Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 November 2018
GMT Time uploaded in London –17-34
Post No. 5668
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
அடடா, அடடா, அயோடின் -டா கட்டுரையின் இரண்டாம் பகுதி
நேற்று வெளியான முதல் பகுதியில் சில சுவையான சம்பவங்களைக் கொடுத்தேன். இதோ மேலும் சில சுவையான சம்பவங்கள்.
நெப்போலியன் பிரான்ஸ் நாட்டை ஆண்ட காலத்தில், பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் இடையே பல ஆண்டுகளுக்கு யுத்தம் நடந்தது. அப்பொழுது வெடிமருந்து, வெடிகுண்டு செய்யத் தேவையான பொட்டாஸியம் நை ட் ரே ட் பிரான்ஸுக்குக் கிடைக்காமல் இருப்பதற்காக பிரிட்டன் கடற்படையை வைத்து பிரான்ஸை முற்றுகையிட்டது. பிரெஞ்சுக்காரகள் வேறு எவ்வகையில் பொட்டாஸியம் நை ட் ரே ட் செய்யலாம் என்று ஆராயத் துவங்கினர். கடற் பாஸியில் உள்ள ரசாயனப் பொருளை பயன்படுத்தலாம் என்று அதோடு பொட்டாஸியம் உள்ள பல பொருட்களைச் சேர்த்தனர்.
அப்போது ஒரு அதிசயம் நடந்தது. பள பளப்பான கறுப்பு நிற படிகங்கள் குடுவையில் சேர்ந்தன .அதை சூடாக்கிப் பார்த்தபோது ஊதா நிற ஆவி வந்தது. பெர்னார்ட் கூர்த்வா என்பவர் இதைக் கண்டுபிடித்தார். ஆனால் அவர் வேறு இருவரிடம் கொடுக்கவே அது ஜோசப் கே லுசக் என்பவர் கைக்கு வந்தது. அவர் இது ஒரு தனி மூலகம் என்பதை அறிந்து கிரேக்க மொழியில் ஐயோட்ஸ் என்று பெயரிட்டார். இதன் பொருள் ‘வயலெட் நிறம் போன்ற’– இதிருந்து பிறந்த சொல்தான் அயோடின்.
இதை மேற்கொண்டு சோதனைக்காக பிரிட்டனை சேர்ந்த ஹம்ப்ரி டேவிக்கு அனுப்பினர். பிரான்ஸ்- பிரிட்டன் போரையும் பொருட்படுத்தாது அவரை பாரிஸ் நகருக்குள் நுழைய நெப்போலியன் அனுமத்தித்தான். அவர் ஹோட்டல் அறையில் தங்கியவாறே சோதனைகளைச் செய்து, இது தனி மூலகமே என்றார்.
வழக்கமாக மற்றவர்கள் செய்ததை பிரிட்டிஷார் திருடி அதை தமது சாதனை போலக் காட்டுவர். ஆகையால் ஹம்ப்ரி டேவிதான் (Humphrey Davy) அயோடினை கண்டுபிடித்தவர் என்று பறை அறிவித்தனர்.
இந்த சர்ச்சை 100 ஆண்டுகளுக்கு நீடித்தது. பிரெஞ்சுக்காரர்கள் விடவில்லை. அயோடின் கண்டுபிடித்த நூற்றாண்டு விழா என்று 1913ல் பாரீஸில் பெரிய விழா கொண்டாடிவிட்டனர்.
மருத்துவத்தில் அயோடின்
இப்படி அயோடின் பற்றிய சர்ச்சை ஒரு புறம் இருக்க, அனைவரும் அயோடினின் மருத்துவப் பயனைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் துவங்கினர். அந்தக் காலத்தில் முன்கழுத்துக் கழலை
நோய் என்பதற்கு (கழுத்தில் கட்டி) கடற்பாஸியைக் கொடுத்து கட்டுப்படுத்தினர். இதை உணர்ந்த டாக்டர் ஜீன் பிரான்ஸ்வா காயின்டே என்பவர் பொட்டாஸியம் அயோடைட் திரவத்தை நோயாளிகளுக்குக் கொடுத்தார். ஆனால் அது கடுமையான வயிற்று நோவை உருவக்கியது. பின்னர் அது கைவிடப்பட்டது. ஆனால் இதன் மூலம் டிங்சர் அயோடின் என்ற கிருமி கொல்லும் மருந்து கிடைத்தது. இப்போதும் காயங்களுக்கு டிங்சர் அயோடின் போடுகின்றனர்.
மனிதர்களின் கழுத்தில் தைராய்ட் (Thyroid Glands) சுரப்பி உளது இது இரண்டு வகை ஹார்மோன்களை உற்பத்தி செய்யும். இது அதிகம் ஆனாலும் நோய் வரும். குறைந்தாலும் நோய் வரும் .இது குறைந்தால் முன்கழலை,உடலில் குளிர், மனத்தொய்வு, காய்ந்து போன சருமம், களைப்பு என்று பல பிரச்சினைகள் வரும் . அதிகம் ஆனாலோ அமைதியினமையும் அதிக அலட்டலும் உண்டாகும். ஆகையால் ரத்தத்தில் அயோடின் உள்ள அளவைக் கொண்டு இதை தீர்மானித்து மருந்து கொடுக்கத் துவங்கினர்.
கர்ப்பிணிகளுக்கு அயோடின்
கர்ப்பமான பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் தேவையான அளவுக்கு அயோடின் இருந்தால்தான் குழந்தையின் நரம்பு மண்டலம் வளர்ச்சி பெறும். இதனால் இப்போது கர்ப்பிணிப் பெண்களையும் இந்த கோணத்தில் அதிகம் கவனிக்கின்றனர்.
இயற்கையாக முட்டைக் கோசு, காளான், சூரிய காந்திச் செடி விதைகள், பல வகை மீன்கள் ஆய்ஸ்டர் (Oysters) எனப்படும் சிப்பியில் இருக்கும் பிராணி ஆகியவற்றில் இது அதிகம் இருக்கிறது. ஆரோக்கிய வாழ்வுக்கு அயோடின் அவஸியம்.
–subham–