நம் பந்தம் போக்க வந்த சம்பந்தர்!

sambadar

திருஞான சம்பந்தர் சிலை

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by S NAGARAJAN

Date: 22 September 2015

Post No: 2180

Time uploaded in London :– 14-25

(Thanks  for the pictures) 

 

 

தேவார சுகம்

நம் பந்தம் போக்க வந்த சம்பந்தர் கவசம் அணிவோம்!

 

.நாகராஜன்

 

சமணரை வென்று சைவம் தழைக்கச் செய்த சம்பந்தர்

சூறாவளிப் புயல் போல பாரதமெங்கும் சுற்றி, தேவையற்றவைகளை அகற்றி, புற மதத்தவரின் வாதங்களைத் தகர்த்து, ஷட் மதங்களை ஸ்தாபித்த ஆதி சங்கரர் உலக வரலாற்றில் ஓர் அற்புதம் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடும்போதே அதற்கு இணையான ஒரு அதிசயம் அவர் வயதில் பாதி வயதே வாழ்ந்து சமணர்களின் சூழ்ச்சிகளைத் தவிடு பொடியாக்கி சைவத்தைத் தழைத்தோங்க வைத்த சம்பந்தரின் அவதாரம் என்றால் அது மிகையல்ல!

16 ஆண்டுகளே வாழ்ந்தார். பாலனாக இருந்து பரமனுடன் நேரடியாக உடலுடன் சேர்ந்தார்சூழ இருந்தவர்களையும் அழைத்துக் கொண்டு! வரலாற்றில் இது போன்ற நிகழ்ச்சி இது ஒன்றே ஒன்று தான்!

அதுவும் இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் தான் நடந்தது.

இறைவியிடம் பால் குடித்த மூன்று வயது பாலகன். தோடுடைய செவியன் என்று கண்ணாரக் கண்ட இறைவனைப் பாடத் தொடங்கினார்.

பாடிக் கொண்டே இருந்தார்தெய்வத் தமிழில்.

சமணர்கள் கொடுமைப் படுத்த, சைவர்கள் நடுங்கி ஒடுங்கி இருக்கப் புயலென எழுந்தார் அந்தப் புனிதர்.

மதுரையில் அவரை எதிர்கொண்டு அழைக்க வந்த பாண்டிய மஹாராணியார் ஒரு பாலனைப் பார்க்கவே வியப்பும் குழப்பமும் அடைந்தாள்.

மஹாசூழ்ச்சிக்காரர்களான சமணர்களின் மாயாஜால சித்து வேலைகளை, பால் மணம் மாறாப் பச்சிளம் பாலகனா வெல்ல முடியும். வெல்லுவது இருக்கட்டும், பாலகனுக்கு எந்த விதத் தீங்கும் ஏற்பட்டு விடக் கூடாதே என்று அந்தத் தாயுள்ளம் உருகியது. கருணை பொங்கும் விழிகளால் சம்பந்தரை அவள் பார்த்தாள். அதில் பொங்கி வந்த கருத்து வெள்ளத்தை உணர்ந்த சம்பந்தர் ஒரு போடு போட்டார் இப்படி:-                                                              

மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு மாபெரும் தேவி!

apparsambandar

கேள்!

பானல் வாயொரு பாலன் ஈங்கிவன் என்று நீ பரிவு எய்திடேல்” 

(பாண்டிமாதேவியே, என்ன பயந்து விட்டாயா? என்னை பாலன் என்று எண்ணி பயப்படாதே!)

ஆனைமாமலி ஆதியாய இடங்களில் பல அல்லல் சேர் ஈனர்களுக்கு எளியேன் அலேன்!

(இந்த ஈனர்களுக்குச் சரியான ஆள் நான் தான்! இவர்களை மட்டும் அல்ல; இன்னும் மோசமானவர்களையும் சந்திக்கத் தயார்!)

திரு ஆலவாய் அரன் நிற்கவே!

(என்னை யாரென்று எண்ணி, நீ பார்க்கிறாய்! நான் பார்வதியின் மைந்தன் கந்தனே! அந்த சிவனுக்கே தகப்பன் சாமி நான்)

இந்த ஒரு பாடலில் முழித்துக் கொண்டவள் தான் மஹாராணி! ‘எனக்கென்ன மனக்கவலைஎன்று முழுப் பொறுப்பையும் அவரிடம் கொடுத்து விட்டாள்.

விளைந்தது பல லீலைகள்! சமணர் கழுவேற, தமிழ் நாட்டில், சைவம் நிலை கொண்டது.

திருஞானசம்பந்தர் பதினாறாயிரம் பதிகங்கள் (ஒரு பதிகம் என்பது 10 பாடல்கள்) அருளிச் செய்ததாக ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதிஎன்ற தனது நூலில் நம்பியாண்டார் நம்பி குறிப்பிடுகிறார். ஆனால் நமக்குக் கிடைத்திருப்பதோ 383 பதிகங்களே. பாடல் எண்ணிக்கையில் கணக்கிட்டால் நம்மிடம் இன்று இருப்பது சுமார் 4147 பாடல்களே!

Boy saint Sambandhar meeting Appar the great.

பற்று விட ஒரு பற்று பற்றுக!

பற்றுகள் எல்லாம் போக பற்றற்றவனை ஒரே பற்றாகப் பற்று என்றார் திருவள்ளுவர். அதே வழியில் நம் பந்தமெல்லாம் போக some பந்தம்தேவை தானே! ஒரே ஒரு பந்தமாக நம் பந்தம் போக்க வந்த சம்பந்தரைக் கொண்டு விட்டால் கவலை ஏது, இனி!

அவர் பாடல்கள் எதுவானாலும் சிவ புண்ணியம் இருந்தால் மட்டுமே அதைப் பாட முடியும், படிக்க முடியும். அனைத்துமே சிவ அருள் தருபவை. மாதிரிக்காகச் சில பாடல்கள் இதோ!

இந்த சம்பந்தர் பாடல்கள் என்னும் சம்பந்தர் கவசத்தை அணிந்து கொண்டால் எந்த வினையும் வந்த வழி போய் விடும்.

சம்பந்த கவசம் நம் பந்த வினை அறுப்பதோடு இன்னும் ஒரு நன்மையையும் தருவதை அவரே திருச்சிராப்பள்ளி, ‘நன்றுடையானைப் பதிகத்தில்அருளுகிறார் இப்படி:-

ஞானசம்பந்தன் நலம் மிகு பாடல் இவை வல்லார்                               

வான சம்பந்தத்து அவரோடு மன்னி வாழ்வாரே!”

ஆக வான சம்பந்தம் விழைவோரெல்லாம் வாருங்கள்; அவர் பாடல்களைப் படிப்போம்; அருள் பெறுவோம்!

வான சம்பந்தம் பெற ஞானசம்பந்தர் பாடல்கள்!

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்                            

காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்                                

ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்தேத்த அருள்செய்த                         

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

இடரினும் தளரினும் எனது உறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்

நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன்

காதல் ஆகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது, வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது, நாதன் நாமம் நமச்சிவாயவே

thiruganasambandar

 “துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்                                                           

நெஞ்சு அகம் நைந்து நினைமின் நாள்தொறும்                                                                                      

வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று                                               

அஞ்ச உதைத்தன அஞ்சு எழுத்துமே

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு                                      

சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு                                                   

தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு                                            

செந்துவர்வாய் உமைபங்கன் திருஆலவாயான் திரு நீறே

நாள் ஆய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கே                                    

ஆள் ஆய அன்பு செய்வோம் மட நெஞ்சே

வெய்ய வினை தீர, ஐயன் அணி ஆரூர்                                            

செய்ய மலர் தூவ, வையம் உமது ஆமே

மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்                               

 நிறையவன் உமையவன் மகிழ் நடம் நவில்பவன்                                

இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்                                              

உறைவு என உடையவன் எமை உடையவனே

நீறு பூசினீர், ஏறு அது ஏறினீர்                                                            

கூறு  மிழலையீர் பேறும் அருளுமே

 “நீ நாளும் நன்னெஞ்சே நினை கண்டாய் யாரறிவார்                                 

சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம் பெருமாற்கே                              

பூநாளும் தலைசுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப                                     

நாநாளும் நவின்று ஏத்தப் பெறலாமே நல்வினையே

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து                        

முன்னம் நீ புரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்                           

மன்னு காவிரி சூழ் திருவலஞ்சுழி வாணனை வாயாரப்                              

பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்                                 

எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலைக்                                          

கண்ணின் நல்லஃது உறும் கழுமல வளநகர்ப்                                          

பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா                                   

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

(குறிப்பு: இந்தப் பாடலை கடைசி எழுத்திலிருந்து மாற்றிப் படித்தாலும் அதே பாடலே வரும். சீர்காழியில் பாடிய திருமாலைமாற்றுப் பாடல் இது!)

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்                                         

சோதிக்க வேண்டா சுடர் விட்டு உளன் எங்கள் ஜோதி                             

மா துக்கம் நீங்கல் உறுவீர் மனம் பற்றி வாழ்மின்                                  

சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே

வாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம்                                                 

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக                                                     

ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே                                                        

சூழ் வையகமும் துயர் தீர்கவே

*****