பசுவின் வால் வேண்டுமா? நாயின் வால் வேண்டுமா? (Post No. 4359)

Written by London Swaminathan

 

Date: 2 NOVEMBER 2017

 

Time uploaded in London- 11-26 AM

 

 

Post No. 4359

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சொல்ல வரும் ஒரு கருத்தை மனதில் பதியுமாறு சொல்ல வல்லவர்கள் நம் தமிழ்ப் புலவர்கள்; வீட்டில் கிளிபோல ஒருத்தி இருக்க வெளியே காகம் போன்ற ஒருத்தி வேண்டுமா? பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடக்க விரும்புகிறீர்களா அல்லது நாயின் வாலைப் பிடித்துக் கொண்டு ஆற்றைக் கடக்க விரும்புகிறீர்களா? என்று நீதி வெண்பாப் புலவர் கேட்கிறார்.

 

நீதி வெண்பாப் பாடல்களை எழுதியவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. அதனால் என்ன? பாடல் புரிந்தால் போதுமே!

உற்றபெருஞ் சுற்ற முறநன் மனைவியுடன்

பற்றிமிக வாழ்க பசுவின் வால் — பற்றி

நதிகடத்த லன்றியே நாயின் வால் பற்றி

நதிகடத்த லுண்டோ நவில்

 

பசு மாட்டின் வலைப் பிடித்துக்கொண்டு நீர் நிரம்பிய ஆற்று வெள்ளத்தை கடப்பதல்லாமல், ஒரு சிறு நாயின் வாலைப் பிடித்துகொண்டு ஆற்றைக் கடந்து செல்லல் முடியுமோ, நீயே சொல். அதுபோல பெருமையான நல்ல உறவினர்கள் தன்னைச் சூழ்ந்திருப்ப ஒருவன் தனக்கு வாய்த்த நல்ல மனைவியுடன் அன்புகொண்டு வாழக் கடவன்.

 

வியாக்கியானம்: நல்ல சுற்றத்தார் வினைவகையால் நேர்வராதலின் உற்ற பெருஞ் சுற்றம் என்றார் அஃதாவது நாமே இப்பிறவி முயற்சியால்  சேர்த்துக்கொள்ளல் இயலாதென்பது. பெருஞ்சு ற்றமென்றது, நல்ல தன்மைகளிற் பெருமை மிக்க உறவினரை; ஏனென்றால் அவருடைய பண்புகளே வாழ்க்கையாற்றைக் கடக்க உதவுமாதலின், வாழ்க்கையை இப்பாட்டில் ஆறாக உருவகப்படுத்தினார்.

 

நல்ல மனைவி

 

கடினமான வாழ்க்கையை கடந்து செல்ல துணையாக இருப்பவள் மனைவி; அவள் தன் கணவனின் விருப்பு, வெறுப்புகளை, நெருங்கிப் பழகுவதால் அறிந்து கொண்டு, அவன் இயல்புக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப இடனறிந்து, இடுக்கண் களைந்து, துணை புரிபவள் ‘நன்மனைவி’ .

 

மனைவியும் நெஞ்சொத்தவளாயிருத்தல் வேண்டுமென்பதால் நல்ல மனைவி என்ற அடையொடு சேர்த்துக் கூறினார். கணவனும் மனைவியும் தமக்குள்ள ஒருமைப் பாட்டினாலேயே எடுத்த வேலையை முடிக்கப் பெறுதல் வேண்டுமென்பது,

காதன் மனையாளுங் காதலனும் மாறின்றித்

தீதிலொருகருமம் செய்பவே

என்னும் நன்னெறிச் செய்யுளாலுந் தெளியப்படும்; மனைவி கணவனைப் பாதுகாக்கும் கடமையுடையவள் என்பது,

 

தற்கத்துத் தற்கொண்டாள் பேணித் தகை சான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் (56)

 

-என்னும் திருக்குறளிற் கண்டுகொள்க

 

பொருள்:– கற்பு நெறி தவறாமல் தன்னைக்காத்து, தன் கணவனையும் பேணி, தகுதி வாய்ந்த குடிப்பெருமையையும் போற்றிப்  பாதுகாத்து, எக்காலத்தும் மனச் சோர்விலாமல் வாழ்ப்பவளே பெண் எனப் போற்றுதலுக்குரியவள்.

நாலடியார், திருக்குறள் ஆகியவற்றில் பிறர் மனை நயவாமை குறித்துள்ள செய்யுட்களையும் படித்து ஒப்பிடுக.

 

சுபம், சுபம்–

 

யார் மனைவி? எவன் மகன்?

IMG_4485

Compiled  by London swaminathan

Post No.2254

Date: 18 October 2015

Time uploaded in London: 14-59

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

1.ரத்னாகரோ ஜலநிதிரித்யசேவி தனாசயா

தனம் தூரே அஸ்து வதனமபூரி க்ஷாரவாரிபி:

பண ஆசையால் கடலில் இறங்கினால், பணம் தூரப் போய்விட்டது; வாய் எல்லாம் உப்பு ஆனதுதான் மிச்சம்!

ஹிந்தி: சௌப்பே கயே சப்பே பனனே துப்பே ஹீ ரஹ் கயே.

Xxx

2.சர்வம் ஸ்ரத்தயா தத்தம் ஸ்ராத்தம் – ப்ரதிமா

சிரத்தையாகச் செய்யப்படுவது சிராத்தம்

Xxx

3.சர்வஜன மனோபிராமம் கலு சௌபாக்யம் நாம –ஸ்வப்னவாசவதத்தம்

எல்லோர் மனதையும் கவரக்கூடிய விஷயமே சௌபாக்கியம் எனப்படும்.

Xxx

IMG_4496 (2)

யார் மனைவி? எவன் மகன்?

4.சா பார்யா யா ப்ரியம் ப்ரூதே

ச புத்ரோ யத்ர நிவ்ருத்தி:

தன்மித்ரம் யத்ர விஸ்வாச:

ச தேஸோ யத்ர ஜீவ்யதே – (மஹாபாரதம்)

யார் அன்பாகப் பேசுகிறாளோ அவளே மனைவி,

யார் சுகமான வாழ்வு தருகிறானோ அவனே மகன்,

எங்கே விஸ்வாசம் (நம்பக்கூடிய தன்மை) இருக்கிறதோ அவனே நண்பன்,

எங்கு நல்ல வாழ்க்கை நடத்தமுடிகிறதோ அதுவே நாடு.

ஹிந்தியில்

பார்யா வஹீ ஹை, ஜோ ப்ரிய போலே,

புத்ர வஹீ ஹை, ஜிஸ்ஸே சுக மிலே,

மித்ர வஹீ ஹை ஜிஸ்மேம் விஸ்வாஸ் ஹோ,

தேஷ் வஹீ ஹை, ஜஹாம் ஜீவிகா ஹோ.

doctor3

யார் டாக்டர்? யார் போலி மருத்துவர்?

ஸ்ருதே பர்யவதாதத்வம் பஹுசோ த்ருஷ்டகர்மதா

தாக்ஷ்யம் சௌசமிதி ஞேயம் வைத்யே குணசதுஷ்டயம்

–சரக (சூத்ரம்) 9-6

நல்ல மருதுவரின் 4 லட்சணம்:

ஸ்ருதே பர்யவதாதத்வம் = மருத்துவ அறிவு

பஹுசோ த்ருஷ்டகர்மதா= நல்ல அனுபவம்

தாக்ஷ்யம் = திறமை

சௌசமிதி= தூய்மை (சுத்தம்)

நோயாளிகளை எப்படி கவனிப்பது?

மைத்ரீ காருண்யமார்தேஷு சக்யே ப்ரீதிரூபேக்ஷணம்

ப்ரக்ருதிஸ்தேஷு பூதேஷு வைத்யவ்ருத்திஸ்சதுர்விதா

–சரக (சூத்ரம்) 9-26

மைத்ரீ = நட்புடன் அணுக வேண்டும்

காருண்யம்= கருணை இருக்க வேண்டும்

ப்ரீதி = உற்சாகமாக சிகிச்சைதர வேண்டும்

உபேக்ஷணம்= நோயாளியிடத்தில் அனுதாபம் இருக்க வேண்டும்

போலி வைத்யர்கள் எப்படி இருப்பர்?

குசேல: கர்கச: ஸ்தப்தோ க்ராமணீ ஸ்வயமாகத:

பஞ்ச வைத்யா ந பூஜ்யந்தே தன்வந்த்ரிசமா அபி

–சம்ஸ்கிருத பொன்மொழி

மருத்துவப் பிதாமஹான் தன்வந்த்ரிக்குச் சமமானவராக இருந்தாலும் கீழ்க்கண்ட ஐந்து போலி மருத்துவருக்கு மதிப்பளிக்க வேண்டாம்:–

குசேல: = மோசமான ஆடை அணிந்தவர்

கர்கச: =முரட்டுப் பேர்வழி

ஸ்தப்தோ = பிடிவாதக்காரன்

க்ராமணீ =குதர்க்கமான (நேர்மையற்ற) பார்வையுடையோன்

ஸ்வயமாகத: = தானாக (அழையாமலே) சிகிச்சைதர வருபவன்

திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் சொன்ன விஷயங்களி இவற்றுடன் ஒப்பிட்டு மகிழ்க!!!

–சுபம்–

கல்யாணமாம், கல்யாணம்!

azaki

Article No.2011

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 23  July 2015

Time uploaded in London : காலை 8-01

 

கல்யாணம் என்று வந்தால் யாருக்கு எதில் ஆசை? என்ன எதிர்பார்க்கிறார்கள்? நம் முன்னோர்கள் பாடிய பாட்டு என்ன தெரியுமா?

பெண்ணுக்கு ஆசை – கணவன் அழகாக இருக்க வேண்டும்

அம்மாவுக்கு ஆசை – மாப்பிள்ளை நல்ல பணக்காரராக இருக்க வேண்டும்

அப்பாவுக்கு ஆசை – மாப்பிள்ளை நல்ல புத்திசாலியாக இருக்க வேண்டும்

உறவினர்களுக்கு ஆசை – நல்ல குடும்பமாக இருக்க வேண்டும்

அழைப்புக்கிணங்கி வந்தோருக்கு ஆசை – நல்ல சாப்பாடு கிடைக்க வேண்டும்.

கன்யா வரயதே ரூபம், மாதா வித்தம், பிதா ஸ்ருதம்!

பாந்தவா: குலம் இச்சந்திமிஷ்டான்னமிதரே ஜனா:!!

radha beauty

நல்ல மனைவி யார்?

ஐந்து ‘ல’காரம் இருந்தால் போதும்; நீங்கள் நல்ல அதிர்ஷ்டசாலிதான்! ஐந்து ல- காரம் என்றவுடன் ஐந்து லட்சம் ரூபாய் வரதட்சிணை என்று நினைத்துவிடாதீர்கள். அந்தக் காலம் எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது. கீழ்கண்ட ஐந்து ல, லா – வேண்டும்:-

அனுகூ’லா’ = நன்மை செய்பவர்

விம’லா’ங்கி = நாணம் உள்ளவர்

கு’ல’ஜா = உயர்குலப் பெண்; அதாவது பண்புமிக்க குடும்பப் பெண்

குச’லா’ = திறமைசாலி

சுசீ’லா’ = நல்ல ஒழுக்கம் வாய்ந்தவள்

அனுகூலாம் விமலாங்கிம் குலஜாம் குசலாம் சுசீலசம்பன்னாம்

பஞ்ச லகாராம் பார்யாம் புருஷ: புண்யோதயா லபதே

–சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

IMG_4877 (2)

மாப்பிள்ளைக்கு எதனால் மதிப்பு?

இதேபோல மாப்பிள்ளைக்கோ அல்லது எந்த ஒரு மனிதனுக்கோ, மதிப்பளிக்கக்கூடிய ஐந்து ‘வ’கார அம்சங்கள் இருக்கின்றன. அவையாவன:–

வஸ்திரம் / உடுப்பு

வபுஷம் / உருவம்

வாக் / உரைத்தல் (பேசுதல்)

வித்யா/ கல்வியறிவு

விநய/ பணிவு

வஸ்த்ரேன வபுஷா வாசா வித்யயா விநயேன ச

வகாரை: பஞ்சாபி: ஹீன நரோநாயாதி கௌரவம்

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்!