Post No. 10,280
Date uploaded in London – 31 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகளின் மேலும் 30 பொன்மொழிகளை நவம்பர் மாத காலண்டரில் காண்போம்
பண்டிகை நாட்கள் – நவம்பர் 4 தீபாவளி, அமாவாசை ,லட்சுமி பூஜை; 5 கோவர்த்தன பூஜை , குஜராத்தி புத்தாண்டு; 9 சூர சம்ஹாரம், கந்த சஷ்டி; 14 குழந்தைகள் தினம்; 19 திருக் கார்த்திகை தீபத் திருவிழா , சந்திர கிரஹணம்; 23 ஸ்ரீ சத்ய சாய் பாபா பிறந்த தினம்
அமாவாசை – 4; பெளர்ணமி -19;ஏகாதசி 1,15,30; சுப முகூர்த்த தினங்கள் – 8,11,21,24,25,29
XXX
நவம்பர் 1 திங்கட் கிழமை
முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம்
சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே – என்னவனே
சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
தற்பரனே நின்தாள் சரண்
XXX
நவம்பர் 2 செவ்வாய்க் கிழமை
உருவாய் உருவில் உருவாகி ஓங்கி
அருவாய் அருவில் அருவாய் – ஒருவாமல்
நின்றாயே நின்ற நினைக்காண்ப தெவ்வாறோ
என்தாயே என்தந்தை யே.
XXX
நவம்பர் 3 புதன் கிழமை
வந்தித்தேன் பிட்டுகந்த வள்ளலே நின்னடியான்
சிந்தித்தேன் என்றல் சிரிப்பன்றோ – பந்தத்தாஞ்
சிந்துசிந்திப் பித்தெனது சிந்தையுணின் பொன்னருளே
வந்துசிந்திப் பித்தல் மறந்து.
XXX
நவம்பர் 4 வியாழக் கிழமை
இன்றோ பகலோ இரவோ வருநாளில்
என்றோ அறியேன் எளியேனே – மன்றோங்கும்
தாயனையாய் நின்னருளாம் தண்ணமுதம் உண்டுவந்து
நாயனையேன் வாழ்கின்ற நாள்.
XXX
நவம்பர் 5 வெள்ளிக் கிழமை
ஊட்டுகின்ற வல்வினையாம் உட்கயிற்றால் உள்ளிருந்தே
ஆட்டுகின்ற நீதான் அறிந்திலையோ
XXXX
நவம்பர் 6 சனிக் கிழமை
உன்னால் எனக்காவ துண்டதுநீ கண்டதுவே
என்னால் உனக்காவ தேதுளது – சொன்னால்யான்
தந்தார்வத் தோடும் தலைமேற்கொண் டுய்கிற்பேன்
எந்தாயிங் கொன்றுமறி யேன்.
XXXX
நவம்பர் 7 ஞாயிற்றுக் கிழமை
தண்ணியநல் அருட்கடலே மன்றில் இன்பத்
தாண்டவஞ்செய் கின்றபெருந் தகையே எங்கள்
புண்ணியனே பிழைகுறித்து விடுத்தி யாயில்
பொய்யனேன் எங்குற்றென் புரிவேன் அந்தோ.
XXX
நவம்பர் 8 திங்கட் கிழமை
பூவைவிட்டுப் புல்லெடுப்பார் போலுன் திருப்பாதத்
தேவைவிட்டு வெம்பிறவித் தேவர்களைக் – கோவையிட்டுக்
கூவுவார் மற்றவரைக் கூடியிடேன் கூடுவனேல்
ஓவுவா ராவ லுனை.
XXXX
நவம்பர் 9 செவ்வாய்க் கிழமை
பண்ணாலுன் சீரினைச்சம் பந்தர்சொல வெள்ளெலும்பு
பெண்ணான தென்பார் பெரிதன்றே – அண்ணாஅச்
சைவவடி வாஞான சம்பந்தர் சீருரைக்கில்
தெய்வவடி வாஞ்சாம்பர் சேர்ந்து.
XXXX
நவம்பர் 10 புதன் கிழமை
எங்கோவே யான்புகலி எம்பெருமான் தன்மணத்தில்
அங்கோர் பொருட்சுமையாள் ஆனேனேல் – இங்கேநின்
தாள்வருந்த வேண்டேன் தடைபட்டேன் ஆதலினிந்
நாள்வருந்த வேண்டுகின்றேன் நான்.
XXXX
நவம்பர் 11 வியாழக் கிழமை
பூவுக் கரையரும்வான் புங்கவரும் போற்றுதிரு
நாவுக் கரையரெனு நன்னாம – மேவுற்ற
தொண்டர்க்கு நீகட்டுச் சோறெடுத்தாய் என்றறிந்தோ
தொண்டர்க்குத் தொண்டனென்பார் சொல்.
XXXX
நவம்பர் 12 வெள்ளிக் கிழமை
எம்பரவை யோமண் ணிடந்தலைந்தான் சுந்தரனார்
தம்பரவை வீட்டுத் தலைக்கடையாய் – வெம்பணையாய்
வாயிற் படியாய் வடிவெடுக்க நேர்ந்திலனே
மாயப்பெயர் நீண்ட மால்.
XXXX
நவம்பர் 13 சனிக் கிழமை
நண்ணித் தலையால் நடக்கின்றோம் என்பதெங்கள்
மண்ணில் பழைய வழக்கங்காண் – பண்ணிற்சொல்
அம்மையார் வாமத்தோய் ஆயினுமுன் காரைக்கால்
அம்மையார் போனடந்தார் ஆர்.
XXXX
நவம்பர் 14 ஞாயிற்றுக் கிழமை
வேத முடிவோ விளங்கா கமமுடிவோ
நாத முடிவோ நவில்கண்டாய் – வாதமுறு
மாசகர்க்குள் நில்லா மணிச்சுடரே மாணிக்க
வாசகர்க்கு நீஉரைத்த வாறு.
XXXX
நவம்பர் 15 திங்கட் கிழமை
ஆர்கொண்டார் சேய்க்கறியிட் டாரே சிறுத்தொண்டப்
பேர்கொண்டார் ஆயிடிலெம் பெம்மானே – ஓர்தொண்டே
நாய்க்குங் கடைப்பட்ட நாங்களென்பேம் எங்கள்முடை
வாய்க்கிங் கிஃதோர் வழக்கு.
XXX
நவம்பர் 16 செவ்வாய்க் கிழமை
முன்மணத்தில் சுந்தரரை முன்வலுவில் கொண்டதுபோல்
என்மணத்தில் நீவந் திடாவிடினும் – நின்கணத்தில்
ஒன்றும் ஒருகணம்வந் துற்றழைக்கில் செய்ததன்றி
இன்றும் ஒருமணஞ்செய் வேன்.
XXX
நவம்பர் 17 புதன் கிழமை
வெள்ளைப் பிறைஅணிந்த வேணிப் பிரானேநான்
பிள்ளைப் பிராயத்தில் பெற்றாளை – எள்ளப்
பொறுத்தாள்அத் தாயில் பொறுப்புடையோய் நீதான்
வெறுத்தால் இனிஎன்செய் வேன்.
XXXX
நவம்பர் 18 வியாழக் கிழமை
தாழ்விக்கும் வஞ்சச் சகமால் ஒழித்தென்னை
வாழ்விக்கும் நல்ல மருந்தென்கோ
XXX
நவம்பர் 19 வெள்ளிக் கிழமை
குற்றம் பலசெயினுங் கோபஞ் செயாதவருள்
சிற்றம் பலமுறையுஞ் சிற்பரனே – வெற்றம்பல்
பொய்விட்டால் அன்றிப் புரந்தருளேன் என்றெனைநீ
கைவிட்டால் என்செய்கேன் காண்.
XXXX
நவம்பர் 20 சனிக் கிழமை
எள்ளலே என்னினுமோர் ஏத்துதலாய்க் கொண்டருளெம்
வள்ளலே என்றனைநீ வாழ்வித்தால் – தள்ளலே
வேண்டுமென யாரே விளம்புவார் நின்னடியர்
காண்டுமெனச் சூழ்வார் களித்து.
XXXX
நவம்பர் 21 ஞாயிற்றுக் கிழமை
அருளுடைய பரம்பொருளே மன்றி லாடும்
ஆனந்தப் பெருவாழ்வே அன்பு ளோர்தம்
தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட
சிவமேமெய் அறிவுருவாம் தெய்வமே
XXXX
நவம்பர் 22 திங்கட் கிழமை
பேசத் தெரியேன் பிழையறியேன் பேதுறினும்
கூசத் தெரியேன் குணமறியேன் – நேசத்தில்
கொள்ளுவார் உன்னடிமைக் கூட்டத்தார் அல்லாதார்
எள்ளுவார் கண்டாய் எனை.
XXXX
நவம்பர் 23 செவ்வாய்க் கிழமை
கண்ணப்பன் ஏத்துநுதற் கண்ணப்ப மெய்ஞ்ஞான
விண்ணப்ப நின்றனக்கோர் விண்ணப்பம் – மண்ணிற்சில்
வானவரைப் போற்றும் மதத்தோர் பலருண்டு
நானவரைச் சேராமல் நாட்டு.
XXXX
நவம்பர் 24 புதன் கிழமை
பொன்னின் றொளிரும் புரிசடையோய் நின்னையன்றிப்
பின்னொன் றறியேன் பிழைநோக்கி – என்னை
அடித்தாலு நீயே அணைத்தாலு நீயே
பிடித்தேனுன் பொற்பாதப் பேறு.
XXX
நவம்பர் 25 வியாழக் கிழமை
இப்பாரில் என்பிழைகள் எல்லாம் பொறுத்தருளென்
அப்பாநின் தாட்கே அடைக்கலங்காண் – இப்பாரில்
நானினது தாழல் நண்ணுமட்டும் நின்னடியர்
பானினது சீர்கேட்கப் பண்.
XXXX
நவம்பர் 26 வெள்ளிக் கிழமை
புற்றோங்கும் அரவமெல்லாம் பணியாக் கொண்டு
பொன்மேனி தனில்அணிந்த பொருளே மாயை
உற்றோங்கு வஞ்சமனக் கள்வ னேனை
உளங்கொண்டு பணிகொள்வ துனக்கே ஒக்கும்
XXXX
நவம்பர் 27 சனிக் கிழமை
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
xxx
நவம்பர் 28 ஞாயிற்றுக் கிழமை
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
XXX
நவம்பர் 29 திங்கட் கிழமை
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே
xxx
நவம்பர் 30 செவ்வாய்க் கிழமை
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
—subham–
tags — வள்ளலார் பொன்மொழிகள், நவம்பர் 2021, நற்சிந்தனை காலண்டர்,