நகைச்சுவை நாடக மன்னன் அரிஸ்டோபனிஸ் (Post No.9795)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9795

Date uploaded in London – 30 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நகைச்சுவை நாடக மன்னன் அரிஸ்டோபனிஸ்

நாற்பது நகைச்சுவை நாடகங்களை 2400 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி ‘நகைச் சுவை நாடகங்களின்  தந்தை என்ற புகழுரை பெற்றவர் (Aristophanes) அரிஸ்டோபனிஸ் . ஆயினும் சாக்ரடீஸைக் குறை சொல்லி அவருக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தவர் என்ற இகழுரையும் இவருக்குண்டு. இவர் எழுதிய ஒரு கிண்டல் நாடகம் தவளைகள் பற்றியது . அதை கம்ப ராமாயண, ரிக்வேதத் தவளைப்பாட்டுட ன்   ஒப்பிட்டு முன்னரே எழுதினேன் இணைப்பை கட்டுரையின் இறுதியில் காண்க

பிறந்த ஆண்டு- கி.மு.450

இறந்த ஆண்டு – கி.மு.385

இன்றைய தினம் நாம் டெலிவிஷனிலும் திரைப்படங்களிலும் நிறைய முழு நீள நகைச் சுவைப் படங்களை பார்க்கிறோம். இவைகளுக்கு வித்திட்டவர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் வாழ்ந்த அரிஸ்டோபனீஸ் ஆவார். சம்ஸ்க்ருத நாடகங்களில் பிராமணர்களுக்கு விதூஷகன் (comedian)  என்னும் நகைச்சுவை கதாபாத்திரத்தைக் கொடுப்பது 2000 ஆண்டுக்கு முன்னர் இருந்த இந்திய வழக்கம். காளிதாசனின் நாடகங்களில் இதைக்காணலாம். ஆகையால்தான் தற்கால திரைப்படங்களிலும் பிராமணரைக் கொண்டு பிராமணர்களைக் கிண்டல், கேலி, நக்கல், பகடி செய்யும் காட்சிகள் இடம்பெறுகின்றன.ஆனால் கிரேக்க நாட்டில் முழு நீள காமெடிக்கள்  (comedies) இருந்தன. சம்ஸ்க்ருதம் போல எல்லா நாடகங்களிலும் விதூஷகன் என்னும் கதாபாத்திரம் இருந்ததாக, அதுவும் ஜாதி அடிப்படையிலான நகைச் சுவை நடிகர் இருந்ததாகத் தெரியவில்லை.  சங்க இலக்கியத்திலும் கூட பிராமணர்தான் பிராமணர்களைக் கிண்டல் அடிக்கமுடியும். இதைக் கபிலர் என்னும் புலவர் செய்கிறார். காண்க- குறிஞ்சிக் கலி , கலித்தொகை.

அரிஸ்டோபனிஸ் எழுதிய சுமார் 40 நாடகங்களில் நமக்கு இப்போது 11 மட்டுமே கிடைக்கின்றன. இதில் ஒன்று ‘மேகங்கள்’ (The Clouds) என்ற நாடகம் ஆகும். இதுதான் சாக்ரடீஸுக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தது என்று சாக்ரடீஸின் சீடர் பிளாட்டோ (Plato) குற்றம்சாட்டுகிறார்.

அரிஸ்டோபனிஸ், கிரேக்க நாட்டின் தலை நகரமான ஏதன்ஸில் பிறந்தார்.  இருபது வயதுக்கு முன்னரே எழுதத் தொடங்கினார். இவர் வாழ்ந்த காலம், கிரேக்க நாட்டில் எல்லாத் துறைகளிலும் பெரும் மாறுதல் நிகழ்ந்த காலம் ஆகும் .அப்போது (Athens) ஏதென்ஸ் நகரம் அதன் பரம வைரியான ஸ்பார்ட்டா (Sparta) நகர அரசு மீது போர் தொடுத்தது. இந்தப் போர் 27 ஆண்டுகளுக்கு நீடித்தது.

இந்தப் போரில் மகத்தான ஏதென்ஸ் நகர அரசு தோல்வி அடைந்தது. இதனால் புகழோங்கிய கிரேக்க கலாசாரம் ஆட்டம் கண்டது. நாட்டில் அராஜகம் நிலவியது. ‘அ+ராஜகம்’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு அரசன் இல்லாத நிலை என்று பொருள். ஆள்பவன் வலுவாக இல்லாவிடில் ‘தடி டுத்தவன் எல்லாம் தண்டல் நாயகம்’ ஆகிவிடுவான். இப்படி ஒரு நிலை ஏதன்ஸில் ஏற்படவே சர்வாதிகாரிகள் ஆட்சி உண்டாகியது . தன்னைச் சுற்றி ஏற்படும் நிகழ்ச்சிகளை நாடகமாக வடித்தார் அரிஸ்டோபனிஸ்;  அவர் எழுதிய நாடகங்களில் அரசியல்வாதியை முட்டாளாகவும் சாதாரண குடிமகனை அறிவாளியாகவும் சித்தரித்தார். அதாவது சாதராணக் குடிமகன் அரசியல் தலைவர்களைத் தோற்கடித்து விடுவான்.தத்துவ ஞானிகள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரையும் குறை சொன்னார். எல்லா இடங்களிலும் நிலவிய ஊழலை எடுத்துக் காட்டினார். இரு பொருள்படும்படி  (Satires) அங்கதங்களை இயற்றினார். இதில் அவர் மஹா மேதையான சாக்ரடீஸையும் விடவில்லை. சாக்ரடீஸுக்கு எதிரான குற்றம்சாட்டிய ஏதென்ஸ் அரசு அரிட்டாபனீசின் வசனங்களையும் பயன்படுத்தியது. சாக்ரடீசை அவர் பைத்தியக்காரன் என்றும் அவர் கிரேக்க (Greece)  நாட்டில் விஷ- விஷமக் கருத்துக்களை வித்திடுவதாகவும் குற்றம்சாட்டினார். இறுதியில் சாக்ரடீஸ் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது .

ராமன் பெயர் உள்ளவரை ராவணன் பெயரும் இருக்கும். சாக்ரடீஸ் பெயர் உள்ளவரை அரிஸ்டோபனிஸ் பெயரும் நீடிக்கும்.

Publications

The Acharnians

The Knights

The Clouds

The Wasps

The Peace

The Birds

Lysistrata

Thesmophoriazusae

The Frogs

Plutus

xxxxxxxxxxxxxxxxx

ரிக்வேதத்திலும் கம்ப … – Tamil and Vedas

https://tamilandvedas.com › ரிக்…

  1.  

15 Dec 2016 — ரிக்வேதத்திலும் கம்ப ராமாயணத்திலும் தவளைப்பாட்டு! … ரிக்வேதத்தின் ஏழாவது மண்டலத்தில் வசிஷ்டர் பாடிய தவளைப் …

அரிஸ்டோபனிஸ் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

  1.  

8 Aug 2017 — Written by London Swaminathan. Date: 8 August 2017. Time uploaded in London​- 20-46. Post No. 4140. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks …

Aristophanes | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › aristophanes

  1.  

15 Dec 2016 — Aristophanes was the greatest comic playwright of ancient Greece. His comedies are the earliest roots of the film, theatre and television comedies …


Aristophanes, Vashistha and the Frog Song in the Rig Veda …

https://tamilandvedas.com › 2016/12/15 › aristophanes-…

  1.  

15 Dec 2016 — 3452) | Tamil and Vedas …


Posts about Fish God on Tamil and Vedas | Ancient sumerian …

https://www.pinterest.es › pin

  1.  

Jun 5, 2016 – Posts about Fish God written by Tamil and Vedas. … In Plato’s Symposium (189–190 AD), Aristophanes displays knowledge of an ancient myth of …

Tags- அரிஸ்டோபனிஸ் , கிரேக்க , நாடகங்கள், நகைச்சுவை ,

நகைச்சுவை நாடக ஆசிரியர் ஷெரிடன் (Post No.9755)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9755

Date uploaded in London – –20 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ரிச்சர்ட் பிரின்ஸ்லி ஷெரிடன் (RICHARD BRINSLEY SHERIDAN)  நகைச்சுவையுடன் எழுதும் நாடக ஆசிரியர் ஆவார்.

அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் பிறந்தார். நடிப்பும் நாடகமும் அவர் ரத்தத்தத்தில் ஊறிப்போன விஷயங்கள் ஆகும். அவரின் தந்தை ஒரு நடிகர். தாயாரோ நாடகங்களையும் நாவல்களையும் எழுதியவர்.

ஆயினும் அவரது குடும்பம் வறுமையில் தவித்தது. வாங்கிய கடன்களைத் திரும்பிச் செலுத்த இயலவில்லை. ஆகவே ஷெரிடன் , கல்வி கற்பதற்காக இங்கிலத்துக்குச் சென்றபோது, குடும்பம் பிரான்ஸுக்கு  குடியேறியது .

பிறந்த தேதி –அக்டோபர்  31, 1751

இறந்த தேதி – ஜூலை 7, 1816

வாழ்ந்த ஆண்டுகள் – 64

PUBLICATIONS எழுதிய நூல்கள் –

1775- தி ரைவல்ஸ்  THE RIVALS

1775 – செயின்ட் பாட்ரிக் டே SAINT PATRICK’S DAY

1775 – தி டுவேன்னா THE DUENNA

1777- தி ஸ்கூல் பார் ஸ்கேண்டல் THE SCHOOL FOR SCANDAL

1779 – தி க்ரிட்டிக் THE CRITIC

ஷெரிடனுக்கு 19 வயதான போது , அவருடைய குடும்பம் இங்கிலாந்துக்கு வந்தது.அவர்கள் பாத் என்னும் நகரில் வசித்தனர்.

அங்கு ஷெரிடன் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டார்.எலிசபெத் அன் லின்லி என்பவருடன் அவர் காதல் விவகாரத்தில் சிக்கினார். அவர் சிறந்த பாடகி.அவருக்காக இரண்டு முறை மற்றவர்களுடன் மோதினார் .1773ல் இருவரும் கல்யாணம் செய்துகொண்டு லண்டனுக்கு வந்தனர்

லண்டனில் டாக்டர் ஜான்ஸன் , ஆலிவர் கோல்ட்ஸ்மித் ஆகிய பிரமுகர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. எலிசபெத்தின் பாடல் தொழில் மூலமே அவர்கள் காலம் தள்ளியிருக்க முடியும். ஆனால் ஷெரிடன் , எழுத்துமூலம் பிழைக்க எண்ணினார்.

23 வயதில்  தி ரைவல்ஸ் என்ற நாடகத்தை எழுதினார். அதே ஆண்டில் மேலும் இரண்டு நாடகங்களை எழுதி வெளியிட்டார். மூன்றும் வெற்றி அடைந்தன. உடனே பிரபல நாடக அரங்கு அவருக்கு நடிகர்/ மானேஜர் என்ற இரண்டு பணிகளை அளித்தது.

ஷெரிடன் எழுதிய நாடகங்களில் மிகவும் நகைச்சுவை ததும்பியது ஸ்கூல் ஃ பார் ஸ்கே ண்டல் என்ற நாடகம்தான். 18ம் நூற்றா ண்டின் நாடகங்களில் மிகவும் பிரபலமானது . முட்டாள்தனமும், கொடூரமும், சுய விளம்பரமும் கொண்ட மனிதர்களைக் கிண்டல் செய்யும் நாடகம் இது .

நாடகத்தில் பேசிப் பேசி நல்ல பேச்சாளராக உருவானார். இதன் மூலம் பிரிட்டிஷ் பார்லிமெண்டுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர் பதவியையும் வகித்தார்.

XXX

old article

ஷெரிடன் கொடுத்த சூடான பதில் (Post …

https://tamilandvedas.com › ஷெர…

1.     

Translate this page

13 Aug 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). ஐரிஷ் கவிஞர், நாடக ஆசிரியர், அங்கத எழுத்தாளரான ஷெரிடன் வாழ்வில் நடந்த …

—subham—

tags- நகைச்சுவை, நாடக ஆசிரியர்,  ஷெரிடன்

அமெரிக்க நாவலாசிரியர் மார்க் ட்வெய்ன் (Post No.9731)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9731

Date uploaded in London – –14 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

MARK TWAIN

(1835 – 1910)

மார்க் ட்வெய்ன் என்று பலராலும் அறியப்பட்ட அமெரிக்கா நாவலாசிரியரின் இயற்பெயர் சாம்வெல் க்ளெமென்ஸ் (SAMUEL LANGHORNE CLEMENS) மார்க் ட்வெய்ன் பயணக் கட்டுரைகளையும் எழுதினார். பெரிய நகைச்சுவை எழுத்தாளர்.

     அமெரிக்காவில் மிஸ்ஸௌரி என்னும் இடத்தில் பிறந்தார். அவர் பிறந்தபோது ஹாலியின் வால் நட்சத்திரம் தோன்றியது. அடுத்தாற்போல ஹாலியின்(Halley’s Comet)  வால் நட்சத்திரம் வருகையில் இறந்தும் விடுவோம் என்று அவருக்கு உள்ளுணர்வு உணர்த்தியது. அதுபோலவே 1835-இல்  தோன்றிய வால்நட்சத்திரம் 1910-இல் —– திரும்பி வந்தபோது அவர் இறந்தார்.

ட்வெய்னுக்கு 12 வயதானபோது தந்தையை இழந்தார். உடனே வேலைக்கும் சென்றார். அச்சகம் ஒன்றில் ஒரு அச்சு இயந்திர ஊழியராக சேர்ந்தார். அதே நேரத்தில் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதத் தொடங்கினார், பின்னர் அச்சகப் பணியை விட்டு மிஸிஸிபி நதியில் படகில் வேலைப் பார்க்கத் தொடங்கினார்.

அமெரிக்க உள்நாட்டுப்போர்  ஏற்பட்டபோது இணைப்பாளர் அணியில் சேர்ந்து போராடினார். இரண்டே வாரங்களில் மீண்டும் பத்திரிகை துறைக்குத் திரும்பினார். அப்போதுதான் மார்க் ட்வைன் என்ற புனைப்பெயரில் எழுதத்தொடங்கினார். படகோட்டிகளின் (பேச்சு வழக்கில்) கொச்சை மொழியில் இதற்கு 2 ஆள் ஆழம் என்று பெயர்.

1865ஆம் ஆண்டில் அவர் உலகப்பயணம் மேற்கொண்டார். பயணக் கட்டுரை எழுதுவதே இதன் குறிக்கோள். ஆனால் அவர் மத்தியதரைக் கடல் வட்டாரத்திற்குச் சென்று THE INNOCENTS ABROAD என்ற நூலை எழுதினார். இது வெற்றிபெறவே நியூயார்க் நகருக்குத் திரும்பி வந்து பணக்காரப் பெண்ணை கல்யாணம் கட்டினார் . திருமணத்திற்குப் பின்னர் TOM SAWYER, HUCKLEBERRY FINN, A YANKEE AT THE COURT OF KING ARTHUR ஆகிய நாவல்களை எழுதினார்.

டாம் சாயர், ஹக்ல்பெர்ரி ஃபின் ஆகியோரின் வாழ்வில் மிஸிஸிபி ஆறு ஒரு பெரிய சக்தியாக விளங்கியது.

மார்க் ட்வெய்ன் பிறந்த ஹானிபல் என்ற ஊரில் டாம் சாயரின் நினைவாக ஆண்டுதோறும் வெள்ளையடிக்கும் போட்டி நடத்தப்படுகிறது. இதில் மிஸிஸிபி மாணவர்கள் பங்கு பெறுவது வழக்கம்.

பணக்காரராக மாறிய மார்க் ட்வெய்னுக்கு திடீரென்று தாழ்வு ஏற்பட்டது. கடன்காரராக மாறினார். கடனைத் திருப்பிக் கொடுப்பதற்காக உலகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ஆனால் நாடு திரும்பியவுடன் மேலும் ஒரு துயரம் நேரிட்டது. மனைவியும் மூன்று புதல்விகளில் இருவரும் இறந்தனர்.

ட்வெய்ன் அவர்கள் கருதியதைப்போலவே ஹாலியின் வால்நட்சத்திரம் தோன்றியபோது இறந்தார்.

— end —

tags மார்க் ட்வைன் , மார்க் ட்வெய்ன் , நகைச்சுவை, Mark Twain, Samuel Clemens,

கொஞ்சமாவது சிரியுங்கப்பா! (Post No.9139)

Compiled   BY KATTUKKUTY

Post No. 9139

Date uploaded in London – – 13 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சென்னை கற்றுக்குட்டி நமக்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக நோட்டு நோட்டாக பழங்கால ஜோக் jokes குகளை ஒட்டி வைத்து, சேகரித்து வைத்து இருக்கிறார். சில ஜோக்குகள் — தமாஷ்கள் –சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் . மொத்தத்தில் ‘ஜோக்’ குகள் மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் . இதோ 50  ஆண்டு பழமையான JOKES ஜோக்குகள்.

இன்னிக்கு நமக்கு நல்ல விருந்துதான்!!

கூழ் ஆனாலும் குளித்துக் குடி ; கந்தையானாலும் கசக்கிக் கட்டு ; கார்க் ஆனாலும் ஹெலிகாப்டரிலிருந்து பிடுங்கு 

நகைச் சுவைத் துணுக்குகளைப் பார்த்தவர்கள் நல்லாவே சிரிச்சுருப்பாங்க

–subham—

Tags – தமாஷ் , ஜோக் ,நகைச்சுவை

சிறப்பாக வாழ, சிரித்து மகிழுங்கள் (Post No.4634)

Date: 19 JANUARY 2018

 

Time uploaded in London- 6-39 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4634

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நகைச்சுவையே நல்ல மருந்து!

 

சிறப்பாக வாழ, சிரித்து மகிழுங்கள்!

 

ச.நாகராஜன்

 

1

நகைச்சுவை உணர்வு இருந்தால் தான் இந்த உலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையைச் சீருடனும் சிறப்புடனும் இருக்குமாறு அமைத்துக் கொள்ள முடியும்.

 

சிறப்பாக வாழ, சிரித்து மகிழுங்கள்!

 

நல்ல நல்ல நகைச்சுவை புத்தகங்களைப் படித்தல், ஜோக் புத்தகங்களை வாங்கிச் சேகரித்து வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது படித்து மகிழ்தல், நல்ல ஜோக்குகளை பத்திரிகைகளிலிருந்து எடுத்து சேகரித்தல் போன்றவற்றால் ஒரு ஜோக் களஞ்சியம் எப்போதும்ச் நம்மிடம் இருக்கும்.

எனது ஜோக் களஞ்சியத்திலிருந்து சில உதிரிகளை இங்கு உதிர்த்து விடுகிறேன் – படித்து மகிழ!

 

நகைச்சுவையில் பல ரகம் உண்டு.

இதைப் பற்றி மிகத் தீவிரமாக் ஆய்ந்து எத்தனை வகை என்று கூறும் அறிஞர்களும் உண்டு.

 

இப்போது நாம் பார்க்கும் நகைச்சுவை என்ன வகை என்பதைப் படித்து முடித்த பின்னர் நீங்களே கூற முடியும்.

2

க்ரிமால்டி என்பவர் உலகின் மிகச் சிறந்த காமடியன். அவர் ‘ஷோ’க்களுக்குச் சென்று சிரிக்காமல் திரும்ப வரவே முடியாது.

அவரைப் பற்றிய் ஒரு ஜோக் இது!

 

There is a famous story told of Grimaldi, a well known comedian.

He went to consult a famous doctor, asking for some cure for acute melancholia.

The doctor suggested: “Go, and see Grimaldi.”

“Alas! I am Grimaldi” replied the patient.

 

3

A one –eyed doctor greeted a patient with “How are you?”

“As you see,” replied the latter.

“Then”, said the doctor, “If you are as I see, you are half dead.”

 

4

A beautiful girl was attending the lectures of a Greek philosopher. A grain of dust flew into her eye.

She begged the professor’s aid for its removal and as he stooped to the gallant task some one cried, “Do not spoil the pupil.”

 

 

 

5

When Dr Barton Warren was informed that Dr Vowel was dead, he exclaimed, “What! Vowel dead? Well, then heaven it was neither you nor I.”

 

 

6

Burke, when pressed by a shopkeeper for the payment of a bill, or for the interest at least, if not for the principal, produced a masterpiece.

“Sir”, he said, “it is not my principle to pay the interest, or my interest to pay the principal.”

 

7

Hurrying to office a busy executive was pestered by his wife to say what time he would be home.

About 7 or 8 or may be 9, he muttered.

“And what is the occasion that leaves you in the such doubt about your forward movements?”

“A meeting of the Society for Long Range Planning.”

 

 

8

A contractor wanted a favour from a Government official.

He tried to offer a small token of appreciation.

He offered the official a nice foreign sports car.

The official bristled and said he could not accept such a gift as it would be a bribe.

The contractor said, “Would it be all right if I sold you the car?”

The official asked for how much.

The contractor said,”One Hundred rupees.”

“The official promptly replied : “in that case, I will take two.”

 

9

ஜோக்குகளைச் சேர்த்து அவ்வப்பொழுது ரசியுங்கள் – சிரித்து மகிழ!

குறிப்பு:  மேலே உள்ளவற்றில் 2 முதல் 6 முடிய : Sun 24-7-1993 இதழில் Inder Mohan Puri  அளித்த ஜோக்குகள்.

7 – ரீடர்ஸ் டைஜஸ்ட் ஜனவரி 1974 இதழில் வந்தது.

8 – ஹிந்து 12-1-1998 தேதியிட்ட இதழில் திரு எஸ். கிருஷ்ணன் அளித்த ஜோக்!

 

 

10

இது போல லட்சத்திற்கும் மேற்பட்ட ஜோக்குகளை சேகரித்துள்ள ஒருவரை எனக்குத் தெரியும்!

அவர் தான் எனது அண்ணன் திரு S.சீனிவாசன், அசோக் நகர், சென்னை.

 

வீடு முழுவதும் ஜோக் புத்தகங்கள்! போதாததற்கு தடி தடியான் ஜோக்குகளை ஒட்டியுள்ள  கணக்கற்ற வால்யூம்கள்!

சிரித்துச் சிரித்து மகிழலாம்!

***

 

நகைச்சுவை மன்னன் மஹேந்திர பல்லவன் (Post No.4434)

Written by London Swaminathan 

 

Date: 26 NOVEMBER 2017

 

Time uploaded in London- 9-09 am

 

 

Post No. 4434

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

அப்பர் என்னும் திருநாவுக்கரசரைப் படாதபாடு படுத்திய மன்னன் மஹேந்திரபல்லவன். சைவ சமயத்திலிருந்து சமணத்துக்குத் தாவி மீண்டும் சைவத்துக்கே திரும்பிய கட்சி மாறி; இக்கால ஆயாராம், கயாரம் கட்சிமாறிகளுக்கு முன்னோடி.

அப்பர் காலம் வரை நிலவிய அழியும் கோவில்களை அகற்றி முதலில் குகைக் கோவில்களை நிறுவியவன். திருச்சி வரை ஆட்சியை விஸ்தரித்து திருச்சி அருகில் பல கோட்டைகளை நிறுவியவன். மாபெரும் சம்ஸ்கிருத பண்டிதன்; பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் மகன். வாதாபி கொண்ட நரசிம்ம பல்லவனுக்குத் தந்தை.

 

ஷேக்ஸ்பியருக்கும் முன்னால் காமெடி (Comedy) எழுதி புகழ்பெற்றவன்.

பாஷா, சூத்ரகன், காளிதாசன் முதலானோர் எழுதிய நாடகங்களில் நகைச்சுவை (comedy) நடிகர்கள் (விதூஷகன்) உண்டு. ஆயினும் முழுக்க முழுக்க முதல் காமெடி நாடகம் எழுதியவன் இவனாகத்தான் இருக்க வேண்டும்.

இவன் எழுதிய நகைச் சுவை நாடகத்தின் பெயர் மத்த விலாசப் பிரஹசனம்.

 

காவியக் கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை விற்பன்னன். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் பல் கலை வித்தகன், ஒரு மாபெரும் மன்னனாக விளங்கமுடியும் என்பதற்கு இவன் ஒரு சான்று. வடக்கில் ஒரு போஜ மன்னன் என்றால் தெற்கில் ஒரு மஹேந்திர பல்லவன்.

 

மஹேந்திர பல்லவன் சகல கலா வல்லவன். இதோ அவனது பட்டப் பெயர்களையும் விருதுகளையும் பாருங்கள்:-

 

மத்தவிலாஸன்= ஆனந்த ஆட்டக்காரன்

குணபரன்= நற்குண நாயகன்

அவநிபாஜனன்= பூமியாகிய பாத்திரத்தில் தன் புகழை நிரப்பியவன்

சத்ரு மல்லன்= பகைவரை புறங்காட்டச் செய்த மாவீரன்

லளிதாங்குரன்= பல்லவ குல மரத்தின் இளம் தளிர்

விசித்திரசித்தன்= புதுமைகளைப் படைப்போன், சிந்திப்போன்

ஸங்கீர்ணஜாதி=பல நறுமணம் கமழும்ஜாதி மலர் போன்றவன்

சேதக்காரி= நினைத்தை முடிப்பவன்

பிரஹசனம் என்பது நகைச்சுவை நாடகம்; இதில் மூன்று வகை உண்டு:சுத்தம், விகிர்தம், சங்கீர்ணம்; அவைகளில், மத்தவிலாசப் பிரஹசனம் , சுத்தப் பிரஹசனம் வகையினது.

 

கதைச் சுருக்கம் பின்வருமாறு:-

காபாலி ஒருவனும், பாசுபதன் ஒருவனும், ஒரு பௌத்த பிக்ஷுவும், பைத்தியக்காரனும், சூத்திரதாரனும், காபலிகனுடைய காதலியும் ஆகிய அறுவர் இதில் நடிப்பவர்கள் ஆவர். அவர்கள் நகைச்சுவை வசனம் மொழிந்து அனைவரையும் மகிழ்விப்பர்.

 

நாடக சூத்திரதாரி முன்னுரை வழங்கிய பின்னர், காபாலியும் அவனது காதலியும் காஞ்சீபுர வீதிகளில் உலா வருவதுடன் காட்சி துவங்குகிறது.

 

முதல் காட்சியில் காபாலிகன் அவன் காதலி தேவசோமையுடன் வாதாடுகிறான். தனது பிக்ஷை ஏற்கும் கபாலத்தைக் காணவில்லை என்று சொல்கிறான். அதைத் தேட முயற்சி செய்கின்றனர்.

 

இரண்டாவது காட்சி:-மதுக்கடை வருணனை

மூன்றாம் காட்சி:- அவ்வழியே வந்த சாக்கிய (பௌத்த) பிஷுவிடம் இருந்த கப்பரை (கபாலம்) தன்னுடையது என்று பிடுங்க, அந்தப் பக்கம் வந்த பாசுபதனிடம் இருவரும் தங்கள் வழக்கை முறையிடுகின்றனர்

நாலாம் காட்சி:பைத்தியக்காரன் ஒருவன், ஒரு வெறி நாயிடமிருந்து பிடுங்கிய

கப்பரையுடன் வருகிறான்; அ தைக் கண்ட காபாலிகன் மகிழ்கிறான்.

பின்னர் அனைவரும் சமாதானமாகச் செல்கின்றனர். இது சம்ஸ்கிருத மொழியில் அமைந்த நாடகம். நாடகத்தில் மஹேந்திரனின் பட்டப்பெயர்கள், விருதுகள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. குடிகாரன் பேச்சு,பைத்தியக்காரன் பேச்சு ஆகியவற்றில் நகைச்சுவை ததும்புகிறது.

TAGS:– மத்தவிலாசப் பிரகசனம், மகேந்திர, பல்லவன், மஹேந்திர,

நகைச்சுவை, நாடகம், மன்னன்

 

–Subham–

பாம்பும் பார்வதியும்- அப்பர் நகைச்சுவை! (Post No.4325)

Written by London Swaminathan

 

Date: 22 October 2017

 

Time uploaded in London- 6-59 am

 

 

Post No. 4325

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தேவாரத்தைப் பக்தியோடு படிப்பது ஒருவிதம்; ஓதுவாரின் இனிய குரலில் கோவில் பிரகாரங்களில் கேட்டு ரசிப்பது மற்றொரு விதம்; இலக்கிய நயத்துக்காக , இயற்கைக் கட்சிகளுக்காக, தமிழர் வரலாற்றுக்காக படிப்பது மற்றொரு ரகம். இதில் மூன்றாவது ரகத்தைச் சேர்ந்தவன் நான். அந்தக் காலத்தில் தர்மபுர ஆதீனம் வெளியிட்ட ஆராய்ச்சிப் பதிப்பு முதல் இந்தக் காலத்தில் வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்ட அத்தனை பதிப்புக ளையும் புரட்டிப் புரட்டிப் பார்க்கும்போது புதுப் புது கருத்துகள் கிடைக்கும்; எனக்கு மட்டுமா? எல்லோருக்கும்தான்!

 

அது மட்டுமா? போகிறபோக்கில் மாணிக்கவாசகர், தனக்கு முன் வாழ்ந்தவர், மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தருமி என்ற பிராமணனுக்கு சிவபெருமான் கவிதை எழுதிக் கொடுத்தது, மாமன்னன் மஹேந்திர பல்லவன் தன்னைக் கொடுமைப் படுத்தியது — எனப் பல வரலாற்றுக் காட்சிகளையும் நம் முன் அப்பர் படைக்கிறார். படிக்கப் படிக்கத் தெவிட்டாதது தேவாரம், திவ்யப் பிரபந்தம், திருமந்திரம், திருவாசகம்; எந்தக் கோணத்தில் இருந்து ஆராய்ந்தாலும் இன்ப மழை பொழியும்; அமிர்த தாரை வழியும்; பருகுவார் பருகலாம்.

 

 

பார்வதியைக் கண்டு பாம்பு பயந்ததாம்; பாம்பைக் கண்டு பார்வதி பயந்தாளாம்; இதை எல்லாம் வேடிக்கை பார்த்த சிவன் முடியில் உள்ள பிறைச் சந்திரன் ஏங்கியதாம்; இத்தனையையும் தன் தலையில் தாங்கிய சிவபெருமானுக்கு ஒரே சிரிப்பாம்! ஆனால் வாய் விட்டு கெக்கென்று சிரித்தால் காட்சி மறை ந்துவிடக் கூடுமல்லவா?ஆகையால் புன்முறுவல் பூத்தாராம் அகில புவனங்களையும் தன் ஆட்டத்தினால் (நட ராஜ)அசைவிக்கும் எம்பெருமான்!

 

இது அப்பர் கண்ட காட்சி; சிவ பெருமானை தினமும் பாடும் அப்பர், சொன்ன விஷயத்தையே திரும்பத் திரும்பச் சொன்னால் நமக்கு எல்லாம் ‘போர்’ (BORE) அடிக்கும் அல்லவா? ஆகையால் அவரும் அழகாக கற்பனை செய்கிறார்.

நிறையக் கொடுத்தால் திகட்டிவிடும்!

 

இதோ அப்பர் தேவாரத்தின் நான்காம் திருமுறையில் இருந்து இரண்டே பாடல்கள்:–

 

 

கிடந்தபாம்பு அருகுகண்டுஅரிவை பேதுறக்

கிடந்தபாம்பு அவளையோர் மயிலென்று ஐயுறக்

கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே

கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே

-திருவதிகை வீரட்டானப் பதிகம், நாலாம் திருமுறை

 

பொருள் சிவன் திருமுடியில் தவழும் பாம்பானது, சிவபெருமானின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் உமா தேவியாரைக் (பார்வதி) கண்டு அஞ்சுகின்றது; ஏனெனில் அவள் மயில் போல இருக்கிறாள். உமாதேவியோ பாம்பைக் கண்டு பயப்படுகிறாள்; ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பது தமிழ்ப் பழமொழி அல்லவா? இதைப் பார்க்கும் சிவன் முடியிலுள்ள பிறை ஏங்குகின்றதாம்; கிரஹண காலத்தில் நிலவை விழுங்குவது பாம்பு அல்லவா? இதை எல்லாம் வேடிக்கைப் பார்க்கும் சிவனோ மென்முறுவல் பூக்கிறார்.

 

சிறுவர்களிடம் அச்சம் உண்டாக்க நாம் சில பொம்மைகளைப் போட்டுவிட்டு அவர்கள் பயப்படும்போது,  கண்டு ரசிக்கிறோம் அல்லவா? அது போல சிவனும் சில விஷமங்களைச் செய்கிறார். ஆனால் குழந்தைகளைப் பயமுறுத்திய தாய் பின்னர் எப்படி குழந்தைகளை அனைத்து பயப்படாதே அவை வெறும் பொம்மை என்று ஆறுதல் சொல்லுவது போல ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து அருளும் சிவன் எல்லோரையும் காப்பான்.

 

அப்பர் இதை ஒரு சிறிய நகைச் சுவை தோன்ற அமைத்து இருக்கிறார். இது போல சங்க இலக்கியப் பாடல்களிலும் நகைச் சுவை உண்டு. உண்மையான நவாப் பழங்களை (நாகப் பழம்) வண்டு என்று பயப்படும் குரங்குகளையும், வண்டுகளை நாகப்பழம் என்று  நினைத்து வாயருகே கொண்டுபோகும் குரன்குகள், திடீரென்று அஞ்சி அவைகளை விட்டெறிவதையும் தமிழ்ப் பாடல்களில் கண்டு ரசிக்கலாம்.

இதோ இன்னும் ஒரு தேவரப் பாடலிலும் அப்பர் இதே கருத்தைச் சிறிது மாற்றிப் பாடுகிறார்:-

 

நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்சை யென்று

வேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து

பாதத்தில் நிமிர்தல் செய்யாத் திங்களை மின்னென்று அஞ்சி

ஆகத்திற் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே

–திருவாரூர்ப் பதிகம்

 

பொருள்:-

சிவபெருமான் திருமுடியில் தரித்திருக்கும் நாகத்தைக் கண்டு, கங்கையானவள் அஞ்சுகிறாள்; அந்த நங்கையை மயில் என்று கருதி நாகப் பாம்பு அஞ்சுகின்றது! சிவபெருமான் போர்த்தி இருக்கும் யானையின் தோல் கருப்பு நிறத்தில் மேகம் போலக் காட்சி தருகிறது. அதில் பிறைச்சந்திரன் பளிச்சென்று மின்னியவுடன் பாம்பு அதை இடி மின்னல் என்று நினைத்து அஞ்சுகின்றது (‘இடி கேட்ட நாகம் போல’ என்பது தமிழ்ப் பழமொழி) இத்தன்மையுடன் விளங்கும் பெருமானே ஆரூரில்  வீற்று இருக்கிறான்.

மயில்- பாம்பு பகைமை, இடி- பாம்பு பகைமை, மனிதன்-பாம்பு பகைமை ஆகியவற்றைக் கொண்டு நயம்படப் பாடியிருக்கிறார் அப்பர் என்னும் திருநாவுக்கரச நாயனார்.

 

சுபம்–

 

பெரியவாளின் நகைச்சுவை! (Post No.4035)

Written by S NAGARAJAN

 

Date: 29 June 2017

 

Time uploaded in London:-  5-51 am

 

 

Post No.4035

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

காஞ்சி பெரியவா மஹிமை

 

பெரியவாளின் நகைச்சுவை!

 

ச.நாகராஜன்

 

காஞ்சி மஹா பெரியவா அத்வைத ஞானி. என்றாலும் கூட லௌகிக உலகத்திற்கு அவர் நாசுக்காக சொல்ல வேண்டியதைச் சொல்லுவார்.

 

பி.நாராயண மாமா பகிர்ந்து கொண்ட சம்பவம் இது:

ஒரு முறை உடல் பருமனான ஒரு குண்டு மாமி பெரியவாளை தரிசிக்க வந்தார்.

 

அவரால் நமஸ்காரம் பண்ணக் கூட முடியவில்லை. அவ்வளவு குண்டான மாமி.

 

பக்தி இருந்தாலும் நமஸ்காரம் பண்ண உடல் வாகு இடம் தராததால் ஒரு வித சங்கடம் கலந்த குழப்பத்தில் அவர் ஒரு ஓரமாக கூப்பிய கரங்களுடன் நின்று கொண்டிருந்தார்.

பின்னர் பெரியவாளை அணுகினார்.

 

“எனக்கு டயபடீஸ் (Diabetes) இருக்கிறது.டாக்டர் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். அதற்காக தினமும் ஒரு மணி நேரம் நான் நடக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார். ஆனால் என்னாலோ ஒரு பத்து நிமிடம் கூட நடக்க முடியவில்லை.” என்று கூறிய அவர், “பெரியவாள் தான் எனக்கு ஒரு சுலபமான வழியைக் காண்பிக்க வேண்டும்” என்று விண்ணப்பித்தார்.

“இந்த டாக்டர்கள் எல்லாம் ஒரே மாதிரி தான். மெடிகல் புஸ்தகங்களில் இருப்பதை அப்படியே திருப்பித் திருப்பிச் சொலவதே அவர்களின் வழக்கமாக ஆகி விட்டது. பிராக்டிகலாக அவர்கள் ஒரு விஷயத்தை அணுக மாட்டேன் என்கிறார்கள்” என்று ஆரம்பித்தார் பெரியவாள்.

 

குண்டு மாமியின் முகம் விகசித்தது.பெரியவாள் ஏதோ ஒரு சுலபமான வழியைச் சொல்லப் போகிறார் என்று அவர் எதிர்பார்த்தார்.

 

“ஒருவருக்கு வியாதி இல்லாத ஆரோக்கியமான வாழ்வு வேண்டுமென்றால் பகவானின் அனுக்ரஹம் வேண்டும்.”

பெரியவாளின் பேச்சை உன்னிப்பாகக் கவனிக்கலானார் அந்த மாமி.

 

“ உன் ஆத்துக்குப் பக்கத்தில் ஏதேனும் கோவில் இருக்கா?” – பெரியவாள் கேட்டார்.

 

“இருக்கிறது. பெரிய சிவன் கோவில் இருக்கிறது.” – மாமி பதில் சொன்னார்.

 

“நல்லதாப் போச்சு. அங்கு தினமும் காலையும் மாலையும் ஆறு ஆறு பிரத்க்ஷிணம் பண்ணு. துடைப்பக்கட்டையால் ஒரு நூறு அடி மட்டும் கோவிலை சுத்தம் செய்.”

 

பெண்மணிக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. பெரியவாளின் பிரசாதத்துடன் வீட்டிற்குக் கிளம்பினார்.

 

பெரியவாளின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த பக்தர் ஒருவருக்கு அடக்க முடியாத சிரிப்பு.

 

அவரைப் பார்த்த் பெரியவாள்,”என்ன, நான் ஏதேனும் தப்பா சொல்லிட்டேனா?” என்று கேட்டார்.

 

“இல்லை பெரிய்வா! டாக்டர் நடைப் பயிற்சி – வாக்கிங் போ என்று சொன்னார். ஆனால் பெரிய்வா பிரதக்ஷிணம்னு பிரஸ்கிரைப் (prescribe) பண்ணேள்.” என்றார் அவர்.

 

“ஓ! மருந்தாக இரண்டு பேரும் பிரஸ்கிரைப் (Prescribe) பண்ணது அத்வைதம் தான். ஆனால் பேர் தான் த்வைதம் என்கிறாயா?”

என்றார்  பெரியவாள்.

 

அவரது நுட்பமான நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.

***                                                        நன்றி திலிப் அக்டோபர்/டிச்மப்ர் 2016 இதழ்

பகவான் ரமணரின் வாழ்வில் நகைச்சுவை! (Post No.3830)

Written by S NAGARAJAN

 

Date:19 April 2017

 

Time uploaded in London:-  5-49 am

 

 

Post No.3830

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

பகவான் ரமணரின் வாழ்வில் நகைச்சுவை!

ச.நாகராஜன்

 

பகவான் ரமண மஹரிஷியின் வாழ்க்கை வரலாற்றையும் உபதேசங்களையும் படிக்கும் பக்தர்கள் பொதுவாகவே அவர் தீவிர சிந்தனையிலும் இறை உணர்விலும் இருப்பதை உணர்வர். ஆனால் உலகியல் வாழ்க்கைக்கு ஏற்ப அவர் நகைச்சுவை உணர்வுடன் இருந்து பக்தர்களின் பதிலை ஏற்றுக் கொண்டதைச் சுட்டிக் காட்டும் நிகழ்ச்சிகள் ஏராளம் உண்டு.

 

 

இதை எடுத்துக் காட்டும் விதத்தில் பகவானின் அணுக்க பக்தரான குஞ்சு சுவாமிகள் பல சம்பவங்களைக் கூறியதுண்டு.அவற்றில் சில:

 

 

பகவானுடன் கிரி வலம் வரும் பக்தர்கள் பொதுவாக தெய்வீகப் பாடல்களையும் ஸ்தோத்திரங்களையும் பாடிக் கொண்டே செல்வது வழக்கம். ஆனால் ஒரு பையன் மட்டும் மௌனமாக பகவானுடன் வருவது வழக்கமாக இருந்தது. ஒரு நாள் அனைவரும் ஆளுக்கு ஒரு பாடலைப் பாடி முடித்த போது பகவான் அந்தப் பையனைப் பார்த்து, “எல்லோரும் பாடி விட்டார்களே! நீ ஒன்றைப் பாடக் கூடாதா?” என்றார். அதற்கு உடனே அந்தப் பையன், “ஜீவன் முக்தர்கள் எங்காவது பாடுவார்களா?” என்றான்.

 

இதைக் கேட்ட பகவான் விழுந்து விழுந்து சிரித்தார்.

 

சத் தரிசன பாஷ்யம் என்ற நூலை எழுதிய கபாலி சாஸ்திரியார் பகவானின் அணுக்க பக்தர். வேத ரகசியங்களை நூல்களாக எழுதியவர். பின்னாளில் இவர் அரவிந்த ஆசிரமத்திலும் தங்கி இருந்தவ்ர். அவருக்கு திருமணத்தில் அவ்வளவாக நாட்டம் இல்லை. ஆனால் அவர் வீட்டிலோ அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வைக்க முயன்றனர். ஒரு நாள் அவர் பகவானிடம் வந்து, “ நான் நாளை ஆசிரமத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்திக்குருக்கிறேன்: என்றார்.

 

ஆசிரமத்தை ஏற்றுக் கொள்வது என்றால் பொதுவாக சந்யாச் ஆசிரமத்தை ஏற்றுக் கொள்வதாகத் தான் அர்த்தம்,.

பகவான் ஆச்சரியத்துடன், “அப்படியா! கபாலி! அதற்கு வீட்டில் அனுமதி வாங்கியாகி விட்டதா?” என்று கேட்டார்.

அதற்கு அவர், “நான் இரண்டாவது ஆசிரமத்தைச் சொன்னேன். பிரமசர்யத்திலிருந்து கிரஹஸ்தாசிரமம் போக முடிவு செய்து விட்டேன்” என்றார்.

 

பகவான் இதைக் கேட்டுச் சிரித்தார்.

 

முதலியார் பாட்டி என்று அழைக்கப்பட்ட மூதாட்டி பகவானுக்கு அன்டன் தான் சமைத்த உணவைக் கொண்டு வந்து தருவது வழக்கம். பகவான் அதிகமாகச் சாப்பிடாமல் மிகவும் குறைந்த அளவே சாப்பிடுவதாக அவர் எண்ணி வருத்தப்பட்டார். அதனால் சாதத்தை அமுக்கி அமுக்கி சிறிய உருண்டையாக ஆக்கி அதை பகவானுக்குப் படைத்தார். இந்த ட் ரிக்கைக் கண்ட பகவான் பாட்டியைப் பற்றி, “பாட்டியின் ட் ரிக் எனக்குத் தெரியாதா என்ன, அமுக்கி அமுக்கி நிறைய சாதத்தை இப்படிச் செய்கிறாள்” என்று கையால் சாதத்தை உருண்டையாக் அமுக்கிக் காட்டினார்.

 

 

இதற்கு பாட்டியிடமிருந்து உடனே பதில் வந்தது ரமணரின் பாணியிலேயே!

 

பகவான் கையால் அமுக்கி காட்டிய சைகையை அப்படியே திருபபிச் செய்து, “எது அதிகம், எது குறைச்சல்? எது பெரிது, எது சிறிது? எல்லாம் நம் பாவனையில் தான் இருக்கிறது.” என்றார் பாட்டி.

 

 

தன் கூறும் சொற்களாலேயே தன்னை பாட்டி மடக்குவதைக் கண்ட ரமணர் சந்தோஷத்துடன், “ பார், பார்! நான் சொன்னதையே எனக்குத் திருப்பிச் சொல்கிறாள்” என்று கூறினார்

 

இது போன்ற ஏராளமான சம்பவங்கள் பகவானின் வாழ்வில் அவ்வப்பொழுது இடம் பெறுவது உண்டு. பகவானும் இவற்றை வெகுவாக ரசிப்பார். நகைச்சுவை உணர்வுடன் அவர் பக்தர்களின் சொற்களையும் செய்கைகளையும் ஏற்றுக் கொள்வார்.

இதில் பக்தர்களுக்கும் ஆனந்தம்; பகவானுக்கும் ஆனந்தம்!

***

சிரிப்பு! நகைப்பு! இளிப்பு! பகடி! நக்கல்! கிண்டல்!!! – பகுதி 1

M twain 2

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

WRIITEN BY london swaminathan

Date : 12 September  2015

Post No. 2151

Time uploaded in London: –  காலை 7-02

(Thanks  for the pictures)

‘ஓஸி’ டிக்கெட் கேட்போரை பழி வாங்குவது எப்படி?

மார்க் ட்வைன் என்பவர் பிரபல அமெரிக்க எழுத்தாளர். நகைச் சுவை மன்னர். மற்றவர்களை நையாண்டி செய்வதிலும் வல்லவர். ஒரு நாள் குதிரைப் பந்தயத்தில் ஒரு பேர்வழி அவரிடம் வந்து, அசடுவழிய நின்றான்.

“மிஸ்டர் மார்க் ட்வைன்! என்னிடம் ஊருக்குத் திரும்பிப்போக, டிக்கெட்டுக்குப் பணமில்லை. எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் வாங்குங்கள், ப்ளீஸ்!” என்றான்.

“அன்பனே! நானும் உன்னைப் போல எல்லாப் பனத்தையும் இழந்துவிட்டேன். நானும் ஒரு ஓட்டாண்டிதான். எனக்கு மட்டுமே டிக்கெட்டுக்குப்  பணம் உள்ளது. ஆயினும் உங்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று மிகவும் ஆசை. ஒன்று செய்கிறேன். ரயிலில் எனக்குக் கீழே சாமான் வைக்கும் இடத்தில் ஒளிந்து கொள்ளுங்கள்; கால்களால் மறைத்துக் கொள்கிறேன். டிக்கெட் பரிசோதகர் வந்து போனபின்னர் நீங்கள் வெளியே வரலாம்” என்றார். அவரும் ஒப்புக் கொண்டார்.

இப்படி மார்க் ட்வைன் சொன்னபோதும் அவருக்குத் தெரியாமல், இரண்டு டிக்கெட் வாங்கி பையில் போட்டுக்கொண்டார். அந்த ‘ஓஸி’ப் பயண ஆசாமி, ரயிலில் சீட்டுக்கு அடியில் ஒளிந்து கொண்டார். டிக்கெட் பரிசோதகரும் வந்தார்.

அவரிடம் மார்க் ட்வைன் இரண்டு டிக்கெட்டுகளைக் கொடுத்தவுடன், அவர் வியப்புடன், மற்றொருவர் எங்கே? என்றார். ஓ, அவரா? இதோ சீட்டுக்கு அடியில் பாருங்கள். ஒரு ஆசாமி இருக்கிறான். அவனுக்குக் கொஞ்சம் பைத்தியம். ஆகையால் பயந்துகொண்டு இப்படித்தான் ஒளிந்துகொள்வான் என்றார். டிக்கெட் பரிசோதகர் அந்தப் “பைத்திய”த்தைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விட்டார்.

‘ஓஸி’ டிக்கெட்காரருக்கு பயங்கர கோபம். ஆனால் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அவரால் எதுவும் சொல்லவும் முடியவீல்லை, மெல்லவும் முடியவில்லை!

books picture2

வேண்டாத புத்தகங்களை வெளியே போடுவது எப்படி?

கொலம்பியா பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் க்ளைட் மில்லர். அவருக்கு மற்றவர்களைச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் ஒரு தனி மகிழ்ச்சி!

பல பிரபல வெளியீட்டாளர்கள், விலைபோகாத, மட்டரக புத்தகங்களை இவருக்கு அனுப்பிவைப்பர். இவர் தன்னிடமுள்ள இப்படிப்பட்ட புத்தகங்களை அழகாக பார்சல் செய்து தன்னுடைய இனிய நண்பர்களுக்கு அனுப்புவார். அத்துடன் அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பெயரில் பொய்க் கையொப்பமிட்டு ஒரு கடிதமும் வைத்துவிடுவார்:

இனிய நண்பருக்கு

வணக்கம். இத்துடன் நான் அண்மையில் வெளியிட்ட புகழ்மிகு நூல் அனுப்புகிறேன். இதை உங்களுக்கு அனுப்புவதற்குக் காரணம், உங்கள் பெயரை சில இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். அனுமதியில்லாமல் உங்கள் பெயரைப் பயன்படுத்தி விட்டேன். மன்னிக்கவும். இதில் உங்களுக்கு ஆட்சேபணை எதுவுமிராது என்று நம்புகிறேன்.

இப்படிக்கு

(ஆசிரியர் பெயர்)

புத்தகத்துடன் இந்தக் கடிதத்தைப் பெறும் அவருடைய நண்பர்கள், அன்றுள்ள எல்லா முக்கிய வேலைகளையும் பாதியில் போட்டுவிட்டு, குளிக்காமல் சாப்பிடாமல் அந்தப் புத்தகத்தைப் பக்கம் பக்கமாகப் புரட்டி தங்கள் பெயரைத் தேடுவர். பெயரைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிப்போய், மனைவி மக்களை அழைத்து இதில் என் பெயர் இருப்பதாக பிரபல நாவலாசிரியர் ஒருவர் எனகுப் புத்தகம் அனுப்பி இருக்கிறார். என் கண்ணுக்கு என் பெயர் தெரியவில்லை. நிங்களாவது கண்டுபிடியுங்கள் என்பார். அவர்களும் உட்கார்ந்து தேடுவர். அப்புறம் என்ன என்ன நடக்கும் என்பதை நான் எழுத வேண்டியதில்லை.

இப்படி பல புத்தகங்களை பல நண்பர்களுக்கு அனுப்பிய பேராசிரியர், கண்ணாடி முன் நின்றுகொண்டு, தபால் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு வீட்டிலும் என்ன நடக்கிறது என்று கற்பனை செய்துகொண்டு நமட்டுச் சிரிப்பு – விஷமச் சிரிப்பு – சிரிப்பார்!!

–சுபம்–