
WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,072
Date uploaded in London – 9 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி அவர்கள் தேர்வு செய்து வழங்கிய சில சுபாஷிதங்கள் தரப்பட்ட முந்தைய கட்டுரை எண் 9948 (வெளியான தேதி: 8-8-2021)
நல்ல ஒரு நண்பனின் குணங்கள் யாவை?
ச.நாகராஜன்
சம்ஸ்கிருத அறிஞரான டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி (Dr.T.S. Gouripathi Sastri) அவர்களிடம் ஆந்திரா பல்கலைக்கழகம் நல்ல சில சுபாஷிதங்களைத் தேர்ந்தெடுக்குமாறு (1978இல்) பணிக்க, அவர் 36 சுபாஷிதங்களைத் தொகுத்துத் தந்தார். அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் அவரே செய்துள்ளார். அவற்றில் இருபத்திஐந்து சுபாஷிதங்களை சென்ற கட்டுரைகளில் கண்டோம். மேலும் சில சுபாஷிதங்கள் இதோ:-
பாபாந்நிவாரயதி யோஜயதே ஹிதாய
க்ருஹானி க்ருஹதி குணான் ப்ரகடீகரோதி |
ஆபத்கதம் ச ந ஜஹாதி ததாதி காலே
சன்மித்ரலக்ஷணமிதம் ப்ரவதந்தி சந்த: ||
நல்ல ஒரு நண்பனின் குணங்கள் இவையே :
அவன் பாப காரியங்களைச் செய்வதைத் தடுப்பான். நல்லனவற்றைத் தருவதுடன் சேர்ப்பான். ரகசியங்களைக் காப்பான். நற்குணங்களை அனைவருக்கும் தெரியப்படுத்துவான். ஆபத்துக்காலங்களில் ஒரு போதும் கைவிட்டுப் போக மாட்டான். தேவையான காலங்களில் உதவுவான்.
The following are the qualities of a good friend: he prevents from (doing) sin (-ful acts) associate one with the beneficial things, keeps secrets, brings merits into light, never leaves in calamities, and helps in needy times.
*

ரஹஸ்யபேதோ யாச்ஞயா ச நைஷ்டுர்ய சலசித்ததா |
க்ரோதோ நிஸ்ஸத்யதா தூதமேதந்மித்ரஸ்ய தூஷணம் ||
ஒரு நண்பணின் கெட்ட குணங்கள் இவை:- ரகசியத்தைக் காப்பாற்றாமல் வெளியிடுவது, பிச்சையெடுப்பது, நிஷ்டூரமானதன்மை, சல சித்தம் (அலைபாயும் மனம்) க்ரோதம், பொய் கூறுதல் மற்றும் சூதாடுதல்.
The following are the defects of a friend: betrayal of secrets, begging (something or the other), harshness, fickle-mindedness, short temper, lying, and gambling.
*
யதாம்பஸி ப்ரஸன்னே து ரூபம் பஷ்யதி சக்ஷுஷா |
தத்தத் ப்ரஸ்ன்னேந்த்ரியவான் ஞேயம் ஞானேன பஷ்யதி ||
தெளிவாக நீர் இருக்கும் போது ஒருவன் எப்படி நீரின் அடியில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண முடிகிறதோ, அதே போல புலன்கள் அமைதியாக தெளிவாக இருக்கும் போது ஒருவனது ஞானத்தால் அனைத்தையும் புரிந்து கொள்ளலாம்,
As one can see things situated in deep waters when the water is clean one can see objects with his wisdom when his senses are clear (calm).
*

ஜிதேந்த்ரியத்வம் வினயஸ்ய காரணம் குணப்ரகர்ஷோ வினயாத்வாப்யதே |
குணாதிகே பும்ஸி ஜனோநுரஜ்யதே ஜனானுராகப்ரபவா ஹி சம்பத: ||
வினயத்திற்குக் காரணம் ஒருவன் புலன்களின் மீது கொண்டிருக்கும் கட்டுப்பாடே. நற்குணங்கள் அனைத்தும் வினயத்தாலேயே அடையப்படுகின்றன. நற்குணங்களைக் கொண்டிருக்கும் ஒருவன் மீது ஜனங்கள் பிரியம் கொண்டிருக்கின்றனர். அந்த நல்ல அன்பே (எண்ணமே) நிச்சயமான செல்வமாகும்.
Control over (one’s) senses is the cause of modesty. The wealth of merits is achieved by the modesty. People love the person who has the wealth of merits and surely riches are the out come of people’s love (good will).
*
கல்பதம: கல்பிதமேவசூதே ஸா காமதுக்காமிதமேவ தோக்தி |
சிந்தாமணிச்சிந்திததமேவ தத்தே சதாம் ஹி சங்க: சகலம் ப்ரசூதே!
கல்பதருவானது விரும்பியதை மட்டுமே தரும். காமதேனு இச்சைப்பட்டதை மட்டுமே தருகிறது. சிந்தாமணியோ நினைத்ததை மட்டுமே தருகிறது. ஆனால் நல்லவர்களின் சேர்க்கையோ அனைத்தையுமே தருகிறது.
The Kalpa tree yields only what is wished for. Kmadheny yields only what is desired and the Cintamani yields only what is contemplated on. But the company of the noble yields everything.
tags- நல்ல , நண்பன் ,குணங்கள்,
***