டு ஆராய்வோம்.
to be continued…………………………..