Post No. 10,301
Date uploaded in London – – 5 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சூரியனைப் பற்றி 6 கண்டு பிடிப்புகள் வேதத்தில் உள்ளது. (Already posted in English)
6000 ஆண்டுகள் பழமையான ரிக் வேதத்தில் சூரியனைப் பற்றிய 6 கண்டுபிடிப்புகள் உள்ளன. அவைகளை அண்மைக் காலத்தில் நடந்த விண்வெளி ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.
1.சூரியனில் கறுப்புப் புள்ளிகள் SUN SPOTS (Already posted in English)
11 ஆண்டுக்கு ஒரு முறை சூரியனில் கருப்புப்புள்ளிகள் அதிகரிக்கின்றன. இவை பற்றி 100, 200 ஆண்டுகளாகத்தான் விஞானிகளுக்குத் தெரியும். சீனாக்காரர்கள் இதை 2800 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டதாக என்சைக்ளோபீடியாக்கள் என்னும் கலைக்களஞ்சியங்கள் செப்பும். அந்த அரை வேக்காடுகளுக்கு, ரிக் வேதத்தில் SUN SPOTS ‘சன் ஸ்பாட்ஸ்’ எனப்படும் குறிப்புகள் 6000 ஆண்டுக்கு முன்னரே சொல்லப்பட்டிருப்பது தெரியாது!
காண்க மந்திரம் – Sun spots in Sun—RV 10-189
சூரியனின் கருப்புப் புள்ளிகள் 10-189-1
“புள்ளிகள் உடைய காளை கிழக்கே வந்துவிட்டான்.அம்மாவுக்கு முன் அமர்ந்து இருக்கிறான்.தந்தை போலுள்ள வானத்தில் முன்னேறுகிறான் . (வானத்தை தந்தையாகவும் பூமியைத் தாயாகவும் வருணிப்பது வேதம் முழுதும் உள்ளது.)
இது பாம்புராணி (ஸர்ப்ப ராக்ஞி) என்னும் பெண் புலவர் சூரியனை நோக்கிச் சொல்லும் துதி என்று வேதத்தைத் தொகுத்தோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தலைப்பும் போட்டுவிட்டனர்
உரைகாரர் விளக்கம் புள்ளிக் காளை = சூரியன்; அம்மா= உஷத் காலம் உதயத்துக்கு முன்னர் தோன்றும் ஒளி. உரைகாரர்களே இங்கே குறிப்பிடப்படுவது சூரியன் (SPOTTED BULL= SUN) என்று தெளிவாக எழுதியுள்ளனர் .
கருப்புப் புள்ளிகள் என்பது காந்த மண்டல கொந்தளிப்பினால் (MAGNETIC FLUX) ஏற்படுகின்றன. அங்கு மற்ற இடத்தை வீட வெப்பம் 2000 டிகிரி குறைவு. அதன் நீள அகலத்துக்குள் பூமியை நுழைத்து விடலாம். நம்மைப் போல சூரியனும் தனக்குத் தானே தட்டாமாலை சுற்றுவதால் அவை நகர்வது போலத் தோன்றும். இவை தோன்றும் பொழுது பூமியில் தகவல் தொடர்பு பாதிக்கும்; தோல் புற்று நோய் அதிகரிக்கும் .
XXX
2.சூரியனும் விட்டமின் ‘டி ‘ யும் SUN AND VITAMIN D
இப்போது மேலை நாடுகளில் விட்டமின்/ வைட்டமின் டி VITAMIN D பற்றி பெரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கிடைப்பதை விட மேலை நாடுகளில் குறைவாகவே சூரிய வெளிச்சம் கிடைக்கிறது. இதை அறிந்த இந்து விஞ்ஞானிகள் ஜோதிடத்திலும் சூரியனே ‘ஆரோக்கியகாரகன்’ என்று சொல்லி அவனை வழிபட விதி இயற்றினார்கள். இதை அதிகாலை சூரிய நமஸ்காரம் மூலமும் பிராமணர்களின் த்ரி கால / மூன்று வேளை/ சந்தியாவந்தனம் மூலமும் கற்பித்தனர்.
XXX
3.சூரிய ஒளி சிகிச்சை PHOTO THERAPY AV 2-67; RV1-191-8/9
எங்கள் லண்டனில் குழந்தைகள் கொஞ்சம் மஞ்சள் நிறைத்த தோலுடன் பிறந்தாலும் அதை வீட்டுக்கு அனுப்பாமல் ஆஸ்பத்திரிலேயே விளக்கின் கீழ் வைத்து சிகிச்சை தருவார்கள். தோல் நோய் உடைய பெரியவர்களையும் கூட விளக்குத் தொட்டியில் நிற்கவைத்து சிகிச்சை தருவார்கள். சூரிய ஒளியின் இந்த அபார மருத்துவ குணங்களை ஏராளமான ரிக் வேத மந்திரங்கள் பாடுகின்றன.
இது ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் இரண்டு மஞ்சள் காமாலை மந்திரங்களில் வரும் செய்தி. AV 2-67; RV1-191-8/9
சூரியனை 7 குதிரைகள்/ VIBGYOR ஏந்து கின்றன;4-13 -3
சூரிய ஒளியை முப்பட்டக (PRISM) கண்ணாடி வழியே செலுத்தினால் வான வில்லின் 7 கலர்களையும் (VIBGYOR) காணலாம். இதையும் கூட புலவர்கள் பாடத் தவறவில்லை .
VIBGYOR= VIOLET, INDIGO, BLUE, GREEN, YELLOW, ORANGE, RED,
சூரியனைக் கும்பிடுபவனுக்கு ஒரு குறையும் வராது என்கிறது அகஸ்தியரின் ‘ஆதித்ய ஹ்ருதய’ தோத்திரம் அவர் ரிக் வேத கால ரிஷி. சூரியனைப்பற்றிய ரிக் வேத துதிகளில் இந்தக் கருத்தைக் காணலாம். AV 2-67; RV1-191-8/9
XXX
4. சூரியனே கண்ணுக்கு ஒளி தருபவன் SUN AND EYE; RV 10-90
இறைவனின் கண்களில் இருந்து சூரியனும் மனத்திலிருந்து சந்திரனும் உதித்ததாக ரிக் வேத்தத்தின் புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரம் (10-90) சொல்லும். சூரியனை உலகத்தின் கண் என்று வருணிக்கும் துதிகளும் உள .Sun’s link with Eye- RV.10-90
சந்த்ர மா மனஸோ ஜாதஹ ; சக்ஷோர் ஸூர்யோ அஜாயத – RV. 10-90
சூரியனே எங்கள் கண்களுக்குக் காட்சியை அளிக்கவும் 10-158. இதைப் பாடிய புலவர் பெயர் கண். அவர் சூரியனின் புதல்வர்
XXX
5.சூரியன் ஒரு நக்ஷத்திரம் SUN IS A STAR
சூரியன் ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்றும் அது மஞ்சள் நிற YELLOW STAR வகையைச் சேர்ந்தது என்றும் தற்காலத்தில் படிக்கிறோம். இதைவிட கடுமையான வெப்பம் உடையது நீல, சிவப்பு நிற நக்ஷத்திரங்கள் என்பதை தற்கால வானியல் புஸ்தகங்கள் செப்பும். பல்லாயிரம் கோடி நக்ஷத்திரங்கள் உண்டு என்பதை மாணிக்கவாசகர், பாரதி முதிலியோர் பாடியுள்ளனர். இந்து மதத்தில் உள்ள சின்னக் குழந்தை கூட விநாயகரைப் புகழும் ‘வக்ரதுண்ட மஹா காய’ துதியில் பிள்ளையாரை
‘கோடி சூர்ய பிரகாசம்’ உடையவன் என்று புகழும். . பகவத் கீதையில் விசுவ ரூப தரிசன ஸ்லோகத்தை, முதல் முதலில் அணு குண்டு வெடித்ததைக் கண்ட அமெரிக்க விஞ்ஞானி, அப்படியே நினைவு கூர்ந்ததை எழுதியுள்ளேன். அதில் அர்ஜுனன் ‘திவி சூர்ய சஹஸ்ரஸ்ய’ என்று கண்ணனை வருணிக்கிறான் ; கிருஷ்ணா! ஆயிரம் சூரியன் ஒரு சேர உதித்தாற் போல உன்னைக் காண்கிறேன் என்கிறான். ஆக சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதும் அது போல என்பதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக் குழந்தைகளுக்கும் தெரியும். 100 ஆண்டுக்கு முன்னர் ரிக்வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கிரிப்பித் முதலியோர் அப்படியே சொல்லியும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.
காண்க ரிக் வேதம் Sun is a Star — RV 10- 156
“அக்கினியே , ஜன ங்களுக்கு ஒளியை அளித்துக் கொண்டு வானிலே அழியாத நட்சத்திரமான சூரியனை உயர்த்தினாய் “– 1-156
இன்னும் ஏராளமான கண்டுபிடிப்புகள் உள்ளன
பிக் பாங்க் BIG BANG என்னும் மாபெரும் பிரபஞ்ச வெடிப்பு பற்றியும், கருந்துளைகள் BLACK HOLES பற்றியும் எழுதியுள்ளேன்
XXX
6.சூரியகிரஹணம்
அத்ரி மகரிஷியுடைய அற்புதங்களை விவரிக்கும் எல்லா மந்திரங்களும் அவர் சூரிய கிரஹணத்தைக் கணக்கிட்டு, சீடர்கள் மத்தியில் அற்புதம் செய்த நிகழ்வும் ரிக்வேதத்தில் உள்ளது. (இது பற்றி எனது பழைய கட்டுரையில் விவரம் காண்க ). இதே உத்தியை ஜயத்ரதனை வதம் செய்ய மஹாபாரதத்தில் கிருஷ்ணன் பயன்படுத்தியதையும் எழுதியுள்ளேன்
Tamil Article: Solar Eclipse in Tamil and Sanskrit Literature
https://tamilandvedas.com › tamil-arti…
·
29 Dec 2011 — … for my latest article on Solar eclipses in Tamil and Sanskrit Literature in Tamil. புறநானூற்றில் சூரியகிரஹணம் …
சூரிய கிரகணம் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ச…
tamilandvedas.com, swamiindology.blogspot.com. ரிக்வேதத்தில் சூரிய கிரகணம்– மீண்டும் ஆய்வு.
Here are the references:-
Sun spots in Sun—RV 10-189
Sun is a Star — RV 10- 156
Sun’s link with Eye- 10-90
உட்ஜட் கண் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › உ…
8 Oct 2021 — கண்ணை மூடினால் இருள்; சூரியன் … என்பது சந்திரனுடன் தொடர்பு உடையது’ என்றும் …
கண்களுக்கு சூரியன், மனதுக்கு சந்திரன் …
https://tamilandvedas.com › கண்…
18 Jun 2016 — கண்களுக்கு சூரியன், மனதுக்கு … (for old articles go to tamilandvedas.com OR … கண் – சூரியன்.
சூரியன் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ச…
·
28 Aug 2021 — சூரியன் என்பது ஒரு விளக்கம் . … வணங்கும் அனைவருக்கும் கண் முன் தெரியும் ஒரே …
My articles on the same subject:—
DATE OF RIG VEDA THROUGH SOLAR ECLIPSE-3000 BCE …
https://tamilandvedas.com › 2017/12/08 › date-of-rig-v…
8 Dec 2017 — Solar eclipses narrated in the Veda cannot be overlooked. In passage 10-138-4 of the Rig Veda, it is said Indra ‘maseva suryo vasu puryam adade’ …
Tamil Article: Solar Eclipse in Tamil and Sanskrit Literature
https://tamilandvedas.com › tamil-arti…
29 Dec 2011 — Tamil Article: Solar Eclipse in Tamil and Sanskrit Literature … ‘Mr One Thousand’ in Rig Veda and Tamil Literature (Post No.10,179) …
Was Jayadratha killed by a Solar Eclipse? | Tamil and Vedas
https://tamilandvedas.com › 2012/…/…
·
3 Jan 2012 — The earliest reference to a solar eclipse occurs in the Rig Veda. Atri Maharishi speaks of the wonders of the solar eclipse (RV5-40-5).
TWO RARE VEDIC HYMNS TO CURE SICKNESS – Tamil and …
https://tamilandvedas.com › two-rare…
4 Jan 2020 — TWO RARE VEDIC HYMNS TO CURE SICKNESS– Part 1(Post No.7418). Research article Written by London Swaminathan.
TWO RARE VEDIC MANTRAS TO CURE SICKNESS
https://swamiindology.blogspot.com › 2020/01 › two-r…
4 Jan 2020 — TWO RARE VEDIC MANTRAS TO CURE SICKNESS– Part 1(Post No.7418) · Research article Written by London Swaminathan · Uploaded in London on – 4 JANUARY …
TWO RARE VEDIC MANTRAS-PART 2 (Post No.7422) – Tamil …
https://tamilandvedas.com › 2020/01/05 › hydrotherap…
5 Jan 2020 — Acupressure in Rig Veda HYDROTHERAPY, ACUPRESSURE, MONSOON IN THE RIG VEDA; TWO RARE VEDIC MANTRAS-PART 2 (Post No.7422) Research article …
photo therapy
AMAZING VEDIC EYE CONNETION WITH SUN, EGYPT AND …
https://tamilandvedas.com › 2021/10/07 › amazing-ved…
7 Oct 2021 — Thanks for your great pictures. tamilandvedas.com, … Here again the Hindus confirm the link between the Sun and Eye.
sun | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › sun
7 Oct 2021 — Far seeing mother of the eyes”. Greek drama is full of allusions to the link between the eye and the sun. Aeschylus in Prometheus Bound refers …
–subham—
tags- சூரியன், 6 கண்டுபிடிப்புகள், ஒளிச் சிகிச்சை, வைட்டமின் டி , கறுப்புப் புள்ளிகள் , நட்சத்திரம்
You must be logged in to post a comment.