நவம்பர் 2015 காலண்டர்

saint3

(மன்மத வருடம் ஐப்பசி/ கார்த்திகை)

இந்த மாதக் காலண்டரில், 30 அபூர்வ தமிழ் பழமொழிள் இடம்பெறுகின்றன.

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by London swaminathan

Date: 30 October 2015.

Post No:2286

Time uploaded in London :–  14-26

(Thanks  for the pictures) 

முக்கிய நாட்கள்: நவம்பர் 10-தீபாவளி (தமிழ் நாட்டில்),

11—பிற மாநிலங்களில் தீபாவளி;

நவம்பர் 25- கார்த்திகை தீபம் (திருவண்ணாமலை)-

பாஞ்சராத்ர தீபம்- 26

கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்- 12

கந்த சஷ்டி/ சூர சம்ஹாரம்- 17

ஐயப்பன் விரதம் ஆரம்பம் (கார்த்திகை மாதப் பிறப்பு)- 17

குழந்தைகள் தினம்- நவம்பர் 14

அமாவாசை – நவம்பர் 11

ஏகாதசி –7, 22

பௌர்ணமி—நவம்பர் 25 (திருக் கார்த்திகை)

முகூர்த்த நாட்கள்: 2, 8, 13, 15,18, 22, 27, 29, 30

saint4

நவம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை

கடலிலே பிறக்கும் உப்புக்கும், மலையிலே விளையும் நாரத்தம் காய்க்கும் தொந்தம்

There is a union between the salt born in the sea, and the lemon that grows on the hills. (These two are united in pickles. The saying is applied to two people who are born in different countries, but who meet and act together.)

நவம்பர் 2 திங்கட்கிழமை

நார் அறுந்தால் முடியலாம், நரம்பு அறுந்தால் முடியலாம், மனம் அறுந்தால் முடியாது

If a fibre breaks it may be joined again, if a vein breaks, it may be joined together, but if the heart breaks, it cannot be joined.

நவம்பர் 3 செவ்வாய்க்கிழமை

பத்துப் பேருக்குப் பல்குச்சி, ஒருவனுக்குத் தலைச் சுமை

For ten persons it is as light as a tooth brush/ a small twig; if one has to carry it, it will be a heavy burden.

நவம்பர் 4 புதன்கிழமை

காசிக்குப் போனேன், காவடி கொண்டு வந்தேன்

I went to Benares, and brought back the Kavadi

Said to one who spins yarns, when wanted to be brief.

நவம்பர் 5 வியாழக்கிழமை

மை மை சுந்தரி, கதவை ஒஞ்சரி

My pretty maid, leave the door a jar.

(Said in a sarcasm to a maid or child, who, when relating something, goes too much into details.)

saint2

நவம்பர் 6 வெள்ளிக்கிழமை

வலிய உறவாடி வாசலிலே வந்தாலும், பொய் உறவாடி போய் வா என்கிறான்

Though you enter his doorway as his friend of your own accord, he says hypocritically, ‘Come some other day!’

நவம்பர் 7 சனிக்கிழமை

அழையா வீட்டுக்கு நுழையாச் சம்பந்தி

Intrusion: A relative who invites himself to a house from which he has received no invitation. (The proverb is a sarcasm on all those unavoidable parasites, who come uninvited to all weddings and feasts in Hindu houses

English: fiddlers, dogs and flees come to a feast uncalled.

நவம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை

பிடாரியைப் பிடித்துத் தள்ளத் தள்ள, பெண்ணுடைய சிற்றப்பன் என்று நுழைகிறானாம்

Intrusion: Though taken by the neck and turned out over and over again, he slips in, saying that he is my wife’s sister’s husband.

English: Follow love and it will flee; flee love and it will follow thee

நவம்பர் 9 திங்கட்கிழமை

கம்மாளன் நாய் சம்மட்டித் தொனிக்கு அஞ்சுமா?

Will the blacksmith’s dog fear the sound of hammer?

நவம்பர் 10 செவ்வாய்க்கிழமை

கோணிக் கோடி கொடுப்பதிலும், கோணாமல் காணி கொடுப்பது நல்லது

Instead of giving much with a wry face, it is better to give a little willingly.

saint9

நவம்பர் 11 புதன்கிழமை

மாவு இடித்தால் மண்டி கொள்ளுகிறது, கூழ் கொதித்தால் கூடிக் கொள்ளுகிறது

If the rice is being pounded they draw near, if the gruel is being boiled they come as friends to eat.

English: Daub yourself with honey, and you will have plenty of flies.

(said of one who does not care for others unless he can profit by them).

நவம்பர் 12 வியாழக்கிழமை

நெல் விளைகிற நிலமும் தெரியாது, நிலாக் காய்கிற இடமும் தெரியாது

Stupid or wilfully speaks as if he did not know:- He does not know a field in which rice is growing, and he does not know a place on which the moon is shining.

நவம்பர் 13 வெள்ளிக்கிழமை

அகல இருந்தால் நிகள உறவு, கிட்ட இருந்தால் முட்டப் பகை

If separated by a long distance, there will be one lived friendship, but if they are near each other, there will be perfect hatred.

English: Friends agree at a distance.

நவம்பர் 14 சனிக்கிழமை

நல்லாரை நாவில் உரை, பொன்னைக் கல்லில் உரை 2691

Find out the good by their tongue, and pure gold by the touch stone.

English: Speech is the picture of the mind.

நவம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை

பாலைக் குடித்தவனுக்கு பால் ஏப்பம் வரும், கள்ளைக் குடித்தவனுக்கு கள் ஏப்பம் வரும்

He who has drunk milk will belch milk, and he who has drunk toddy will belch toddy

English: from a clear spring clear water flows.

saint6

நவம்பர் 16 திங்கட்கிழமை

ஒட்டினால் தொட்டிலும் கொள்ளும், ஒட்டாவிட்டால் கட்டிலும் கொள்ளாது

Will power: when there is agreement between the two, the very cradle can hold it! When there is no agreement, even a cot cannot hold it.

நவம்பர் 17 செவ்வாய்க்கிழமை

மருவில் உண்ட சாப்பாட்டை இலங்கணத்தில் நினைத்துக் கொண்டது போல.

Like thinking, during one’s fast, of the food eaten by him at the feast given in his honour by his bride’s family

English: The memory of happiness makes misery woeful.

The dream of past glory in the midst of present distress.

நவம்பர் 18 புதன்கிழமை

அக்குத் தொக்கு இல்லாதவனுக்கு துக்கம் ஏது?

Anxiety:- What sorrow has he, who has no family and no wealth?

நவம்பர் 19 வியாழக்கிழமை

குருடி தண்ணீருக்குப் போனால், எட்டாள் மினக்கெடு

Waste:- If a blind woman goes for water, eight persons have to forego work (as she cant find her way, one is sent to find her, and another to find these two and so on.

நவம்பர் 20 வெள்ளிக்கிழமை

அலுத்துப் பொலுத்து அக்காளண்டை போனால், அக்காள் இழுத்து மச்சானிடத்தில் விட்டாளாம்

If weary and fatigues she (left her husband) and went to her elder sister’s house (hoping to rest a while from worry), her elder sister dragged her back to her brother in law.

saint1

நவம்பர் 21 சனிக்கிழமை

கற்பக விருக்ஷமண்டை போய், எட்டிக்காய் வாங்கினது போல

Unlucky:- He went to the Kalpaka Tree, Wish Fulfilling Tree, but got poisonous fruit.

நவம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை

அளகேசன் ஆனாலும், அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்

Though as rich as Kubera, the God of Riches, know how much you have and then lay out your money.

நவம்பர் 23 திங்கட்கிழமை

இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இராது

A hand that has laid hold of iron and a hand that has itch will not keep quiet

English: Itch and case can no man please.

நவம்பர் 24 செவ்வாய்க்கிழமை

சுருட்டை சோறு இடும், பம்பை பால் வார்க்கும், கோரை குடி கெடுக்கும்

Signs and Omens: Curly hair gives food, thick hair brings milk, and very stiff hair destroys family.

(These different kinds of hair are to be noted when selecting a girl for a wife- Ruthusastram) .

நவம்பர் 25 புதன்கிழமை

போன சனியன் போச்சுது என்று இருந்தேன், மயிருக்குள் இருந்து கீச்சு கீச்சு என்கிறது

Signs and Omens:-I believed the Saturn was gone, but he squeaks in my hair.

saint5

நவம்பர் 26 வியாழக்கிழமை

ஆறு காதம் என்கிற போதே கோவணத்தை அவிழ்த்துக் குடுமியிலே கட்டிக் கொண்டானாம்

Haste:- When the river was still sixty miles off, he untied his loin cloth and put it on his head.

English: Do not strip before bed time.

நவம்பர் 27 வெள்ளிக்கிழமை

காசியில் இருந்தவன் கண்ணைக் குத்தக் காஞ்சீபுரத்திலிருந்தே கை நீட்டிக்கொண்டு போனானாம்

Haste: – While in Kancheepuram he stretched out his arm to strike the eye of a man in Varanasi

English: Make not the sauce till you have caught the fish.

நவம்பர் 28 சனிக்கிழமை

பகலிலேயே பசு மாடு தெரியாது, இரவில் எருமை தெரியுமா?

Stupid Person: – During the day he does not know what a cow is; will he know a buffalo at night?

நவம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை

பாண்டவாள் தெரியாதா? கட்டில் காலு போல, மூன்று பேர் என்று வாயால் சொல்லி, இரண்டு விரலைக் காட்டி, நிலத்தில் ஒரு கோடு எழுதினானாம்

Stupidity:- Don’t you know how many Panadava princes there were? They were as amny as the legs of a bed – three.  So said a fool, and held up tow fingers, and made a single mark on the ground!

saint7

நவம்பர் 30 திங்கட்கிழமை

பிரசவ வைராக்கியம், புராண வைராக்கியம், ஸ்மசான வைராக்கியம்

The renunciation of sexual intercourse made by a woman when suffering the pain of child birth, the renunciation of worldly things made after studying the sacred books, the renunciation of worldly things made after seeing corpses burned (all temporary).

The chamber of sickness is the chapel of devotion

Vows made in storms are forgotten in calms.

They who worship god merely in fear, would worship the devil should he appear.

The devil was sick, the devil a monk would be.

The devil grew well, the devil a monk was he.

435-Swami-Rama-Tirtha

Source: A classified collection of Tamil Proverbs, Herman Jensen Year 1897

–subham–