நாமும் நறுமணப் பொருட்களும் (Post No.9051)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9051

Date uploaded in London – – 19 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாமும் நறுமணப் பொருட்களும்

Kattukutty

வெளிநாட்டினர்  இந்தியாவிற்கு வழிகண்டு பிடிக்க

வேண்டும் என்று வெறி கொண்டலைய வைத்தது நம் நாட்டிலுள்ள

வாசனைப் பொருள்களும் உணவுப் பொருள்களுமே!!!

நாம் இந்தப் பொருள்களை வாசனைப் பொருள்களாக மட்டுமின்றி

உணவிற்காகவும், மருந்து பொருள்களாகவும் பன்நெடுங்காலமாக

உபயோகப் படுத்திக்கொண்டு வருகிறோம்.அவை என்னென்ன என்று பார்ப்போமா????

தெய்வீகச் செடியாகவும் நெஞ்சில் கபம் அகற்றியாகவும் உள்ள முக்கியமான ஒரு பொருள் “துளசி”. உடலில் வியர்வையை உண்டாக்கும் மிக முக்கியமான பொருளாக விளங்குகிறது இது!!!

நம் உடலுக்கு பசியைத்தூண்டி நம்மை உண்ணவைக்கும் உணவுப்

பொருள்கள் :-

இஞ்சி, சோம்பு, இலவங்கப்பட்டை, கறி வேப்பிலை, ஓமம், பெருஞ்சீரகம், சீரகம், குங்குமப்பூ, அன்னாசிப்பூ, முள்ளங்கி, கிராம்பு.

நிரம்பப்பேர் அவதிப்படுவது வயிற்றிலுள்ள வாயுத் தொந்தரவினால்

தான்……இதோ இதை போக்கும் நறுமணப்பொருள்கள் :-

இஞ்சி, மஞ்சள், வெள்ளைப் பூண்டு, மிளகு, ஏலக்காய், மிளகு, புதினா,

கொத்தமல்லி, வெந்தயம், இலவங்கப்பட்டை, கருவப்பட்டை, கிராம்பு

சீரகம், பெருஞ்சீரகம்

நாம் சாப்பிடும் சாப்பாட்டை நம் உடலுக்குள் உரமாக்கும் சில

பொருள்களாவன :-

புளி, மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, வசம்பு, அதிமதுரம்,

வெள்ளைப் பூண்டு, ஜாதிக்காய், ஓமம், தாளிச பத்திரி.

நம் உடலுக்குத் தேவை வெப்பம். நம் நாடி நடையை வேகப்படுத்தி வெப்பத்தை கொடுக்கும் சில நறுமணப் பொருள்கள் :-

வெள்ளைப் பூண்டு,  பெருங்காயம், புளி, முள்ளங்கி, ஏலக்காய், மிளகு,

மிளகாய், இஞ்சி, மஞ்சள், கொத்தமல்லி, இலவங்கப்பட்டை, கடுகு,

திப்பிலி ஜாதிக்காய் முதலியன….

நம் நெஞ்சில் உள்ள இருமலைப் போக்கி கோழையை அகற்றும்

சில பொருள்கள் :-

துளசி , பெருங்காயம்,வெள்ளைப் பூண்டு, அதிமதுரம்

நம் உடலில் உள்ள அயர்வினையும் களைப்பினையும் போக்கும் சில

பொருள்களாவன :-

ஓமம் , குங்குமப்பூ, புதினா, பெருங்காயம், மிளகாய்

உடலுக்கு உரம் தரும் வலுவைத்தரும் வாசனைப் பொருள்கள் :-

கிராம்பு, கச கசா

மேற்கண்ட பொருள்கனைத்தையும் தெரிந்தோ , தெரியாமலோ நாம்

நமது சமையலில் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இனி மேல் தெரிந்தே செய்வோமாக!!!!

tags- நறுமண,  வாசனை,  பொருள்கள்

***