உள்ளது உள்ளபடி பதில்! உடனுக்குடன் பதில்!! நடந்தவை தான் நம்புங்கள் – 17 (Post.9693)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9693

Date uploaded in London – –  –6 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great

நடந்தவை தான் நம்புங்கள் – 16 வெளியான தேதி 10-5-21 கட்டுரை எண:  9587   

நடந்தவை தான் நம்புங்கள் – 17

ச.நாகராஜன்

உள்ளது உள்ளபடி பதில்! உடனுக்குடன் பதில்!!

உள்ளது உள்ளபடி பதில் சொல்வதென்பது சற்று தர்மசங்கடமான ஒன்று தான். என்றாலும் சில அறிஞர்கள் அதைக் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

ராணியிடம் எப்போதும் நல்ல பெயர் தான்! : எப்படி சாத்தியம்?!

இங்கிலாந்தின் பிரபல அரசியல்வாதியான டிஸ்ரேலி எப்படி பிரிட்டிஷ் ராணியுடன் மிக சுமுகமாகப் பழகுகிறார் என்பது யாருக்கும் புரியாமல் இருந்தது. ராஜாங்கத்தின் உயர் தலைவி அவருக்கு தனி சலுகை தந்து வருவது எப்படி?

ஒரு சமயம் அவர் தன் நண்பருடன் பேசும் போது இந்த ரகசியத்தைப் போட்டு உடைத்தார் இப்படி: “நண்பரே! ராணியாருடன் பேசும் போது ஒரு சின்ன எளிமையான விதியைத் தான் நான் பின்பற்றுகிறேன். ஒரு போதும் அவர் பேச்சை நான் மறுப்பது கிடையாது. ஒரு போதும் அவர் பேச்சுக்கு மாற்றுக் கருத்தைச் சொல்வதில்லை. சில சமயம் நான் மறந்து விடுவேன். இவ்வளவு தான்!

*

பெண்களிடம் நீங்கள் அதிகம் பேசுவதில்லையே, ஏன்?

இங்கிலாந்தின் பிரபல அறிஞரான ஜான்ஸனிடம் ஒரு வம்புக்காரப் பெண்மணி வந்து பேசிக் கொண்டிருந்தார். தன்னை அவர் கவனிக்கவே இல்லை என்று அந்தப் பெண்மணிக்குச் சற்று ஆதங்கம்!

அவர் ஜான்ஸனிடம் வலியச் சென்று கேட்டார்: என்ன டாக்டர்! நீங்கள் எப்போதுமே பெண்களை விட ஆண்களிடமே அதிகம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?

அதற்கு உடனடியாக ஜான்ஸன் பதில் சொன்னார்: அம்மணி! நான் பெண்களுடன் பேசுவதை மிகவும் விரும்புகிறேன். அவர்களின் அழகு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் நளினத்தை நான் விரும்புகிறேன். அவர்களின் கிளர்ச்சியூட்டும் தன்மையும் எனக்குப் பிடிக்கும். கூடவே அவர்கள் மௌனமாக இருப்பதும் எனக்கு அதிகம் பிடிக்கும்!

அவ்வளவு தான் அந்த அம்மணி அங்கிருந்து நடையைக் கட்டினார்!

*

இரண்டு மனைவிக்காரனுக்கு என்ன தண்டனை?

லார்டு ரஸ்ஸலிடம் ஒருவர் வந்து ஒரு கேள்வியைக் கேட்டார் இப்படி: “இரண்டு பெண்டாட்டிக்காரனுக்கு என்ன தண்டனை கடுமையானது?

ஒரு கணம் கூட தாமதிக்காமல் ரஸ்ஸல் பதில் கூறினார் இப்படி: “இரண்டு மாமியார்கள்!

*

கடவுளும் காமன்வெல்த்தும்!

ஆலிவர் க்ராம்வெல் முதன் முதலாக  காமன்வெல்த் நாணயத்தை அச்சடித்தார். ஒரே பெருமிதம் அவருக்கு! வயதான ஒருவர் அதைப் பார்த்தார்.

நாணயத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். ஒரு பக்கத்தில் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார், என்று பொறிக்கப்பட்டிருந்தது. மறு பக்கத்தில் ‘காமன்வெல்த் ஆஃப் இங்கிலாந்து என்று பொறிக்கப்பட்டிருந்தது.

முதியவர் அதைப் பார்த்து விட்டுக் கூறினார் இப்படி: “ஓஹோ! கடவுளும் காமன்வெல்த்தும் வெவ்வேறு பக்கத்தில் இருப்பார்கள் என்பது இப்போது தான் புரிகிறது!

*

எப்படி வண்ணக்கலவையை உருவாக்குகிறீர்கள்?

பிரபல ஓவியரான வில்லியம் ஆர்பனிடம் (Sir William Orpen) ஒருவர், “எப்படி உங்கள் வண்ணங்களை மிக்ஸ் செய்து வண்ணக் கலவையை உருவாக்குகிறீகள்? என்று கேட்டார்.

உடனடியாக அவரிடமிருந்து வந்தது பதில் : “மூளையுடன்!

*

மாமியாருக்கு மறு பெயர் என்ன?

நண்பர்கள் இருவர் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டிருந்த போது ‘உன்  மாமியாரின் பெயர் என்ன என்று கேட்டதற்கு தன் மாமியாரின் பெயரைக் கூறிய முதல் நண்பர், ‘ஆமாம், எந்தப் பெயரைக் கேட்கிறீர்கள்? என்று சந்தேகமாகக் கேட்க இரண்டாமவர் கேட்டார்.

“ஓஹோ! அவருக்கு இரண்டு பெயர் உண்டா? அவருடைய இன்னொரு பெயர் என்ன? அதற்கு முதல் நண்பர் கூறினார் :

பொம்பளை ஹிட்லர் (Woman Hitler)

அந்த நண்பர் ஒரு சமயம் தனது நாயை மிருகத்திற்கு வைத்தியம் செய்யும் மிருகவியல் வைத்தியரிம் சென்று திரும்பிக் கொண்டிருந்ததைக் கண்ட அவரது நண்பர் கேட்டார்: “என்ன விஷயம்? நாயுடன் வெடினரி டாக்டர் வீட்டிலிருந்து திரும்புகிறீர்கள்?

அதற்கு நண்பர் பதில் சொன்னார்: “ இந்த எனது நாய் என் மாமியாரைக் கடித்து விட்டது. அதற்காகத் தான் சென்றேன்.

“ஓஹோ! நாய்க்கான நல்ல தூக்க மாத்திரை உள்ளிட்டவற்றை வாங்கிக் கொண்டீர்களா?

ஊஹூம்! நாயின் பற்களைக் கொஞ்சம் கூர்மையாகத் தீட்டச் சொன்னேன். அவ்வளவு தான்!

***

tags- நடந்தவை , நம்புங்கள் – 17, 

நடந்தவை தான் நம்புங்கள் – 10 தாடி நீள அறிவு (Post No.9342)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9342

Date uploaded in London – –  5 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 9 வெளியான தேதி 26-2-2021              கட்டுரை எண் : 9309

நடந்தவை தான் நம்புங்கள் – 10

ச.நாகராஜன்

தாடியின் நீளத்திற்குத் தக அறிவு!

பிரபலமாக விளங்கிய ‘மாடர்ன் ரிவியூ’ (Modern Review) பத்திரிகையை நிறுவியவர் ராமானந்த சாட்டரிஜி  (Ramananda Chayyerjee) என்பவர். அவரை பேட்டி காண் ஒரு இளம் பத்திரிகையாளர் வந்தார். சுவரில் ரவீந்திரநாத தாகூர், சர் ஜதுநாத் சர்கார் ஆகியோரது படங்கள் மாட்டப்பட்டிருப்பதையும் அவர்கள் நீண்ட தாடி கொண்டிருப்பதையும் கவனித்தார்.“தாடியின் நீளத்தைப் பொறுத்து அறிவு இருக்கிறது” என்று

tags-  நடந்தவை,  நம்புங்கள் – 10

நடந்தவை தான் நம்புங்கள் – 6 (Post No.9235)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9235

Date uploaded in London – –6 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 5 வெளியான தேதி : 31-1-2021; கட்டுரை எண் : 9207

நடந்தவை தான் நம்புங்கள் – 6

ச.நாகராஜன்

1

 ஒரு பிரபல கர்நாடக வித்வானின் கச்சேரிக்கு ரஸிகர் ஒருவர் அடிக்கடி வருவது வழக்கம். (அந்த வித்வான் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரா, செம்மங்குடி சீனிவாச ஐயரா என்பது நினவில் இல்லை – பழைய கால அமுத நிலைய மலிவுப் பதிப்புகளில் இசைக் கலைஞர்களைப் பற்றிய புத்தகத்தில் படித்தது இது). ஒரு கச்சேரி முடிந்தவுடன் பரபரப்பாக மேடைக்கு வந்த அவர் அந்த பிரபல வித்வானிடம், “இப்ப எல்லாம் நீங்கள் ரொம்ப நன்னா பாடறேள். ஆலாபனை, விதவிதமான ராகங்கள் எல்லாம் அற்புதம்” என்று கூறினார்.  அந்த வித்வான் புன்சிரிப்பை உதிர விட்டவாறே, மெதுவாகக் கூறினார் இப்படி; “அப்படியெல்லாம் புகழாதேள்! அவ்விடத்து ஞானம் தான் அதிகமாயிண்டிருக்கு!” குழுமியிருந்த அனைவரும் சிரித்தனர் – அவர் சொன்னதன் சூக்ஷ்மத்தைப் புரிந்து கொண்டு. (“நான் பாடும் படி தான் பாடிக்கொண்டிருக்கிறேன், முட்டாளே! உனக்கு இப்போது தான் ராகம் என்றால் என்ன, ஆலாபனை என்றால் என்ன என்று புரிந்திருக்கிறது!”) அவர் அங்கிருந்து நகர்ந்தார்!   

             2                        ஸ்பெயினைச் சேர்ந்த சராசடே (Sarasate) ஒரு பெரிய வயலின் கலைஞர் (வித்வான்) 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இவர். (சுப்புடு போன்ற ஒரு!!) பிரபல விமரிசகர் ஒருமுறை அவரை ஜீனியஸ் (இசை மேதை) என்று புகழ்ந்து கூறினார். உடனே அவர் இப்படி பதிலடி கொடுத்தார் அவருக்கு :- “ஜீனியஸா! நானா?! கடந்த 37 வருடங்களாக ஒரு நாளைக்கு பதினான்கு மணி நேரம் வயலினை வாசித்து பிராக்டீஸ் செய்து வந்திருக்கிறேன். இப்போது என்னை ஜீனியஸ் என்கிறார்கள்!”

தன்னைப் பற்றி அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார். “திறமையோ மேதைத் தன்மையோ தன்னை புகழழேணியில் உச்சிக்குக் கொண்டு வரவில்லை. இடைவிடாத தொடர்ந்த முயற்சியின் காரணமாகவே தான் இந்தப் புகழ் தனக்குக் கிட்டி இருக்கிறது. இந்த நூற்றாண்டின் தலை சிறந்த வயலின் கலைஞராகத் தன்னை ஆக்கியது தனது ப்ராக்டீஸே” – என்பதை அவர் உலகிற்கு வலியுறுத்தினார்.

               – The Power of Habit என்ற நூலில் ஜாக் டி. ஹாட்ஜ் (Jack D. Hodge)

              3                                நிகோலா பாகனினி (Nicolo Paganini) என்பவர் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வயலின் கலைஞர். அவரது பேச்சில் நகைச்சுவை ததும்பும். உடனுக்குடன் பதில் சொல்வதிலும் அவர் வல்லவர். ஒரு சமயம் இத்தாலியில் முழு ஆர்கெஸ்ட்ராவுடன் அவர் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார்.  அரங்கு முழுவதும் மக்கள் திரள். புது புது உத்திகள், புது புது இசை வடிவம். அனைவரும் மெய்மறந்து அதில் லயித்து விட்டிருந்தனர். இசை நிகழ்ச்சி முடியும் தருணத்தில் தனது ஒரு அபாரமான இசையமைப்பை (Composition) வாசிக்க ஆரம்பித்தார்.  அப்போது திடீரென்று அவரது வயலினில் ஒரு கம்பி அறுந்தது. அனைவரும் திகைத்து ஆவென்று கூவினர். ஒரு நிமிடம் திகைத்த பாகனினியோ தனது தலையை ஒரு முறை அசைத்தார். பின்னர் தனது இசையைத் தொடர்ந்தார். அப்போது இன்னொரு கம்பி அறுந்தது. அனைவரும் என்னடா இது என்று ஆச்சரியப்பட்டனர். சற்று நேரத்தில் இன்னொரு கம்பியும் அறுந்தது. காமெடியன் போல நின்ற அவர், மூன்று கம்பிகள் வயலினிருந்து அறுந்து கீழே தொங்க, வயலினைத் தொடர்ந்து தன் இசையமைப்பை விடாமல்  வாசித்துக் கொண்டிருந்தார். ஒரே ஒரு கம்பியில் தன் முழுத் திறமையையும் காட்டி தனது இசையை அவர் முடித்த போது அரங்கமே அதிர்ந்தது – கைதட்டலாலும், ஆச்சரியக் கூக்குரலாலும்.                        திறமைசாலிகள் எந்த நிலையிலும் திறமைசாலிகளே!

***

tags- நடந்தவை, நம்புங்கள் – 6, 

நடந்தவை தான் நம்புங்கள் – 4 (Post No.9184)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9184

Date uploaded in London – –25 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 3 வெளியான தேதி : 15-1-2021; கட்டுரை எண் : 9145

நடந்தவை தான் நம்புங்கள் – 4

ச.நாகராஜன்

1

பிரபலமான ஒரு உபந்யாசகர் கடவுளைப் பற்றியும் கடவுளைப் போற்றி வணங்க வேண்டியது பற்றியும் அருமையாக உபந்யாசங்கள் செய்து வந்தார். மக்கள் பெரிதும் அவரை மதித்தனர். அவர் உரையைக் கேட்க திரளாகக் கூடுவர்.

அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று நினைத்த நாத்திகக் கும்பல் ஒரு ஆளை தயார் செய்தது. ஒரு கூட்டத்தில் அவர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த அவன் எழுந்து வேகமாகச் சென்று மேடை மீது ஏறினான். மேஜைக்கு முன்னால் இருந்த மைக்கைப் பிடித்துப் பேச ஆரம்பித்தான்.

“கடவுள், கடவுள் என்கிறீர்களே, அவரை உங்களால் எங்களுக்கு இங்கே காட்ட முடியுமா? நான் ஒரு பகுத்தறிவுவாதி. கண்களால் காணப்படுவதைத் தான் என்னால் நம்ப முடியும்? என்று இப்படி ஆர்ப்பாட்டமாகப் பேசி நிறுத்தினான் அவன்.

கூட்டத்தில் இருந்தோர் திகைத்தனர்.

அவனை உபந்யாசகர் புன்முறுவலுடன் கோபப்படாமல் பார்த்தார்.

அவரது சாந்தமான முகத்தைப் பார்த்தவுடன் பகுத்தறிவுவாதி, மிகவும் சத்தமாக, “நான் ஒரு பகுத்தறிவுவாதி” என்று கத்தினான்.

அவனைப் பார்த்த உபந்யாசகர், “சரி, கண்களுக்குப் புலனாகும் எதையும் தான் நீ நம்புவாயா? இதோ இங்கு உன் பகுத்தறிவைக் கொஞ்சம் காண்பியேன். இதோ இந்த மேஜை மீது அதை வைத்துக் காண்பி. அதைக் காண்பித்தால் தானே அதை நான் நம்ப வேண்டும். அது தானே உன் கொள்கை!” என்றார்.

கூட்டத்தினர் ஆரவாரித்துக் கை தட்டினர். பகுத்தறிவு தலை குனிந்து மேடையை விட்டு இறங்கி வெளியே போக ஆரம்பித்தது. அவன் வெளியேறும் வரை கூட்டத்தினர் கை தட்டிக் கொண்டே இருந்தனர்.

2

பேரறிஞர் பெர்னார்ட் ஷா புத்திகூர்மை உள்ளவர் மட்டுமல்ல; உடனுக்குடன் பதில் கொடுப்பதிலும் வல்லவர்.

ஒரு முறை பிரபலமான ஆங்கில வரலாற்றாசிரியர் சர் பேசில் ஹென்றி லிடல் ஹர்ட் (Sir Basil Henry Liddel Hart) பெர்னார்ட் ஷாவை நோக்கி, “உங்களுக்கு ஒன்று தெரியுமா?” என்று ஆரம்பித்தார். Sumac, Sugar ஆகிய இரண்டே இரண்டு வார்த்தைகள் தான் ஆங்கில மொழியிலேயே Su என்று ஆரம்பித்தாலும் Shu என்ற உச்சரிப்பு கொண்டவை” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

உடனே பெர்னார்ட் ஷா, “Sure” என்று சிரித்தவாறே சொன்னார்.

(Sumac என்பது ஒரு விதமான புதர் (is a type of bush). Suவில் ஆரம்பித்தாலும் ஷூர் என்றே Sure உச்சரிக்கப்படுகிறது. பெர்னார்ட் ஷா போட்டார் ஒரு போடு ஷீர் என்று சொல்லி!

 3

பிரபலமான ஏ.எஸ்.பி. ஐயர் வரலாறு படைத்த ஒரு நீதிபதி. அவரது அறிவும், உடனுக்குடன் நகைச்சுவையுடன் பதிலளிக்கும் பாங்கும் என்றும் பேசப்படுபவை.

அவரைப் பற்றி வி.ஆர். கிருஷ்ண ஐயர், 23-1-1999 அன்று தேதியிட்ட ஹிந்து நாளிதழில், A.S.P. Ayyar – A Judicial paradigim’ என்ற தலைப்பில் அருமையான ஒரு கட்டுரையை எழுதினார்.

அது அனைவரையும் கவர்ந்தது. ஏ.எஸ்.பி. ஐயரை அடிக்கடி சந்தித்து அளாவி மகிழ்ந்த சென்னையைச் சேர்ந்த சி.வி.நரசிம்மன் என்பவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஒரு முறை அவர் நரசிம்மனிடம் ஒரு வக்கீலின் தவறுக்கும் ஒரு டாக்டரின் தவறுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டார். அவரே அதற்கான பதிலையும் சொன்னார் இப்படி: “ ஒரு வக்கீலின் தவறு தரைக்கு ஆறு அடிக்கு மேலே தொங்கும். ஒரு டாக்டரின் தவறு தரையிலிருந்து ஆறு அடிக்கு கீழே புதைக்கப்படும்” (“A lawyer’s mistakes hangs six feet above the ground. A doctor’s mistake isburied six feet below the ground.”)

இப்படி வாழ்நாள் முழுவதும் அவர் கூறிய நகைச்சுவை வாக்கியங்கள் ஏராளம், ஏராளம்.

(திரு C.V.Narasimhan’s letter appeared in Letters to the Editor Column on 28-1-1999)

***

TAGS – நடந்தவை , நம்புங்கள் – 4 , 

நடந்தவை தான் நம்புங்கள்! (Post.8989)

WRITTEN BY S NAGARAJAN                 

Post No. 8989

Date uploaded in London – – 2 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

நடந்தவை தான் நம்புங்கள்!

ச.நாகராஜன்

நான் நெட்டில் படித்தவற்றில் சில இவை! நடந்தவை தான் என்று நம்புங்கள்!

1

கண்பார்வையற்றவர் ஒருவர் சாலையைக் கடந்து எதிர்ப்பக்கம் செல்ல நினைத்து நின்று கொண்டிருந்தார். அவரது முதுகை ஒருவர் தட்டினார்.

‘எனக்குக் கண்பார்வை இல்லை. தயவுசெய்து எதிர்ப்பக்கம் என்னைக் கொண்டு விட முடியுமா?’ – முதுகைத் தட்டியவர் கேட்டார்.

முதல் ஆள் திகைத்தார். மெதுவாக அவர் கையைப் பிடித்துக் கொண்டு சாலையைக் கடக்கலானார்.

இருவரும் பத்திரமாக சாலையைக் கடந்தனர்.

இது ஒரு உண்மையில் நடந்த ஒரு சம்பவம்.

முதலில் நின்று கொண்டிருந்தவர் மிகவும் புகழ் பெற்ற ஜாஸ் பியானோ இசைப்பவரான ஜார்ஜ் ஷியரிங் (Geroge Shearing). இந்தச் சம்பவத்தைப் பற்றி பின்னர் அவர் கூறினார் இப்படி: “ நான் என்ன செய்வது? அவரை சாலையின் எதிர்ப்பக்கம் கொண்டு சேர்த்தேன். என் வாழ்க்கையின் மிகப் பெரிய த்ரில்லான சம்பவம் இது தான்.”

சில சமயம் ரிஸ்க் எடுக்க முடியாமல் நாமே தவிக்கும் போது நாம் வேண்டுமென்றே அதில் விழச் செய்யப்படுகிறோம். என்ன செய்வது? அபாயத்தைச் சில சமயம் எதிர்கொண்டு ஜெயிக்கத் தான் வேண்டும்!

Knighted by The Queen

***

2

டாக்டரிடம் ஒருவர் வந்தார்.

“டாக்டர், நீங்கள் எந்த வியாதியையும் குணப்படுத்தி விடுவீர்களாமே! ஊரெல்லாம் ஒரே பேச்சாய் இருக்கிறது?”

“அப்படித்தான் ஊர் சொல்கிறது. அது சரி, உங்களுக்கு என்ன வியாதி? அதைச் சொல்லுங்கள் பார்ப்போம்!

“டாக்டர், என்னால் திருடாமல் இருக்கவே முடியாது. எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள். அதை எங்கிருந்தாவது திருடிக் கொண்டு வந்து விடுவேன். எத்தனையோ பேரிடம் சிகிச்சைக்குப் போய் விட்டேன். ஒன்றும் சரியாகவில்லை. இன்னும் திருடிக் கொண்டே தான் இருக்கிறேன். ஏதாவது செய்யுங்கள்”

டாக்டர் அவரைச் சோதித்து விட்டு சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார். இரண்டு வாரம் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளச் சொன்னார்.

வந்த ‘திருடர்’ கிளம்ப ஆயத்தமானார்.

அப்போது டாக்டர் கூறினார்: “நண்பரே, இரண்டு வாரத்தில் உங்கள் நோய் குணமாகவில்லையெனில் எனக்கு ஒரு 60 இஞ்ச் டி.வி. ஹோம் தியேட்டர் எபக்டுடன் கொண்டு வந்து தர முடியுமா?”

****

3

ஒரு மலைச்சாரல் பகுதி. ஆங்காங்கே சிறு சிறு கிராமங்கள். சுற்றிலும் அடர்ந்த காடு. மலை உச்சியில் ஒரு சர்ச் இருந்தது.

சர்ச்சில் பாதிரியாரைத் தவிர வேறு யாருமில்லை. ஒருவரும் வரவில்லை என்பதால் பாதிரியார் சும்மா இருந்தார். அப்போது ஒருவர் உள்ளே வந்தார்.

அவரைப் பார்த்த பாதிரியார், “யாரும் ப்ரேயருக்கு வரவில்லை, நாம் வேண்டுமானால் வீட்டிற்குச் சென்று கொஞ்சம் சூடான பானம் அருந்துவோமா?” என்றார்.

வந்தவர் கூறினார்: “ஃபாதர், நான் ஒரு விவசாயி. ஆடுகளுக்குத் தீனி கொண்டு போகும் போது எல்லா ஆடுகளும் கண்ட திக்கில் மேயப் போய், ஒரே ஒரு ஆடு தான் என் முன் இருந்தது என்றால், அதைப் பட்டினி போட்டு விட்டுப் போக மாட்டேன்.”

பாதிரியாருக்கு மிகவும் வெட்கமாகப் போய் விட்டது.

“அன்பரே! இதோ சர்வீஸைத் தொடங்கி விடுகிறேன். பாருங்கள்’ என்றவர் ஆவேசமாகத் தொடங்கினார். தனது ஒரு நபர் ஆடியன்ஸுக்கு அவர் பிரார்த்தனை கீதங்கள், தேவ வசனங்கள், மேற்கோள்கள், என்னவெல்லாம் நல்லது நடக்கப் போகிறது என்பதை விளக்கலானார். இரண்டு மணி நேரம் ஓடியது. சொல்ல வேண்டியதற்கும் மீறிச் சொன்ன பாதிரியார் களைத்துப் போய் தன் சர்வீஸை முடித்தார்.

இப்போது அந்த விவசாயியைப் பார்த்து அவர் கேட்டார். :”அன்பரே! திருப்தி தானா? நீங்கள் ஒருவர் தான் வந்திருந்தீர்கள் என்றாலும் கூட எதையும் விட்டு வைக்கவில்லை!” பெருமிதத்தில் அவர் புன்னகையும் பூத்தார்.

இருவரும் கிளம்ப எத்தனித்தனர். அப்போது விவசாயி கூறினார்: “ஃபாதர்! நான் ஒரு எளிய விவசாயி தான்! நான் ஆடுகளுக்குத் தீனி கொடுக்கப் போகும் போது எல்லா ஆடுகளும் கண்ட இடத்தில் திரிய ஒரே ஒரு ஆடு மட்டும் இருக்கும் போது நிச்சயமாக அதைப் பட்டினியால் வாட விட மாட்டேன். ஆனால் அதற்காக என்னிடம் அனைத்து ஆடுகளுக்கும் இருக்கும் தீனியை அந்த ஒரே ஆட்டிற்குப் போட்டு அதை உண்ணுமாறு வற்புறுத்த மாட்டேன்!”

ஒரு சேவையைச் செய்யும் போது அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லையா?!

****

tags — ஜார்ஜ் ஷியரிங், நடந்தவை, நம்புங்கள், விவசாயி, ஆடு