தெய்வீகத் தாமரை!!!- Part 1

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8743

Date uploaded in London – –27 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தெய்வீகத் தாமரை!!!

நமது பாரதத்தில் எல்லா கடவுளோடும் சம்பந்தப் படுத்தப் பட்ட

ஒரு பொருள் உண்டென்றால் அது தாமரையாகத்தான் இருக்கும்.தூய்மையின்

அடையாளமாக க கருதப்படும் இந்த

“சேற்றில் விளைந்த செந்தாமரைதான்”, நமது நாட்டின் தேசீய

மலராகும். நமது நாட்டிற்கு மட்டுமல்ல வியடநாம் நாட்டிற்கும்

இதுவே தேசீய மலர்!!!

பகவான் கிருஷ்ணன் பகவத்கீதையில் சொல்ல மறந்தது

மலர்களிலிலே நான் தாமரை” ஏன் தெரியுமா???

அவரே “தாமரைக்கண்ணனாக”உதித்ததினால்தான்!!!

தாமரையின் பிறப்பிடம்

ஆதி காலத்தில் ஆதிசேஷன் மீது ஆனந்த சயனத்திலிருந்த

மஹா விஷ்ணுவின் வயிற்றில் தோன்றியதே இந்த தாமரை மலர்!!!

மஹாவிஷ்ணு மட்டுமல்லாமல் மஹா லட்சுமியும் தனது இருப்பிடமாக

கொண்டு விட்டாள்!!!எல்லா தெய்வங்களுக்கும் இருப்பிடமாகி

விட்டது தாமரைப்பூ!!! ஒன்று ஆசனமாக, நிற்கும் உபகரணமாக

அல்லது கையில் பூவாகவோ, மொட்டாகவோ……..

கவுதம புத்தராகட்டும், வர்த்தமான மகா வீர்ராகட்டும் தாமரைப்பூவே

ஆசனமாயிற்று!!! கல்விக் கடவுளாகிய ஸரஸ்வதியோ தனக்கென

ஒரு வெள்ளை கலரை செலக்ட் செய்து கொண்டு விட்டாள்!!!வெள்ளைத் தாமரைப்பூவிலிருப்பாள், வீணை செய்யும்

ஒலியிருப்பாள்!!

எகிப்து கோவில்களில் தாமரைப்பூ முக்கிய இடம் வகிக்கிறது

சைனா,ஜப்பான், மலேஷியா,போன்ற தென் கிழக்கு ஆசிய

நாடுகளில் உள்ள எல்லா கோவில்களிலும், கடவுளர்களிடமும்

கட்டங்களிலும் தாமரைப் பூவிற்கே முதலிடம்……மற்ற வெளிநாடுகளில் அழகிற்காக காகிதம், மெட்டி,தெர்மாகோலில்

செய்து அலமாரிகளில் வைத்துக் கொள்கிறார்கள்.

இப்பூவுலகில் தாமரை

தாமரையின் பிறப்பிடமே சேரும் சகதியும்தான்…….

ஆகையினால்தான் ஏழையாகப் பிறந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு

வந்தவரை “சேற்றில் விளைந்த செந்தாமரை” எனகிறோம்.

குளம், குட்டை தேங்கிய கலங்கிய தண்ணீரில் இரட்டை விதை

கொண்ட நீர்வாழ் தாவரமாக வளர்கிறது தாமரை……எக்காலமும்

ஓடும் நீரில் இது விளையாது.

இதன் அமைப்பு

மிக மிக அழகான வண்ணமான இளம் ரோஸ் கலரும் வெண்மையும்

கலந்த கவர்ச்சிகரமாக தோற்றமளிக்கும் இந்த செந்தாமரை சூரியன்

வரும்போது மலரும். சூரியன் மறையும்போது குவியும்.மலர்ந்த

செந்தாமரை சுமார் 6 அங்குல அகலத்திற்கு அழகாக நிறைய இதழ்களுடன் காட்சி அளிக்கும். இந்த பூவிற்குப் பெயர் சதபத்ரி.

“சதபத்ரி” என்றால் 100 இதழ்கள் கொண்டது என்று அர்த்தம்.

சேற்றிலிருந்து கிழங்கு, கிழங்கிலிருந்து தண்டு .இந்த தண்டு

முளைத்து பெரிய இலைகள் இரண்டு உருவாகும்.இலையின்

அடிப்பாகத்திலுள்ள காம்பிலிருந்து உருவாகிறது பூ!!!!தனக்குத்

தேவையான தண்ணீர் தவிர ஒருசொட்டு கூட அதிகமாக

எடுக்காது!!!பூவிலும், இலையிலும் பட்ட தண்ணீரும் முத்துப்போல்

வழிந்தோடிவிடும்!!!

பழமொழி – “தாமரைக்கும் தண்ணீருக்கும் எப்போதுமே சண்டை

வந்ததில்லை”

இதன் அறிவியல் பெயர்

“நெலம்போ நூசி fபேரா” – NELUMBO NUOCI FERRA

இது “மக்னோலியாப்சிடா” பிரிவைச் சேர்ந்தது.

தாமரையின் மற்ற பெயர்கள்

அரவிந்தம்,பங்கேருகம், கோகனகம், முளரி, புண்டரீகம், வனசம்,

அம்போருகம், கமலம், இண்டை, சத பத்ரி, வாரிஜம், ஜலஜம்,

அம்புஜம், சரோஜம்,நளினம்,கமலம், அரும்பு, செங்கமலம்,

ராஜீவி.

கவனிக்க-நமது பெண்களுக்கு இருக்கும் அதிகமானவை

தாமரையின் மறு பெயர்கள்தாம்!!.

நன்றி- திரு. சந்தானம் சுவாமி நாதன் எழுதிய

“தாமரையின்வேறு பெயர்கள் “என்ற tamilandvedas

இதழுலிருந்து நம்பர்- 5 6 4 0, தேதி 8 நவம்பர் 2018

எடுக்கப்பட்டது

ஆகாயத் தாமரை

இப்படி ஒரு கொடியினம் தண்ணீரின் மிக வேகமாகப் படர்ந்து

சேத த்தை விளைவிக்கிறது. சில மருத்துவ குணம் இருந்தாலும்

தீமைகள் அதிகமாக இருப்தினால் இதை வளர விடாமல்

தடுப்பது நமது கடமை.

பொற்றாமரைக் குளம்

மதுரை ஶ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுள்ள குளத்தின் பெயர்

பொற்றமரைக் குளமாகும் .முன்னொரு காலத்தில் இந்த இடம்

கடம்ப வனமாகவும்,நடுவே சுயம்பு லிங்கமாக இருந்த சிவ

பெருமானுக்கு இந்திரன் இந்த குளத்திலிருந்த பொன்னாலாகிய

தாமரைகளால் அர்ச்சனை செய்ததாக வழக்கு.

இன்று அந்த ஞாபகார்த்தமாக 3 “அடி “அகலமுள்ள அழகிய “பொன்னாலாகிய தாமரை”

அந்த குளத்தில் மிதப்பதைக் காணலாம்.

தாமரையும் தெய்வீகமும்

அறிவிற்சிறந்த சான்றோர்கள் பவுர்ணமி, மற்றும் நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் செந்தாமரை இதழ்கள் கொண்டு தேவிக்கு அர்சசனை செய்கிறார்கள்.

செந்தாமரை மலர்களையே வரிசையாக கோர்த்து மாலையிட்டு

வேண்டிக் கொள்வதும் உண்டு.

தாமரை மணி மாலைகள் ஜபம் செய்வதற்கும் கழுத்தில் அணிவதற்கும் உடலுக்கும், உள்ளத்திற்கும், சிறந்ததாகும்.

To be continued…………………………………………..

tags– தாமரை, தெய்வீகம்