அழியாத மா கவிதை -ரிக் வேதத்தில் அற்புதக் கவிதை! (Post No.10122)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,122

Date uploaded in London – 22 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அற்புதக் கவிதை- ரிக் வேதத்தில் நதிகள் – ரிஷி உரையாடல் !

“சுவை புதிது, பொருள் புதிது , வளம் புதிது

சொற் புதிது , சோதிமிக்க

நவ கவிதை ,எந்நாளும் அழியாத

மகா கவிதை என்று நன்கு”– பாரதியார்

என்று பாரதியார் பாடியதற்கு இலக்கணமாகத் திகழும் கவிதை ஒன்று ரிக் வேதத்தில் இருக்கிறது. இது நதிகளுடன் காதினன் விசுவாமித்திரன் (RV 3-33)நடத்திய உரையாடல் ஆகும். ரிக் வேதத்தில் உள்ள சுமார் 20 உரையாடல் கவிதைகளில் ஒன்று இது.

‘சுவை புதிது, பொருள் புதிது’ – இது போல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நதிகள் பற்றிப் பாடியவர் எவருமிலர்.

‘வளம் புதிது , சோதி மிக்க நவ கவிதை’ – வளம் பெருக்கும் நதிகளைப் பாடிய – நவ- புதிய கவிதை.

அதைவிட முக்கியமான வரி “எந்நாளும் அழியாத மகா கவிதை”  இதை நதிகளே விசுவாமித்ர முனிவரிடம் சொல்கின்றன.

இதில் வரும் எட்டாவது மந்திரத்தில் வரும் வரிகள் வியக்கத்தக்க ஆரூடம் ஆகும் :–

நதிகள் சொல்கின்றன !

புலவனே ! நீ சொன்னதை எப்போதும் மறவாதேவருங்கால சந்ததிகள் பரம்பரை பரம்பரையாக உன் மொழிகளை எதிரொலிக்கப் போகின்றன ; புலவா ! உன் கவிதைகளில் எங்கள் மீது அன்பினைப் பொழிவாயாகுக . மனிதர்களின் நடுவே (நதிகளை ) தாழ்த்த வேண்டாம். உங்களுக்கு வணக்கம்.”

என்ன அற்புதமான தீர்க்க தரிசனம்! இன்று இதை நான் எழுதுகிறேன். அதை நீங்கள் படிக்கிறீர்கள். இதை 5000, 6000 ஆண்டுகளுக்கு முன்னர் நதிகளே சொல்லிவிட்டன . அதை நமக்கு ரிஷிகள் சொல்லிவைத்தனர். அதை ரிக் வேதம் கற்கும் வேத விற்பன்னர்கள் (ரிஷிகள்) சங்கராசார்யார் மடங்களிலும், இமயமலை அடிவார ஆஸ்ரமங்களிலும் இன்றும் ஓதிக் கொண்டு இருக்கின்றனர். இதில் வரும் அற்புதமான விஷயங்களைச்  சொல்கிறேன்.

உலகிலேயே பழைய புஸ்தகம் ரிக்  வேதம் ; ஹெர்மன் ஜாகோபியும், பால கங்காதர திலகரும் 6000 ஆண்டுப் பழமையானதென்று வான சாஸ்திர ரீதியில் நிரூபித்தனர். வில்சன் போன்றோர் 4000 ஆண்டுப் பழமையானது என்பர்.அதிலுள்ள நதிகளுடன் உரையாடல் பல அற்புத விஷயங்களைத் தெரிவிக்கிறது.

முதலில் கவிதையைப் படியுங்கள் :

ரிக்வேதம் 3-33-1

மலைகளின் இடுக்குகளில் இருந்து விபாஸ் நதியும் சுதுத்ரி நதியும் கடலை நோக்கி விரைந்து ஓடுகின்றன. இது இரு குதிரைகள் தனித்தனியே ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு செல்லுவதைப் போலும், இரண்டு வெள்ளை நிற தாய்ப் பசுக்கள் தங்கள் கன்றுகளை நக்கிக் கொண்டு செல்லுவது போலவும் உள்ளன .

என் உரை :-

என்ன அற்புதமான அறிமுகம்! என்ன அற்புதமான உவமை. ரிக் வேதம் முழுதும் ஆயிரக்கணக்கான இடங்களில் குதிரையும் பசுவும் வருகின்றன. வேத கால இந்துக்கள் இந்தப் பிராணிகளை வேகத்துக்கும் அன்பிற்கும் உவமைகளாகப் பயன்படுத்தினர் . தாய்ப் பசு கன்றுகளின்பால் கொண்ட அன்பு ‘வாத்சல்யம்’ எனப்படும். வத்ச என்றால் கன்று. குழந்தையின்பால் காட்டப்படும் அன்பு ‘வாத்சல்யம்’ . இதற்கு சிறந்த உதாரணம் சிலப்பதிகாரத்திலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல் பாடல்களிலும் வரும் மநு நீதிச் சோழன் கதையாகும். தனது கன்றை தேர்க்காலின் அடியில் பறிகொடுத்த தாய்ப்பசு சோழ மன்னனின் அரண்மனைக்குச் சென்று ஆராய்ச்சி மணியை அடித்து நீதி கேட்டது. இதைவிட அன்பிற்கு வேறு என்ன உதாரணம் தேவை?

உடம்பில் அம்மை நோய்க்கிருமிகளை ஏற்றி அம்மைத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார் எட்வர்ட் ஜென்னர். ஆகையால் எல்லா நோய்த் தடுப்பு மருந்துகளுக்கும் பசுவின் பெயர்–VACCINE வாக்சீன் – வந்தது ! என்ன அற்புதமான தியாகம்.

XXX

உலகில் இந்துக்களின் மகத்தான கொடை — மனித குலத்துக்கு அளித்த அன்பளிப்பு நான்கு

1-பசு – தாய்ப் பாலுக்கு இணையானது பசும்பால் என்று கண்டுபிடித்து காட்டுப் பசுக்களை வீட்டுமயமாக்கி (DOMESTICATED) மனித குலத்துக்கு அளித்தவர்கள் வேத கால இந்துக்கள்.

ஒட்டகப்பாலும் , ஆட்டுப் பாலும், கழுதைப் பாலும் பசும்பாலுக்கு இணையாகாது. இது இந்துக்களின் அற்புதக் கண்டுபிடிப்பு. உலகின் வேறு எந்த மொழி இலக்கியத்திலும் பசும்பால் போற்றப்படவில்லை – பசுவை அன்னை நிலைக்கு – கோ மாதா – என்று உயர்த்தவும் இல்லை .

2. குதிரை – உலகில் குதிரையின் மூதாதையர் தோன்றிய நாடு இந்தியா என்பதை பாசில் FOSSILS  என்னும் படிம அச்சுகள் காட்டுகின்றன. இந்திய குதிரைகளின் விலா எலும்புகளின் எண்ணிக்கைக்கும் வெளிநாட்டு குதிரைகளின் விலா (RIBS)  எலும்புகளுக்கும் வேறுபாடு உண்டு இதை ரிக் வேதம் குறிப்பிடுவதைக் காட்டி ஆரிய- திராவிட வாதம் பேசிய மார்க்சீய கும்பலுக்கும் மாக்ஸ்முல்லர் கும்பலுக்கும் செமையடி , மிதியடி  கொடுத்துள்ளனர் இந்துமத அறிஞர்கள்.

  (விலா எலும்பு பற்றிய ஆராய்ச்சி கட்டுரையை முன்னரே தந்துள்ளேன்).

 குதிரையின் வேகத்தை வைத்து ஹார்ஸ் பவர் horse power  என்று கணக்குப் போடும் அளவுக்கு நாம் அதை ஏற்றிவிட்டோம்

3. தசம ஸ்தானம், பூஜ்யத்தின் பயன்பாடு – இந்துக்கள் அளித்த பெரிய கொடை – எண்கள் (Hindu Numbers) ஆகும். அதை எழுதுவதற்கான வரிவடிவங்களைக் (1,2,3….9, 0) கொடுத்ததோடு தசம ஸ்தான (Decimal System)  எண்களையும் பயன்படுத்தினர். இதை ரிக் வேதத்தில் ஆயிரக்கணக்கான இடங்களில் காணலாம். இன்று பூஜ்யத்தையும் எண்களையும் பயன்படுத்தும் கம்ப் யூட்டர் முதலியவற்றுக்கு அடிகோலியவர்கள் நாம்தான்.

4. இரும்பு – வேதத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு முதலியன குறிப்பிடப்படுகின்றன. இதில் இரும்புதான் இன்று கொடிகட்டிப் பறக்கிறது. அதை உலகிற்கு கண்டுபிடித்துக் கொடுத்தவர்கள் இந்துக்களே. இவை எல்லாவற்றையும் நமக்கு இன்றும் காட்டுகிறது ரிக் வேதம்.

XXX

ரிக் 3-33-2

வெள்ளி போல மின்னும் அலைகளையுடைய நீங்கள் இருவரும் ( 2 ஆறுகளும்) இந்திரனால் தூண்டப்பட்டு , அவன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து தேரில் பூட்டப்பட்ட குதிரைகளைப் போல கடலை நோக்கி  ஓடுகிறீர்கள். ஒருவரை ஒருவர் நாடுவது போல ஒரு மனதுடன் ஒடுக்கின்றீர்கள்  .

எனது  உரை

தேரின் வேகம், குதிரையின் வேகம் இரண்டும் ஏராளமான இடங்களில்  உவமையாக வருகின்றன. ‘இம் என்னும் முன்னே 700 காதம் செல்லும்’ தேர் பற்றி பிற்காலத்தில் நள உபாக்கியனம் கதையில்  வருகிறது. ‘வைகலும் எண் தேர் செய்யும் தச்சன்’ என்று சங்க இலக்கியம் செப்புகிறது . இதில் ஒரு முக்கியமான விஷயம் பொதிந் து கிடக்கிறது. தேரும் குதிரையும் இவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டுமானால் எவ்வளவு நல்ல சாலைகள் , போக்குவரத்து வசதிகள் இருந்திருக்க வேண்டும் ! 2700 ஆண்டுகளுக்கு முன்னால் பாணினி எழுதிய இலக்கண நூலில்கூட சாலைகளின் பெயர்கள் எந்த நகரத்தை நோக்கி செல்லுகிறதோ அதன் பெயரில் உள்ளன . இப்போதுள்ள கிராண்ட் ட்ரங்க் ரோடு Grand Trunk Roads களுக்குச் சமமான, மணிக்கு 130 மைல் வேகத்தில் செல்லும் அமெரிக்க Motor ways சாலைகளுக்கு நிகரான ரோடுகள் அப்போது இருந்திருக்க வேண்டும்!

xxx

கடல் பற்றிய உண்மை

ரிக் வேதத்தில் சுமார் 100 இடங்களில் கடல் பற்றிய தெளிவான குறிப்புகள் உள்ளன. பல இடங்களில்  சிந்து என்னும் சொல் கடலுக்கும், நதிக்கும் பயன்படுத்தப் பட்டுள்ளது  விதண்டாவாதம் செய்யும் அரை வேக்காடுகள் , வெள்ளைத் தோல் முட்டாள்கள் வேத கால இந்துக்களுக்கு கடலே தெரியாது என்று உளறிக்கொட்டி இருக்கின்றனர். ஆழி என்ற தமிழ் சொல் கடலையும் குறிக்கும் வேறு 17 அர்த்தங்களையும் குறிக்கும்; சிந்து என்னும் சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. பிற்காலத்தில் வரும் இச்ச்சொல்லுக்கு கடல், நதி மற்றும் 15 அர்த்தங்களைக் காணலாம். விதண்டாவாதம் செய்வோர் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று வாதாடலாம். ஆனால் இக்கவிதையில் நதியை நோக்கி ஓடும் கடல் என்பது தெளிவாக உள்ளது.

பிராமணர்கள் தினமும் சொல்லும் மந்திரம் – வானிலிருந்து விழும் நீர்த்துளிகள் எப்படி கடலை நோக்கிச் செல்லுகின்றனவோ அப்படி நான் சொல்லும், செய்யும் நமஸ்காரங்கள் அனைத்தும் கேசவனை நோக்கிச் செல்கின்றன — என்பதாகும். உலகில் வேறு எவனாவது தினசரி மூன்று முறை செய்யும் கிரியையில் கடல் பற்றிப் பேசுகிறானா? அந்த அளவுக்கு பூகோளம் தெரிந்தவன் இந்து ( சந்தியாவந்தன மந்திரம் – ஆகாஸாத் பதிதம் தோயம்,,,,,,,,)

XXX

மொத்தம் 13 மந்திரங்கள்/பாடல்கள் இந்தத் துதியில் உள்ளன. இதோ மூன்றாவது மந்திரம்

ரிக் 3-33-3

நான் உத்தமியான தாயாரான சுதுத்ரிரி நதியினிடம் வந்திருக்கிறேன். பரந்து ஓடும் , வளம் தரும் விபாசா நதியிடம் வந்திருக்கிறோம். நீங்கள் இருவரும் ஒரே இலக்கை (கடல்) நோக்கிப் பாய்கிறீர்கள். கன்றுகளை நக்கிக் கொடுக்கும் தாய்ப் பசுக்களைப் போல தோன்றுகிறீர்கள்.

எனது உரை

மீண்டும் தாய் அன்பும், கடலும் இங்கே வருகின்றன. அதை விட முக்கியமான விஷயம் நதிகளைத்  தாயாருக்கு ஒப்பிடுவதாகும். உலகில் தாயை வணங்கும், பசுவை வணங்கும், நதியை வணங்கும் ஒரே சமுதாயம் இந்துக்கள்தான். இதற்காக தனிப்பட்ட மந்திரங்கள் இருக்கின்றன. இங்கு நதியைத் தாய் என்று குறிப்பிடுவதுபோல ஏனைய இடங்களிலும் தாய் அல்லது சகோதரி என்றே அழைக்கின்றனர். இன்றும் முன் பின் தெரியாத பெண்களை சகோதரி என்று அழைப்பதை தெற்கிலும் வடக்கிலும் காணலாம் (பெஹன் /பென்  அல்லது அக்கா/ தங்கச்சி  ) ரிக் வேதம் முழுதும் நதிகள் பெயர் ‘வதி’ என்ற பெண்பால் பின் ஓட்டுடன் (suffix) முடிகின்றன. பார்வதி – சரஸ்வதி …………….)

XXX

3-33-4

நதிகள் சொல்லுகின்றன –

நாங்கள் இறைவன் எங்களுக்காக ப் படைத்த இடத்தை (கடல்) நோக்கிப் பாய்கிறோம். நாங்கள் எங்கள் பணியில் உள்ளபோது எங்களை யாரும் தடுக்க இயலாது புலவன் எங்களிடம் என்ன சொல்ல விரும்புகிறான்?

எனது உரை

பிற்காலத்தில் கவிஞர்கள்  மேகம், குருவி, நாரை, குயில் கிளி, அன்னம், தும்பி, வானம் பாடி  முதலிய பல பிராணிகள், பூச்சிகள் பற்றிப் பாடியதை படிக்கிறோம் . காளிதாசன் பாடிய ‘மேகம் விடு தூது’ மேகத்துடன் பேசுவதைக் காட்டும். இங்கே நதிகளுடன் விசுவாமித்திரன் பேசி , அவைகளை ஆசீர்வதிப்பதைக் காண்கிறோம்; அது மட்டுமல்ல; அவைகளை உயிருடன் இருப்பதாகக் காட்டுகின்றனர். அவைகளும் அவனுடன் உரையாடுகின்றன. இத்தகைய வகை இலக்கியத்தில் இதுவே முதல் ( a new genre – Odes; Ode to Two Rivers or Dialogue with Two Rivers) ) முயற்சி.

–தொடரும்

tags – அழியாத மா கவிதை ,விபாஸ் , நதி, சுதுத்ரி , விசுவாமித்திரன், RV 3-33

ஆறு (நதி) பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8536)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8536

Date uploaded in London – 19 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.ஆறு நிறைய நீர் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்

2.ஆறு நீந்தின எனக்குக் குளம் நீந்துவது அரிதோ?

3.ஆறு போவதே கிழக்கு, அரசன் சொல்வதே தீர்ப்பு

4.ஆறு கெட நாணல் இடு , ஊரு கெட நூலை  இடு , காடு கெட ஆடு விடு , மூன்றும் கெட முதலையை விடு

5.ஆறு காதம் என்கிறபோதே கோவணத்தை அவிழ்த்து குடுமியில் கட்டிக்கொண்டானாம் .

tags – ஆறு ,நதி ,பழமொழி,