தேக்கடி ராஜா கதையும் டார்ட்போர்ட் டால்பின்களும் (Post No.7515)

tamilandvedas.com, swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7515

Date uploaded in London – 30 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

அன் பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் (ப்பாள் ) ? என்றான் வள்ளுவப்  பெருந்தகை. இந்த அன்பு உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் உண்டு என்பதை பஞ்ச தந்திரக் கதைகளும். சங்க இலக்கியக் காட்சிகளும் காட்டுகின்றன.நேற்றைய பிரிட்டிஷ் பத்திரிகைகள் வெளியிட்ட ஒரு செய்தி மேலும் இரண்டு சமபவங்களை நினைவுபடுத்தின. 1. நான் பள்ளிப் பருவத்தில் 1960-களில் படித்த ‘தேக்கடி ராஜா’ கதை (இணைப்பைப் பாருங்கள்) மற்றொன்று உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய நாய். இப்போது டோக்கியோவில் சிலையால் புகழ் பெற்றுவரும் நாய். இது தவிர மாதாகோவிலுக்கு வந்த நாய், சங்கராசார்ய மடத்தில் இருந்த நாய், மஹாபாரதத்தில் பாண்டவர்களைத் தொடர்ந்து வந்த நாய், ரிக் வேதத்தில் உள்ள சரமா நாய், அதை கிரேக்கர்கள் ஹெர்மஸ் என்று காப்பியடித்த நாய் என்று ஏராளமான மிருகங்களின் கதைகளை இந்த ‘பிளாக்’கில் படிக்கலாம். இது தவிர சிவன் மூலம் முக்தி பெற்ற மிருகங்களின் கதைகளையும் கொடுத்தேன்.

புதுக் கதையை மட்டும் எழுதுகிறேன் …..

இங்கிலாந்தின் தென் மேற்கு மூலையில் உள்ளது டெவன் பிராந்தியம். அதில் உள்ள டார்ட்போர்ட் அருகில் கிங்ஸ்வேர் (Kingswear near Dartford in Devon, England) என்னும் இடத்தில் கடலில் 20 டால்பின்கள் (Dolphins) கரையை நோக்கி நீந்தி வந்தன.  அவை அங்கே சோகத்துடன் தத்தளித்துக் கொண்டு இருந்தன. ஒன்றிரண்டு டால்பின்களை அரிதே காணும் மக்களுக்கு இது வியப்பாக இருந்தது. பின்னர்தான் விஷயம் புரிந்தது. அதற்கு முதல் நாளன்று கடற்கரை தடுப்புச்சுவர் அருகில் ஒரு குட்டி டால்பின் இறந்து கிடந்தது.   தலையில் இரண்டு வெடிகுண்டுக்கு காயங்கள் இருந்தன.

செத்துப்போன தனது குழந்தையைத் தேடி அதன் தாயாரும் தகப்பனும் நண்பர்கள் உறவினர்கள் புடை சூழ அந்தக் கடற்கரைக்கு வந்ததாகப் பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.

டால்பின்களும் திமிங்கிலங்களளும் குட்டி போட்டு பால் கொடுக்கும் கடல் வாழ் பிராணிகள் (Mammals). மீன் போல தோன்றினாலும் மீன் வகையை சேர்ந்தவை அல்ல. டால்பின்களின் மூளை மிகப்பெரியவை. மனிதர்களை போல குடும்பத்துடனும் உறவினர்களுடனும் கூட்டாக வாழும் பிராணி வகை. உலகம் முழுதும் டால்பின்களை பற்றி நிறைய கதைகள் உண்டு. கிரேக்க நாட்டுச சிறுவனை டால்பின் ஏற்றி சென்று காப்பாற்றிய கதை முதல் இன்று வரை பல சம்பவங்கள்.

சுருக்கமாக

டோக்கியோ நாய் ஹசிகோ தனது இறந்து போன எஜமானரைக் காண ஒன்பது ஆண்டுகளுக்கு நாள் தோறும் , அவர் வந்து இறங்கும் ரயில் நிலையத்துக்கு வந்து சென்றது.

தேக்கடி ராஜா கதை இறந்து போன யானைத் தலைவனுக்கு நள்ளிரவில், நடுக் காட்டில், பௌர்ணமி இரவில் நூற்றுக்கணக்காண யானைகள அஞ்சலி  செய்த கதை.  இது நான் பள்ளிக்கூடத்தில் இருக்குபோது பத்திரிகையில் தொடராக வந்து எல்லோரையும் அசத்திய கதை- 50 ஆண்டுகளுக்குப் பின்னர் லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியில் மீண்டும் படித்தேன். டால்பின் செய்தி வந்தவுடன் அதுவும் நினைவுக்கு வந்தது.

OLD ARTICLES IN THE BLOG

tamilandvedas.com › 2013/01/19 › வேத-நா…

வேத நாயும் மாதா கோவில் …

  1.  

19 Jan 2013 – வேத நாயும் மாதா கோவில் நாயும் … பூர்வ ஜன்மத்தில் ஒரு மடத்தின்/ கல்வி நிறுவனத்தின் தலைவர் தாம் என்றும் அப்போது …

tamilandvedas.com › 2015/07/12 › செய்நன…

செய்நன்றி:- நன்றியுள்ள … – Tamil and Vedas

  1.  

12 Jul 2015 – செய்நன்றி:- நன்றியுள்ள யானையும்குடிகாரப் பாம்பும்! … நன்றியுள்ள பிராணிகள் பற்றி நிறையவே படித்து இருக்கிறோம்.

Gajendra Moksha in Africa !! | Tamil and Vedas

https://tamilandvedas.com/2012/08/02/gajendra-moksha-in-africa/

  1.  

2 Aug 2012 – Believe it or not it happened in Africa very recently. … The meaning of the word Gajendra Moksha is Gaja=elephant, Indra= the leader or the …

—SUBHAM